Published:Updated:

Medplus IPO: 13-ம் தேதி தொடங்கவுள்ள மெட்ப்ளஸ் ஐ.பி.ஓ; வரவேற்பை பெறுமா?

மெட்ப்ளஸ்
News
மெட்ப்ளஸ்

இந்த பங்கில் ஒரு லாட் (Lot) என்பது 18 பங்குகள். இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 பங்குகளையாவது வாங்க வேண்டும். அதாவது, குறைந்தபட்சம் ரூ.14,328 இருந்தால் மட்டுமே ஒரு லாட் (18 பங்குகள்) வாங்க முடியும்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பார்மசி சில்லறை விற்பனையாளர் மெட்ப்ளஸ். வருவாய் விகிதத்திலும், நாடு முழுவதும் பரவியிருக்கும் கடைகளின் எண்ணிக்கையிலும் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்த நிறுவனம்.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த கம்பெனியின் ஐ.பி.ஓ வருகிற டிசம்பர் 13-ம் தேதி தொடங்குகிறது. பொதுவெளியில் பங்குகளை வெளியிடுவதன் மூலம் மட்டும் ரூ.1,398.29 கோடியைத் திரட்டவிருக்கிறது இந்த நிறுவனம். இதில் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அந்த நிறுவனத்தின் ஊழியர்ளுக்கே தள்ளுபடியுடன் அளிக்கவிருக்கிறது. இந்த வெளியீட்டின் மூலம் பெறப்படும் தொகையை வொர்க்கிங் கேபிட்டலாகப் பயன்படுத்தப் போவதாகவும் இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த பங்கில் ஒரு லாட் (Lot) என்பது 18 பங்குகள் ஆகும். இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 பங்குகளையாவது வாங்க வேண்டும். அதாவது, குறைந்தபட்சம் ரூ.14,328 இருந்தால் மட்டுமே ஒரு லாட் (18 பங்குகள்) வாங்க முடியும். இப்படி ஒருவர் அதிகபட்சமாக 13 லாட்டுகள் வாங்கலாம்.

IPO
IPO

இந்த கம்பெனியியைத் தொடங்கியவர் கண்காடி மதுகர் ரெட்டி. தற்போதைய நிலையில், நாடு முழுவதும் இந்த நிறுவனத்திற்கு 2,000 மருந்துக் கடைகள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ.2,870.6 கோடிகளிலிருந்தது ரூ.3,069.26 கோடிகள் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இந்த ஐ.பி.ஓ வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி டிசம்பர் 15 -ம் முடியவிருக்கிறது.