Published:Updated:

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

சி.சி.பி நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.சி.பி நிறுவனங்கள்

கைகொடுக்கும் சி.சி.பி நிறுவனங்கள்!

டிஸ்ட்ரிபியூட்டர்கள் நெட்வொர்க்கை உபயோகிக்கும் நிறுவனங்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் சுலபத்தில் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும்.

கன்சிஸ்டன்ட் காம்பவுண்டர் குணாதிசயம் கொண்ட பங்குகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் அடையும் நன்மைகளைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

2008-09-ம் ஆண்டுகளில் வந்த உலகளாவிய நிதிச் சிக்கலின்போது, ஜனவரி 2008 முதல் மார்ச் 2009 வரையிலான காலகட்டத்தில் சென்செக்ஸ் 61% அளவிலான வீழ்ச்சியைச் சந்தித்தது. இதற்கு மாறாக, லார்ஜ்கேப் பங்குகளை உள்ளடக்கிய கன்சிஸ்டன்ட் காம்பவுண்டர்ஸ் போர்ட்ஃபோலியோ (`காபி கேன் இன்வெஸ்டிங்’ புத்தகத்தில் முழு போர்ட்ஃபோலியோ தரப்பட்டுள்ளது) அதே காலகட்டத்தில் 35% இறக்கத்தையே சந்தித்தது.

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

இந்த போர்ட்ஃபோலியோக்களில் பொதுவாக இருக்கும் ஆறு பங்குகளான ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், சிப்லா, ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற பங்குகளைக் கொண்டு ஒரு காபி கேன் போர்ட்ஃபோலியோவாக (சி.சி.பி - CCP) உருவாக்கினால், அதன் செயல்பாட்டையும் சென்செக்ஸின் செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். (பார்க்க, அட்டவணை-1)

2008-ம் ஆண்டு சந்தையில் வந்த வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும் செய்யப்பட்ட முதலீடுகளால் கிடைத்த லாப/நஷ்டக் கணக்கைக் காட்டும் இந்த அட்டவணையை ஆராய்ந்தால், 2008-ம் ஆண்டு இறக்கத்துக்குச் சற்று முன் சென்செக்ஸில் (சராசரி ரகப் பங்குகளை உள்ளடக்கியது) செய்யப்பட்ட முதலீடு அடுத்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 5% (சி.ஏ.ஜி.ஆர்) லாபத்தையே தந்துள்ளது. ஏனென்றால், நிதிச் சிக்கலால் வந்த சரிவுக்குப் பின்னர் ஏற்பட்ட அந்தச் சராசரி பர்ஃபாமென்ஸைக் கொண்ட நிறுவனங்களின் லாபக் குறைவும்கூட, சந்தையில் நிலவிய அசாதாரணச் சூழலால் எதிர்வரும் காலத்தில் அவை லாபம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்ற எண்ணத்தால் ஏற்பட்ட பி/இ, வேல்யூவேஷன் கம்ப்ரஷன் (மதிப்புக் குறுக்கம்) ஆகிய இரண்டு காரணங்களால் அமைந்தது எனலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதேநேரம், இந்தச் சராசரிப் பங்குகளில் (சென்செக்ஸ்) முதலீடு செய்ய சரியான சமயமான சரிவுக்குப் பிந்தைய காலத்தில் வரும் குறைந்தபட்ச விலையில் முதலீடு செய்திருந்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் அது 16% (சி.ஏ.ஜி.ஆர்) அளவிலான லாபத்தைத் தந்திருக்கும். தவறான நேரத்தில் முதலீடு செய்ததால் கிடைக்கும் ஐந்து சதவிகிதத்துக்கும், சரியான நேரத்தில் முதலீடு செய்ததால் கிடைக்கும் 16 சதவிகிதத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்பது மிகவும் பெரியது மட்டுமல்ல, இந்த வித்தியாசம் ஒரு முதலீட்டாளருக்கு காம்பவுண்டிங் அடிப்படையில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியும்விடுகிறது. 5% (சி.ஏ.ஜி.ஆர்) அளவில் ஒரு முதலீட்டாளர் அந்தக் காலகட்டத்தில் நிலவும் பணவீக்கத்தைச் சரிக்கட்டும் அளவுக்கான வருமானத்தைக்கூடப் பெறுவதில்லை. அதேநேரம், 16% சி.ஏ.ஜி.ஆர் அளவில் ஒரு முதலீட்டாளர் இதே பத்து வருடங்களில் கணிசமான லாபம் பெறுவார்.

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

மாறாக, சி.சி.பி போர்ட்ஃபோலியோவில் முதலீடுகளைச் செய்யும் முதலீட்டாளர் ஒருவருக்குச் சரியான நேரம், தவறான நேரம் என்றில்லாமல், எல்லாச் சூழ்நிலைகளிலும் ஓரளவுக்கு நல்ல வருமானமே கிடைக்கிறது. அதாவது, அட்டவணையில் தரப்பட்டுள்ள 17% (தவறான நேரத்தில் முதலீடு), 20% (சரியான நேரத்தில் முதலீடு) வரையிலான வருமானத்தையே இந்தவித முதலீட்டாளர்கள் பெறுகின்றனர். இந்த வகை எதிர்ப்பு சக்தியே சி.சி.பி போர்ட்ஃபோலியோவின் தனிச்சிறப்பு.

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

சமீபத்தில் சந்தை கோவிட் பாதிப்பால் வரக்கூடிய விளைவுகளுக்கு பயந்து நல்ல சரிவைச் சந்தித்தது. இந்தச் சரிவின்போது இந்த சி.சி.பி போர்ட்ஃபோலியோவின் வருமானம் எப்படி இருந்தது என்பது அட்டவணை-2-ல் தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் நாம் காண்பது என்ன? 12 மாத அளவீட்டில் நிஃப்டி-25% வருமானம் தந்த அதே காலகட்டத்தில், 7.6% அளவுக்கு லாபத்தை சிசிபி போர்ட்ஃபோலியோ தந்துள்ளது. அதேபோல், சந்தை வீழ்ச்சியிலிருந்து மீளும்போதும் சி.சி.பி போர்ட்ஃபோலியோ நிஃப்டியைவிட வேகமாக மீண்டு அதனுடைய தனித்துவமான குணாதிசயத்தை நிரூபித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்குச் சந்தை குறியீடு மற்றும் சி.சி.பி போர்ட்ஃபோலியோவின் இடையே இப்போது இருக்கும் இதே நிலைமைதான் 2008-ம் ஆண்டில் வந்த சரிவின்போதும் இருந்தது என்பதை நாங்கள் பின்னோக்கிச் சென்று மறு ஆய்வு செய்து கண்டறிந்தோம். 2008-ம் ஆண்டு நிதிச்சந்தை சிக்கலுக்குப் பிறகு சரிய ஆரம்பித்த சந்தை 14 மாதங்களுக்குப் பிறகு இறக்கம் நின்று, பின் மீள ஆரம்பித்தது. அட்டவணை-3-ல் சி.சி.பி போர்ட்ஃபோலியோவிலுள்ள பங்குகளும் சென்செக்ஸும் எவ்வளவு நாள்களில் சரிவுக்கு முந்தைய விலை அளவுக்கு மீண்டெழுந்தன என்பதைக் காட்டுகின்றன.

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

இதற்குக் காரணம், கடுமையான சிக்கல்கள் வரும்போது சி.சி.பி போர்ட்ஃபோலியோவில் பங்கெடுக்கத் தகுதியுள்ள நிறுவனங்கள் அவற்றின் ஃபண்டமென்டல்களை நன்கு வலுப்படுத்திக்கொண்டு வீழ்ச்சியிலிருந்து மீளும்போது இன்னும் அதிக வலிமையுடன் வீறுகொண்டு எழுகின்றன. அதேபோல, சந்தை வீழ்ச்சியடைவதற்கு முன்னர் சி.சி.பி போர்ட்ஃபோலியோவில் பங்கெடுக்கும் தகுதி கொண்ட நிறுவனங்களின் விலை முழுக்க முழுக்க அதன் லாபம் ஈட்டும் திறன் மற்றும் ஃபண்டமென்டல்களாலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

இந்தவித சி.சி.பி போர்ட்ஃபோலியோவுக்குத் தகுதியான நிறுவனங்கள் எப்படி கோவிட்-19 பாதிப்பில் மாற்றுப்பாதையில் செயல்படும் என்பதைப் பார்ப்போம். சி.சி.பி போர்ட்ஃபோலியோவுக்குத் தகுதியான நிறுவனங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பொருள்கள் பெருவாரியான நடுத்தர வர்க்க மக்களின் உபயோகத்துக்காகச் சிறிய விலைகளில் விற்கப்படும் பொருள்களாக இருக்கின்றன. கோவிட்-19 பாதிக்கும் சூழ்நிலையில் சுற்றுலா, பொழுதுபோக்கு, கேளிக்கை/ஓய்வு, ஆடம்பரம் போன்றவற்றுக்கான செலவுகளைத் தற்போதைக்கு தள்ளிப்போடவோ அல்லது வேண்டாம் என்று ஒதுக்கவோ வாடிக்கையாளர்கள் முயலலாம். ஆனால், இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் அத்தியாவசியமானவை என்பதால், அதைச் சுலபத்தில் தள்ளிப்போட முடியாது.

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

**வீழ்ச்சியின் பாதாள நிலையில் இருந்தபோது உள்ள விலையின் தேதி: 09-03-2009; உதாரண சி.சி.பி போர்ட்போலியோ - சரிசம எடையுள்ள போர்ட்போலியோ: ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், சிப்லா, ஹெச்.டி.எஃப்.சி லிட், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் இன்போசிஸ்;

***முதலீட்டை விற்று வெளியேறிய தேதி: 07-01-2018.

உதாரணமாக, குழந்தைகளுக்கான பால் பவுடர் போன்ற பேக்கேஜ்டு உணவுகளையும்,

கோவிட்-19-க்கான டெஸ்ட்டையும், அத்தியாவசிய மருந்துகள் போன்றவற்றையும் வாங்குவதைத் தள்ளிப்போடவே மாட்டீர்கள். ஆனால், உள்ளாடைகள், காலணிகள், ஏனைய மருத்துவச் சோதனைகளை ஒரு சில வாரங்களுக்குத் தள்ளிப்போட முயல்வீர்கள். அதேபோல, ஒரு சில மாதங்களுக்கு உங்கள் வீடுகளுக்கு பெயின்ட் அடிப்பதையும், வீட்டு ஃபர்னிச்சர்களைச் சரிசெய்வதையும் தள்ளிப்போட முயல்வீர்கள். இதனாலேயே சி.சி.பி போர்ட்ஃபோலியோவுக்குத் தகுதியான நிறுவனங்கள் பலவும் இது போன்ற சூழ்நிலைகளில் பல விஷயங்களைச் செய்து வியாபாரத் திறனை அதிகப்படுத்திக்கொள்கின்றன. இந்தத் திறன்கள் பல வகையானவை.

பொருள்களை விநியோகிப்பதில் உதவியாக இருப்பது: விநியோக நெட்வொர்க் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு மிக மிக அத்தியாவசியம். இந்த நெட்வொர்க்கில் இருக்கும் அனைவரின் நலனையும் பேணிகாப்பது சி.சி.பி நிறுவனங்களின் இடையே இருக்கும் ஒரு பொதுவான குணாதிசயம். உதாரணமாக, கோவிட் தீவிரமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் பேஜ் நிறுவனம் தனது டிஸ்ட்ரிபியூட்டர்களுக்குப் பணம் செலுத்தும் கால அவகாசத்தைக் கூடுதலாக 60 நாள்கள் வரையில் அதிகரித்துத் தந்துள்ளது.

பணியாளர்களுடன்கூடிய உற்பத்தி வசதியைக்கொண்டிருத்தல்: உள்ளாடைகள் மற்றும் காலணிகள் உற்பத்தி (பேஜ் மற்றும் ரிலாக்ஸோ போன்ற நிறுவனங்கள்) ஆகியவை அதிக அளவில் பணியாளர்களைக்கொண்டு இயங்கும் துறை. பொதுவாக, இந்தத் துறையில் இயங்கும் நிறுவனங்கள் அவுட்சோர்சிங் முறையில் உற்பத்தியைச் செய்துகொள்ள முயலும். சி.சி.பி நிறுவனங்களோ சொந்த உற்பத்தி வசதியிலேயே பெரும்பான்மையான உற்பத்தியைச் செய்துவரும். இந்தவித சொந்த உற்பத்தி வசதிகளைக் கொண்டிருப்பது சாதாரண நாள்களில் உற்பத்தியில் தரத்தை உயர்த்தி நிலைநிறுத்திக்கொள்ள உதவும். அதேநேரம், இது போன்ற சோதனைக் காலங்களில் உற்பத்தியை வேகமாக மீட்டெடுக்க உதவியாக இருக்கும்.

சப்ளை செயினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது: விநியோகத்துக்கு டிஸ்ட்ரிபியூட்டர்கள் நெட்வொர்க்கை உபயோகிக்கும் நிறுவனங்கள் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் சுலபத்தில் மீண்டும் சாதாரணமாக இயங்க ஆரம்பித்துவிடும். அதே நேரம், ஹோல் சேலர்கள் (அமைப்புசாரா) நெட்வொர்க் வாயிலாக இயங்கும் நிறுவனங்கள் சிக்கலான சூழ்நிலைகளில் வொர்க்கிங் கேப்பிட்டல் சிக்கல்கள் காரணமாக சாதாரண இயக்கத்துக்குத் திரும்ப நீண்ட நாள்கள் ஆகும்.

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

சிறு நிறுவனங்களிலிருந்து பெரு நிறுவனங்களை நோக்கி வருதல்: கோவிட்-19 போன்ற சிக்கலான சூழ்நிலைகளில் மேலே சொன்ன காரணங்களால் அமைப்புசாராத பலவீனமான நிறுவனங்களிலிருந்து பெரு நிறுவனங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிப்பார்கள். இதனால் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் இந்த அமைப்புசாரா நெட்வொர்க்கைச் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் மேலும் பலவீனமடையும். இந்த வகை மாறுதல்கள் காலணிகள், பெயின்ட், உள்ளாடைகள், பேக்கேஜ்டு ஃபுட், ஒட்டும் பசைகள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் துறையில் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளில் நடைபெறவே செய்தது. சிறிய போட்டி நிறுவனங்கள் அதிகமிருக்கும் துறைகளில் இந்தவித மாற்றங்கள் அதிக அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!

சமீபத்திய வரிச் சலுகைகளை உபயோகித்து போட்டியாளர்களைத் தோற்கடித்தல்: 2019-ம் ஆண்டில் அறிவித்த வரிச் சலுகைகள் இது போன்ற சி.சி.பி நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. இதன் மூலம் போட்டி நிறுவனங்களை வென்று சந்தைப் பங்களிப்பை அதிகப்படுத்திக்கொள்ள முடியும். சிறு போட்டியாளர்கள் கோவிட்-19 போன்ற சிக்கலான சூழ்நிலையில் கேஷ் ஃப்ளோவுக்காகத் தடுமாற்றம் அடையும் வேளையில், சி.சி.பி நிறுவனங்கள் இது போன்ற வரிச் சலுகைகளின் மூலம் கிடைக்கும் கூடுதல் கேஷ் ஃப்ளோவைக் கொண்டு, உற்பத்தி செய்யும் பொருள்களின் சந்தையில் விலைக் குறைப்பு, விநியோக நெட்வொர்க்குக்குக் கூடுதல் சலுகைகள் வழங்குதல் போன் வற்றைச் செய்வதன் மூலம் நன்கு நிறுத்திக்கொள்ள இயலும்.

இது போன்ற காரணங்களால்தான் சி.சி.பி நிறுவனங்கள் கோவிட்-19 போன்ற இக்கட்டான காலகட்டங்களிலும் முதலீட்டுக்குச் சிறந்தவையாகத் திகழ்கின்றன.

(முதலிடுவோம்)

மினி தொடர் - 8: சந்தை இறங்கினாலும் நஷ்டம் தராத போர்ட்ஃபோலியோ!