மிகப் பெரிய பங்குகள் (Large Cap Stocks) பட்டியலில் புதிதாக ஏழு நிறுவனங்கள் இணைந்துள்ளன. இந்தியப் பங்குப் சந்தையில் வர்த்தகமாகும் முதல் 100 நிறுவனங்கள் லார்ஜ்கேப் பங்குகள் எனப்படும். இந்தப் பட்டியலில் அதானி டோட்டல் கேஸ், என்.எம்.டி.சி, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட், செயில், பேங்க் ஆஃப் பரோடா, ஹெனிவெல் ஆட்டோ மேசன் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்திருக்கின்றன.
அதே நேரத்தில், லார்ஜ்கேப் பட்டியலிலிருந்து மிட்கேப் பட்டியலுக்கு பி.ஐ இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.பி.சி.எல், இந்திரப்பிரஸ்தா கேஸ், பெட்ரோ நெட், அல்கெம் லேபாரட்டரீஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் மற்றும் அப்பாட் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மாறியிருக்கின்றன.

இதேபோல, மிட்கேப் பட்டியலிருந்து டாடா எலெக்ஸி, ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ், கஜாரியா ஜெராமிக்ஸ், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா மற்றும் அப்போலோ டயர்ஸ் ஆகிய நிறுவனங்கள், ஸ்மால்கேப் பட்டியலுக்கு மாறியிருக்கின்றன.
ஸ்மால்கேப் பட்டியலிருந்து இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ், மேக்ரோடெக், டெவலப்பர்ஸ், சோனா பி.எல்.டபிள்யூ பிரிசிசியன் ஃபோர்ஜிங்ஸ் மற்றும் இண்டிகோ பெயின்ட்ஸ் மிட்கேப் பங்குகள் பட்டியலுக்கு வந்திருக்கின்றன.