Published:Updated:

சந்தைக்குப் புதுசு: கொரோனா சிகிச்சைக்கு புதிய பாலிசி..! - பயனுள்ள அறிமுகங்கள்..!

கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா சிகிச்சை

பாலிசி ரூ.15 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் என இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்!

ந்தையில் புதிதாக வந்திருக்கும் முதலீடு மற்றும் காப்பீடுத் திட்டங்களில் சில...

ஹெல்த் அண்ட் லைஃப் செக்யூர்

பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், `ஹெல்த் அண்ட் லைஃப் செக்யூர்’ (Health and Life Secure) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு இணைந்த பாலிசி இது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனைச் செலவுகளையும் இந்த பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியும். 18 முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.

பாலிசியில் காப்பீடு 75 வயது வரை தொடரும். பாலிசி ரூ.15 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் என இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். பிரீமியம் செலுத்தும் காலத்தை 5, 10, 15, 20 ஆண்டுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சந்தைக்குப் புதுசு: கொரோனா சிகிச்சைக்கு புதிய பாலிசி..! - பயனுள்ள அறிமுகங்கள்..!

பாரத் பாண்ட் இ.டி.எஃப்!

எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பாரத் பாண்ட் இ.டி.எஃப் இரண்டாம் சீரிஸை வெளியிட்டிருக்கிறது. இதில் ஜூலை 14 முதல் ஜூலை 17 வரை முதலீடு செய்யலாம்.

இந்த இரண்டாம் பாண்ட் இ.டி.எஃப் வெளியீடு மூலம் 14,000 கோடி ரூபாயைத் திரட்டுகிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு 25% மற்றும் 75% ஓய்வூதிய நிதிகள், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் சாரா முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாண்ட் இ.டி.எஃப்., முதல் சீரிஸ் ஏப்ரல் 2025-ல் முதிர்வு பெறுகிறது. இரண்டாவது சீரிஸ் 2031-ம் ஆண்டில் முதிர்வு பெறுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

லிபர்டி அஷ்யூர்!

லிபர்டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஏற்கெனவே உள்ள ‘பிரைவேட் கார் பேக்கேஜ் பாலிசி’ திட்டத்தில், ‘லிபர்டி அஷ்யூர்’ என்ற சேவையை, தனது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையைப் பெறுவதற்குக் கூடுதல் பிரீமியம் வசூலிக்கப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவையைப் பெறும் வாகனக் காப்பீட்டு பாலிசிதாரர், ஒவ்வொரு க்ளெய்ம் நடவடிக்கைகளின்போதும் ‘கட்டாய விலக்கு’ இனி செலுத்த வேண்டியதில்லை.

சந்தைக்குப் புதுசு: கொரோனா சிகிச்சைக்கு புதிய பாலிசி..! - பயனுள்ள அறிமுகங்கள்..!

தற்போதைய நிலையில், ஒருவர் கார் வாங்கும்போது அதற்கான இன்ஷூரன்ஸ் திட்டத்தில் கட்டாய விலக்கு அவசியமாகும். இது கார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நிலையான தொகை. இது இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யும்போது கழிக்கப்படுகிறது. ஒருவரின் காரின் இன்ஜின் திறனை அடிப்படையாகக்கொண்டு இது தீர்மானிக்கப்படுகிறது. தற்போது, 1500 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட தனியார் கார்களுக்கான கட்டாய விலக்கு தொகை 2,000 ரூபாய் மற்றும் 1499 சிசி மற்றும் அதற்குக் கீழே உள்ள தனியார் கார்களுக்கு 1,000 ரூபாயாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெப்ட் ஃபண்ட்!

மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘மிரே அஸெட் பேங்க்கிங் அண்டு பி.எஸ்.யூ டெப்ட் ஃபண்ட்’ (Mirae Asset Banking and PSU Debt Fund) என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்த இந்த ஃபண்டில், வரும் ஜூலை 20-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய். இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் உள்ளது. குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, பேங்க்கிங் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறையைச் சேர்ந்த நிதி நிறுவனங்களின் ஆவணங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால், இந்த ஃபண்டில் முதலீட்டு ரிஸ்க் குறைவாக இருக்கும்.

வயதானவர்கள் மற்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்த ஃபண்டைப் பரிசீலிக்கலாம்.