நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கால் நூற்றாண்டை வெற்றிகரமாகக் கடந்த என்.எஸ்.இ..! கடந்து வந்த பாதை...

N S E
பிரீமியம் ஸ்டோரி
News
N S E

N S E @ 25

பங்குச் சந்தை என்பதே சூதாட்டம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம் என்பதை என்.எஸ்.இ-யின் 25 ஆண்டுக்கால வரலாற்றைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும்.

இந்தியாவில் இரண்டு பெரிய பங்குச் சந்தைகள் உள்ளன. ஒன்று, நூற்றாண்டுப் பழைமையான மும்பை பங்குச் சந்தை (BSE). மற்றொன்று, தேசிய பங்குச் சந்தை (NSE). இந்த என்.எஸ்.இ சந்தைக்கு 25 வயது பூர்த்தி ஆகியிருக்கிறது. 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி 50 பெரும் நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி இண்டெக்ஸ் செயல்படத் தொடங்கியது, இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த நாள்.

N S E @ 25
N S E @ 25

ஏற்ற இறக்கம் கொண்டதே பங்குச் சந்தை...

1996 முதலான 25 ஆண்டுகளில் பங்குச் சந்தை எத்தனையோ முறை பெரும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்டிருக்கிறது. 2008-ல் அமெரிக்கா வில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, நிஃப்டி புள்ளிகள் பாதியாகக் குறைந்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்குச் சந்தை மீண்டும் மேலெழுந்து வந்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது.

50 பெரும் நிறுவனங்களுடன்...

1996-ல் தேசியப் பங்குச் சந்தை செயல்படத் தொடங்கியபோதே கணினிமூலம் செயல்படும் நவீன தொழில்நுட்பம் கொண்ட சந்தையாகத்தான் அது தொடங்கியது. அப்போது 50 பெரிய நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிஃப்டி இண்டெக்ஸ் 1000 புள்ளிகள் என்பதை ஆரம்பப்புள்ளிகளாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது.

அன்று 1000 புள்ளிகளில் தொடங்கிய இந்த இண்டெக்ஸ், 25 ஆண்டுகள் கழித்து, இன்று 15000 புள்ளிகள் என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது, இந்தக் குறியீடு சராசரியாக ஆண்டுதோறும் சுமார் 11 சதவிகிதத்துக்குமேல் வளர்ச்சி கண்டிருக்கிறது. இப்படிப் பட்ட வளர்ச்சி வேறு முதலீடுகள் அடையவில்லை.

இதேபோல, அப்போது அந்த 50 பெரும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.7 லட்சம் கோடியாக இருந்தது. இன்று அது ரூ.113 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 1996-ல் ரூ.753 கோடியாக இருந்த ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் சந்தை மதிப்பு, இப்போது ரூ.7,84,192 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது ஆண்டு சராசரி வளர்ச்சி 32% ஆகும். ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் சந்தை மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்குமேல் வளர்ந்திருக்கிறது. இது ஆண்டு சராசரி வளர்ச்சி 21% ஆகும். 25 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,945 கோடியாக இருந்தது, இப்போது ரூ.12,49,767 கோடியாக இருக்கிறது. இது ஆண்டு சராசரி வளர்ச்சி 20.9% ஆகும்.

கொரோனாவால் ஏறியிறங்கிய பங்குச் சந்தை...

கடந்த சில ஆண்டுகளாக சீரான வளர்ச்சியைக் கண்டு வந்த பங்குச் சந்தைகள், கடந்த ஆண்டு கொரோனா நோய் காரணமாக இறக்கத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. அப்போது 12350 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, சரசர வென இறங்கத் தொடங்கி 7,600 புள்ளிகள் வரை இறங்கியது. ஆனால், இறங்கிய சில நாள்களிலேயே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிய நிஃப்டி, அடுத்த ஓராண்டுக் காலத்தில் நன்கு உயர்ந்து 15,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. கடந்த ஓராண்டுக் காலத்தில் மட்டும் நிஃப்டி 55% வருமானம் தந்திருக்கிறது.

தங்கம், ரியல் எஸ்டேட் போல எல்லா முதலீடுகளிலும் ஏற்படும் ஏற்ற இறக்கம் பங்குச் சந்தையிலும் ஏற்படும். ஆனால், நீண்டகாலத்தில் பங்குச் சந்தை முதலீட்டின்மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்!