Published:Updated:

என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ பதவி... மீண்டும் ஏற்க விரும்பாத லிமாயே!

விக்ரம் லிமாயே
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம் லிமாயே

தலைமை

என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ பதவி... மீண்டும் ஏற்க விரும்பாத லிமாயே!

தலைமை

Published:Updated:
விக்ரம் லிமாயே
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம் லிமாயே

என்.எஸ்.இ-யில் சித்ரா ராமகிருஷ்ணாவும் ஆனந்த் சுப்பிரமணியனும் சேர்ந்து செய்த முறைகேடு பரபரப்பாகப் பேசப் பட்டுவரும் நிலையில், இந்த எக்ஸ்சேஞ்சின் சி.இ.ஓ-வாக இருக்கும் லிமாயேவும் தன்பங்குக்கு பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். என்.எஸ். இ-யின் சி.இ.ஓ பதவியைத் தொடர்ந்து வகிக்க விரும்பவில்லை என்று அவர் சொன்னதால், இந்த எக்ஸ்சேஞ்சுக்கு புதிய சி.இ.ஓ தேடும் வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசாங்கம் இருக்கிறது.

என்.எஸ்.இ-யின் தற்போதைய சி.இ.ஓ விக்ரம் லிமாயேவின் பதவிக் காலம் வரும் ஜூலை 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. செபி அனுமதி தரும்பட்சத்தில் மேலும் ஐந்தாண்டு களுக்கு சி.இ.ஓ-வாக லிமாயேவால் இருக்க முடியும். ஆனால், இரண்டாம் முறையாக என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக பொறுப்பேற்க விரும்பவில்லை. அதனால், அந்தப் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கப் போவதில்லை என என்.எஸ்.இ இயக்குநர் குழுவுக்குத் தெரிவித் திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

விக்ரம் லிமாயே
விக்ரம் லிமாயே

‘‘கடினமான காலகட்டத்தில் நிறுவனத்துக்கு தேவையான பல விஷயங்களைச் செய்திருக் கிறேன், நிறுவனத்தைப் பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

2016-ல் என்.எஸ்.இ-யிலிருந்து சித்ரா பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த இடத்தை நிரப்ப ஐ.டி.எஃப்.சி-யில் இருந்த விக்ரம் லிமாயே 2017-ம் ஆண்டு நியமனம் செய்யப் பட்டார். இவரது காலத்தில் என்.எஸ்.இ-யின் வருமானமும் வெகுவாக அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டில் ரூ.2,681 கோடியாக இருந்த வருமானம், நடப்பு நிதி ஆண்டு முடிவில் ரூ.8,500 கோடியாக உயரும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. நிகர லாபமும் ரூ.1,219 கோடியில் இருந்து ரூ.4,000 கோடியாக உயர்ந்திருக்கிறது.

‘‘சந்தை காளையின் போக்கில் இருந்ததே இதற்குக் காரணம். அவர் இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும். அதை எல்லாம் செய் யாமல், நிறைய செய்திருப்பதாகச் சொல்வது எப்படி சரி?’’ என்று கேட்கிறார்கள் சிலர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism