Published:Updated:

என்.எஸ்.இ-யின் தலைவரானார் ஆசிஸ் செளஹான்..!

ஆசிஸ் செளஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிஸ் செளஹான்

தலைமை

என்.எஸ்.இ-யின் தலைவரானார் ஆசிஸ் செளஹான்..!

தலைமை

Published:Updated:
ஆசிஸ் செளஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிஸ் செளஹான்

ஆகாஷ்

என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக ஆகியிருக்கிறார் ஆசிஸ் செளஹான். இவர் இந்தியாவின் மிகப் பழைமையான மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் (BSE) நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

2016-ம் ஆண்டு டிசம்பரில் என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்தார். ஏழு மாதங் களுக்குப் பிறகு என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ ஆனார் ஐ.டி.எஃப்.சி வங்கியின் சி.இ.ஓ-வாக இருந்த விக்ரம் லிமாயி. இவரின் பதவிக்காலம் கடந்த 16-ம் தேதியுடன் முடிந்தது. இந்த நிலையில், இந்தப் பதவிக்குப் பலரும் விண்ணப் பித்தனர். அவர்களில் ஆசிஸ் செளஹான் சி.இ.ஓ-வாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆசிஸ் செளஹான்
ஆசிஸ் செளஹான்

ஆசிஸ் செளஹான், பி.எஸ்.இ-யின் வளர்ச்சிக்கு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தவர். பி.எஸ்.இ-யில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை முழுமையாகக் கொண்டுவந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று நினைத்து, அதற்கான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து, என்.எஸ்.இ-யுடன் போட்டி போட வைத்தார். தவிர, என்.எஸ்.இ தந்த அத்தனை முதலீட்டு வாய்ப்புகளையும் பி.எஸ்.இ-யிலும் கொண்டுவந்தார் ஆசிஸ். பி.எஸ்.இ நிறுவனப் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியல் இடக் காரணமாக இருந்ததும் அவர்தான்.

ஆசிஸ் செளஹான் முக்கியமான கால கட்டத்தில் என்.எஸ்.இ-யின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. என்.எஸ்.இ-யில் பதவி துஷ்பிரயோகம், டேட்டாக்களைக் குறிப்பிட்ட சிலருக்கு முன்கூட்டியே வழங்கியது போன்ற புகார்கள் சித்ரா ராமகிருஷ்ணா மீது எழுந்து அதற்கு இன்னும் முடிவு கிடைத்தபாடில்லை. இந்தப் பிரச்னைகளை சீக்கிரமாக முடிக்க இவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, என்.எஸ்.இ-யின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியல் இட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

என்.எஸ்.இ-க்கு திறமையான சி.இ.ஓ கிடைத்துவிட்டார். இவர் மாதிரி ஒரு சி.இ.ஓ பி.எஸ்.இ-க்கு கிடைப்பாரா?