Published:Updated:

Nykaa: IPO மூலம் ஒரே நாளில் பில்லியனரான இந்தியப் பெண்; யார் இந்த ஃபல்குனி நாயர்?

ஃபல்குனி நாயர்

பங்குகள் விலை அதிகரித்ததையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.03 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டானியா, கோத்ரேஜ், இண்டிகோ போன்ற ஜாம்பவான் நிறுவனங்களின் சந்தை மதிப்புடன் தற்போது `நைகா' ஒப்பிடப்படுகிறது.

அழகு, ஆரோக்கியம், பேஷன் சம்பந்தபட்ட பொருள்களை ஆன்லைன் மற்றும் ரீடெய்ல் கடைகள் வாயிலாக விற்பனை செய்துவரும் `நைகா’ நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்ததையடுத்து, அதன் நிறுவனரான ஃபல்குனி நாயரின் சொத்து மதிப்பு 48,405.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

`நைகா' பிராண்டின் தாய் நிறுவனமான `எப்.எஸ்.என். இ காமர்ஸ் வென்ச்சர்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து, அதன் பங்குகள் நவம்பர் 10-ம் தேதி என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. ஐ.பி.ஓ விலை ரூ.1,125-ஆக இருந்த நிலையில், பங்கு பட்டியலானபோது வெளியீட்டு விலையை விட 79% அதிக ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டது. அதாவது, என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ சந்தையில் ரூ.2,001 மற்றும் ரூ.2018-க்கு பட்டியலிடப்பட்டது.

IPO
IPO

அன்றைய தினத்தில் வர்த்தகம் முடியும்போது 89 சதவிகிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து, ரூ. 2,207-க்கு வர்த்தகமானது. நவம்பர் 12-ம் தேதி காலை வர்த்தகத்தின்போது, இவ்விரு சந்தைகளிலும் ரூ.2,290 என்கிற விலையில் வர்த்தகமானது. இதன் காரணமாக, நிறுவனத்தின் 50 சதவிகிததுக்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் நிறுவனரான ஃபல்குனி நாயரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

புதிய பங்கு வெளியீட்டின் மூலம் சொந்த முயற்சியில் பில்லியனரான பெருமையை ஃபல்குனி நாயர் பெற்றது மட்டும் அல்லாமல், ஓரே நாளில், இந்தியாவின் பெண் பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

பங்குகள் விலை அதிகரித்ததையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.03 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டானியா, கோத்ரேஜ், இண்டிகோ போன்ற ஜாம்பவான் நிறுவனங்களின் சந்தை மதிப்புடன் தற்போது `நைகா' ஒப்பிடப்படுகிறது.

நைகா பிராண்டு
நைகா பிராண்டு

யார் இந்த ஃபால்குனி நாயர்?

கடந்த 2012-ம் ஆண்டு வரையில் `Kotak Mahindra Capital Co' என்கிற இந்தியாவின் முன்னணி முதலீட்டு வங்கியில், 18 ஆண்டு காலம் தலைவராக பணியாற்றியவர் ஃபல்குனி நாயர். 2012-க்குப் பிறகு தொழிலதிபராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காக `நைகா' நிறுவனத்தைத் துவங்கினார். அன்றிலிருந்து இன்று வரை ஃபால்குனி நாயர் தலைமையிலான `நைகா' நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டுமல்லாமல் இந்தியாவில் மிக முக்கியமான பியூட்டி பிராண்டாகவும் உருவெடுத்துள்ளது. இப்படிப் படிப்படியாக உயர்ந்து தற்போது 70 நேரடி விற்பனை கடைகளை இந்தியா முழுவதும் கொண்டுள்ளது `நைகா'.

இவருடைய பலவிதமான பிசினஸ் யுக்திகளால், இந்திய பெண்களால் மலிவான விலையில் அழகு சாதன பொருள்களை வாங்க முடிந்தது.