Published:Updated:

`பங்குச் சந்தை சுழற்சிகளும் வாய்ப்புகளும்..!' - லாப நுட்பங்கள் அறிய ஆன்லைன் பயிற்சி

பங்குச் சந்தை சுழற்சிகளும் வாய்ப்புகளும்
பங்குச் சந்தை சுழற்சிகளும் வாய்ப்புகளும் ( Naanayam Vikatan )

பங்குச் சந்தையின் செயல்பாடு என்பது சுழற்சி அடிப்படையிலானது, அந்தச் சுழற்சியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நுட்பங்கள் குறித்த ஆன்லைன் நிகழ்ச்சி.

நாணயம் விகடன் வார இதழ், `பங்குச் சந்தைசுழற்சிகளும் வாய்ப்புகளும்..! என்கிற ஆன்லைன் கட்டணப் பயிற்சியை நடத்துகிறது. பங்குச் சந்தையின் செயல்பாடு என்பது சுழற்சி அடிப்படையிலானது, அந்தச் சுழற்சியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நுட்பங்கள் குறித்த ஆன்லைன் நிகழ்ச்சி இது.

இந்த வகுப்பு, 2020 ஆகஸ்ட் 1 (1.8.2020) - ம் தேதி இரவு 6 மணி முதல் 8 மணி வரை இரண்டு மணி நேரம் நடக்கிறது. இதை யூனிஃபை கேப்பிட்டல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறன் நடத்துகிறார்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

முதலீட்டு ஆலோசனை நிறுவனமான யூனிஃபை கேப்பிட்டல் ( Unifi Capital) -ன் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் ஜி.மாறன் ஆவார். இவர் பங்குச் சந்தை முதலீட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். முதலீட்டுக் குருவான வாரன் பஃபெட்-ஐ நேரில் சந்திருக்கிறார். அவரின் உரைகளை நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்.

பதிவு செய்ய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு