Published:Updated:

அதானி பவர், சிப்லா, கெயில் இந்தியா... ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள்

அதானி பவர், சிப்லா, கெயில் இந்தியா... ரிசல்ட் எப்படி?

கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

பங்கு நிறுவனங்கள் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முடிவுகள் வெளியான நிறுவனங்கள் குறித்து சிலவற்றை இங்கே பார்ப்போம்.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra & Mahindra)

மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த ஆட்டோ மொபைல் துறை சார்ந்த முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 110.5% உயர்ந்து, ரூ.11,763 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 23 மடங்கு உயர்ந்து, ரூ.934 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஏபிட்டா சென்ற காலாண்டில் ரூ.1,631.6 கோடியாக உள்ளது. விரைவில் இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பான XUV700 வெளியிட இருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 3.2% குறைந்து, ரூ.72,443.4 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 40.5% குறைந்து, ரூ.1,795 கோடியாக உள்ளது.

சென்ற காலாண்டில் மும்பையில் உள்ள இந்த நிறுவனத்தின் முன்னணி சுத்திகரிப்பு ஆலை 45 நாள்கள் பராமரிப்புப் பணி காரணமாக மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் லாபம் சற்றுக் குறைந்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பல சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பைவிட குறைவாக இருந்தது காரணமாக, பங்கின் விலை 5% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

அதானி பவர், சிப்லா, கெயில் இந்தியா... ரிசல்ட் எப்படி?

டைட்டன் கம்பெனி (Titan Company)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 14.16% உயர்ந்து, ரூ.3,249 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.61 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் சென்ற ஆண்டின் இதே கால கட்டத்தில், ரூ.270 கோடி இழப்பைச் சந்தித்து இருந்தது.

சென்ற வருடத்தில் முழு ஊரடங்கு காரணமாக இந்த நிறுவனத்தின் வருமானம் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாறாக, சென்ற காலாண்டில் கொரோனா இரண்டாவது அலை உச்சமடைந்த கால கட்டத்தில் பாதிப்புகள் இருந்தாலும் சென்ற ஆண்டை ஒப்பிட்டால் குறைவாக இருந்ததாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Godrej Consumer Products)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 6% உயர்ந்து, ரூ.2,894 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 9.3% உயர்ந்து, ரூ.599.7 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக வந்துள்ளது.

மேலும், இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் தனது தயாரிப்புகளின் விலையை 9% வரை உயர்த்தியுள்ளதும் லாபம் அதிகரிப்பதற்கு காரணமாகும்.

அப்போலோ டயர்ஸ் (Apollo Tyres)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 59% உயர்ந்து, ரூ.4,584 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் ரூ.128 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.135 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.

சென்ற காலாண்டு முடிவுகள் பல சந்தை வல்லுநர்கள் எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருந்ததன் காரணமாக பங்கின் விலை அதிகரித்துள்ளது. பல பங்கு தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனப் பங்கினை வாங்குவதற்குப் பரிந்துரை செய்துள்ளன.

அதானி பவர், சிப்லா, கெயில் இந்தியா... ரிசல்ட் எப்படி?

ஹிண்டால்கோ (Hindalco)

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அலுமினியம் மற்றும் காப்பர் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 64% உயர்ந்து, ரூ. 41,358 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2,787 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் 709 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித் திருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா சென்ற காலாண்டில் 188% உயர்ந்து, ரூ.10,790 கோடியாக உள்ளது.

கெயில் இந்தியா (Gail India)

அரசு துறை சார்ந்த முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 44.37% உயர்ந்து, ரூ.17,588 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் 235% உயர்ந்து, ரூ.2,157 கோடியாக உள்ளது.

சிப்லா (Cipla)

முன்னணி பார்மா துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 27% உயர்ந்து, ரூ.5,504 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் 24% உயர்ந்து, ரூ.715 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஏபிட்டா சென்ற காலாண்டில் 28% உயர்ந்து, ரூ.1,346 கோடியாக உள்ளது.

அதானி பவர் (Aadmi Power)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 34.67% உயர்ந்து ரூ.7,213 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.278.22 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.602.46 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.

நால்கோ (NALCO)

அலுமினியம் தயாரிப்பில் அரசு துறை சார்ந்த முன்னணி நவரத்னா நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 79.2% உயர்ந்து, ரூ.2,474.55 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 22 மடங்கு உயர்ந்து ரூ.347.73 கோடியாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக இந்த நிறுவன பங்கின் விலை கணிசமாக ஏற்றம் கண்டு வந்தது. காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, பங்கின் விலை 12% அளவுக்கு குறைந்து வர்த்தகமாகி வருகிறது. பல தரகு நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளன.

செயில் (SAIL)

ஸ்டீல் உற்பத்தியில் முன்னணி அரசு துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரு மடங்கு உயர்ந்து, ரூ.20,642 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,897 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,226 கோடி இழப்பை சந்தித்து இருந்தது. இந்தக் காலத்தில் நிறுவனத்தின் மொத்த கடனில் 15% அளவுக்கு ரூ.5,063 கோடி அடைக்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)

மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 15.7% அதிகரித்து, ரூ.7,892 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.1,208 கோடியாக உள்ளது. இந்த வங்கி சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.864 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் சென்ற ஆண்டின் அளவான 8.87% என்ற நிலையில் தற்போதும் உள்ளது.

பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank)

இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 6.5% அதிகரித்து, ரூ.7,220 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் 232% அதிகரித்து, ரூ.1,023 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் சென்ற ஆண்டின் 14.12% என்ற அளவில் இருந்து சற்று உயர்ந்து 14.33 சதவிகிதமாக உள்ளது.

டிவிஸ் லேப் (Divis Lab)

முன்னணி பார்மா துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 14.24% உயர்ந்து, ரூ.1,997 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 13% உயர்ந்து, ரூ.557 கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்