தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

இன்ஃபோசிஸ், மைண்ட்ட்ரீ.... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை முன்னணி நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கி உள்ளன. இந்த வாரம் சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இனி...

இன்ஃபோசிஸ் (Infosys)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11% அதிகரித்து ரூ.6,021 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 23.4% அதிகரித்து ரூ.36,538 கோடி யாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட சிறப்பாக அமைந்ததால் இந்த நிறுவனத்தின் பங்குகள் தற்போது 7% வரை உயர்ந்து வர்த்தகம் ஆகிறது. மேலும், ரூ.9,300 கோடி அளவுக்கு பங்குகளைத் திரும்ப வாங்க (Buyback) இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு பங்குக்கு அதிகபட்சமாக ரூ.1,850 வரை வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.16.5 டிவி டெண்ட் வழங்க இருக்கிறது.

இன்ஃபோசிஸ், மைண்ட்ட்ரீ....
ரிசல்ட் எப்படி..?

ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank)

இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 20% அதிகரித்து ரூ.10,066 கோடி யாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 19% அதிகரித்து ரூ.21,021 கோடி யாக உள்ளது.

இந்த வங்கி பல சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. மேலும், நிஃப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள இந்த வங்கியுடன் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் இணைப்பு முழுமையடையும் தருவாயில் உள்ளது.

இது இந்த வங்கியை மேலும் வலுவாக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். இதன் காரணமாக, ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் நிஃப்டி குறியீட்டில் இருந்து சில வாரங்களில் நீக்கப்பட இருக்கிறது. அதற்குப் பதிலாக பிடிலைட் இண்டஸ்ட்ரி நிறுவனம் நிஃப்டி குறியீட்டில் இடம் பெற வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது.

விப்ரோ (Wipro)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 9% குறைந்து, ரூ.2,660 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 14.6% அதிகரித்தும் ரூ.22,540 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் லாப விகிதம் சென்ற காலாண்டில் குறைந்துள்ளது. கடந்த காலங் களில் இந்த நிறுவனம் அதிக அளவில் புதிய நிறுவனங் களைக் கையகப்படுத்தி இருந்தது. அந்த நிறுவனங் களின் செயல்பாடு குறைந்ததும் நிறுவனத்தின் லாபம் குறைந்ததற்குக் காரணமாக இருக்கிறது. காலாண்டு முடிவுகள் கணிப்பைவிடக் குறைவாக இருந்ததால், இந்த நிறுவனத்தின் பங்குகள் 10% வரை குறைந்து வர்த்தகம் ஆகிறது.

மைண்ட்ட்ரீ (Mind Tree)

எல் & டி குழுமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 28% அதிகரித்து, ரூ.509 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 31.5% அதிகரித்து, ரூ.34,000 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் மிக அதிகமாக 44% என்ற அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் 20% அதிகரித்து, காலாண்டில் ரூ.1,530 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 16% அதிகரித்து, ரூ.10,203 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் ரூ.2,500 கோடி அளவுக்குப் பங்குகளைத் திரும்பப் பெற சென்ற ஜூன் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. அதை ஒரு பங்குக்கு ரூ.3,940 என்ற அளவில் ஓப்பன் மார்க்கெட்டில் சென்ற காலாண்டில் வெற்றிகரமாகப் பங்குகளை வாங்கியிருப்பதாக இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் (ICICI Prudential Life Insurance)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் ரூ.199 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.445 கோடி யாக இருந்தது. செலவினங்கள் அதிகரித்ததால், லாப விகிதம் குறைத்துள்ளது. ஆனாலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சியைக் கணக்கீடு செய்ய உதவும் முக்கியமான காரணியான புதிய காப்பீட்டு பிரீமியம் அளவு 25% அதிகரித்து, ரூ.1,092 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாகவே வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காப்பீட்டு நிறுவனப் பங்குகள் நெகட்டிவ் வருமானத்தையே வழங்கியுள்ளது. இதில் மாற்றம் ஏற்பட்டு, இந்த நிறுவனம் வருங்காலத்தில் அதிக வளர்ச்சி அடையும் என்று பல சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டி மார்ட் (D Mart)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 29% அதிகரித்து, ரூ.730.48 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.727 கோடி யாக உள்ளது. சந்தைக் கணிப்பைவிட காலாண்டு முடிவுகள் மோசமாக வந்த காரணத்தால் இந்த நிறுவனத்தின் பங்கு 6% வரை விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

இன்ஃபோசிஸ், மைண்ட்ட்ரீ....
ரிசல்ட் எப்படி..?

ஶ்ரீசிமென்ட்ஸ் (Shree Cements)

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 67.57% குறைந்து ரூ.183.24 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் அதிகரித்த எரிபொருள் மற்றும் மின்சார செலவினங்கள் அனைத்து சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்களின் செலவினங்களைக் கணிசமாக அதிகரித்து உள்ளது. மேலும், மழைக்காலம் ஆதலால் சிமென் டுக்கான தேவையும் சென்ற காலாண்டில் குறைந்தது காரண மாக லாப விகிதம் குறைந் துள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 18% அதிகரித்து, ரூ.5,082 கோடியாக உள்ளது.

ஏ.சி.சி (ACC)

முன்னணி சிமென்ட் தயாரிக் கும் நிறுவனமான இந்த நிறுவனம் யாரும் எதிர்பாராத வகையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் ரூ.87.35 நஷ்டத்தை சந்தித்துள்ளது. சென்ற ஆண்டில் இதே கால கட்டத்தில் இந்த நிறுவனம் 450 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியிருந்தது. இந்த நிறுவனத் தின் நிகர வருமானம் 7% அதிகரித்து, ரூ.3.910 கோடியாக உள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாக லாப விகிதத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது. சென்ற காலாண்டில் இந்த நிறுவனத்தை அதானி குழுமம் கையகப்படுத்தி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் ரதி வெல்த் (Anand Rathi Wealth)

முன்னணி பங்குத் தரகு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 8.15% அதிகரித்து, ரூ.42.95 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 3.4% அதிகரித்து, ரூ.136 கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்