பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ஹெச்.டி.எஃப்.சி, டைட்டன் கம்பெனி, கெயில் இந்தியா... ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை முன்னணி நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன. சில முன்னணி நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள் இனி...

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India)

நமது நாட்டின் முதன்மையான பொதுத் துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் 74% அதிகரித்து, ரூ.13,265 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 12.83% அதிகரித்து, ரூ.35,182 கோடியாக உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளப் பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் சிறப்பான காலாண்டு முடிவுகளை வழங்கி வருகின்றன. காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, எஸ்.பி.ஐ வங்கியின் பங்குகள் அதன் உச்சபட்ச விலை யான ரூ.620 என்ற நிலையில் தற்போது வர்த்தக மாகிவருகிறது.

ஹெச்.டி.எஃப்.சி, டைட்டன் கம்பெனி, கெயில் இந்தியா... ரிசல்ட் எப்படி?

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)

முன்னணிப் பொதுத்துறை வங்கியான இந்த வங்கியின் நிகர லாபம் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 58.7% உயர்ந்து, ரூ.3,313 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 35% அதிகரித்து, ரூ.7,566 கோடியாக உள்ளது.

இந்த வங்கியின் பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்து முதலீட் டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை வழங்கி யுள்ளது. சிறப்பான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த வங்கியின் பங்கு 10% அதிகரித்து, அதன் வருடாந்தர உச்சபட்ச விலையில் தற்போது வர்த்தகமாகி வருகிறது.

கோல் இந்தியா (Coal India)

நிலக்கரித் தயாரிப்பில் முதன்மையான பொதுத்துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 106% அதிகரித்து, ரூ.6,044 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 29% அதிகரித்து, ரூ.27,538 கோடியாக உள்ளது.

உலக அளவில் நிலக்கரிக்கான தேவை மிக அதிக அளவில் உள்ளதால், நிலக்கரியின் விலை உயர்ந்தது இந்த நிறுவனத்தின் லாபம் உயரக் காரணமாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு இந்த நிறுவனம் ரூ.15 டிவிடெண்ட் வழங்க உள்ளது.

டைட்டன் கம்பெனி (Titan Company)

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம், சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட அதிகமாகச் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 34% அதிகரித்து, ரூ.857 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 22% அதிகரித்து, ரூ.8,730 கோடியாக உள்ளது.

புதிதாகச் சென்ற காலாண்டில் 105 புதிய ஷோரூம்களை இந்த நிறுவனம் கட்டமைத்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் நிறுவனம் தமது கிளைகளை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிறுவனம் நிலை யான வருமானத்தை ஒவ்வொரு காலண்டிலும் வழங்கி வருவதால் நீண்ட கால நோக்கில் இந்த பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம் என்று பல பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

ஹீரோ மோட்டார் கார்ப் (Hero Motorcorp)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 10% குறைந்து, ரூ.716 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 9.4% அதிகரித்து ரூ.9,075 கோடி யாக உள்ளது. சென்ற காலாண் டில் இந்த நிறுவனம் 14.28 லட்சம் வாகனங்களை சந்தையில் விற்றுள்ளது. உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள் களின் விலை சரிவு, எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை போன்ற காரணங்களால் இந்த நிறுவனப் பங்குகள் வரும் காலத்தில் நல்ல வளர்ச்சி பெறும் என்று பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britannia Industries)

இந்த நிறுவனத்தின் லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 28.5% அதிகரித்து, ரூ.491 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 21.40% அதிகரித்து, ரூ.4,380 கோடியாக உள்ளது. சிறப்பான காலாண்டு முடிவு களுக்குப் பிறகு, இந்த நிறுவனத் தின் பங்குகள் ஒரே நாளில் 10% அதிகரித்து தற்போது அதன் உச்சபட்ச விலையில் வர்த்தக மாகி வருகிறது.

அதானி டிரான்ஸ்மிஷன் (Adani Transmission)

மின்தடங்கள் அமைப்பதில் முன்னணியில் உள்ள அதானி குழுமத்தைச் சார்ந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 32% குறைந்து, ரூ.194 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 22% அதிகரித்து, ரூ.3,032 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு தமது நிதித் தேவைகளுக்காக ரூ.1,500 கோடி அளவுக்குப் பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிட ஒப்புதல் அளித் துள்ளது.

கெயில் இந்தியா (GAIL India)

இந்த நிறுவனத்தின் லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பை விடக் குறைவாக வருடாந்தர அடிப்படையில் 46% குறைந்து, ரூ.1,537 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 79% அதிகரித்து, ரூ.38,490 கோடியாக உள்ளது. உலக அரசியல் நிலவரங்கள் காரணமாக, ரஷ்ய நிறுவனம் ஒன்று இயற்கை எரிவாயு வழங்கு வதை நிறுத்தியதன் காரணமாக லாப விகிதம் குறைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி, டைட்டன் கம்பெனி, கெயில் இந்தியா... ரிசல்ட் எப்படி?

அஜந்தா பார்மா (Ajantha Pharma)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 20% குறைந்து, ரூ.157 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 5% அதிகரித்து, ரூ.938 கோடியாக உள்ளது. அதிகரித்த செலவினங் கள் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக லாப விகிதம் சற்றுக் குறைந்துள்ளது. மேலும், ஒரு பங்குக்கு இந்த நிறுவனம் ரூ.7 டிவிடெண்ட் வழங்குகிறது.

ஹெச்.டி.எஃப்.சி (HDFC)

வீட்டுக் கடன்கள் வழங்கும் முன்னணி நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 20% அதிகரித்து, ரூ.15,027 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 17.8% அதிகரித்து, ரூ.4,454 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்துடன் ஹெச்.டி.எஃப்.சி வங்கியை இணைக்கும் முயற்சிக்கு முழுவதுமாக அனுமதி கிடைத்து விட்டது. இதன் காரணமாக இந்த நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் இருந்து விரைவில் விலக்கிக் கொள்ளப்படும். முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் 25 ஹெச்.டி.எஃப்.சி பங்கு களுக்கு 42 ஹெச்.டி.எஃப்.சி வங்கிப் பங்குகள் மாற்றாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிப்லா (CIPLA)

முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11% அதிகரித்து, ரூ.789 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 5.57% அதிகரித்து, ரூ.5,829 கோடியாக உள்ளது.

ஒன் 97 கம்யூனிகேஷன் - பேடிஎம் (One 97 Communication - Paytm)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் கடந்த செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 76% அதிகரித்து, ரூ.1,914 கோடியாக உள்ளது. மேலும், கடந்த காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.571 கோடி நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

இன்னும் ஓர் ஆண்டுக் காலத்தில் நிறுவனம் லாப பாதைக்கு மாறும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் பேடிஎம் பேமென்ட் பேங்கில் புதிதாக வாடிக்கையாளர்கள் சேர்ப்பதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharath Petroleum Corporation)

இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் சென்ற செப்டம்பர் காலாண்டில் ரூ.339 கோடியாக உள்ளது. என்றாலும், சென்ற காலாண்டுடன் ஒப்பிட்டால் நஷ்டத்தின் அளவு பாதியாகக் குறைந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தபோதிலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை மத்திய அரசு உயர்த்தாத காரணத்தால் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. என்றாலும், இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு விரைவில் மானியமாக எண்ணெய் நிறுவனங்களுக்குக் கூடுதல் தொகை ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நிறுவனத்தின் நிகர வருமானம் 22% அதிகரித்து, ரூ.1,28,356 கோடியாக உள்ளது.

தொகுப்பு: எஸ்.பிரமேஷ்