பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

எல்.ஐ.சி, அசோக் லேலாண்ட், டாடா மோட்டார்ஸ்... ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை முன்னணி நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கி யுள்ளன. சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இனி...

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra & Mahindra)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண் டில் வருடாந்தர அடிப்படை யில் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக அதிகரித்துள்ளது. அதாவது, 46% அதிகரித்து, ரூ.2,090 கோடியாக உள்ளது. நிகர வருமானம் 56.5% அதிகரித்து, ரூ.20,839 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனம் விற்பனை செய்யும் வாகனங்களில் எண்ணிக்கை 75% அதிகரித்து, சென்ற காலாண்டில் 1.74 லட்சம் வண்டிகளை விற்பனை செய்துள்ளது. மேலும், எஸ்.யு.வி வண்டி களுக்கு அதிக அளவு டிமாண்ட் இருப்பதாகவும் புதிதாக 2.6 லட்சம் வண்டி களுக்கு ஆர்டர் நிலுவையில் இருப்பதாகவும் நிறுவன தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு களாக செமி கண்டக்டர் பற்றாக்குறையால் ஆட்டோ மொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தற்போது அந்த பிரச்னை ஓரளவு முடிவுக்கு வந்திருப்ப தால், வரும் காலத்தில் புதிய வண்டிகளுக்கான டெலி வரியை விரைவில் அளித்திட முடியும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எல்.ஐ.சி, அசோக் லேலாண்ட்,
டாடா மோட்டார்ஸ்...  ரிசல்ட் எப்படி?

எல்.ஐ.சி (LIC)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 10 மடங்கு உயர்ந்து, ரூ.15,952 கோடியாக உள்ளது. அக்கவுன்டிங் கணக்கீடு செய்யும் முறையை மாற்றியது காரணமாக லாப விகிதம் உயர்ந்துள்ளது. காப்பீட்டு பிரீமியமும் 27% அதிகரித்து, ரூ.1,52,000 கோடி யாக உள்ளது.

காலாண்டு முடிவுகள் சிறப்பாக அமைந்ததால், இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 7% அதிகரித்து, ரூ.670 என்ற அளவில் வர்த்தக மாகி வருகிறது. என்றாலும் சென்ற ஆண்டு புதிய பங்கு மூலதன வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.949-க்கு வாங்கிய முதலீட்டாளர்கள் பெருமளவு நஷ்டத்துடன் உள்ளனர்.

ஹிண்டால்கோ (Hindalco)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலண்டில் வருடாந்தர அடிப்படையில் 35% குறைந்து, ரூ.2,205 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 18% அதிகரித்து, ரூ.56,176 கோடி என்ற அளவில் உள்ளது.

சென்ற காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அலுமினியம் உற்பத்தியை இந்த நிறுவனம் பெருக்கி யுள்ளது. மேலும், சென்ற காலாண்டில் இந்த நிறுவனத்தின் கடனும் பெருமளவு குறைத்துள்ளது. மெட்டல் துறை சார்ந்த நிறுவனங்கள் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் குறைந்த லாபத்தை கடந்த ஆண்டில் ஈட்டி இருந்தன. அதற்கு மாறாக, இந்த நிறுவனம் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட சிறப்பான லாபத்தைக் கொடுத்துள்ளது. இதன் காரணமாக, காலாண்டு முடிவுகள் வெளியீட்டுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்குகள் 7% வரை அதிகரித்து வர்த்தகம் ஆகியது.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)

முன்னணி ஆட்டோமொபைல் துறை சார்ந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் ரூ.945 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ.4,442 கோடி நஷ்டத்தைச் சந்தித்து இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 29.7% அதிகரித்து, ரூ.79,611 கோடி என்ற அளவில் உள்ளது.

நால்கோ (NALCO)

மெட்டல் துறை சார்ந்த அலுமினியம் தயாரிக்கும் முன்னணிப் பொதுத்துறை நிறுவனமான இதன் நிகர வருமானம் செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 28.6% குறைந்து, ரூ.3,490 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் லாபமும் 76.94% குறைந்து, ரூ.170.12 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத் தின் இ.பி.எஸ் ரூ.4.07 என்ற சென்ற ஆண்டின் அளவில் இருந்து ரூ.0.93-ஆக சென்ற காலாண்டில் குறைந்துள்ளது

எய்ஷர் மோட்டார்ஸ் (Eicher Motors)

ஆட்டோமொபைல் துறை சார்ந்த இந்த நிறுவனத் தின் நிகர வருமானம் செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 57% அதிகரித்து, ரூ.3,519 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் 76% அதிகரித்து, ரூ.657 கோடியாக உள்ளது.

எல்.ஐ.சி, அசோக் லேலாண்ட்,
டாடா மோட்டார்ஸ்...  ரிசல்ட் எப்படி?

அப்போலோ ஹாஸ்பிடல் (Apollo Hospitals)

சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட முன்னணி மருத்துவமனைக் குழுமம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 14.4% அதிகரித்து, ரூ.4,251 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் 18% குறைந்து, ரூ.204 கோடியாக உள்ளது.

அசோக் லேலாண்ட் (Ashok Leyland)

ஹிந்துஜா குழுமத்தைச் சார்ந்த முன்னணி டிராக்டர், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் ரூ.199 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் 83 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தைச் சந்தித்து இருந்தது. நிறுவனத்தின் நிகர வருமானம் தற்போது 85% அதிகரித்து, ரூ.8,266 கோடியாக உள்ளது.

வாகனங்களின் விற்பனை சென்ற காலாண்டில் இரண்டு மடங்கு உயர்ந்து 25,000 புதிய வாகனங் களை இந்த நிறுவனம் விற்றுள்ளது. கமர்ஷியல் வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பதாகவும் இதன் காரணமாக வரும் காலத்தில் இந்த நிறுவனம் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் என பல சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

ஸொமேட்டோ (Zomato)

ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொருள்கள் டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் சென்ற செப்டம்பர் காலாண்டில் ரூ.251 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் நிகர நஷ்டம் ரூ.430 கோடி அளவுக்கு இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 62.2% அதிகரித்து, ரூ.1,661 கோடியாக உள்ளது.

முதல்முறையாக இந்த நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகத்தைச் சென்ற காலாண்டில் ஈட்டியுள்ளது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனம், இன்னும் இரண்டு முதல் நான்கு காலாண்டு களில் லாபப் பாதைக்கு மாறும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சன் டிவி நெட்வொர்க்ஸ் (Sun TV Networks)

தமிழகத்தைத் தலைமை இடமாகக் கொண்ட முன்னணி தொலைக்காட்சி சேவைகள் வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 2.5% அதிகரித்து, ரூ.796 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1.88% அதிகரித்து, ரூ.400 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.3.75 டிவிடெண்ட் வழங்க நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்