Published:Updated:

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதலீட்டுத் தத்துவங்கள்..!

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
பிரீமியம் ஸ்டோரி
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

பங்குச் சந்தை

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதலீட்டுத் தத்துவங்கள்..!

பங்குச் சந்தை

Published:Updated:
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
பிரீமியம் ஸ்டோரி
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

இந்தியப் பங்குச் சந்தையின் முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, 62-வது வயதில் அண்மையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

1960, ஜூலை 5-ம் தேதி பிறந்த ராகேஷ் ஜுன்ஜுன் வாலா, சி.ஏ படித்தவர். அவரின் மனைவி பெயர், ரேகா. இரண்டு குழந்தைகள் உண்டு. ராகேஷ் ஜுன்ஜுன் வாலாவின் தந்தை வருமான வரித் துறை அலுவலகத்தில் பணிபுரிந்தார்.

எம்.சதீஷ் குமார், நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/

காளைகளின் ராஜா

ராகேஷ் ஜுன்ஜுன் வாலா காளைகளின் ராஜா என்று அழைக்கப்பட்டார். ராகேஷ் தனது போர்ட் ஃபோலியோவில் பல நிறுவனப் பங்குகளை ரேர் (RaRe) எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கி விற்று வந்தார். 1985-ல் வெறும் 5,000 ரூபாயுடன் பங்குச் சந்தையில் களமிறங்கினார்.

பங்கு முதலீட்டுக் கலவையின் மதிப்பு ரூ.39,527 கோடி...

இன்று ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் பங்கு முதலீட்டுக் கலவையின் மதிப்பு ரூ.39,527 கோடியாகும். 37 ஆண்டுகளாகப் பங்கு முதலீட்டில் இருந்திருக்கிறார்.

இவர் ஆயிரங்களைக் கோடிகளாக்கிய இந்தியா வின் வாரன் பஃபெட் ஆவார். அவர் பங்குச் சந்தை முதலீட்டில் கடைப்பிடித்த, எப்போதும் நிலைத்து நிற்கும் முதலீட்டுத் தத்துவங்களை இங்கே பார்ப்போம்.

ராகேஷ் 
ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

1. பங்கு முதலீட்டுக்கு நேரம், காலம் தேவையில்லை...

பங்குச் சந்தை எப்போதும் சரியானது. பங்கு முதலீட்டுக்குச் சந்தையின் நேரம் பார்க்கத் தேவை இல்லை. “நான் பின்பற்றும் ஒரே விதிமுறை, விதிமுறைகள் எதுவும் இல்லை” என்பதே ராகேஷின் தீர்க்கமான எண்ணம்.

2. பங்குச் சந்தை மந்திரம்...

மற்றவர்கள் நிறுவனப் பங்குகளை விற்கும்போது வாங்கவும்; மற்றவர்கள் வாங்கும்போது விற்கவும் - இதுதான் ராகேஷ் பின்பற்றிய பங்குச் சந்தை மந்திரம்.

3. அவசரமாக முதலீட்டு முடிவை எடுக்க வேண்டாம்...

அவசரமாக எடுக்கும் முடிவுகள் எப்போதும் பெரும் நஷ்டத்தையே ஏற்படுத்தும். அது பங்குச் சந்தைக்கும் பொருந்தும். எந்த ஒரு நிறுவனப் பங்கிலும் பணத்தை முதலீடு செய்யும்முன் அலசி ஆராயுங்கள். அதற்கு தேவைப் பட்டால் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இவரின் ஷேர் போர்ட் ஃபோலியோவில் டாடா குழுமப் பங்குகளுக்கு என்றுமே தனி இடம் உண்டு. குறிப்பாக, டைட்டன், டாடா மோட்டார்ஸ், டாடா டீ உள்ளிட்ட பலவும் அடங்கும். 1986-ல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கிய டாடா டீ பங்கின் விலை 43 ரூபாய். இந்தப் பங்கின் விலை மூன்றே மாதங்களில் 143 ரூபாயாக அதிகரித்தது. மூன்று ஆண்டுகளில் இவரின் பங்கு முதலீட்டு மதிப்பு சுமார் ரூ.25 லட்சமாக அதிகரித்தது.

4. சந்தைப் போக்கை அனுசரிக்கவும்...

பங்குச் சந்தை போக்கைப் அனுசரித்து, அதற்கு ஏற்ப செயல்பட்டு லாபம் அடையுங்கள்.

5. நியாயம் இல்லாத மதிப்புகொண்ட பங்குகள் வேண்டாம்...

நியாயமற்ற மதிப்பீடுகள் கொண்ட நிறுவனப் பங்குகளில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள். மிகவும் பிரபலமாக இருக்கும் அதிக பேர் முதலீடு செய்திருக்கும் நிறுவனப் பங்குகளை ஒருபோதும் துரத்திச் சென்று முதலீடு செய்யாதீர்கள். இவை முதலீட்டில் இழப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.

6. முதலீட்டில் உணர்ச்சிவசப்படாதீர்கள்...

பங்குச் சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட உணர்ச்சிபூர்வமான முதலீடு (Emotional investment) ஓர் உறுதியான வழியாகும்.

7. நஷ்டம் தாங்கும் திறன் கட்டாயம் தேவை...

பங்குச் சந்தை முதலீட்டில் நஷ்டத்தைத் தாங்கும் திறன் இல்லாதவரை அதில் லாபம் எதுவும் ஈட்ட முடியாது. பங்குச் சந்தை முதலீட்டில் ரிஸ்க்கைப் பற்றிப் பேசும்போது, “RISK என்கிற நாலெழுத்து வார்த்தையில் ஜாக்கிரதையாக இருங்கள். குறுகிய காலத்தில் உங்களால் இழக்கக்கூடியதை மட்டும் முதலீடு செய்யுங்கள்!”

8. மற்றவர்களைப் பார்த்து பணத்தை முதலீடு செய்யாதீர்கள்...

மற்றவர்களைப் பார்த்து மயங்கி எந்தப் பங்கிலும் முதலீடு செய்ய வேண்டாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்போதும் ரிஸ்க்கானது. இங்கே அதிக வருமானம் கிடைக்கும் அளவுக்கு ரிஸ்க்கும் அதிகம். எனவே, மற்றவர்களைப் பார்த்து முதலீடு செய்யாமல், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன்பிறகே முதலீடு செய்ய வேண்டும்.

மற்றவர்களைப் பார்த்து பணத்தை முதலீடு செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும்; ஏனென்றால், அவர்களிடம் நிறைய பணம் இருக்கலாம். அவர் களால் இழப்பைத் தாங்க முடியும். உங்களால் முடியுமா என்று பார்ப்பது அவசியம்!

9. வலுவான நிர்வாகம் போட்டியை சமாளிக்கும்...

இதர நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் வலுவான நிர்வாகம் கொண்ட நிறுவ னங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

10. முதலீட்டு வாய்ப்பைக் கண்டுபிடிக்கும் வழி...

பங்கு முதலீட்டுக்கான வாய்ப்புகள் வரும்போது, அவை தொழில்நுட்பம், மார்க்கெட்டிங், பிராண்டுகள், மூலதனம் போன்றவற்றின் மூலம் வரலாம். அவற்றை முதலீட்டாளர்கள் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும்.

11. மதிப்பில் கவனம் செலுத்துங்கள், விலையில் அல்ல...

எப்போதும் பங்கின் விலையை மதிக்கவும். ஒவ்வொரு விலையிலும் வாங்குபவரும் விற்பவரும் உண்டு. யார் சரியானவர் என்பதை எதிர்காலம் மட்டுமே தீர்மானிக்கிறது. உங்கள் கணிப்பு தவறாக இருக்கலாம். எனவே, பங்கின் விலையை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலையைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டாம். அதிக விலை யுள்ள பங்கு அதிக வருமானம் தர வேண்டும் என்பது அவசிய மில்லை. நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன் அந்த நிறுவனத்தின் மதிப்பைப் பார்க்கவும்; அதன் பங்கு விலையை அல்ல. பெரும் பாலானவர்கள் அதிக விலை யுள்ள பங்குகளை வாங்கி தவறு செய்கிறார்கள். அவர்கள் அதன் கடந்த கால செயல்திறனைப் பார்ப்பதில்லை. இதை ஒரு போதும் எந்த முதலீட்டாளரும் செய்யக் கூடாது.

12. தவறு செய்வது முக்கியமானது...

பங்கு முதலீட்டில் தவறுகள் செய்வது முக்கியமானது. உங்களால் முடிந்த தவறுகளைச் செய்யுங்கள். ஆனால், ஒருமுறை செய்த தவறுகளையே திரும்பத் திரும்ப செய்யாதீர்கள்.

13. எதுவுமே சரி, தவறு கிடையாது...

பங்கு முதலீட்டில் எதுவுமே சரி, எதுவுமே தவறு கிடையாது.நீங்கள் சரியாக இருந்தபோது எவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள், தவறாக இருந்தபோது எவ்வளவு இழந்தீர்கள் என்பதுதான் முக்கியம்.

14. பங்கில் முதலீடு செய்ய ஒருபோதும் கடன் வாங்காதீர்கள்...

பங்குச் சந்தை முதலீடு என்பது எப்போதும் கணிப்புக்கு அப்பாற்பட்டது. எனவே, பங்கில் முதலீடு செய்ய ஒரு போதும் கடன் வாங்காதீர்கள்.

15. பங்கு நிறுவனத்தின் கடனைப் பார்க்கவும்...

எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்வதற்குமுன், அந்த நிறுவனத் தில் எவ்வளவு கடன் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். கடன் குறைவாக இருந்தால், நிறுவனங் களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாது. கடன் அதிகமாக இருந்தால், நிறுவனம் எந்த நேரத்திலும் சிக்கலில் மாட்டலாம். கோவிட் 19 பாதிப்பு காலத்தில் கடன் இல்லா நிறுவனங்கள்தான் பிரச்னை இல்லாமல் செயல்பட்டன.

16. பங்கு வர்த்தகம் அனைவருக்கும் ஏற்றது இல்லை...

எல்லாரும் டிரேடிங் (Trading) மூலம் பணம் சம்பாதிக்க முடியாது.டிரேடர்கள் மனித இயல்புகளுக்கு எதிராகச் செயல்பட்டால்தான் லாபம் ஈட்ட முடியும். எனவே, நாமும் அதில் ஈடுபட்டு ஜெயித்து விடலாம் என்கிற எண்ணம் வேண்டவே வேண்டாம்.

17. நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்துங்கள்...

நீண்ட காலம் முதலீடு செய்யுங் கள். குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவதைவிட, முதலீடு மூலம் நீண்ட காலத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும். முதலீடு வளர கால அவகாசம் கொடுக்க வேண்டும். பங்குச் சந்தை முதலீட்டில் காத்திருந்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

1993-ல் கரூர் வைஸ்யா பேங்கின் பங்குகளை ரூ.50 லட்சம் முதலீடு செய்து வாங்கினார். அந்தப் பங்கு முதலீட்டின் மதிப்பு இன்றைக்கு ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின்
முதலீட்டுத் தத்துவங்கள்..!

18. அனைத்து பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாதீர்கள்...

எப்போதும் அனைத்து பணத் தையும் ஒரே நேரத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதீர்கள். முதலீடு செய்ய உங்களிடம் அதிக பணம் இருக்கலாம். ஆனால், எல்லா வற்றையும் ஒரே நேரத்தில் ஒரு பங்கில் முதலீடு செய்யாதீர்கள்.

லாபம் சம்பாதிக்க ஆசை இருப்பது நல்லது. ஆனால், ஆரம்பத்தில் சிறிய முதலீடு மட்டுமே சிறந்த வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும். ஒரு நிறுவனப் பங்கில் பணத்தை முதலீடு செய்யும்போது, முதலீட்டுத் தொகையை பல பகுதிகளாகப் பிரித்து அவ்வப்போது வாங்குங்கள். பங்கு விலை குறைந்தால் தொடர்ந்து வாங்கவும்.

19. டிவிடெண்ட் வருமானம் முக்கியம்...

நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டால், அதன் பங்கு நல்ல வருமானத்தைத் தர வேண்டிய அவசியமில்லை. முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் பின்னணியைக் கவனிக்க வேண்டும். அந்த நிறுவனம் எவ்வளவு டிவிடெண்ட் கொடுத்துள்ளது என்பதைக் கண்டிப்பாக பாருங்கள்.

பங்குச் சந்தை முதலீட்டில் டிவிடெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு நிறுவனம் நீண்ட காலமாக நல்ல டிவிடெண்ட் கொடுத்து வருகிறது எனில், அந்த நிறுவனத்தில் பணப் பற்றாக்குறை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் உடல்நலம் உங்களிடம் இருக்கும் மொத்த பணத்தைக்காட்டிலும் உயர்ந்தது. உடல்நலத்தில் அக்கறை இல்லாமல் இருந்தால், உங்களிடம் லட்சம் கோடி ரூபாய் இருந்தும் பயனில்லை!

பங்குச் சந்தையை மதிக்கவும்..!

பங்குச் சந்தையை எப்போதும் மதிக்கவும். திறந்த மனதுடன் அதை அணுக வேண்டும். அப்போதுதான் எந்தப் பங்கை வைத்திருப்பது என்று தெளிவாகும். மேலும், பங்கு முதலீட்டிலும் எப்போது நஷ்டம் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

விடியலுக்கு முன் இருள் இருப்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தில் முதலீடு செய்கிறீர்கள். பங்குச் சந்தையை ஒரு கட்டத்துக்கு மேல் கணிக்க முடியாது.