நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரிலையன்ஸ் பங்குகள் விலையேற்றத்துக்கு என்ன காரணம்? பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் குறித்த புதிய திட்டமா?

ரிலையன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிலையன்ஸ்

R E L I A N C E

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோகெமிக்கல் தயாரிப்பு நிறுவனங்களைத் தனி நிறுவனமாக நிறுவும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன மாக விளங்குகிறது. பெட்ரோ கெமிக்கல், டெக்ஸ்டைல்ஸ், ரீடெயில், தொலைத்தொடர்பு போன்ற பலவகை நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இப்போது தனது குழுமத்திலிருந்து எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயனத் துறை சார்ந்த நிறுவனங்களை (Oil to Chemical) தனி நிறுவனமாகப் பிரிப்பதற்கு முடிவு செய்துள்ளது.

முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெட்ரோகெமிக்கல் துறையில் உலகின் முன்னணி நிறுவனமான சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ (Saudi Aramco) போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. பெட்ரோகெமிக்கல் துறையைத் தனி நிறுவனமாக மாற்றுவது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவே ரிலையன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

ரிலையன்ஸ்
ரிலையன்ஸ்

சவுதி நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை ஏப்ரல் மாத முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடு முடிவாகும்பட்சத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உலக அளவில் பெட்ரோகெமிக்கல் துறையில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இந்தப் பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முதலீடு பணமாகவும், நிறுவனங்களின் குறிப்பிட்ட சதவிகித பங்குகளாகவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களில் 20% வரை முதலீடு செய்ய முன்வந்துள் ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெட்ரோகெமிக்கல் துறையில் புதிய யுக்திகளை நிறுவ ரிலையன்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. 2035 ஆண்டுக்குள் கார்பன் பயன்பாடு முழுவதுமாக நீக்கப்பட்டு ஹைட்ரஜன் முறையில் எரிசக்தி தயாரிக்கப்படும். அதற்கான முயற்சி களில் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த முயற்சி அதன் நிதி நிர்வாகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என்று தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்தத் திட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித் துள்ள நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, நிறுவனத்தின் இந்த முடிவு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவும் என்று கூறிருக்கிறது. நிறுவனத்தின் இந்த முடிவுக்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் கடந்த இரண்டு நாள்களாக ஏற்றம் கண்டு வருகின்றன.

பெட்ரோ கெமிக்கல் துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் 49.14% பங்குகளைக் கொண்டிருக்கிறது. இந்தத் துறை தனியாகப் பிரிக்கப்படும் போது பங்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. பெட்ரோகெமிக்கல் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டும் புது நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பல பன்னாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.