Published:Updated:

இ.பி.எல் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்..!

இ.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
News
இ.பி.எல்

K N O W Y O U R C O M P A N Y (NSE SYMBOL: EPL, BSE CODE: 500135)

உலக அளவில் மிகப்பெரிய ஸ்பெஷாலிட்டி பேக்கேஜிங் நிறுவனமாகச் செயல்பட்டு வரும் இ.பி.எல் லிமிடெட் (முந்தைய பெயர், எஸ்ஸெல் ப்ரோபேக் லிமிடெட்) எனும் நிறுவனத்தைக் குறித்துதான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்.

பேக்கேஜிங் தயாரிப்புகள்...

எஃப்.எம்.சி.ஜி மற்றும் பார்மா துறையில் உற்பத்தியாகும் பொருள் களுக்கான லேமினேட்டட் பிளாஸ்ட்டிக் பேக்கேஜிங்குக்கான (தொழில்நுட்ப ரீதியாக டியூப் என்று அழைக்கப்படுபவை) தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் அமெரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா, போலந்து, ஜெர்மனி, எகிப்து, ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உற்பத்தி மையத்தைக் கொண்டு இயங்கி வருகிறது. அழகு சாதனப் பொருள்கள், மருந்து வகைகள், உடல்நலம் பேணுவதற்கான தயாரிப்புகள், உணவுப் பொருள்கள், பற்பசைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் களுக்கான பேக்கேஜிங் தீர்வுகளை வழங்கி வருகிறது இந்த நிறுவனம். தொழில்நுட்பம், மூலபொருள்கள் உபயோகம், தயாரிப்பு படிநிலைகள் போன்றவற்றில் தொடர்ந்து புதுமை களையும் முன்னோடி முயற்சி களையும் இந்த நிறுவனம் செய்து வருகிற காரணத்தால் வாடிக்கை யாளர்களின் முதல் தேர்வாக இருந்து வருகிறது.

இ.பி.எல்
இ.பி.எல்

நிறுவனத்தின் வளர்ச்சி...

1982-ம் எஸ்ஸெல் புரோபேக் லிமிடெட் என்ற பெயரில் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக லேமினேட்டட் பிளாஸ்டிக் டியூப்களை அறிமுகப்படுத்தியது. அதன்பின் கடந்த 30 வருடங்களாக இந்த வகை தயாரிப்புகளுக்கான தேவை இந்தியாவில் மிகப்பெரும் அளவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. தன்னுடைய சீரிய மற்றும் சிறப்பான நடைமுறை களால் இந்தவகை பேக்கேஜிங்கை செய்ய விரும்பும் பல்வேறுவகை தொழில் நிறுவனங்களுக்கு நல்லதொரு சேவையைத் தொடர்ந்து வழங்கியதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தன்னுடைய வாடிக்கையாளர்களை விரிவாக்கம் செய்தும் அவர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றும் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

பார்மா, காஸ்மெட்டிக்ஸ் மற்றும் ஹெல்த்கேர் துறையில் செயல்பட்டு வரும் பல்வேறு முன்னணி நிறுவனங்களைத் தன்னுடைய வாடிக்கையாளராகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

1984-ம் ஆண்டில் இந்தியாவில் லேமினேட்ஸ் மற்றும் லேமினேட்டட் டியூப்கள் உற்பத்தி மையத்தை நிறுவிய இந்த நிறுவனம், 1993-ம் ஆண்டில் உலகச் சந்தையில் தன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு எகிப்து நாட்டில் உற்பத்தி வசதி ஒன்றை நிர்மாணித்தது. 1997-ம் ஆண்டில் சீனாவில் உள்ள குவாங்செள எனும் இடத்தில் ஒரு துணைநிறுவனத்தை (100% சொந்த முதலீட்டைச் செய்து) நிறுவியது. 1999-ம் ஆண்டில் ஜெர்மனியில் கால்பதித்த இந்த நிறுவனம், 2000-ல் உலக அளவில் பிரசித்திபெற்ற புரோபேக் எனும் நிறுவனத்தின் லேமினேட்டட் டியூப் பிசினஸை வாங்கியது. 2002-ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள டான்வில்லி எனும் இடத்தில் ஓர் உற்பத்தி மையத்தை நிறுவியதன் மூலம் அமெரிக்கச் சந்தையில் கால்பதித்தது இந்த நிறுவனம். 2004-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த அரிஸ்டா டியூப்ஸ் எனும் சீம்லெஸ் பிளாஸ்டிக் டியூப்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது இந்த நிறுவனம்.

2005-ம் ஆண்டில் வணிக ரீதியான உற்பத்தியை ரஷ்யாவில் செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த டெல்கான் பேக்கேஜிங் எனும் லேமினேட்டட் டியூப்பை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினைக் கையகப்படுத்தியது. இந்தியாவில் நலகார்ஹ் எனும் இடத்திலும் உற்பத்தி மையத்தை இதே ஆண்டில் ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2006-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான டேக்ப்ரோ இங்க் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்திய எஸ்ஸெல் புரோபேக் நிறுவனம், அதே ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள அவலான் மெடிக்கல் சர்வீசஸ் எனும் கேத்திடர்ஸ் மற்றும் பலூன்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்ட்தைக் கையகப்படுத்தியதன் மூலம் மருத்துவத் துறை சார்ந்த பொருள்கள் உற்பத்தியில் கால்பதித்தது. போலந்து நாட்டில் பிளாஸ்டிக் டியூப்கள் (co-extruded) உற்பத்திக்கான மையத்தை அரிஸ்டா டியூப்ஸ் யுகே என்ற பெயரில் இதே ஆண்டில் நிறுவியது.

மேலும், பேக்கேஜிங் இந்தியா எனும் ஸ்பெஷாலிட்டி பேக்கேஜிங்கை உற்பத்தி செய்யும் அகில இந்திய ரீதியில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கிவந்த ஒரு நிறுவனத்தையும் இதே ஆண்டில் கையகப்படுத்தியது. மேலும், அமெரிக்கா வில் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள டேன்வில்லி எனும் இடத்தில் கோ-எக்ஸ்ட்ரூடட் பிளாஸ்டிக் டியூப்கள் உற்பத்தியை அரிஸ்டா டியூப்ஸ் இங்க் நிறுவனத்தின் உற்பத்தி மையம் இதே ஆண்டில் ஆரம்பித்தது.

2007-ம் ஆண்டில் போலந்து நாட்டில் அரிஸ்டா டியூப்ஸ் என்ற பிராண்டில் கோ-எக்ஸ்ட்ரூடட் பிளாஸ்டிக் டியூப்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் இந்தியாவில் உத்ராஞ்சல் மாநிலத்தில் பேக்கேஜிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்டை இரண்டாவது ஸ்பெஷாலிட்டி பேக்கேஜிங் உற்பத்தி வசதியில் வணிகரீதியான உற்பத்தியைச் செய்ய ஆரம்பித்தது.

2016-ம் ஆண்டில் எஸ்ஸெல் புரோபேக் நிறுவனம் இந்தியாவில் வாபி எனும் இடத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய உற்பத்தி வசதி ஒன்றை நிறுவியது. 2020-ம் ஆண்டில் தன்னுடைய பெயரை இ.பி.எல் லிமிடெட் என்று மாற்றியதன் மூலம் ரீபிராண்ட் செய்துகொண்டது இந்த நிறுவனம்.

இன்றைக்கு இ.பி.எல் நிறுவனம் 12 நாடுகளில் 25 உற்பத்தி வசதிகளுடன் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தன்வசத்தே கொண்டிருக்கும் பகுப்பாய்வு வசதி, புதுமைகளை உருவாக்கு வதற்கான வசதிகள் போன்ற வற்றில் இருக்கும் அதிநவீன இயந்திரங்கள் புதிய வகை பாலிமர்கள் மற்றும் பாலிமர் காம்பவுன்ட்களைக் கையாளவும் அவற்றில் உள்ள மாசுகளின் அளவீட்டைக் கண்டறியவும் பெருமளவில் பயன்படுவதாக இருக்கின்றன. ஃபிலிம்கள், லேமினேட்கள் மற்றும் டியூப் களின் தரதைச் சோதனை செய்வதற்குத் தேவையான ஆய்வக வசதிகளையும் இந்த நிறுவனம் தன்வசத்தே கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கதொரு விஷயமாகும்.

இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வசதிகள் தொழில் நுட்ப ரீதியாக மிகவும் முன்னோடியாகவும், பல்வேறு வகையான சீதோஷ்ண நிலை, ஈரப்பதம் போன்றவற்றை செயற்கையாக உருவாக்குவதன் மூலம் தயாரிக்கும் பொருள்களை சோதனை செய்து பார்த்துக் கொள்ளும் மையத்தையும் கொண்டிருக்கிறது. அதேபோல், மைக்ரோபயாலஜி ஆய்வகங் களிலும் நிஜ உலகில் இருக்கும் சூழ்நிலைகளை உருவாக்கி தயாரிப்புகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களைச் சோதனை செய்து பார்த்துக்கொள்ளும் மையத்தையும் இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

உற்பத்தி செய்யும் பொருள்கள் என்று பார்த்தால் லேமினேட்டட் டியூப்கள் (பற்பசை, உணவுப் பொருள்கள், பார்மா போன்ற துறைகளில் பயன்படுத்தப் படுபவை), லேமினேட்ஸ் (ஸ்பெஷாலிட்டி லேமினேட்ஸ், அலுமினியம் பேரியர் லேமினேட்ஸ், பிளாஸ்டிக் பேரியர் லேமினேட்ஸ்), மூடிகள் மற்றும் மூடுவதற்கான அடைப் பான்கள், டிஸ்பென்சிங் சிஸ்டம்ஸ் (லிப் பாம். ரோல் ஆன், போன்ற பல்வேறு வகை யான தயாரிப்புகள்), சீம்லெஸ் பிளாஸ்டிக் டியூப்கள் உள்ளிட்ட பல பொருள்களை உற்பத்தி செய்கிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அழகுசாதனப் பொருள்கள், பார்மா மற்றும் ஹெல்த்கேர், உணவு மற்றும் ஊட்டச்சத்து, ஹோம்கேர் மற்றும் ஓரல்கேர் (பற்பசை) போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. கடந்த நிதியாண்டின் இறுதியில் 17 நாடுகளைச் சார்ந்த 3,269 பணியாளர்களுடன் உலக அளவில் மிகப்பெரிய லேமினேட்டட் டியூப் உற்பத்தியாளராகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

சார்ட்
சார்ட்

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

தொழில்நுட்ப ரீதியான மாறுதல்கள்/முன்னேற்றங்கள் மற்றும் அதில் போட்டி யாளர்கள் பெறுகிற வெற்றி, தொழில் ரீதியான புதிய போட்டி நிறுவனங்கள் உருவாகுதல், உலகப் பொருளாதார வளர்ச்சியில் வரும் ஏற்ற இறக்கங்கள்/தேக்கநிலை, மூலப்பொருள்கள் விலை ஏற்றம், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவை இந்த நிறுவனத் துக்கான ரிஸ்க்குகள் எனலாம்.

புள்ளி விவரம்
புள்ளி விவரம்
புள்ளி விவரம்
புள்ளி விவரம்

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்து ஆலோசித்து அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

பிட்ஸ்

ர்நாடகாவில் உள்ள ஹுட்டி தங்கச் சுரங்கத்தில் இருந்து அடுத்த 1.5 ஆண்டுகளில் 5,000 கிலோ தங்கத்தை எடுக்க கர்நாடகா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது கடந்த காலத்தை உற்பத்தியை விட மூன்று மடங்கு அதிகம்.

பிட்ஸ்

பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங் களின் சந்தைப் பங்களிப்பு கடந்த 2019-20-ல் 40.52 சதவிகிதத்தில் இருந்து 38.78 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் 66% என்ற அளவு மிகக் குறைந்த அளவில் குறைந்து உள்ளது!