Published:Updated:

`இனி டீமேட் கணக்கு தொடங்க நாமினி விவரம் அவசியம்!' - செபியின் புதிய விதிமுறை சொல்வது என்ன?

Stock Market
Stock Market ( Photo by Mark Finn on Unsplash )

நாமினி விவரங்கள் ஒருவரின் மரணத்திற்குப் பிறகு டீமேட் கணக்கில் உள்ள பங்குகள் யாருக்கு செல்ல வேண்டும் என்பதை தெரியப்படுத்துவதற்கு உதவும்.

பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய டீமேட் கணக்கு தொடங்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தமது நாமினி விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Nominee Form - Representational Image
Nominee Form - Representational Image
தவறான, மோசடியான ஷேர் டிப்ஸ்கள்... முதலீட்டாளர்களை செபி எச்சரிப்பது ஏன்?

இந்த வசதிகளை அனைத்து புரோக்கிங் நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று செபி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய நாமினியை நியமிப்பதற்கோ மாற்றியமைப்பதற்கோ வசதிகளை புரோக்கிங் நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.

நாமினி விவரங்களை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர் தெரிவிக்கலாம். சுய கையொப்பமிட்ட விண்ணப்பங்களை நேரடியாக தாக்கல் செய்தும் நாமினி விவரங்களை தெரியப்படுத்தலாம்.

முதலீட்டாளர் கைரேகை மூலம் டீமேட் ஆரம்பித்திருந்தால், நாமினிக்கு ஒரு சாட்சி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

செபி
செபி
Vikatan

ஏற்கெனவே டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாமினி விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று செபி கேட்டுக்கொண்டுள்ளது.

நாமினி விவரங்கள் தெரிவிப்பதன் மூலம், ஒருவரின் மரணத்திற்குப் பிறகு டீமேட் கணக்கில் உள்ள பங்குகள் யாருக்குச் செல்ல வேண்டும் என்பதை தெரியப்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். ஒருவரின் ஆயுள் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நாமினி விவரங்களை மாற்றி அமைக்க முடியும். அதனால், முதலீட்டாளர்கள் தமது நாமினி விவரங்களை தவறாது தெரியப்படுத்துவது அவசியமாகும்.

அடுத்த கட்டுரைக்கு