Published:Updated:

பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்! தொடருமா? தற்காலிகமா? எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்?

பங்குச்சந்தை ஏற்றம்
News
பங்குச்சந்தை ஏற்றம் ( vikatan )

`ஐ.சி.ஐ.சி.ஐ, ஹிந்துஸ்தான் லீவர், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் நன்கு செயல்படுவதால் எதிர்பார்ப்பின் அடிப்படையில் சந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.’

கடந்த பல மாதங்களாகச் சரிவுப்போக்கிலேயே இருந்துவந்த பங்குச்சந்தையில், கார்ப்பரேட் வரிகளைக் குறைக்கும் அறிவிப்புகளை நிதி அமைச்சர் வெளியிட்டதிலிருந்து மாற்றம் வரத்தொடங்கியது. ஒரே நாளில் 1000 புள்ளிகள் வரை ஏற்றம் பெற்ற சந்தை, அதன்பின் ஏற்ற இறக்கத்துடன் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு நம்பிக்கை தரும்விதமாகச் செயல்பட்டது.

கடந்த 31–ம் தேதி தேசியப் பங்குச்சந்தை புதிய உச்சமாக 11,929 புள்ளிகளை எட்டியது. மும்பை பங்குச்சந்தையில் 40,000 புள்ளிகள் என்ற மைல்கல்லைத் தாண்டி 40,331 புள்ளிகளை எட்டியது.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை
vikatan

தேசிய பங்குச்சந்தையின் அதிகபட்ச உச்சமான 12,103 புள்ளிகளை எட்டுவதற்கு மேலும் 200 புள்ளிகளை நெருக்கி எடுத்தாலே போதுமானது. பங்குச்சந்தையில் தொடர்ந்து இதுபோன்ற சூழல் நிலவும்பட்சத்தில் இன்னும் ஓராண்டுக்குள் 12,800 - 13,000 வரம்பை எட்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய ஏற்றப்போக்கால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் இரண்டாம் காலாண்டு முடிவுகள் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், கணிப்புகளைப் பொய்யாக்கி, ஓரளவு நல்ல முடிவுகளையும் வருமானத்தையும் காட்டுகின்றன. இந்தியச் சந்தைகளிலிருந்து வெளியேறிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மீண்டும் நம் சந்தைகளில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இவையனைத்தும் சந்தை முதலீட்டாளர்களுக்குத் தெம்பு ஊட்டுவதாக இருப்பதால், சிறு முதலீட்டாளர்களும் தற்போது முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

பங்குச்சந்தை நிபுணர் தி.ரா.அருள்ராஜன்
பங்குச்சந்தை நிபுணர் தி.ரா.அருள்ராஜன்
vikatan

தற்போது பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள உச்சத்துக்கான காரணம் குறித்து பங்குச்சந்தை நிபுணர் தி.ரா.அருள்ராஜனிடம் கேட்டோம்.

"தற்போது ஏற்பட்டுள்ள ஏற்றமென்பது குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகள் நல்ல நிலையில் செயல்படுவதை வைத்தே உருவாகியுள்ளது. குறிப்பாக, விற்பனைச் சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த மாருதி நிறுவனம், தொழிற்சாலைகளுக்குக் கட்டாய விடுப்பு, உற்பத்திக் குறைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபின், தற்போது பண்டிகைக்கால விற்பனையில் சுமார் 4.5% விற்பனை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹிந்துஸ்தான் லீவர், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களும் நல்ல நிலையில் செயல்படுவதால், எதிர்பார்ப்பின் அடிப்படையில் சந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்னும் 70% நிறுவனங்களின் செயல்பாடு மந்தமாகவே உள்ளது. இந்தியாவின் பொருளாதாரச்சூழலில் பெரிய முன்னேற்றம் இல்லையென்றாலும், அரசாங்கம் தொடர்ச்சியாக எடுத்துவரும் நடவடிக்கைகளால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாகவும் இந்த ஏற்றம் ஏற்பட்டிருக்கலாம். எனினும், அவசரப்பட்டு முழுப்பணத்தையும் இத்தருணத்தில் முதலீடு செய்வது நல்லதல்ல. மீண்டும் ஒரு இறக்கம் ஏற்படும்போது முதலீட்டை அதிகப்படுத்தலாம்" என்று ஆலோசனை கூறினார்.

பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்! தொடருமா? தற்காலிகமா? எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்? வீடியோ :தெ.சு.கௌதமன் #StockMarket

Posted by Naanayam Vikatan on Saturday, November 2, 2019
பங்குச்சந்தை
பங்குச்சந்தை
vikatan

இவரது கருத்தை வைத்துப் பார்க்கும்போது, இப்போதுள்ள பங்குச்சந்தை ஏற்றத்தை மட்டுமே கணக்கில்கொண்டு, பங்குச்சந்தை முழுமையாக நல்ல நிலைக்குத் திரும்பியுள்ளதாகக் கருதக்கூடாது என்பது தெரியவருகிறது. எனவே, பங்குச்சந்தை முதலீட்டில் ஈடுபடுபவர்கள், சரியான நிறுவனப்பங்குகளைக் கவனமாகத் தேர்வு செய்வது அவசியம். இந்த ஏற்றம், முதலீடு செய்யத் தூண்டுவதாக இருந்தாலும், எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வாக, எந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது சரியாக இருக்குமென்று பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டபோது, "எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ், ஹெக்ஸாவேர், வெல்கார்ப் மற்றும் கிரானுல்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம். இவற்றின் காலாண்டு முடிவுகளில் நல்ல வருமானம் வந்துள்ளது. மேலும், இந்த நிறுவனங்களின் பங்கு விலை, சிறு முதலீட்டாளர்களும் வாங்கத்தகுந்த வரம்புக்குள் இருக்கின்றன. இந்த நிறுவனப்பங்குகள் இப்போது நல்ல வளர்ச்சியைக் காட்டியிருப்பதுபோல், தொடர்ச்சியாகவும் இந்த வளர்ச்சி நிலை நீடிக்குமெனத் தெரிகிறது" என்றார்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
vikatan

எனவே, முதலீட்டாளர்கள், தற்போது வெளியாகியுள்ள காலாண்டு முடிவுகள், பங்குகளின் ஏற்றப்போக்கு, விலை விவரம் போன்றவற்றின் அடிப்படையில் நல்ல பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்வது நல்லது. சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்றப்போக்கு தொடர்ச்சியாக நீடிக்கும்பட்சத்தில் இவற்றிலிருந்து நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.