Published:Updated:

இந்தியப்பங்குச்சந்தை தொடக்கத்திலேயே 1,800 புள்ளிகள்வரை சரிவு! #stock_market #sensex

இந்தியப் பங்குச்சந்தை
இந்தியப் பங்குச்சந்தை ( vikatan )

இன்றும் தொடக்கத்தில் சரிந்துள்ள பங்குச்சந்தை, அடுத்து ஏற்றம் பெறுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

இந்தியப் பங்குச்சந்தை வர்த்தக வாரத்தின் தொடக்க நாளான இன்று, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், காலை 9.10 மணியளவில், வர்த்தகம் தொடங்குமுன்பே 1,000 புள்ளிகள்வரை அதாவது 2.93% சரிவைச் சந்தித்தது. தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 3% சரிந்து 9,440 புள்ளிகளில் வர்த்தகமானது.

இந்தியப் பங்குச்சந்தை
இந்தியப் பங்குச்சந்தை
vikatan

வர்த்தகம் தொடங்கியதும் இந்தச் சரிவு மேலும் தொடர்ந்து, (காலை 9:30 மணிக்கு) சென்செக்ஸ், நிஃப்டி இரண்டுமே 5% வரை இறக்கம் கண்டன. சென்செக்ஸ் 1,729 புள்ளிகள் இறங்கி 32,374 புள்ளிகளாகவும், நிஃப்டி 494 புள்ளிகள் இறங்கி 9,460 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

கடந்த வெள்ளியன்று இதேபோல தொடக்கத்தில் 10 சதவிகிதத்துக்கும்மேல் இறங்கியதால் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பின்னர், மீண்டுவந்த பங்குச்சந்தை, ஏற்றத்தில் முடிவடைந்தது. இன்றும் தொடக்கத்தில் பெருத்த சரிவைச் சந்தித்துள்ள பங்குச்சந்தை, அடுத்து ஏற்றம் பெறுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

இந்தியப் பங்குச்சந்தை
இந்தியப் பங்குச்சந்தை
vikatan

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதுதான் இந்தியாவில் பரவலாக உணரப்பட்டுவருகிறது. கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை மட்டுமல்லாது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு