Published:Updated:

பங்குச் சந்தை முதலீட்டில் தவறான நம்பிக்கைகள்... சரியான விளக்கம்..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குச் சந்தை முதலீட்டில் தவறான நம்பிக்கைகள்... சரியான விளக்கம்..!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ரமேஷ் கோவிந்தராஜன், ஈக்விட்டி அனலிஸ்ட், https://www.wayofmarket.com/

குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என பங்குச் சந்தையில் பணத்தைப் போடுகிறவர்கள் நம்மிடையே அதிக பேர் இருக்கிறார்கள். பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, நம்மவர்கள் பலரும் தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தத் தவறான நம்பிக்கைகளும் அதற்கான சரியான விளக்கத்தையும் பார்ப்போம்.

ரமேஷ் கோவிந்தராஜன் 
ஈக்விட்டி அனலிஸ்ட், 
https://www.wayofmarket.com/
ரமேஷ் கோவிந்தராஜன் ஈக்விட்டி அனலிஸ்ட், https://www.wayofmarket.com/

தவறான நம்பிக்கை 1: பங்குச் சந்தை முதலீடு ரிஸ்க்கானது

விளக்கம்: நம் வாழ்க்கையில் நிறைய இடங்களில் ரிஸ்க்கை எதிர்கொண்டாக வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, ஏன் நடப்பதுகூட ரிஸ்க்கானதுதான். அதற்காக நாம் அவற்றைச் செய்யாமல் இருக்கிறோமா? வாகனம் ஓட்ட, நீச்சல் அடிக்க பயிற்சி எடுக் கிறோம். தொடர்ந்து அதைப் பற்றித் தெரிந்து கொள்வதன் அந்த ரிஸ்க்கை எப்படிக் கடந்து வருவது அல்லது சமாளிப்பது என்று கற்றுக் கொள்கிறோம். அப்படித்தான் பங்குச் சந்தை பற்றியும் நன்கு தெரிந்துகொண்டு, அதைச் சமாளிக்கத் தேவையான அறிவைப் பெற வேண்டுமே தவிர, அது ரிஸ்க்கானது என்று ஒதுங்கி நிற்க தேவையில்லை.

தவறான நம்பிக்கை 2: பங்குச் சந்தை முதலீடு சூதாட்டத்துக்கு ஒப்பானது

விளக்கம்: இது உண்மையல்ல. பங்குச் சந்தை முதலீடானது ஊக வணிகத்திலிருந்து வேறுபட்டது. பங்குச் சந்தையை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து, அது சூதாட்டமா அல்லது முதலீடா என்பது முடிவாகும். வெறும் அதிர்ஷ்டத்தை நம்பி, எந்த ஆய்வும் செய்யாமல் ஏதோ ஒரு பங்கை வாங்கி, குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க நினைப்பது சூதாட்டம் ஆகும். நிறுவனங்களின் அடிப்படையை நன்கு தெரிந்துகொண்டு, நீண்ட கால நோக்கில் ஒரு பங்கில் பணம் போடுவது முதலீடாகும்.

சிலர், பங்கின் விலை ஏறி இறங்குவதைப் பார்த்து, இது செயற்கையான நடவடிக்கை என்று நினைக்கிறார்கள். ஒரு பங்கின் விலையை அபாரமாக ஏற்றி, இறக்குவதெல்லாம் லேசில் செய்துவிட முடியாது. அதற்கு செபி அனுமதிக்காது.

பங்குச் சந்தை முதலீட்டில் தவறான நம்பிக்கைகள்... சரியான விளக்கம்..!

தவறான நம்பிக்கை 3: நான் பணக்காரன் இல்லை. எனக்கு பங்கு முதலீடு ஏற்றதல்ல

விளக்கம்: பங்குச் சந்தையில் முதலீடு செய்ய லட்சக்கணக்கில் முதலீடு தேவை என நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. சில ஆயிரங்கள் இருந்தாலோ போதும், பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கிவிடலாம். பெரும் பணக்காரர்கள் அதிக அளவில் முதலீடு செய்வார்கள். ஓரளவுக்கு பணம் உடையவர்கள் கொஞ்சம் முதலீடு செய்தால் போதும். அந்த முதலீட்டுக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர, நடுத்தர வர்க்கத்தினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யக்கூடாது என்று நினைக்கத் தேவையில்லை.

தவறான நம்பிக்கை 4: பங்கு வர்த்தகமும் பங்கு முதலீடும் ஒன்றுதான்

விளக்கம்: பங்கு வர்த்தகம் என்பது ஒரு நாள் தொடங்கி சுமார் மூன்று மாதம் வரையிலான குறுகிய காலத்துக்கானது. பங்கு முதலீடு என்பது 3 ஆண்டு தொடங்கி 5, 10 ஆண்டு எனத் தொடர்ந்து நீள்வது. பங்கு முதலீட்டில் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு ஏற்ப நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி நல்ல வருமானம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குக்கு இருக்கும் டிமான்ட், சப்ளைக்கு ஏற்ப லாபம் கிடைக்கும்.

தவறான நம்பிக்கை 5: இளம் வயதில் அதிக ரிஸ்க் எடுக்கலாம்

விளக்கம்: இளம் வயதோ, நடுத்தர வயதோ, அதிக வயதோ பங்குச் சந்தை முதலீட்டில் ரிஸ்க் என்பது ஒன்றுதான். பங்குச் சந்தை பற்றி அறியாமல் எந்த வயதில் முதலீடு செய்தாலும் அது அதிக ரிஸ்க்தான். இளம் வயது எனில், பங்கு முதலீட்டில் ஏற்படும் இழப்பீடு சரியாகி, லாபத்துக்குத் திரும்ப கால அவகாசம் அதிகமாக இருக்கும். அதற்காக இளம் வயதில் எல்லோரும் ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும் என்பதில்லை. நிதானமாகவே பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

தவறான நம்பிக்கை 6: பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க வேண்டியதுதான்

விளக்கம்: குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளை வாங்கி, விலை உயர்ந்தவுடன் விற்று, நல்ல லாபம் பார்த்து விடலாம் என நினைக்கிறார்கள். எந்தப் பங்கின் விலை எப்போது இறங்கும், எந்த அளவுக்கு இறங்கும் என்பதை எல்லாம் துல்லியமாகக் கணிக்க முடியாது.

தவிர, விலை இறங்கிய பங்கு மீண்டும் ஏறித்தான் ஆக வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை எனில், இறக்கம் கண்ட பங்கின் விலை மீண்டும் உயர்வது மிக கடினம். மிகவும் மோசமான நிறுவனத்தைச் சார்ந்த பங்கு எனில், அது எவ்வளவு காலம் காத்திருந்தாலும் மீண்டுவருவது கஷ்டம்தான்.

பங்குச் சந்தை முதலீட்டில் தவறான நம்பிக்கைகள்... சரியான விளக்கம்..!

தவறான நம்பிக்கை 7: அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக ஆதாயம்

விளக்கம்: பங்கு முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுத்தால், அதிக லாபம் கிடைக்கும் எனப் பலரும் நினைக்கிறார்கள். எந்த நிறுவனப் பங்கிலும் அதிக ரிஸ்க் எடுத்தால், அதிக வருமானம் கிடைக்கும் என்பதற்கு எந்த ஓர் உத்தரவாதமும் இல்லை. அதிக ரிஸ்க் எடுத்தால், அதிக இழப்புக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்க்க மற்றும் குறைக்க பல்துறை களை சேர்ந்த பங்குகளில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது அவசியமாகும்.

தவறான நம்பிக்கை 8: அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்தால் நாமும் வாங்கலாம்

விளக்கம்: பலரும் இப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால், அந்நிய நிதி நிறுவனங்கள் என்கிற எஃப்.ஐ.ஐ-கள் பங்குகளை வேறு காரணங்களுக்காக வாங்கலாம். அவர்கள் பங்குகளில் முதலீடு செய்வதுடன் (Long on equity) ஃப்யூச்சர் மார்க்கெட்டிலும் (Short on futures) குறுகிய கால நோக்கில் வியாபாரம் செய்வார்கள். மேலும், அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், லாப எதிர்பார்ப்பு வேறாக இருக்கும். அவர்கள் ஒரே நேரத்தில் பெரும் தொகையை முதலீடு செய்வதால் ஓரிரு சதவிகிதம் லாபம் வந்தால் கூட வெளியேறிவிடுவார்கள். எனவே, வெளிநாட்டு முதலீட் டாளர்களைப் பார்த்து நாம் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்காமல், சிறு முதலீட் டாளர்கள் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், வருமான இலக்கு ஆகியவற்றின் அடிப் படையில் பங்குகளை அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது தான் சரியானதாக இருக்கும்.

தவறான நம்பிக்கை 9: நேரம் அறிந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.

விளக்கம்: சந்தையின் போக்கை சரியாகக் கணிப்பது மிகக் கடினம் ஆகும். சந்தையில் நேரம் பார்த்து முதலீடு செய் வதைவிட எவ்வளவு நேரத் துக்கு, காலத்துக்கு சந்தையில் முதலீட்டை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, ஒருவருடைய லாபம் நிர்ணயம் ஆகும்.

2020 கோவிட் 19 பாதிப்பு ஏற் படும்; அதனால் பங்குச் சந்தை கள் 40% - 50% இறங்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த இறக்கத்தைப் பயன்படுத்தி, நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் பார்த் தார்கள். பயந்துபோய், விலை வீழ்ச்சியில் விற்றவர்கள் இழப்பை சந்தித்தார்கள். பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் பங்கின் விலை தினசரி ஏறி இறங்குவதைக் கண்டு கவலைப்படத் தேவையில்லை. பங்கு வர்த்தகத்துக்கு வேண்டு மானால் நேரம் பார்க்கலாம். இதற்கு டெக்னிக்கல் அனாலி சிஸிஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தவறான நம்பிக்கை 10: அதிக பங்கு களில் முதலீடு செய்து முதலீட்டைப் பரவலாக்குவதன்மூலம் ரிஸ்க்கைக் குறைக்கலாம்.

விளக்கம்: பல்வேறு துறை களைச் சார்ந்த பல்வேறு நிறுவனப் பங்குகளில் சரியாகப் பிரித்து முதலீடு செய்தால் தான் பரவலாக் கம் (Diversification) சரியாக இருக்கும்; அப்போதுதான் ரிஸ்க் குறையும். ஒரே மாதிரியான ஒற்றுமை (Correlated) கொண்ட பங்குகளின் விலை ஏற்றமும் இறக்கமும் ஒரே போல் இருக்கும். எனவே, உங்கள் போர்ட் ஃபோலியோவை எப்படி அமைத் திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் ரிஸ்க் குறையுமா, இல்லையா என்பது முடிவாகுமே தவிர, நிறைய பங்குகளை வாங்கினாலே நஷ்டம் வராது என்று சொல்லிவிட முடியாது.

தவறான நம்பிக்கை 11: பங்கு முதலீடு நிபுணர்களுக்கானது

விளக்கம்: பங்கு முதலீடு என்பது அனைவருக்குமான தாகும். அடிப்படைக் கணித அறிவு இருந்தாலே பங்கு முதலீட் டில் லாபம் பார்க்க முடியும். நிறுவனங்களின் செயல்பாடு களைப் புரிந்துகொள்வது, நிறுவனங்களின் லாப, நஷ்டங்களை அலசி ஆராயும் அறிவு ஆகியவற்றுடன் பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் போதும்.

தவறான நம்பிக்கை 12: அதிக தொகையை முதலீடு செய்தால்தான் லாபம் கிடைக்கும்

விளக்கம்: இது உண்மையல்ல. அனைத்து முதலீட் டாளருக்கும் ஒரே போல்தான் லாபம் கிடைக்கும். உதாரணமாக, அ என்கிற நிறுவனப் பங்கு ஒன்றின் விலை ரூ.100 என வைத்துக்கொள்வோம். சுரேஷ் என்பவர் 1,000 என்கிற எண்ணிக்கையில் அந்நிறுவனப் பங்கை வாங்குகிறார். மகேஷ் என்பவர் அதே நிறுவனப் பங்கை 10 மட்டுமே வாங்குகிறார். இரண்டு மாதங்களில் பங்கின் விலை ரூ.110 ஆக உயர்கிறது. இங்கே ஒரு பங்குக்கான லாபம் ரூ.10 அல்லது 10% ஆகும். இந்த லாபம் இருவருக்கும் ஒரேபோல்தான் கிடைக்கும். அதே நேரத்தில், முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப லாபத் தொகை அதிகமாக இருக்கும். ஆனால், லாப விகிதம் என்பது ஒன்றாகத்தான் இருக்கும்.

தவறான நம்பிக்கை 13: கடந்த கால லாபத்தின் அடிப்படையில் பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

விளக்கம்: பங்கு முதலீட்டைப் பொறுத்தவரை, கடந்த கால வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், பங்கின் விலை வேகமாக ஓரளவுக்கு ஏறிவிட்டால், அதற்குப் பிறகு, அதே வேகத்தில் ஏறும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. நிறுவனத்தின் எதிர்கால செயல்பாட்டைப் பொறுத்துதான் பங்கின் விலை ஏற்றமும் இறக்கமும் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism