Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

பங்குகள்... வாங்கலாம்...
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்...

B U Y & S E L L

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

B U Y & S E L L

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்...
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்...

இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி ஜூன் 28 அன்று நிஃப்டி புதிய உச்சமான 15930 என்ற நிலையை எட்டியது. ஆனால், முன்பு சில சமயங்களில் புதிய உச்சம் எட்டியபோது அந்த நிலையில் சந்தை தன்னை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் இறக்கம் கண்டது. இந்த முறையும் புதிய உச்சம் கண்ட தினமே இறக்கமும் உண்டானது. தொடக்கம் உயர்வாகவும் முடிவு இறக்கமாகவும் இருக்கும் இந்த பேட்டர்ன் வாரம் முழுவதும் காணப்பட்டது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இந்தப் போக்கு சந்தை இன்னும் காளையின் பக்கம் இருப்பதாகக் கருதும் வகையில் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. சந்தை புதிய உச்சங்களை எட்டுகிறது. ஆனால். ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடையவில்லை, ஏன் என்கிற கேள்விக்கு, இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஒருவேளை, காளைப் போக்கானது தொடரும் சூழல் இல்லையோ?

இந்த நிலையானது உண்மையில் கவலை தருவதாக இருக்கிறது என்பது நிச்சயம். ஆனால், இறக்கம் காணப்பட்ட அத்தனை வர்த்தக நாள்களிலும் இறக்கத்தின் வரம்பானது 15600-15680 என்ற சோதனை வரம்பின் அருகில் காணப் பட்டதே தவிர, ஒரு நாளும் இந்த நிலைக்குக் கீழே இறக்கம் காணப்படவில்லை. எனவே, கரடியின் போக்குக்கான சூழலும் தெளிவாக இன்னும் காணப்படவில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

தற்போது காளையும் கரடியும் சந்தையில் வலுவாக இல்லாத நிலையில், சந்தை ஒரு வரம்புக்குள்ளாக நகரும் போக்குக்கு உள்ளாகும். இந்த வரம்பானது வாராந்தர அடிப்படையில் உருவாகலாம். எனவே, சந்தையில் செயல்பாடானது சற்று மந்தமாக இருக்க வாய்ப்புள்ளது.

தற்போது சர்வதேச செய்திகள் சந்தையின் சென்டிமென்டைத் தீர்மானிப்பதாக இருக்கின்றன. அடுத்த காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியீடு வரும்வரை இது தொடரலாம். எனவே, குறைந்த வரம்பிலான ஏற்ற இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

வரும் வாரத்தில் இறக்கங்கள் ஏற்படும் போது பங்குகளை வாங்கலாம். ஆனாலும் குறுகியகால வர்த்தகர்கள் நிஃப்டி 15450 என்ற நிலைக்குக்கீழ் உறுதியான ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்றத்தின் போக்கில் நிஃப்டி 15850 என்ற நிலையைத் தாண்டி நகர்ந்தால் புதிய உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

திருமலை கெமிக்கல்ஸ் (TIRUMALCHM)

தற்போதைய விலை ரூ.154.15

வாங்கலாம்

சில சிறப்பான நிதிநிலை முடிவுகளை கடந்த காலாண்டில் இந்த நிறுவனம் வெளிப்படுத்திய தால், அடுத்த காலாண்டு முடிவு கள் குறித்து அதிக எதிர் பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த எதிர் பார்ப்பு பங்கின் வர்த்தக செயல் பாடுகளில் ஏற்கெனவே தெரிய ஆரம்பித்துவிட்டது.

இதன் கன்சாலிடேசன் நிலை களிலிருந்து அதிக வால்யூம்களில் நல்ல விலை நகர்வும் காணப்படு கிறது. இந்தப் போக்கில் தொடர்ந் தால் பங்கின் விலை ரூ.170-185 என்ற நிலைக்கு உயர வாய்ப் புள்ளது. ரூ.138-க்குக் கீழ் ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்.

ஜே.எஸ் டபிள்யூ எனர்ஜி (JSWENERGY)

தற்போதைய விலை ரூ.176.30

வாங்கலாம்

ஆற்றல்துறை சார்ந்த பங்குகள் தற்போது டிமாண்டில் உள்ளன. அரசின் சில கொள்கை முடிவுகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்டவை இதற்கு காரணம் ஆகும்.

இந்தத் துறையில் ஜே.எஸ். டபிள்யூ எனர்ஜி பங்கு கடந்த மார்ச்சிலிருந்து ஏற்றத்திலிருந்து வருகிறது. ரூ.80 என்ற நிலை யிலிருந்து தற்போதைய விலைக்கு உயர்ந்துள்ளது.

இந்த ஏற்றத்தின் போக்கில் எந்த பலவீனமும் தெரியவில்லை எனவே, வரும் வாரங்களில் 190-208 என்ற இலக்கு விலையை நோக்கி முதலீடுகளை மேற்கொள்ளலாம். ரூ.155 ஸ்டாப் லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பிர்லா சாஃப்ட் (BSOFT)

தற்போதைய விலை ரூ.403

வாங்கலாம்

இந்தப் பங்கு முன்பே பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அப்போது மிகக் குறைவான விலையில் இருந்தது.

அதன்பின் நல்ல ஏற்றம் கண்டுள்ளது. தற்போது மீண்டும் ஒரு கன்சாலிடேசன் போக்கிலிருந்து ஏற்றத்தை நோக்கி நகர்வதற்கான அறிகுறியுடன் இருக்கிறது.

தற்போதைய நிலையிலிருந்து பிரேக் அவுட் ஆகும்போது ரூ.440-450 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.380க்குக் கீழ் ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

தமிழில்: திவ்யா