Published:Updated:

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு வெளியீடு... போட்டிபோடும் 16 நிறுவனங்கள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு வெளியீடு... போட்டிபோடும் 16 நிறுவனங்கள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

இன்று மாலை எங்கள் அலுவலகத்தில் முக்கியமான நிகழ்ச்சி. எனவே, முன்கூட்டியே வர முடியுமா..?” என ஷேர்லக்குக்கு காலையிலேயே தகவல் அனுப்பினோம். மதியம் 2.30 மணிக்கே நம் அலுவலகத்துக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். “நிகழ்ச்சி தொடங்கும் முன் பேசி முடிப்போம்” என்று அவர் சொல்லவே, நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கனரா வங்கிப் பங்கில் முதலீடு செய்திருப்பது பற்றி...

“பிரபல முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார். இவர் கனரா வங்கியின் தகுதி வாய்ந்த பெரிய முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் கனரா பேங்கின் 1.59% பங்கு களை (2,88,50,000 பங்குகள்) பங்கு ஒன்றுக்கு ரூ.149.35 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

இதே பிரிவில், எல்.ஐ.சி நிறுவனம் 15.91% பங்குகளையும், பி.என்.பி பரிபாஸ் 12.55% பங்கு களையும், சொசைட்டி ஜெனரல் 7.97% பங்கு களையும், இந்தியன் பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் தலா 6.37% பங்குகளையும் மார்கன் ஸ்டேன்லி ஆசியா (சிங்கப்பூர்) 6.16% பங்குகளையும், வோல்ராடோ வென்ச்சர் பார்ட்னர்ஸ் ஃபண்ட் (II) 6.05% பங்குகளையும் வாங்கி யிருக்கின்றன. பல்வேறு முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் கனரா வங்கியின் பங்குகளை வாங்கிய காரணத்தால், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 2% வரை அதிகரித்து ரூ.155.70-க்கு வர்த்தகமானது.”

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு வெளியீடு... போட்டிபோடும் 16 நிறுவனங்கள்..!

டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித் திருக்கிறதே?

“பி.எஸ்.இ சென்செக்ஸ் குறியீடு கடந்த ஒரு மாதத்தில் 6% வரை வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 15% வரை அதிகரித்திருக் கிறது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 2.3% வரை அதிகரித்தது. இந்த விலையேற்றத்தால் இதன் சந்தை மதிப்பு ரூ.13.5 லட்சம் கோடியைக் கடந்து, ரிலையன்ஸுக்கு அடுத்தபடியாக இருக்கிறது.’’

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு இலக்கு விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறதே?

“பன்னாட்டு பங்குத் தரகு நிறுவனம் ஜெஃப்ரிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கின் இலக்கு விலையை ரூ.830-லிருந்து ரூ.900-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் பங்குகளை வாங்கச் சொல்லியும் பரிந்துரை செய்திருக்கிறது. இதன் காரணமாக, கடந்த வாரம் புதன்கிழமை அன்று இதன் பங்கு விலை 5.45% வரை அதிகரித்து 699.80 ரூபாயாக அதிகரித்து வர்த்தகமானது.

அதேபோல, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஏற்கெனவே முதலீடு செய்துள்ள நசாரா டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்கையும் வாங்கப் பரிந்துரை செய்திருக்கிறது. இதனால் இந்தப் பங்கு விலை வியாழன் அன்று மதியம் 6.61% வரை விலை உயர்ந்து வர்த்தகமானது.”

எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீட்டை நிர்வகிக்க 16 நிதி நிறுவனங்கள் போட்டி போடுவதாகச் சொல்லப்படும் தகவல் உண்மையா?

‘‘எல்.ஐ.சி ஐ.பி.ஓ மிகப் பெரிதாக இருக்கும் என்பதால், நிதி நிறுவனங்கள் பலவும் இந்த பங்கு வெளியீட்டை நிர்வகிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதைய நிலையில், 16 நிதி நிறுவனங்கள் எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வை நிர்வகிக்க விண்ணப்பங்களை அனுப்பியிருக் கின்றன. அதில், பி.என்.பி பரிபா, சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, டி.எஸ்.பி மெரில் லிஞ்ச் (பி.ஓ.எஃப்.ஏ செக்யூரிட்டீஸ்) உள்ளிட்ட ஏழு சர்வதேச நிதி நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கின்றன. இவற்றைத் தவிர, கோல்டுமேன் சாக்ஸ் (இந்தியா) செக்யூரிட்டீஸ், ஹெச்.எஸ்.பி.சி செக்யூரிட்டீஸ் அண்டு கேப்பிடல் மார்க்கெட்ஸ் இந்தியா, ஜே.பி.மோர்கன் இந்தியா, நோமுரா ஃபைனான்ஷியல் அட்வைஸரி அண்டு செக்யூரிட்டீஸ் இந்தியா ஆகிய நிதி நிறுவனங்களும் ஐ.பி.ஓ வெளியீட்டை நிர்வகிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன. மேலும், உள்நாட்டு நிதி நிறுவனங்களான ஆக்ஸிஸ் கேப்பிடல், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட் டீஸ், ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட் டீஸ், டி.ஏ.எம் கேப்பிடல் அட்வைஸர்ஸ், எஸ்.பி.ஐ கேப்பிடல் மார்க்கெட்ஸ், கோட்டக் மஹிந்திரா கேப்பிடல், யெஸ் செக்யூரிட்டீஸ், ஜே.எம் ஃபைனான்ஷியல் ஆகிய ஒன்பது நிதி நிறுவனங்களும் ஐ.பி.ஓ நிர்வாகம் குறித்த திட்டத்தை விளக்கியுள்ளன. இந்த 16 நிதி நிறுவனங்களிலிருந்து ஏதேனும் 10 நிதி நிறுவனங்களை நிர்வகிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப் படுகிறது.’’

பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம், நிதி உதவி செய்வதன் மூலம் புதிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைத் தொடங்கு வதற்காக செபி அமைப்புக்கு விண்ணப்பித்திருந்தது. அதற்கான ஒப்புதலை, கொள்கை அடிப்படையில் செபி வழங்கி யிருப்பதாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் கூறியதைத் தொடர்ந்து பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத் தின் பங்கு விலை ஏற்றத்தைக் கண்டன. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி பங்கு வர்த்தகத்தில், பஜாஜ் ஃபின்சர்வ் பங்கு விலை 9% வரை அதிகரித்து, ரூ.16,590.15-க் கும், அதேபோல பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு விலை 4% வரை அதிகரித்து, ரூ.7,046.80-க்கு உச்சத்தைத் தொட்டு வர்த்தக மாகி இருக்கின்றன.”

ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் புராஃபிட் புக்கிங் செய்வதாகச் சொல்லப்படுகிறதே?

“முதலீட்டாளர்கள் பலரும் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்துவருகிறார்கள். ஏனெனில், வெளியீட்டு விலையான ரூ.76-லிருந்து 65% அதிகரித்து, தற்போது ரூ.126.65 என்கிற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் புராஃபிட் புக்கிங் செய்வதாகத் தெரிகிறது. தவிர, இந்தப் பங்கு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட திலிருந்து மொத்தம் 22 வர்த்தக தினங்களில் 14 தினங்களில் இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது. இதன் பங்கு விலையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறுவதற்கு முனைப்புக் காட்டிவருவதாகத் தெரிகிறது. அதேநேரத்தில் முக்கிய தரகு நிறுவனங்களில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் இந்த நிறுவனப் பங்கின் இலக்கு விலையை ரூ.220ஆக உயர்த் தியுள்ளது.”

சில லார்ஜ்கேப் பங்குகளின் இலக்கு விலையை வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் குறைத்தது என்ன காரணத்தினால்..?

“இந்தியச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளிலிருந்து, லார்ஜ்கேப் பங்குகள் பக்கம் கவனத்தைச் செலுத்தலாம் என அனலிஸ்ட்கள் சொல்லிவருகிறார்கள். அதே நேரத்தில், வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் ஒரு சில லார்ஜ்கேப் பங்குகளின் இலக்கு விலையைக் குறைத்திருப்பதையும் கவனத்தில்கொள்வது நல்லது. அதாவது, ஜெஃப்ரிஸ் நிறுவனம், இண்டஸ்இண்ட் பேங்க் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், இதன் இலக்கு விலையை ரூ.1,300-லிருந்து ரூ.1,270-ஆகக் குறைத்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ், அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. அதே நேரத்தில், இதன் இலக்கு விலையை ரூ.1,140-லிருந்து ரூ.980-ஆகக் குறைத்திருக்கிறது. அதேபோல, லூபின் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை, நோமுரா தரகு நிறுவனம் வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.1,297-ஆகக் குறைத்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப்பதுடன், இதன் இலக்கு விலையை ரூ.3,950-லிருந்து ரூ.3,600-ஆகக் குறைத்துள்ளது. வோடாஃபோன் நிறுவனத்தின் இலக்கு விலையை சி.எல்.எஸ்.ஏ ரூ.10-லிருந்து ரூ.6-ஆகக் குறைத்துள்ளது. மேலே குறிப்பிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் தற்சமயம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கிற காரணத்தால், வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் இலக்கு விலையைக் குறைத்திருப்பதாகத் தெரிகிறது.”

அப்டஸ் வேல்யூ ஹவுஸிங் மற்றும் கெம்ப்லாஸ்ட் சன்மர் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றியடைந்ததா?

“அப்டஸ் வேல்யூ ஹவுஸிங் நிறுவனம் ரூ.2,780 கோடி நிதி திரட்டும் நோக்கில், ஆகஸ்ட் 10-12-ம் தேதிகளில் ஐ.பி.ஓ வெளியிட்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது, வெளியீட்டு விலையான ரூ.353-லிருந்து 6.5% தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டது. அதாவது, ரூ.329.95-க்கு பட்டியலானது. என்.எஸ்.இ-யில் ரூ.333-க்கு பட்டியலானது.அதே போல, கெம்ப்லாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் பங்கும், பங்குச் சந்தையில் 3% குறைந்து, பி.எஸ்.இ-யில் ரூ.525-க்கு பட்டியலானது. என்.எஸ்.இ சந்தையில் ரூ.550-க்கு பட்டியலானது. இதன் வெளியீட்டு விலை ரூ.541-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.’’

மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம் ஏன்?

“விதிமுறைகளுக்குப் புறம்பாக தள்ளுபடி சலுகைகளை வழங்கிய காரணத்தால், நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனத்துக்கு இந்திய காம்பெட்டிஷன் கமிஷன் (சி.சி.ஐ) ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 60 நாள்களுக்குள் டெபாசிட் செய்யுமாறு மாருதி நிறுவனத் துக்கு சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1% வரை சரிந்து வர்த்தகமானது. ஆகஸ்ட் 26-ம் தேதி காலையும் 1.20% வரை சரிந்து ரூ.6,630 என்கிற விலையில் வர்த்தகமானது. இதே நேரத்தில் மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனம், இந்த நிறுவனத் தின் தயாரிப்புகளுக்கு தேவை அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.8,200-ஆக அதிகரித்துள்ளது.’’

காவிரி சீட்ஸ் நிறுவனப் பங்கு விலை திடீரென உயர்ந்திருக்கிறதே?

“இந்த நிறுவனம், அதன் பங்குதாரர்களிடமிருந்து ரூ.120 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்குவதற்கு அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. மொத்தம் 14,11,780 பங்குகள் திரும்ப வாங்கப்படுகிறது. இது இந்த நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் சுமார் 2.34% ஆகும்.

திரும்ப வாங்கும் பங்கு ஒன்றின் விலை ரூ.850 ஆக இருக்கும். இந்த அறிவிப்பை அடுத்து வியாழக்கிழமை காவிரி சீட்ஸ் பங்கு விலை ரூ.10.30 அதிகரித்து ரூ.590-க்கு வர்த்தக மானது. குறைந்தபட்சம் எத்தனை பங்குகள் ஒருவரிட மிருந்து வாங்கப்படும் என்கிற விவரம் இன்னும் அறிவிக்கப் படவில்லை” என்றவர், “உங்களுக்கு விழாவுக்கு நேரமாகி விட்டது. அடுத்த வாரம் பார்க்கலாம்” எனச் சொல்லி விட்டுக் கிளம்பினார்.

கந்து வட்டி சிக்கல்: மீள்வது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் ஜூனியர் விகடன் இணைந்து வழங்கும் ‘கந்து வட்டி சிக்கல்: மீள்வது எப்படி?’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி செப்டம்பர் 5, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 - 7.00 மணி வரை நடைபெறுகிறது.இதில், கந்துவட்டி சட்டத் திட்டங்கள் குறித்து ஆடிட்டர் வி.தியாகராஜன் (www.bizlane.in), சிக்கலிருந்து மீள்வது எப்படி? என்பது குறித்து வழக்கறிஞர் ஆர்.சரவணன் (Lawyerchennai.com) ஆகியோர் பேசுகிறார்கள்.இது கட்டணமில்லா கருத்தரங்கு ஆகும். முன் பதிவு செய்ய https://bit.ly/3fMNn9n

வரிவிதிப்பு மற்றும் முதலீடுகளில் அதன் தாக்கம்..!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘வரிவிதிப்பு மற்றும் முதலீடுகளில் அதன் தாக்கம்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, செப்டம்பர் 5 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

பர்சனல் ஃபைனான்ஸ்...ஈஸியா, ஜாலியா புரிஞ்சுக்கலாம் வாங்க..!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிதி சார்ந்த முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியம் பர்சனல் ஃபைனான்ஸ் எனப்படும் தனிநபர் நிதி நிர்வாகம்தான். இதன் அடிப்படைகளை மிக எளிதாக விளக்கிச் சொன்னார் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன். பண நிர்வாக விஷயத்தில் எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஐந்து பாசிட்டிவ்வான விஷயங்களையும், தவிர்க்க வேண்டிய ஐந்து விஷங்களையும் அவர் தெளிவாக எடுத்துச் சொன்னார். இதன் தொடர்ச்சியாக வருகிற திங்கள்கிழமை30-ம் தேதி அன்று இரவு 7.30 முதல் 8.15 வரை கிளப்ஹவுஸில் மீண்டும் பேசுகிறார் வ.நாகப்பன். https://bit.ly/3BdHnyx என்ற லிங்கை க்ளிக் செய்து, கிளப்ஹவுஸ் வலைதளத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்!இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism