ஜூம் ஆப் மூலம் நாணயம் விகடன் நடத்தும் கட்டணப் பயிற்சி வகுப்புகள் வேகமாகப் பிரபலமடைந்துவருகின்றன. கடந்த 26-ம் தேதி அன்று மாலை பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் பேசிய நிகழ்ச்சியில் வாசகர்கள் பலர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

‘கொரோனாவுக்குப் பிறகு... எழுச்சி பெறும் துறைகளும் பங்குகளும்’ என்ற தலைப்பில் பேசினார் ஏ.கே.பிரபாகர். ‘‘அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அளிக்கப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக வெளிநாட்டுச் சந்தைகள் ஏற்றத்தின் போக்கில் இருக்கின்றன. இதன் விளைவாக, இந்தியப் பங்குச் சந்தையும் உயர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் ஏதேதோ பங்குகளை வாங்காமல், அடிப்படை நன்றாக இருக்கும் பங்குகளை அலசி ஆராய்ந்து வாங்கினால், நீண்டகாலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்’’ என்றார்.

கொரோனாகால மாற்றங்களுக்குப் பிறகு லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள் பலவற்றைத் தந்து, அவற்றைத் தொடர்ந்து கவனிக்கும்படி கேட்டுக்கொண்ட அவர், பங்குகளை ஆய்வு செய்யத் தேவையான தகவல்களை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் எனச் சொல்லித் தந்தது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாணயம் விகடன் நடத்தும் இலவச, கட்டணக் கூட்டங்களில் இனி எல்லோரும் கலந்துகொள்ளலாமே!

- ஏ.ஆர்.கே