Published:Updated:

உச்சத்தில் சந்தை... அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும்? முதலீட்டாளர்களுக்கான கணிப்பு இது...

S H A R E M A R K E T

பிரீமியம் ஸ்டோரி

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

மீண்டும் ஓர் ஊரடங்கு காலகட்டம். கடந்த ஆண்டைப் போலவே. இந்த ஆண்டும் இந்தியப் பங்குச் சந்தையை வரலாற்றில் மறக்க முடியாது. காரணம், கடந்த ஆண்டைப் போலவே, இப்போதும் பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு, புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது. இந்த நிலையில், சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க சில முக்கியமான விஷயங்களை ஆராய்வது அவசியம்.

ரெஜி தாமஸ், 
பங்குச் சந்தை 
நிபுணர்
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

1. எதிர்பார்ப்புக்கு மாறான வளர்ச்சி...

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நம்மை சூழ்ந்திருக்கும் சமயத்தில், ஊரடங்கு நெருக்கடிகளும் பெரிய அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜி.டி.பி வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியப் பங்குச் சந்தையில் இறக்கம் உண்டாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சந்தை செயல் பாட்டாளர்கள் ‘இறக்கம்’ வரட்டும் என்று காத்திருக்கிறார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி சந்தை வேறுமாதிரி செயல் படுகிறது. இதுபோன்று ஏன் பங்குச் சந்தை முரணாகச் செயல்படுகிறது என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

உச்சத்தில் சந்தை... அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும்? முதலீட்டாளர்களுக்கான கணிப்பு இது...

2 நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகள்

இந்த நெருக்கடியான ஊரடங்கு காலகட்டம் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளுடன் தொடர்பு உடையவையாக இருக்கிறது. இது கடந்த மார்ச் 2020-ல் நடந்தது. இந்த ஆண்டில் தற்போது மீண்டும் நடந்துள்ளது. ஆனால், இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம், 2020-ல் ஊரடங்கு அனைவருக்குமே புதிய அனுபவம். இந்த முறை ஊரடங்கு பழகிய ஒன்றாகிவிட்டது. எனவே, நாம் அனைத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மார்ச் 2020-ல் வெளியான காலாண்டு முடிவுகள் ஊரடங்குக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த பொருளாதாரச் சூழலை எதிரொலித்தன. ஆனால், தற்போதைய நான்காம் காலாண்டு முடிவுகள் கடுமையான ஊரடங்கு காலகட்டத்தை எதிரொலித்து உள்ளன. ஆனால், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளைப் பொறுத்தவரை, சில துறைகள், நிறுவனங்கள் சிறப்பாகச் செயலாற்றியதால் சந்தையின் ஏற்றத்துக்கு உதவியாக இருந்துள்ளன.

3. தொற்றுத் தடுப்பு

கொரோனா அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனில், ஊரடங்குத் தளர்வுகள், சந்தையைத் திறத்தல் போன்றவை மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அவசியமாக உள்ளன. இதற்குக் குறிப்பிட்ட கால அவகாசமும் கவனமான செயல்பாடுகளும் தேவை. தடுப்பூசி போடப்பட்ட மக்களின் எண்ணிக்கை உயரும்போது, தொற்று பாதிப்பு குறைய ஆரம்பிக்கும். தற்போதைய புள்ளிவிவரங் களின்படி, 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இலக்கு எட்டப்படும்பட்சத்தில் ‘கடுமையான ஊரடங்கு’ நடவடிக்கை களுக்கு அவசியம் ஏற்படாது. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் உயிர்பெறும். வளர்ச்சியை நோக்கி நகரும்.

கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து நிஃப்டி / சென்செக்ஸ் சார்ட் நகர்வை யார் பார்த்தாலும் சந்தை ஏற்றத்தின் போக்கிலேயே இருந்துவந்திருப்பது தெளிவாகத் தெரியும். சில இறக்கங்கள் காணப்பட்டாலும் தொடர்ந்து ஏற்றமடைந்து வந்திருப்பது புரியும். சந்தைக் குறியீடுகள் இந்த ஏற்றத்தின் போக்கில் வலுவான சப்போர்ட் நிலைகளைக் கொண்டிருந்தன. இந்த சப்போர்ட் நிலைகளை இதுவரையிலும் உடையாமல் தக்கவைத்திருக் கின்றன. இது பாசிட்டிவ் போக்கின் ஒரு முக்கிய அம்சமாகும்.

பிப்ரவரி 16, 2021-லிருந்து கடந்த வாரம் வரையிலும் ஒரு மிதமான நிலையற்றத்தன்மை சந்தையில் காணப்பட்டது. சுருக்கமாக, சார்ட்டின் நகர்வுகள் ஒருசவாலை அதாவது, இறக்கத்துக்கு உள்ளாகலாமா அல்லது தக்க வைத்துக் கொள்ளலாமா என்று ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையை எதிரொலிப்பதாகச் சொல்லலாம்.

சந்தை அதன் நகர்வின் திசைக்காக திணறிய நிலையில் 15431 - 14141 என்ற வரம்புக்கு உள்ளேயே வர்த்தகமானது. தொடர்ந்து சிறு சிறு ஏற்றங் களையும் இறக்கங்களையும் உருவாக்கியது. இந்த இறக்கமானது பெருந்தொற்றின் இரண்டாம் அலையையொட்டிய எதிர்வினை யாக இருக்கலாம். புள்ளிவிவரங்கள் உயர, வைரஸ் பாதிப்பு குறைய சந்தையின் கன்சாலிடேஷன் முடிந்து அதன் பழைய உற்சாகத்தை அடையும்; புதிய முதலீடுகளை ஈர்க்கும். தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளும், நிறுவனங்களின் வணிகமும் வளர்ச்சி அடைந்தால் சந்தை நாம் எதிர்பார்க்கும் எற்றத்தின் பயணத்தைத் தொடரும். சந்தை குறியீடுகள் 100 நாள்களில் கண்ட இறக்கத்தின் போக்கில் வலுவான ரவுண்டிங் பாட்டம் அல்லது சாசர் பாட்டம் போன்ற பேட்டர்னை உருவாக்கியுள்ளன. டெக்னிக்கல் அனாலிசிஸ்படி, இது காளையின் போக்குக்கான அறிகுறியாகும். புதிய நகர்வு களையும் புதிய உச்சங்களையும் பதிவு செய்யும். இது பாசிட்டிவ் போக்கின் இரண்டாவது முக்கிய அம்சமாகும்.

வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்து, தடுப்பூசி போடப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அது பாசிட்டிவ் சிக்னலை உண்டாக்கும். ஊரடங்கு நீக்கப்பட்டு, பொருளா தார நடவடிக்கைகள் வளர்ச்சி காணும்போது சந்தையும் பாசிட்டிவ் போக்குக்கு உள்ளாகும்.

பொருளாதார நடவடிக் கைகள் பழையபடி மாறும்போது நிறுவனங்களின் செயல்பாடு அவற்றின் லாப வளர்ச்சி போன்றவையும் வளர்ச்சி காணும். இதுவும் சந்தைக்கு பாசிட்டிவ்தான்.

சமீபத்திய பொருளாதார செயல்பாடுகளின் போக்கு உற்பத்தி செயல்பாட்டில் மந்த நிலையைக் காட்டுகிறது. எனவே, ஜி.டி.பி வளர்ச்சியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு நெகட்டிவ்வாக இருந்தால், குறைவான வட்டி விகிதம் தொடரும். குறைந்த வட்டி விகிதம் சந்தைக்குச் சாதகமாக இருக்கும்.

துறை சார்ந்த நடவடிக்கைகள் முன்பைவிடவும் பெரிய அளவில் இருக்கும். கடன்கள் மறுசீரமைக் கப்படும்; வாராக் கடன்கள் கவனமாகக் கண்காணிக்கப்படும். காரணம். இவை நிதித்துறை நிறுவனங்களைப் பாதிக்கக் கூடியவை. இதனால் ஆட்டோ மொபைல், கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட் போன்றவை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகும். ஐ.டி, பார்மா, நுகர்வு உள்ளிட்ட துறைகள் நிலையாக இருக்கும்.

சந்தைக் குறியீடுகளில் புதிய உச்சங்கள் உண்டாகலாம். தற்போது இறக்கம் தொடர்பான ரிஸ்க் மிகக் குறைவு. இதற்கு அர்த்தம், இறக்கம் இருக்காது என்பதல்ல. பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கக் கூடிய இறக்கம் இருக்காது என்பதே.

முதலீட்டாளர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றிருப் பார்கள். முதல் அலையின் ஊரடங்கு போடப்பட்டபோது பெரும்பாலான முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறினார்கள். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்குச் சந்தையின் ஏற்றத்தை அவர்கள் தவறவிட்டார்கள். இந்த முறை, அவர்கள் பங்குச் சந்தையின் நகர்வை எதிர்நோக்கித் தயாராக இருக்கிறார்கள். முதலீட்டை வெளியே எடுக்க அவர்கள் விரும்பவில்லை. மாறாக, பொறுத்திருந்து கடந்த ஆண்டில் பங்குச் சந்தையில் உண்டான எற்றத்தை அனுபவிக்க காத்திருக்கிறார்கள். எஸ்.ஐ.பி முதலீடுகள் அதிகரித்துள்ளன; புதியவர் கள் அதிகரித்துள்ளனர்; மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் உயர்ந்திருக்கிறது. முதலீடு செய்தவர்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள். இது சந்தையைத் தொடர்ந்து உற்சாகத்துடன் வைத்திருப் பதுடன், பாசிட்டிவான எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறது.

சந்தை பற்றி இப்படிச் சொல்வார்கள்: ‘சந்தையின் போக்கு உங்கள் நண்பன்.’ இதற்கு அர்த்தம், என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் சந்தையின் போக்கோடு இணைந்து செயல்படுங்கள் என்பதே. காற்றுள்ளபோது தூற்றிக்கொள் என்பது போல, சந்தையின் தற்போதைய போக்குக்கு ஏற்ப செயல்பட்டால் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் தற்போதைய போக்கில் ஏற்றத்துக்கான சாத்தியங்கள் வலுவாக உள்ளன. கவனமாக முதலீடு செய்யுங்கள், சந்தை யின் போக்குக்கேற்ப செயல்படுங்கள்!

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு