Published:Updated:

ஷேர்லக்: அதிவிரைவில் ஐ.பி.ஓ வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) புதிய பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட செபியிடம் ஆரம்பக்கட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது

ஷேர்லக்: அதிவிரைவில் ஐ.பி.ஓ வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க்..!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) புதிய பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட செபியிடம் ஆரம்பக்கட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

"விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள என் நண்பரின் அலுவலகத்துக்கு 5 மணிக்குப் போகிறேன். நாம் கொஞ்சம் சீக்கிரமாகவே சந்திப்போமா?’’ என்று காலையில் நமக்கு தகவல் அனுப்பி இருந்தார் ஷேர்லக். ‘‘எங்கள் அலுவலகத்திலும் 4 மணிக்கு விநாயகர் சதுர்த்தி பூஜை. எனவே, 3 மணிக்கு வர முடியுமா?’’ என்று கேட்டோம். ‘‘டபுள் ஓகே...’’ என்று சொன்னவர், சொன்னபடி 3 மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார்.

ஏ.பி.எல் அப்போலோ டியூப் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘இந்தப் பங்கு நிறுவனம் தனது முதலீட் டாளர்களுக்கு 1:1 என்கிற விகிதத்தில் வருகிற செப்டம்பர் 18-ம் தேதி போனஸ் பங்குகள் வழங்க முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதும், கடந்த வாரம் புதன்கிழமை இந்த நிறுவனத்தின் பங்கு விலை 6% வரை அதிகரித்து ரூ.1,874.95-க்கு வர்த்தக மானது. கடந்த மூன்று மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 11.5% வருமானம் கொடுத்திருக்கிறது. ஆனால், இந்தப் பங்கு 36% வருமானத்தைத் தந்திருக்கிறது’’ என்றவரிடம், அப்போது லே அவுட்டாகி வந்த இரண்டு பக்கங்களைக் (பக்கம் எண் 80 - 81) காட்டினோம். ‘‘அட, பிரமாதம். போனஸ், பங்கு பிரிப்பு, டிவிடெண்ட் என எல்லா விவரங்களையும் சொல்லி கலக்கி யிருக்கிறீரே! முதலீட்டாளர்களுக்கு இந்த இரு பக்கங்களும் பேருதவியாக இருக்கும்’’ என்று புகழ்ந்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் ஐ.பி.ஓ தொடர்பான ஆவணங்களை செபியில் தாக்கல் செய்திருக்கிறதே?

‘‘குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), விவசாயிகள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் வங்கிச் சேவைகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) புதிய பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட செபியிடம் ஆரம்பக்கட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின்மூலம் 1,58,27,495 புதிய பங்குகளையும், ஓ.எஃப்.எஸ் முறையில் 12,505 பங்குகளையும் விற்பனை செய்ய இந்த வங்கி முடிவு செய்துள்ளது.

ஓ.எஃப்.எஸ் முறையில், பங்குதாரர்களான, டி-பிரேம் பழனிவேல் மற்றும் பிரியா ராஜன் ஆகிய இருவருடைய பங்குகளில் தலா 5,000 பங்குகள், பிரபாகர் மகாதியோ பாப்டேவின் 1,000 பங்குகள், நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தியின் 505 பங்குகள் மற்றும் எம்.மல்லிகா ராணி மற்றும் சுப்பிர மணியன் வெங்கடேஸ்வரன் ஐயர் ஆகிய இருவரின் பங்குகளில் தலா 500 பங்குகளை விற்பனை செய்கிறது.

இந்த ஓ.எஃப்.எஸ் மூலம் திரட்டப்படும் நிதியைத் தனது எதிர்கால முதலீட்டுத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் டியர்-1 முதலீட்டை அதிகரிப்பதற்குப் பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ சந்தைகளில் பட்டிய லிடப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டை ஆக்ஸிஸ் கேப்பிடல் லிமிடெட், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட் மென்ட் அட்வைசர்ஸ் லிமிடெட் மற்றும் எஸ்.பி.ஐ கேப்பிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.

கடந்த ஜூன் 30, 2021 நிலவரப்படி, இவ்வங்கி 509 கிளை களுடன் வலுவான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் 106 கிளைகள் கிராமப்புறங்களிலும், 247 வளர்ந்து வரும் நகர்ப்புறங்களிலும், 80 வளர்ச்சியடைந்த நகர்ப்புறங் களிலும், 76 பெருநகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன.ஏற்கெனவே தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் இந்த வங்கி புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டும் நிதியைக் கொண்டு இன்னும் வேகமான வளர்ச்சியைப் பெறும் என்பது பகுப்பாய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.’’

ஷேர்லக்: அதிவிரைவில் ஐ.பி.ஓ வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க்..!

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை குறித்து...

‘‘கடந்த ஒரு வருடத்தில் நிஃப்டி 24% வருமானத்தைக் கொடுத்துள்ள நிலையில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு 122% வருமானத்தைத் தனது முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருவதால், ஐ.டி, மெட்டல் மற்றும் ஆயில் அண்டு கேஸ் ஆகிய பெஞ்ச்மார்க் இண்டெஸ்களும் புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகி வருகின்றன. தற்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,438-க்கு (வியாழன் மதியம்) வர்த்தகமாகி வருகிறது. ஜூன் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.9,768.34 கோடியை நிகர லாபமாகப் பதிவு செய்திருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டில் நிகர இழப்பாக ரூ.4,648.13 கோடியாக இருந்தது.

உலக அளவில் செயல்படும் பங்குத் தரகு நிறுவனமான ஜே.பி.மார்கன், இந்த நிறுவனப் பங்கின் இலக்கு விலையை ரூ.1,810-ஆக நிர்ணயித்துள்ளது. சர்வதேசத் தரகு நிறுவனங்களில் ஒன்றான யு.பி.எஸ், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.1,400-லிருந்து ரூ.1,800-ஆக அதிகரித்துள்ளது.’’

ஆசியன் கிரானிடோ நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே... ஏன்?

‘‘இந்தியாவின் முன்னணி டைல்ஸ் பிராண்டுகளில் ஒன்றான ஆசியன் கிரானிடோ இந்தியா லிமிடெட் (AGIL) வருகிற செப்டம்பர் 23, 2021 அன்று தனது உரிமைப் பங்குகள் வெளியீட்டைத் தொடங்க உள்ளது. இந்த உரிமைப் பங்குகள் முதலீடு அக்டோபர் 7, 2021 அன்று முடிவடைகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பங்கு விலை 10% வரை அதிகரித்து, ரூ.153.35 என்கிற விலையில் வர்த்தகமானது. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு நிலுவையிலுள்ள நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும், செயல்பாட்டு மூதனத் தேவைகளுக்கும் பயன் படுத்திக்கொள்ள இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.’’

எல்.ஐ.சி - ஐ.பி.ஓ வெளியீட்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டை அனுமதிக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறதே?

‘‘அரசுக்குச் சொந்தமான எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு களை ஐ.பி.ஓ வெளியிடுவதன் மூலம் ரூ.90,000 கோடியைத் திரட்ட அரசு முடிவு செய்திருக் கிறது. இதில், செபியின் விதிமுறை களுக்கு உட்பட்டு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக் கென சுமார் 20% ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. செபி விதிகளின்படி, வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ) ஐ.பி.ஓ-வில் பங்குகளை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், எல்.ஐ.சி சட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடமில்லை என்பதால், முன்மொழியப்பட்ட எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வை வெளிநாட்டு முதலீட்டாளர் பங்கேற்பு தொடர் பான செபி விதிமுறைகளுடன் சீரமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எல்.ஐ.சி - ஐ.பி.ஓ வெளியீட்டை நிர்வகிக்க மொத்தம் 16 மெர்ச்சன்ட் பேங்குகள் விண்ணப்பித்திருந்தன. அதில், கோல்டுமேன் சாக்ஸ் (இந்தியா) செக்யூரிட்டீஸ், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, நோமுரா ஃபைனான் ஷியல் அட்வைசரி அண்டு செக்யூரிட்டீஸ் இந்தியா, எஸ்.பி.ஐ கேப்பிடல் மார்க்கெட்ஸ் உட்பட 10 மெர்ச்சன்ட் பேங்குகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.’’

முக்கிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரித்திருப்பது பற்றி...

‘‘அதிக சந்தை மதிப்பு கொண்ட டாப் 10 நிறுவனங்களில், 9 நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கடந்த வாரம் ரூ.2,93,804 கோடி அதிகரித் துள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.1,02,382 கோடி அதிகரித்து, ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது. இதனால் சந்தை மதிப்பில் ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டிய முதல் நிறுவனம் என்கிற பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடைந்திருகிறது.

அடுத்ததாக, டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.44,832 கோடி அதிகரித்து ரூ.14.20 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.35,342 கோடி அதிகரித்து, ரூ.3.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.33,907 கோடி அதிகரித்து, ரூ.4.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.’’

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

‘‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகம் தொடர்பான நிறுவனத்தின் திட்டங்கள், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 6-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 4% வரை விலை அதிகரித்து புதிய உச்ச விலையான ரூ.2,479.85-க்கு வர்த்தக மானது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 25% வளர்ச்சியை, தனது முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறது ரிலையன்ஸ்.

ரிலையன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை நடப்பு ஆண்டின் இறுதிக்குள் ரூ.2,700 - 2,750 வரை செல்லும் என கேப்பிடல்வயா குளோபல் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல, பல பங்கு ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் ரூ.2,800 ரூபாயைத் தொடும் எனக் கணித்திருக்கின்றன.’’

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஸ்ட்ராண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பது பற்றி...

‘‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ராட்டஜிக் பிசினஸ் வென்ச்சர் நிறுவனம், ஸ்ட்ராண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் ரூ.10 முகமதிப்பு கொண்ட 2.28 கோடி பங்குகளை வாங்கியிருக்கிறது. இதற்காக இந்த நிறுவனம் முதலீடு செய்திருக்கும் தொகை ரூ.393 கோடி. மேலும், ரூ.190 கோடியை வருகிற மார்ச் 2023-ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப் போவதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. சில மாதங் களுக்கு முன்பு நெட்மெட்ஸ் நிறுவனத்தின் 60% பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியது. மருந்து விற்பனைத் துறையில் எதிர் காலத்தில் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை அமைக்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இருப்பது போலத் தெரிகிறது.’’

கோல்டியம் இன்டர்நேஷனல் நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து...

``இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுக் கூட்டம், செப்டம்பர் 13-ம் தேதி நடக்கிறது. அந்தக் கூட்டத்தில், பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்ப வாங்குவது குறித்து பேசப்படும் எனவும், அதற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கும் எனவும் எதிர்பார்கப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 14% அதிகரித்து, ரூ.842-க்கு வர்த்தக மானது. வியாழன் காலை ரூ.860-ல் ஆரம்பித்த இதன் வர்த்தகம், சந்தை முடியும்போது ரூ.921.40 என்கிற விலையில் நிறைவு பெற்றது’’ என்றவர், ‘‘நாணயம் விகடன் கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி படுஜோராகப் போகிறது. என் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு பாராட்டுகிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு, பூஜைக்குப் புறப்பட்டார்!

ஜி.சொக்கலிங்கம்
ஜி.சொக்கலிங்கம்

Midcap & Smallcap... இன்னும் லாபம் தருமா?

நாணயம் விகடன் கிளப் ஹவுஸ் வலைதளத்தில் 13.09.2021 (திங்கள்கிழமை) மாலை 7.00 மணி முதல் 7.45 வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குச் சந்தை நிபுணரும் ஈக்னாமிக்ஸ் பங்கு ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள https://bit.ly/3E1pfdt என்கிற லிங்கை க்ளிக் செய்யுங்கள்!

நாணயம் விகடன் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் தவறாமல் கலந்துகொள்ள நாணயம் விகடன் கிளப்பில் இணைந்துகொள்ளுங்கள்! https://bit.ly/2Ypv8kB“

பங்குகள், ஐ.பி.ஓ, மியூச்சுவல் ஃபண்ட்: ஆன்லைனில் எளிதாக முதலீடு செய்வது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் Alice Blue இணைந்து நடத்தும் ‘பங்குகள், ஐ.பி.ஓ, மியூச்சுவல் ஃபண்ட்: ஆன்லைனில் எளிதாக முதலீடு செய்வது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, செப்டம்பர் 25-ம் (சனிக்கிழமை) மாலை 4.30 - 5.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில் நிதி ஆலோசகர் விவேக் கார்வா (Vridhiinvestment.in), அலைஸ் புளு நிறுவனத்தின் இயக்குநர் கே.ராஜேஷ் ஆகியோர் பேசுகிறார்கள். அண்மைக் காலத்தில் அதிகமானோர் புதிதாக நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/3toeOf1

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism