Published:Updated:

ஷேர்லக்: புதிய பங்கு வெளியீடு... சாதனை படைத்த 2021

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நம் அலுவலகத்துக்கு வந்து நம்மைச் சந்திக்கப்போவதாக அன்று காலையில் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். ஆனால், மதியம் 2 மணி தொடங்கி பெய்ய ஆரம்பித்த மழை, 4 மணிக்கு மேலும் தொடர்ந்த நிலையில், 4.30 மணிக்கு நமக்கு போன் செய்தார் ஷேர்லக். ‘‘நம்மைச் சந்திக்க விடாமல் இயற்கை சதி செய்கிறது. போகட்டும், நாம் போனிலேயே பேசி முடிப்போம்’’ என்றவரிடம், நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க, பதில்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

ரிலையன்ஸ் மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருப்பது ஏன்?

“முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத் தின் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக மறைமுகமாகக் கூறியிருப்பதுடன், இளம் தலைமைக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி இருப்பது பிசினஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸின் அடுத்த தலைவர் யார் என்கிற கேள்வியைத்தான் அனைவரும் கேட்கிறார்கள். அவருடைய வாரிசுகளில் ஒருவர்தான் தலைவராக இருப் பாரா அல்லது டாடா நிறுவனத்தைப்போல தொழில்முறை வல்லுநரால் இனி ரிலையன்ஸ் நடத்தப்படுமா என்கிற கேள்விக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.’’

அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டிஸ், அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்தது. எதிர்வரும் நிதி ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என இந்நிறுவனம் கணித்திருக்கிறது. இதன் இலக்கு விலை ரூ.8,850-ஆக நிர்ணயித்துள்ளது. வியாழனன்று வர்த்தக முடிவில் இந்தப் பங்கு ரூ.7,397-ஆக வர்த்தகமானது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

பி.எஸ்.இ நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுக் கூட்டம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியிடுவது குறித்தும், முதலீட் டாளர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்கிற தகவல் வெளியானது. இதன் காரணமாகக் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 7% வரை அதிகரித்து, ரூ.1,963.85-க்கு வர்த்தகமானது. ஆனால், வியாழன் அன்று வர்த்தக முடிவில் இந்தப் பங்கு ரூ.1,910 என்கிற அளவில் வர்த்தகமானது.”

ஜே.பி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

“இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த டிசம்பர் 29-ம் தேதி காலை வர்த்தகத்தில் 3% வரை அதிகரித்து வர்த்தகமானது. 30-ம் தேதி வர்த்தகத் திலும் இதன் பங்கு விலை 3% வரை அதிகரித்து ரூ.1,710 என்கிற விலையில் வர்த்தகமானது. ஜே.பி கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ‘Molnupiravir 200 mg’ என்கிற மருந்தைப் புதிதாக அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்தத் தகவல் வெளியானதும் பங்கின் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இந்த மருந்தானது கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்தாகும். லேசானது முதல் மிதமான கோவிட் -19 சிகிச்சைக்காக யு.எஸ்.எஃப்.ஏ-விடமிருந்து அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) சமீபத்தில்தான் இந்த மருந்து பெற்றது.”

ஏ.எஸ்.எம் நிறுவனத்தின் பங்கு விலை அப்பர் சர்க்யூட் நிலையில் தொடர்ந்து வர்த்தகமானது ஏன்?

“ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான ஏ.எஸ்.எம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் புதன்கிழமை அன்று 12-வது நாளாக அப்பர் சர்க்யூட் நிலையில் வர்த்தக மானது. அன்றைய தினத்தில் 5% வரை விலை அதிகரித்து ரூ.687.50 என்கிற விலையில் வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதன் பங்கு விலை 166% அதிகரித்திருக்கிறது. ஆறு மாதத்தில் 325% அதிகரித் திருக்கிறது.”

கடந்த 2021-ம் ஆண்டில் ஐ.பி.ஓ-க்கள் அதிக அளவில் வெளியிடப் பட்டது ஒரு சாதனைதானே..?

‘‘கடந்த 2021-ம் ஆண்டில் ஐ.பி.ஓ வெளியிட்ட 65 நிறுவனங் கள் சுமார் ரூ.1.31 லட்சம் கோடி அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது. 2021-ல் அதிக அளவில் நிதி திரட்டிய ஐ.பி.ஓ-க்கள் என்கிற அடிப்படை யில் பேடிஎம் நிறுவனம் ரூ.18,300 கோடியுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து, ஸொமேட்டோ ரூ.9,375 கோடி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ரூ.7,735 கோடி, ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரூ. 7,249.2 கோடி, பி.பி ஃபின்டெக் ரூ. 5,625 கோடி, சோனா பி.எல்.டபிள்யூ ரூ. 5,550 கோடி, நைகா ரூ.5,352 கோடி, நுவோகோ விஸ்டாஸ் கார்ப் ரூ.5,000 கோடி, ஐ.ஆர்.எஃப்.சி ரூ.4,633 கோடி மற்றும் செம்ப் லாஸ்ட் சன்மார் ரூ.3,850 கோடி என முதல் பத்து இடத்தை இந்த நிறுவனங்கள் பிடித்துள்ளன.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாகப் பங்குச் சந்தையின் மீது பயம் இருந்தபோதிலும், கடந்த ஆண்டில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய ஐ.பி.ஓ-க்களில் மொத்தம் ரூ.79,851 கோடி அளவுக்கு முதலீடு செய் திருக்கிறார்கள். 2020-ல் ரூ.71,718 கோடியை இவர்கள் இந்திய ஐ.பி.ஓ-க்களில் முதலீடு செய்திருந்தனர். அதே சமயம், செகன்டரி மார்க்கெட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2021-ம் ஆண்டில் ரூ.50,277 கோடியை இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியில் எடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு ரூ.28,835 கோடியாக இருக்கிறது.”

சாய்ஸ் புரோக்கிங் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான சில பங்குகளை பரிந்துரை செய்திருக்கிறதே..?

“கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைவது, பொருளாதார நடவடிக்கைகளில் இருக்கும் முன்னேற்றம் போன்றவற்றை காரணம் காட்டி சாய்ஸ் புரோக்கிங் நிறுவனம், வருகிற 2022-ம் ஆண்டில் ஏழு குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டு, பரிந்துரை செய்திருக்கிறது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை தற்போதைய விலையிலிருந்து 42% அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இதன் இலக்கு விலை ரூ.956. ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, தற்போதைய வர்த்தக விலையைவிட 30% அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதன் இலக்கு விலை ரூ.833 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தற்போதைய வர்த்தக விலையைவிட 23% அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதன் இலக்கு விலை ரூ.2,821 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்கின் தற்போதைய பங்கு வர்த்தக விலையைவிட 22% அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் இலக்கு விலை ரூ.900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்கு வர்த்தக விலையைவிட 15% அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பிருப்பதாகவும், இதன் இலக்கு விலை ரூ.2,150 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லார்சன் அண்டு டியூப்ரோ நிறுவனத்தின் தற்போதைய பங்கு வர்த்தக விலையைவிட 20% அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பிருப்ப தாகவும், இதன் இலக்கு விலை ரூ. 2,220 எனவும் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. ஷேஃப்லர் இந்தியா நிறுவனத்தின் தற்போதைய பங்கு வர்த்தக விலையைவிட 20.5% அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பிருப்பதாகவும், இதன் இலக்கு விலை ரூ.10,380 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.”

சுப்ரியா லைஃப் சயின்ஸ் பங்கு விலை பிரீமியத்தில் பட்டிய லிடப்பட்டிருக்கிறதே?

“இந்த நிறுவனம் ரூ.700 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் பங்கு ஒன்றின் விலை ரூ.265-274 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 28-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலானபோது 55% பிரீமியம் விலையில் பட்டியலானது. அதாவது, என்.எஸ்.இ சந்தையில் இந்தப் பங்கு ரூ.421-க்கும், பி.எஸ்.இ சந்தையில் ரூ.425-க்கும் வர்த்தகமானது. இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்கள் நல்ல வரவேற்பு வழங்கியிருந்தார்கள். அதனால் இந்தப் பங்குக்கு டிமாண்டு அதிகரித்து காணப்படு கிறது.”

ஏதர் இண்டஸ்ட்ரீஸ் புதிய பங்கு வெளியிடுவது பற்றி?

“சூரத்தைச் சேர்ந்த சிறப்பு ரசாயனத் தயாரிப்பு நிறுவனமான ஏதர் இண்டஸ்ட்ரீஸ் (Aether Industries), பங்கு முதலீட்டாளர்களிடமிருந்து ஐ.பி.ஓ மூலம் ரூ.757 கோடி நிதி திரட்டும் நோக்கில் பங்குகளை விற்பனை செய்கிறது. புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து ரூ.190 மூலதனச் செலவுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்; ரூ.211.40 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தவும், ரூ.165 கோடி செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காகவும் செலவிடப்பட இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டின் செப்டம்பர் நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.223.73 கோடி’’ என்றவர், கடைசியாக ஓர் எச்சரிக்கைத் தகவலையும் தந்தார்.

‘‘பிட்காயினில் பணம் போட் டால் எக்கச்சக்க லாபம் என்று சேலத்தில் எம்.எல்.எம் முறையில் மக்களை ஏமாற்றிவந்த ஒரு கோஷ்டி, இப்போது கோவையிலும் நுழைந்துவிட்டது. இங்குள்ள ஹோட்டல்களில் இந்த மோசடிக் கும்பல் கூட்டம் ஆட்களை வலை விரிக்கத் தொடங்கியிருக்கிறது. கோவை மக்களே உஷாராக இருங்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு, ‘‘வாசகர்கள் அனைவருக்கும் ஹேப்பி நியூ இயர்’’ என்றபடி போனைத் துண்டித்தார்!

பங்கு வெளியிடும் மில்கி மிஸ்ட்..!

ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மில்கி மிஸ்ட் டைரி புட் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் ஐ.பி.ஓ வரத் திட்ட மிட்டிருக்கிறது. ஈரோட்டில் தற்போதுள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.550 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டது. தற்போது கடன் மற்றும் பங்குகள் மூலம் மேலும் ரூ.1,000 கோடியில் புதிய தொழிற்சாலையை மேலும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது இந்த நிறுவனம். வரும் மார்ச் மாதத்துக்குள் தனியார் பங்குகள் மூலம் முதலீட்டை ஈட்டவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து 20 மாதங்களுக்குள் ஐ.பி.ஓ வருவதற்கான அனைத்து வேலைகளும் முடுக்கிவிடப்படும் எனத் தெரிகிறது!

ஷேர்லக்: புதிய பங்கு வெளியீடு...
சாதனை படைத்த 2021