Published:Updated:

ஷேர்லக்: முதலீட்டுக்கு ஏற்ற ஸ்மால்கேப் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

"மறுபடியும் தொற்று எண்ணிக்கை உயர்வால் பாதுகாப்பு அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளதால், டெக்னாலஜி யைப் பயன்படுத்தி சமாளிப்போம்” எனப் புதன்கிழமை காலையிலேயே வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். சரியாக மாலை 4 மணிக்கு வீடியோகாலில் அவருடன் பேசினோம். நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க, அவர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்திருக்கிறதே?

“அதானி குழும நிறுவனங்களான அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங் களின் சந்தை மதிப்பு ஏற்கெனவே ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், தற்போது நான்காவதாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. கடந்த ஜனவரி 11-ம் தேதி இந்நிறுவனத்தின் பங்கு விலை 5.16% அதிகரித்து, ரூ.1,844.50 என்கிற விலையில் வர்த்தகமானது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நான்கு நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைக் கடந்திருக்கிறது.

தற்போதைய நிலையில், சந்தை மதிப்பின் அடிப்படையில் ரூ.24.27 லட்சம் கோடி மதிப்புடன் டாடா குழுமம் முதல் இடத்திலும், ரிலையன்ஸ் குழுமம் ரூ.16.65 லட்சம் கோடி யுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“டி.சி.எஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில், பங்குகள் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்கிற செய்தி வெளியானதும், கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 3.5% வரை பங்கு விலை அதிகரித்து, ரூ.3,979.90 ஆக வர்த்தகமானது. ஆனால், புதன்கிழமை காலை வர்த்தகத்தில் பங்கு விலை சரிவுடன் காணப்பட்டது. 11 மணி அளவில் இதன் பங்கு விலை ரூ.3,883 என்கிற விலையில் காணப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டில் டி.சி.எஸ் நிறுவனம் மொத்தம் 5.3 கோடி பங்குகளை ரூ.3,000 என்கிற விலையில் திரும்பப் பெற்றிருக்கிறது. மற்றும் 3.3 கோடி பங்குகளை இதே விலையில் திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே 2017, 2018 மற்றும் 2021-ல் மூன்று முறை பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றிருக்கிறது. இது நான்காவது முறை ஆகும்.”

இப்போது ஸ்மால்கேப் பங்குகளை முதலீட்டுக்கு கவனிக்கலாமா?

“நடப்பு 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த அச்சம் இருந்தாலும், அதையும் தாண்டி சந்தையின் போக்கில் ஏற்றம் இருந்துவருகிறது. இதைக் காட்டி ஷேர்கான் தரகு நிறுவனம் ஸ்மால்கேப் பங்கு களை முதலீட்டாளர்களுக்கு வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இந்தப் பங்குகளின் விலை 35% வரை ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் ஷேர்கான் தெரிவித்துள்ளது.

ஜுபிலன்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 25% வரை ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது; இதன் இலக்கு விலையை ரூ.4,710 ஆக நிர்ணயித்துள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று இதன் வர்த்தக விலை ரூ.3,906. ஸ்காஃப்லர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 15% வரை ஏற்றமடையும் என்றும், இதன் இலக்கு விலையை ரூ.10,678-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று இதன் வர்த்தக விலை ரூ.9,408.

ராடிகோ கெய்தான் நிறுவனத்தின் பங்கு விலை 20% வரை அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.1,475 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று வர்த்தக விலை ரூ.1,194. என்.ஓ.சி.ஐ.எல் நிறுவனத்தின் பங்கு விலை 35% வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், இதன் இலக்கு விலையை ரூ.348 ஆகவும் தரகு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. கடந்த வாரத்தில் புதன்கிழமை அன்று இந்த பங்கு ரூ.251.60-க்கு வர்த்தகமானது.

மேலும், அலெம்பிக் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை 25% ஏற்றத்தைப் பெறும் என்றும், அரிஹன்ட் சூப்பர் ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 23 - 25% வரை ஏற்றம் பெற வாய்ப்பிருப்பதாக ஷேர்கான் தரகு நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.”

காலாண்டு முடிவுகள் வரவிருக் கிறது. நிறுவனங்களின் லாப வளர்ச்சி எப்படி இருக்கும்?

“பங்குச் சந்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது. கொரோனா பாதிப்பு காலத்தில் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மெல்ல மீண்டுவந்த நிலையில், பேங்க், ஐ.டி, மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு, லாஜிஸ்டிக்ஸ், இன்ஷூரன்ஸ் மற்றும் ரீடெய்ல் துறையைச் சார்ந்த நிறுவனங்கள் நடப்பு நிதி ஆண்டின் கடந்த மூன்றாம் காலாண்டில் இரட்டை இலக்க லாப வளர்ச்சியை அடையும் வாட்டர்ஃபீல்ட் அட்வைசர்ஸ் தலைமை முதலீட்டு அதிகாரி நிமிஷ் ஷா கணிப்பு வெளியிட்டுள் ளார். மேலும், பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சுற்றுலா, ஹவுஸிங் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி ஆகிய துறைகளுக்கு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் சலுகைகள் வரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

உற்பத்தி நிறுவனங்கள் சந்திக் கும் மூலப்பொருள்கள் விலை உயர்வைத் தங்கள் வாடிக்கை யாளர்களுக்குக் கடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. ஏற்கெனவே நுகர்வு குறைந்துள்ள நிலையில் விலை உயர்வு விற்பனையை பாதிக்கும். இதனால் வருவாய் குறையும் என்ற அச்சம் உள்ளது. எனவே, உற்பத்தித் துறை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கலவையாகத்தான் வரவாய்ப்புள்ளது. உள்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் மூலப்பொருள்கள் துறைக்கான டிமாண்ட் நன்றாகாவே இருப்பதால், இவற்றின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆட்டோ மொபைல், ஆட்டோ ஆன்சிலரி துறை நிறுவனங்கள் சிப் பற்றாக்குறை சிக்கலையும் நுகர்வுக் குறைவு சிக்கலையும் எதிர்கொண்டுள்ளன. எனவே, இந்தத் துறை நிறுவனங்களின் வருவாய் அவற்றின் செயல்பாட்டைப் பொறுத்தே இருக்கும்.”

நடப்பு ஆண்டில் விலையேற்றத்தை சந்திக்கும் எனச் சில நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்களுக்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்திருக்கின்றனவே?

“கடந்த 2021-ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டின் முதல் வாரத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் வலுவான வர்த்தகத்தைத் தொடங்கியிருக்கின்றன. முதல் வாரத்திலேயே 7% வரை வளர்ச்சியை சந்தித்திருக்கின்றன. பல்வேறு காரணங்களை முன்வைத்து பல தரகு நிறுவனங்கள் சிமென்ட் பங்குகள், பார்மா மற்றும் சிறப்பு கெமிக்கல் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளைக் குறிப்பிட்டு, அந்தப் பங்குகளின் வளர்ச்சி நடப்பு ஆண்டில் 15 - 35% வரை இருக்கும் என பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையில் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு இலக்கு விலையை ரூ.2,050-ஆக மோதிலால் ஆஸ்வால் பங்கு தரகு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதன் பங்கு விலை சுமார் 35% வரை உயர வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 36% வரை உயர வாய்ப்பிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் யெஸ் செக்யூரிட்டீஸ், இலக்கு விலையை ரூ.1,345 ஆக நிர்ணயித்துள்ளது. எஸ்.ஆர்.எஃப் நிறுவனத்தின் பங்கு விலை 22% வரை உயரும் எனச் சொல்லியிருக்கிறது யெஸ் செக்யூரிட்டீஸ், இலக்கு விலையை ரூ.2,955 ஆக நிர்ணயித் துள்ளது.

கிளாண்ட் பார்மா (Gland Pharma) நிறுவனத்தின் பங்கு விலை 16% வரை உயர வாய்ப்பிருப்பதாக ஜெஃப்ரீஸ் இந்தியா தரகு நிறுவனம் சொல்லியிருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.4,556 ஆக நிர்ணயித்துள்ளது. லா ஓபலா ஆர்.ஜி நிறுவனத்தின் பங்கு விலை 23% வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சென்ட்ரம் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.520.”

இந்தியாவின் ஜி.டிபி விகிதம் குறித்த கணிப்பை உலக வங்கி வெளியிட்டிருக்கிறதே?

“இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் நடப்பு ஆண்டின் 8.3 சதவிகித மாக இருக்கும் என்றும், 2022-23-ம் நிதி ஆண்டில் இது 8.7 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் தனது ‘உலகப் பொருளா தார வாய்ப்புகள்’ என்கிற ஆய்வறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளைவிடவும் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி வலுவானதாக இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தின் ஜி.டி.பி நடப்பு நிதி ஆண்டில் 6.4 சதவிகித மாகவும், அடுத்த நிதி ஆண்டில் 6.9 சதவிகிதமாகவும் இருக்கும் என்றும், நேபாளின் ஜி.டி.பி. விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 3.9% மற்றும் அடுத்த நிதி ஆண்டில் 4.7% என்றும், பாகிஸ்தானின் ஜி.டி.பி நடப்பு ஆண்டில் 3.4% மற்றும் அடுத்த ஆண்டில் 4 சத விகிதமாகவும் இருக்கும் என்றும் உலக வங்கி ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.”

இன்று வெளியான விப்ரோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு ரிசல்ட் எப்படி?

‘‘இரண்டாம் காலாண்டில் ரூ.2,931 கோடியை லாபமாக ஈட்டிய இந்த நிறுவனம், மூன்றாம் காலாண்டில் ரூ.2,970 கோடியை லாபமாக ஈட்டியிருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் ஏறக்குறைய இதே அளவுதான் சம்பாதித்திருந்தது’’ என்றவர், ‘‘வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்’’ என்றபடி விடை பெற்றார்!

கிரிப்டோகரன்சி... உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச் இணைந்து நடத்தும் ‘கிரிப்டோ கரன்சி... உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்!’ என்ற நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறுகிறது. இது ஜனவரி 23 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 - 01.30 மணிவரை நடைபெறும். இதில், ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணை நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஜி.அர்ஜுன் விஜய் சிறப்புரையாற்றுகிறார். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/Nv-giottus

டாக்டர் சி.கே.நாராயண்
டாக்டர் சி.கே.நாராயண்

ஷேர் டிரேடிங்: சரியான வழியைக் கற்றுக்கொள்ளுங்கள்..!

நாணயம் விகடன் வழங்கும் ‘ஷேர் டிரேடிங்: சரியான வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்..! (Share Trading: Learn the right way..!) என்கிற நிகழ்ச்சி’ ஜனவரி 22 சனிக்கிழமை காலை 11 - 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் டாக்டர் சி.கே.நாராயண் (நிறுவனர், Growth Avenues) பயிற்சி அளிக்கிறார்.

முழு நேர பங்கு வர்த்தகர், முழு நேர முதலீட்டாளர் ஆக விரும்பு கிறவர்கள், கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புகிறவர்கள், பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஈடுபட சரியான வழியைக் கற்றுக் கொள்ளவும் செயல்படுத்தவும் விரும்புகிறவர்கள். பங்குச் சந்தையில் எளிய மற்றும் பரிசோதிக்கப் பட்ட லாபம் சம்பாதிக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பதிவு செய்ய https://bit.ly/3qdyN0h