Published:Updated:

ஷேர்லக்: நிஃப்டி 500 பங்குகள்... விற்கும் எஃப்.ஐ.ஐ-கள், வாங்கும் டி.ஐ.ஐ-கள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: நிஃப்டி 500 பங்குகள்... விற்கும் எஃப்.ஐ.ஐ-கள், வாங்கும் டி.ஐ.ஐ-கள்!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

அதிகாலையில் தகவல் அனுப்பியபடி வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்கு விடீயோகாலில் ஆஜரானார் ஷேர்லக். நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க, பதில் சொல்ல ஆரம்பித்தார்.

சந்தை கரடியின் பிடியில் சிக்கி இறங்கிக்கொண்டே இருப்பதைப் பார்த்து, பல முதலீட்டாளர்கள் கலங்கிப் போயிருக்கிறார்களே..!

“வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லுங் கள். நம் நாட்டுப் பொருளாதாரத்தில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. முழுக்க உலக நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த இறக்கம் நடக்கிறது. இன்றும் (ஜனவரி 27 வியாழக்கிழமை) சந்தை சரிந்து, சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. பிற்பாடு 581 புள்ளிகளை மட்டும் இழந்து, வர்த்தகம் நிறைவு பெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றத்தை மட்டுமே கண்டுவந்ததால், இந்த இறக்கம் நமக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. இந்த நேரத்தில், நல்ல பங்குகளை விற்று வெளி யேறாமல், இன்னும் அதிகம் முதலீடு செய்வதே சரியாக இருக்கும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இறக்கத்தை முதலீட்டுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே நிபுணர்கள் தரும் ஆலோசனை.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்வதுதான் சந்தை இறங்கக் காரணமா?

“ஆமாம், இந்திய பங்குச் சந்தையிலிருந்து கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர் திரும்பப் பெற்றபின்னர், நிஃப்டி 500 இண்டெக்ஸ் நிறு வனங்களில் உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர் களின் பங்குகள் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ஆறு காலாண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக மோதி லால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிஃப்டி 500 நிறுவனங்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் முதலீடு செப்டம்பர் காலாண்டில் 21.5 சதவிகிதமாக இருந்தது, டிசம்பர் காலாண்டு முடிவில் 20.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட் டாளர்கள் பெரும்பாலும் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் துறை சார்ந்த பங்குகளை அதிக அளவில் விற்றிருக்கிறார்கள். மேலும் டெலி காம், ஐ.டி, ரீடெய்ல், சிமென்ட், ஆட்டோ மொபைல், மெட்டல் மற்றும் எனர்ஜி துறை சார்ந்த பங்குகளையும் அதிகமாக விற்பனை செய்திருக்கிறார்கள்.

வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் விற்பனை செய்த அதே நேரத்தில் உள்நாட்டு பெரு முதலீட்டாளர்கள் குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பங்குகளை வாங்கியிருக் கிறார்கள். டிசம்பர் காலாண்டில் நான்கு பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கெனவே தங்களது முதலீட்டு போர்ட்ஃபோலி யோவில் இருந்ததைவிட நிஃப்டி 500 பங்குகளில் 53% மற்றும் நிஃப்டி 50 பங்குகளில் 70% பங்குகளை அதிகரித்திருக் கிறார்கள்.”

தீபக் நைட்ரேட் நிறுவனத்தின் பங்கு விலை குறைந்துள்ளதே..!

“இந்தப் பங்கு நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவு கள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் காலாண்டு முடிவு களில் முதலீட்டாளர்கள் அவ்வளவாக திருப்தி கொள்ளவில்லை. ஏனெனில், இந்த நிறுவனத்தின் எபிட்டா மற்றும் வரிக்குப் பிந்தைய வருமானங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. டிசம்பர் காலாண்டில், இந்த நிறுவனத் தின் வரிக்குப் பிந்தைய வருமானம் 12% அதிகரித்து, 242 கோடியாக உள்ளது. இது எதிர்பார்ப்பைவிடக் குறைவு என்பதால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் செவ்வாய் அன்று 9% வரை சரிந்து, ரூ.2,150-க்கு வர்த்தகமானது. வியாழன் அன்று மேலும் 4.01% குறைந்து, ரூ.2,126-ஆக வர்த்தகம் ஆனது.”

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“ஜனவரி 28-ம் தேதி பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடைபெறும் என கடந்த வாரத் தொடக்கத்திலேயே தகவல் வெளியானது. இந்தக் கூட்டத்தில் முன்னுரிமைப் பங்குகள் வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியதால், கடந்த வாரம் செவ்வாய்கிழமை என்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 4% வரை அதிகரித்து, ரூ.717.50-க்கு வர்த்தகமானது. வியாழன் அன்றும் கொஞ்சம் குறைந்து, ரூ.7-7.25-க்கு வர்த்தகமானது.’’

கணிக்கப்பட்டதைவிட பங்கு பரிவர்த்தனை வரி அதிகமாக வசூலாகி இருக்கிறதாமே?

“கடந்த 2020-2021-ம் நிதி ஆண்டின் ஆரம்ப மாதங்களில் கொரோனாவால் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக அந்த நிதி ஆண்டில் பங்குப் பரிவர்த்தனை வரி (securities transaction tax - STT) மூலம் ரூ.12,000 கோடிதான் வசூலாகும் என அந்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது.

2021-2022-ம் நிதி ஆண்டில் பங்கு பரிவர்த்தனை வரி ரூ.12,500 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. நடப்பு 2021-2022-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் பங்குச் சந்தை வர்த்தகம் அதிகரித்ததால், புதிய முதலீட்டாளர் களின் வருகையால், பங்கு பரிவர்த்தனை வரி முழு நிதி ஆண்டுக்கு கணிக்கப்பட்டதைவிட 57% அதிகமாக முதல் 9 மாதங்களிலேயே வசூலாகியிருக்கிறது. அதாவது, 2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் ரூ.19,737 கோடி எஸ்.டி.டி வசூலாகி சாதனை படைத்திருக்கிறது.”

பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்குவிலை அதிக அளவில் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறதே?

“பாலிசி பஜார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பி.பி.ஃபின்டெக் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் செவ்வாய் அன்று 6.5% வரை சரிந்து ரூ.726-க்கு வர்த்தகமானது. கடந்த ஆறு வர்த்தக தினத்தில் மட்டும் இதன் பங்கு விலை 29% வரை சரிந்துள்ளது. இதன் தற்போதைய வர்த்தக விலை, பங்கு வெளியீட்டு விலையான ரூ.980-ஐ விட 26% குறைவாகும். கடந்த நவம்பர் 17-ம் தேதி இதன் பங்கு விலை ரூ.1,470 என்கிற 52 வார அதிக பட்ச விலையைத் தொட்டது. அந்த விலையுடன் ஒப்பிடும்போது தற்போது 51% வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அதே போல, பேடிஎம் நிறுவ னத்தின் பங்கு விலை அதன் 52 வார அதிகபட்ச விலையான ரூ.1,955-லிருந்து தற்போது 51% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கார் டிரேடு நிறுவனத்தின் பங்கு விலை 52 வார அதிகபட்ச விலையான ரூ.1,618-லிருந்து தற்போது 50% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஃபினோ பேமென்ட் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை அதன் 52 வார அதிகபட்ச விலையான ரூ.582-லிருந்து தற்போது 33% விலை சரிந்து வர்த்தகமாகிறது. ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்கு விலை மற்றும் நைகா நிறுவனத்தின் பங்கு விலை முறையே அதன் 52 வார அதிக பட்ச விலையான ரூ.169 மற்றும் ரூ.2,573-லிருந்து 32% மற்றும் 22% குறைந்து வர்த்தகமாகி வருகிறது.”

எஸ்.பி.ஐ கார்டு நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளதே..!

“கடந்த ஜனவரி 25-ம் தேதி காலை வர்த்தகத்தில் எஸ்.பி.ஐ கார்ட்ஸ் பங்கு விலை 3% வரை அதிகரித்து, ரூ.841.50-க்கு வர்த்தக மானது. இதற்கு மிக முக்கியமான காரணம், இந்த நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் சிறப்பான முறையில் வெளியாகி இருப்பதுதான். இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய வருமானம் 84% அதிகரித்து, 886 கோடியாக அதிகரித்திருக்கிறது. வருமானம் 24% அதிகரித்து, ரூ.3,140 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம் இந்தப் பங்கை வாங்கச் சொல்லி முதலீட் டாளர்களுக்குப் பரிந்துரை செய்திருப்பதுடன், தற்போதைய வர்த்தக விலையிலிருந்து 30% வரை இதன் பங்கு விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.1,120 என நிர்ணயித்துள்ளது.”

எந்தெந்த பங்குகளின் விலை 52 வார அதிகபட்ச விலையில் இருந்து மிகவும் குறைந்து வர்த்தகமாகி வருகின்றன?

“கடந்த ஜனவரி 24-ம் தேதி, ஒரே நாளில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரையும், நிஃப்டி 500 புள்ளிகள் வரையும் வீழ்ந்தது. இதன் காரணமாக இவ்விரு குறியீடுகளும் தனது 52 வார அதிகபட்ச விலையிலிருந்து 8% வரை சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில், அதானி சர்வீசஸ், திலீப் பில்ட்கான் உள்ளிட்ட 11 நிறுவனப் பங்குகள் தங்களின் 52 வார அதிகபட்ச விலையிலிருந்து 50 சதவிகிதத்துக்கும் மேல் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

ஜனவரி 24-ம் தேதி நிலவரப்படி, தானி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை தனது 52 வார அதிகபட்ச விலையிலிருந்து 63% சரிந்து, ரூ.141.60-க்கு வர்த்தகமானது. ஸ்ட்ரைட்ஸ் பார்மா 60% வரை சரிந்து, ரூ.378.10-க்கு வர்த்தக மானது. ஸ்பாந்தனா ஸ்பூர்தி ஃபைனான்ஷியல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 59% வரை சரிந்து, ரூ.337.30- க்கும், திலீப் பில்டுகான் 53% சரிந்து ரூ.352.90-க்கும், பி.என்.பி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் 52% சரிந்து ரூ.439.40-க்கும், ஸ்கொயன்ட் சயின்டிஃபிக் 52% வரை சரிந்து ரூ.162.40-க்கும், உஜ்ஜீவன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் 52% வரை சரிந்து ரூ.133.10-க்கும், வோக்ஹாட் 51% வரை சரிந்து ரூ.394.40-க்கும், வைபவ் குளோபல் 50% வரை சரிந்து ரூ.520.10-க்கும் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை தனது 52 வார அதிகபட்ச விலையிலிருந்து 50% வரை குறைந்து ரூ.51.15-க்கும் வர்த்தகமானது.”

லக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் உள் வர்த்தக விவகாரம் குறித்து..?

‘‘மார்ச் 31, 2021-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகள் தொடர்பாக மே 25, 2021 தேதியிட்ட அறிவிப்பில் லக்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில் ரூ.2.94 கோடி மதிப்பிலான உள்வர்த்தக முறைகேட்டை செபி கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்தில் முறைகெடு செய்த காரணத்துக்காக 14 நிறுவனங்களை செபி தடை செய்துள்ளது.’’

அதானி வில்மர் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு பற்றி...

“அதானி வில்மர் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.3,600 கோடி பங்குகளைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீடு ஜனவரி 31-ம் தேதி முடிவடைகிறது. இந்த நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.4,500 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கிலிருந்து மதிப்பைக் குறைத்து, செபிக்கு சமர்பித்த டி.ஆர்.ஹெச்.பி ஆவணத்தில் ரூ.3,600 எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை நிறுவனத்தின் மூலதனத்துக்காக பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. இதன் பங்கு விலைப் பட்டை ரூ.218-230. குறைந்தபட்சம் 65 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேன்டும். அதிக பங்கு தேவைப்படுபவர்கள் இதன் மடங்கில் முதலீடு செய்யலாம்.”

எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வருகிற மார்ச் மாதத் தொடக்கத்தில் வரப் போகிறதாமே!

‘‘உண்மைதான். எல்.ஐ.சி மட்டுமல்ல, நிலேச்சல் இஸ்பத் நிகாம் ஆகிய இரு நிறுவனப் பங்குகள் விற்பனைக்கு வரும் என்று அவர் சொல்லியிருக்கிறார் ‘தீபம்’ அமைப்பின் உயரதிகாரி. எல்.ஐ.சி பங்கு விற்பனை மூலம் மத்திய அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடியைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது.

எல்.ஐ.சி-யில் பாலிசி வைத் திருப்பவர்களுக்கு இந்தப் பங்கு விற்பனையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் புதிதாக டீமேட் கணக்குகளைத் தொடங்கி வருகிறார்கள். அவர்கள் எல்.ஐ.சி பங்குகள் மட்டும் வாங்கி வைக்காமல், வேறு நல்ல நிறுவனப் பங்கு களையும் வாங்கப் பரிசீலிக்க வேண்டும்’’ என்றபின், வீடியோகாலை கட் செய்தார் ஷேர்லக்!

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 6 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும். இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் கே.செந்தில் சிறப்புரை யாற்றுகிறார்கள். அனுமதி இலவசம்; பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism