Published:Updated:

ஷேர்லக்: சந்தை வீழ்ச்சிக்குத் தப்பாத ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: சந்தை வீழ்ச்சிக்குத் தப்பாத ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழன் மாலை 4 மணிக்கு ஷேர்லக், ‘‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு எப்படி?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார். “சந்தைக்கு சாதகமான செய்திகள் ஏதும் உண்டா..?” என நாம் கேட்க, அமைதியாக சிரித்தபடியே, நம்மை கேள்விகளைக் கேட்கச் சொன்னார்.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய் திருப்பதாகத் தெரிகிறதே?

‘‘கடந்த பிப்ரவரி மாதம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.19,705.27 கோடியை முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.14,887.77 கோடியாக இருந்தது. அதே போல, மிட்கேப் ஃபண்டுகளில் ரூ.1,954.32 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,770.02 கோடியாக இருந்திருக்கிறது. ஆனால், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீட் டாளர்களின் முதலீடு சற்றே சரிந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த ஃபண்டுகளில் ரூ.1,429.74 கோடியை முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த ஜனவரியில் ரூ.1,498.98 கோடியாக இருந்தது. லார்ஜ்கேப் ஃபண்டுகளில் ரூ.2,338.58 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த பிப்ர வரியில் ரூ.1,890.24 கோடியாக இருந்திருக்கிறது.

அதே நேரத்தில், எஸ்.ஐ.பி திட்டத்தின் மூலம் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, கடந்த பிப்ரவரில் ரூ.17 கோடி குறைந்து, ரூ.11,444 கோடியாக இருந்தது. ஆனால், இதே கால கட்டத்தில் எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கை 5.05 கோடியிலிருந்து 5.17 கோடி யாக அதிகரித்துள்ளது.’’

பங்குகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை டி.சி.எஸ் அறிவித்திருக்கிறதே?

“டி.சி.எஸ் நிறுவனம் ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்களிட மிருந்து திரும்பப் பெறும் ‘பைபேக்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாக, மூன்று முறை டி.சி.எஸ் நிறுவனம் பைபேக் ஆஃபரை அறிவித்துள்ளது. இது நான்காவது முறை ஆகும். இந்தத் திட்டமானது மாச் 23-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். 14 நாள்கள் நீட்டிக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் தங்களிடம் இருக்கும் டி.சி.எஸ் பங்குகளை முதலீட்டாளர்கள் அதன் நிறுவனத்துக்கே விற்கலாம். பங்கு ஒன்றுக்கு ரூ.4,500-ஐ அந்த நிறுவனம் வழங்க முடிவு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதும், மார்ச் 9-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1% வரை அதிகரித்து, ரூ.3,630-க்கு வர்த்தகமானது. மார்ச் 10-ம் தேதி காலை வர்த்தகத்தில் ரூ.3,648.40-க்கு வர்த்தகமானது”

பல ஐ.பி.ஓ-க்களுக்கு செபி அனுமதி கொடுத்தும், வெளியீட்டில் தாமதமாகிறதே... ஏன்?

“ஆக்ஸிஸ் கேப்பிடல் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சுமார் 49 நிறுவனங்கள் இதுவரை ஐ.பி.ஓ வெளியிட செபியிடமிருந்து ஒப்புதல் பெற்றிருப்பது தெரியவருகிறது. இதில் பார்ம் ஈஷி நிறுவனத் தின் தாய் நிறுவனம் ஏ.பி.ஐ ஹோல்டிங்ஸ், டெலிவரி, எம்கியூர் பார்மா சூட்டிகல்ஸ், ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ் மிஷன், பெனா சிமென்ட்ஸ், கோ ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும். மேலும், ஜே.கே ஃபைல்ஸ் அண்டு இன்ஜினீயரிங், எலின் எலெக்ட்ரானிக்ஸ், வெல்னஸ் ஃபாரெவர் மெடிகேர், சி.எம்.ஆர் கிரீன் டெக்னாலஜிஸ், கேப்பிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஜெசன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட், ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ், ஜி.பி.டி ஹெல்த்கேர், வீடா கிளினிக்கல் ரிசர்ச், கெவென்டர் அக்ரோ, எல்.இ டிராவென்யூஸ், இ.எஸ்.டி.எஸ் சாஃப்ட்வேர், வி.எல்.சி.சி ஹெல்த் கேர், ஹெல்தியம் மெட்டெக், பூரானிக் பில்டர்ஸ், ஸ்கன்ரே டெக்னாலஜிஸ், செம்ஸ்பெக் கெமிக்கல்ஸ், பாப்புலர் வெஹிக்கல்ஸ் மற்றும் உத்கர்ஷா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் போன்றவையும் செபியின் ஒப்புதலுடன் தயாராக உள்ளன. ஆனால், இன்றைய நிலையில், சந்தையின் செயல்பாடுகள் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு சாதகமானதாக இல்லை. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர், சந்தையின் போக்கை மாற்றியுள்ளது. அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்தை சந்தித்துவரும் வேளையில் ஐ.பி.ஓ வெளியிட்டால் அதற்கு வரவேற்பு இருக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. அதனால்தான் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளி யீட்டுக்கான தேதியும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

பிப்ரவரி 24-ம் தேதி போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மட்டுமே பி.எஸ்.இ சென்செக்ஸ் 6% வரை வீழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. நிஃப்டி 50 இண்டெக்ஸ் 14% வரை சரிவைப் பதிவு செய்திருக்கிறது. எஃப்.ஐ.ஐ-களின் மனநிலையும் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை ரூ.26,000 கோடி மதிப்புள்ள பங்குகளை அவர்கள் விற்பனை செய்திருக் கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இருந்து மட்டும் ரூ.2.10 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்திருக்கிறார்கள்.’’

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்திருக்கின்றனவே?

‘‘முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோ பங்குகளை, பல்வேறு முதலீட்டாளர்கள் ஃபாலோ செய்து, அந்தப் பங்கு களில் முதலீடு செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த டிசம்பர் காலாண்டில் ராகேஷ் போர்ட்ஃபோலியோவில் 35 பங்குகளில் அவர் முதலீடு செய்திருப்பது குறிப்பிடப் பட்டிருந்தது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகக் கடந்த வாரமும் இந்திய பங்குச் சந்தைகள் அதிக அளவில் இறக்கத்தைச் சந்தித்த காரணத்தால், ராகேஷ் முதலீடு செய்திருந்த பங்குகளில் ஐந்து பங்குகள் பெருமளவு சரிவைச் சந்தித்தன. அதாவது, 25 சதவிகிதத்துக்குமேல் சரிவை சந்தித்துள்ளன. அதே நேரத்தில் டி.வி.18 புராட்காஸ்ட் மற்றும் நேஷனல் அலுமினியம் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை 25% வரை அதிகரித்துள்ளது. அதே போல, டி.பி.ரியாலிட்டி பங்கு விலை 123% வரை அதிகரித்து மல்ட்டிபேக்கர் நிலைக்கு உயர்ந்துள்ளது.

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை மார்ச் 8-ம் தேதி நிலவரப்படி 38% வரை சரிந்து, ரூ.135-க்கு வர்த்தகமானது. இது டிசம்பர் 31-ம் தேதி ரூ.218-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத் தில் இவர் 1.08% பங்குகளை வைத்திருக்கிறார். இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்கு விலை 35% வரை சரிந்து, ரூ.101.8-க்கு வர்த்தக மானது. இது டிசம்பர் 31-ம் தேதி அன்று ரூ.157.55-க்கு வர்த்தக மானது. இதில் இவர் 1.10% பங்குகளை வைத்திருக்கிறார்.

ஜூபிலன்ட் பார்மோவா (Jubilant Pharmova) பங்கு விலை 32% வரை சரிந்து ரூ.396.70-க்கு வர்த்தகமானது. இது டிசம்பர் 31-ம் தேதியில் ரூ.586.90-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கு களில் இவர் 6.29% பங்குகளை வைத்திருக்கிறார். எடெல்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 28% வரை சரிந்து ரூ.52.10-க்கு வர்த்தகமானது. இது டிசம்பர் 31-ம் தேதி வர்த்தகத்தில் ரூ.71.90-க்கு வர்த்தகமானது. இந்த பங்குகளில் இவர் 1.60% பங்கு களை வைத்திருக்கிறார். ஜூபிலன்ட் இங்க்ரேவியா நிறுவனத்தின் பங்கு விலை 27% வரை சரிந்து ரூ.421-க்கு வர்த்தகமானது. இது டிசம்பர் 31-ம் தேதி அன்று ரூ.574.85-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கு களில் இவர் 4.72% பங்குகளை வைத்திருக்கிறார்.”

பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் உரிமைப் பங்குகளை வெளியிடுவது பற்றி...

“இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.2,500 கோடியை முதலீட் டாளர்களிடமிருந்து திரட்ட அனுமதி வழங்கியிருப்பதாக நிறுவனத்தின் தரப்பு தெரிவித் துள்ளது. இதன்படி தகுதியான பங்கு முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனம் உரிமைப் பங்குகளை ஒதுக்கும் எனத் தெரிகிறது.”

எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வுக்கு செபி அனுமதி வழங்கியிருக்கிறதே... வெளியீட்டுத் தேதி எப்போது?

“கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, எல்.ஐ.சி ஐ.பி.ஓ மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.63,000 கோடி நிதி திரட்ட அனுமதி கேட்டு செபியிடம் எல்.ஐ.சி நிறுவனம் விண்ணப்பித் திருந்தது. அதற்கு தற்போது செபி அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், உக்ரைன்-ரஷ்யா போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத் துக்குள் எல்.ஐ.சி வருமா என்பதும் கேள்விக்குறிதான்.’’

ஐ.எஸ்.ஜி.இ.சி ஹெவி இன்ஜினீயரிங் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித் திருக்கிறதே?

“இந்த நிறுவனப் பங்கு விலை, மார்ச் 9-ம் தேதி வர்த்தகத்தில் 7% வரை அதிகரித்து வர்த்தகமானது.  சிமென்ட் நிறுவனத்திடமிருந்து, ராஜஸ்தானின் நவல்கரில் உள்ள 3.8 எம்.டி.பி.ஏ கிளிங்கர் திறன் கொண்ட ஒருங்கிணைந்த சிமென்ட் ஆலைக்கான ஆர்டர் பெறப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் பங்கு விலை அதிகரித்து வர்த்தகமானது. மார்ச் 9-ம் தேதி வர்த்தகம் முடியும்போது பங்கு விலை ரூ.581-ல் நிறைவடைந்தது. மார்ச் 10-ம் தேதி காலை வர்த்தகத்தின்போது ரூ.577.50-க்கு வர்த்தகமானது.”

நெல்கோ மற்றும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகின்றனவே?

“டாடா குழுமத்தைச் சேர்ந்த நெல்கோ மற்றும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் புதன்கிழமை அன்று 5% வரை அதிகரித்து அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமாகின. அதாவது, நெல்கோ நிறுவனத்தின் பங்கு விலை ரூ.637.10-க்கும், தேஜஸ் நெட்வொர்க்ஸ் ரூ.384.90-க்கும் வர்த்தகமாகின. தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனமானது, இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் 5ஜி மற்றும் ஃபைபர்-அடிப்படை யிலான பிராட்பேண்ட் வெளியீடுகளில் மிகப்பெரிய வாய்ப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் பங்கு விலை அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமாகின்றன” என்றவர், அவசரமாக போன் வரவே உடனே புறப்பட்டார்!

‘ஓய்வுக்காலத்துக்கான சரியான திட்டமிடல்..!’

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘ஓய்வுக்காலத்துக்கான சரியான திட்டமிடல்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, மார்ச் 20-ம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறுகிறது.

இதில் நிதி நிபுணர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்.குருராஜ் (முதலீட்டாளர் கல்வி - உதவி துணைத் தலைவர்), க.கருணாநிதி (பிராந்திய தலைவர் - தமிழ்நாடு) ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism