Published:Updated:

ஷேர்லக்: சந்தை சரிவிலும் அமோக வருமானம் தந்த புதிய பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: சந்தை சரிவிலும் அமோக வருமானம் தந்த புதிய பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

கடந்த மார்ச் 16-ம் தேதி நிலவரப்படி பி.எஸ்.இ-யில் மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டிருக்கிறது. பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் ரூ.2,54,45,122.12 கோடியாக அதிகரித்துள்ளது!யாழன் காலையில் தகவல் அனுப்பியபடி மாலை 4 மணிக்கு பரபரப்பாக வந்த ஷேர்லக், அடுத்த நாள் நடைபெறும் நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது தொடர்பான கிரியேட்டிவ்களைப் பார்த்து புன்னகைத்தார். “விருது பெறும் தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்” என்றவரிடம் அழைப்பிதழை வழங்கி, நாளை நிச்சயம் விழாவுக்கு வர வேண்டும்” எனச் சொல்லிவிட்டு, நாம் குறித்து வைத்த கேள்வி களைக் கேட்க ஆரம்பித்தோம்.

அமெரிக்க ஃபெடரல் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டதே?

“உலகம் முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட நிகழ்வு இது. ஏனெனில், அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. கொரோனாவுக்கு முன்பே பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித் திருந்த நிலையில், கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொருளாதாரம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது. இதனால், பணவீக்கம் மிகவும் அதிக அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா-உக்ரைன் போர் சூழலும் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. பணவீக் கத்தின் உயர்வால் விலைவாசியும் கடுமையாக உயர்ந்தது. இதனால் மக்கள் அனைவரும் அதிகமான செலவினங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில்தான் கடந்த நான்கு வருடங் களாக வட்டி விகிதத்தை உயர்த்தாமலேயே இருந்த அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கடந்த வாரம் வட்டி விகிதத்தை உயர்த்தியது. ஆனாலும், ஒரேடியாக உயர்த்திவிடாமல் 0.25 சதவிகிதம் மட்டுமே உயர்த்தியிருக்கிறது. ஏற்கெனவே கடன் களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது 0.50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கத்தைச் சமாளிக்க இந்த வட்டி விகித உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடரும் நிலை யில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து சில பகுதிகளில் ஊரடங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலிலும் எதிர்பார்த்தபடி ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் காரணமாகவும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாலும் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை அன்று ஏற்றம் காணப் பட்டது. சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்து வர்த்தகமானது. தொடர்ந்து இறக்கம் கண்டுவந்த நிலையில் சந்தையில் காணப்பட்ட ஏற்றம் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

பல பங்குகள் விலை 52 வார உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகியிருக்கிறதே... என்ன காரணம்?

“அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25% மட்டுமே உயர்த்திய காரணத்தால், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. சென்செக்ஸ் 1039 புள்ளிகள் அதிகரித்து, 56,816.65 புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல நிஃப்டியும் 312.30 புள்ளிகள் வரை அதிகரித்து, 16,975.30-க்கு வர்த்தகமானது. இதன் காரணமாகப் பல பங்குகள் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்டு வர்த்தகமாகின. குறிப்பிட்டுச் சொல்லும் படியான பங்குகளில் உஷா மார்ட்டின், ஷங்கரா பில்டிங் புராடக்ட்ஸ், என்.டி. டி.வி, ஜே.கே.பேப்பர், சோழ மண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனப் பங்குகளைச் சொல்லலாம்.

மேலும் அல்ட்ராடெக் சிமென்ட், ஆக்ஸிஸ் பேங்க், சிமென்ட்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் மற்றும் பஜாஜ் ஆட்டோ பங்கு களும் லாபத்தைப் பதிவு செய்தன. சிப்லா, சன் பார்மா, டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.”

பி.எஸ்.இ-யில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே...!

“கடந்த மார்ச் 16-ம் தேதி நிலவரப்படி பி.எஸ்.இ-யில் மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டிருக்கிறது. பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் ரூ.2,54,45,122.12 கோடியாக அதிகரித்துள்ளது.”

ஷேர்லக்: சந்தை சரிவிலும் அமோக வருமானம் தந்த புதிய பங்குகள்..!

நடப்பு நிதி ஆண்டில் வெளியிடப்பட்ட புதிய பங்குகள் சந்தை சரிவிலும் பலமான லாபத்தைப் பதிவு செய்திருக்கின்றனவே?

“உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் நீடிப்பதால், பங்குச் சந்தைகளில் பதற்றம் உருவாகி கடந்த அக்டோபரிலிருந்து அதிகபட்சமாக 10% வரை சந்தை சரிவைச் சந்தித்திருக்கிறது. இந்தச் சரிவிலும், சில துறைகளில் உள்ள சில பங்குகள் மூன்று இலக்கங்களில் தங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தைத் தந்திருக்கின்றன. இந்தப் பங்குகள் அனைத்தும் 2021-2022-ம் நிதி ஆண்டில் புதிதாக சந்தைக்கு வந்த பங்குகள் என்பது சிறப்பான விஷயம். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பாராஸ் டிஃபென்ஸ், கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, தத்வா சின்டன் பார்மா கிளீன், பாப்பிக்யூ நேஷன், சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஷன் ஃபோர்கிங்ஸ், மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் மற்றும் லேட்டன்ட் வியூ அனலிட்டிஸ் ஆகிய நிறுவனத்தின் பங்குகளைச் சொல்லலாம்.

இதில், பாராஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் பங்கு கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்டது. அப்போது அதன் வெளியீட்டு விலையான ரூ.175-லிருந்து அதிகரித்து, தற்போது சுமார் 265% லாபத் துடன் வர்த்தகமாகி வருகிறது. ஜூலை 19, 2021 அன்று பங்கு வெளியிட்ட கிளீன் சயின்ஸ் நிறுவனம், அதன் வெளியீட்டு விலையான ரூ.900-லிருந்து 122% லாபத்துடன் வர்த்தகமாகிறது. ஜே.எம்.ஃபைனான்ஷியல் தரகு நிறுவனம் முதலீட்டாளர்களை இந்தப் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையாக ரூ.2,500 எனக் குறிப்பிட்டுள்ளது. தத்வா சின்டன் பார்மா கிளீன் நிறுவனம் ஜூலை 29, 2021 அன்று ஐ.பி.ஓ வெளியிட்டது. வெளியீட்டு விலை ரூ.1,083. தற்போது இரு மடங்கு விலை அதிகரித்து, ரூ.2,307-க்கு வர்த்தகமாகி வருகிறது.

பாப்பிக்யூ நேஷன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், ஏப்ரல் 02, 2021 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டதை விட விலை அதிகரித்து, 147% லாபத்துடன் வர்த்தக மாகிறது. ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் இந்தப் பங்கு விலைக்கான இலக்கு விலையை ரூ.1,800 எனக் குறிப்பிட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் இந்த விலையைத் தொடும் என்றும் கணித்துள்ளது. சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஷன் ஃபோர்கிங்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் 24, 2021 அன்று ஐ.பி.ஓ வெளியிட்டது. இதன் வெளி யீட்டு விலை ரூ.291. 117% லாபத்துடன் தற்போது ரூ.655.60-க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் மேக்ரோடெக் டெவலப்பர் மும்பை பெருநகரப் பகுதி மற்றும் புனே சந்தைகளில் முன்னிலையில் உள்ளது. அதன் ஐ.பி.ஓ வெளியீட்டு விலையான ரூ.486-லிருந்து 113% அதிகரித்து, ரூ.1,082 என்கிற விலையில் வர்த்தகமாகி வருகிறது. லேட்டன்ட் வியூ அனலிட்டிக்ஸ் அதன் வெளியீட்டு விலையில் 112% அதிகரித்து, ரூ.438.30-க்கு வர்த்தகமாகிறது.”

விமானப் பங்குகள் விலை குறைய என்ன காரணம்?

“கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்திருப்பதால், விமான எரிபொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி விமானப் பங்குகளில் முதலீட் டாளர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அன்றைய தினத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 1.95% சரிந்து, ரூ.88.20-க்கு வர்த்தகமானது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலை 1.60% சரிந்து, ரூ.60.20-க்கு வர்த்தகமானது.

2022-ம் ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து விமான எரிபொருள் விலை 15 நாள்களுக்கு ஒருமுறை அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 16-ம் தேதி ஆறாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் தலைநகர் டெல்லியில் 183% விலை அதிகரித்து, ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.1,10,666-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.”

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சில பங்குகளில் முதலீட்டை மிகவும் அதிகரிக்க என்ன காரணம்?

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் பணத்தை வெளியில் எடுத்துவரும் இந்த வேளையிலும், சம்பல் ஃபெர்டிலைசர், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஏ.சி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அதே போல பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஹெச்.எஃப்.சி.எல், லக்சுமி மெசின்ஸ் வொர்க்ஸ், பிரமல் என்டர்பிரைசஸ், சுந்தரம் ஃபாசனர்ஸ், சுப்ரீம் பெட்ரோகெம் மற்றும் பி அண்டு ஜி ஹைஜீன் அண்டு ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களின் பங்கு களிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 11.6 சதவிகிதத்தி லிருந்து 17.2% அளவுக்கு முதலீட்டை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.”

ஷேர்லக்: சந்தை சரிவிலும் அமோக வருமானம் தந்த புதிய பங்குகள்..!

ஐ.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித் திருக்கிறதே?

“ஐ.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 2% வரை அதிகரித்து, ரூ.242-க்கு வர்த்தகமானது. கடந்த இரண்டு வாரங்களில் சென்செக்ஸ் 5% வரை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு 12% வரை விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒருமாதத்தில் சென்செக்ஸ் 2.4% சரிந்த நிலையில், ஐ.டி.சி சராசரியாக 5% வரை ஏற்றத்தைச் சந்தித் திருக்கிறது.”

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே..?

“புதிய ஹெலிகாப்டருக்கான வாய்ப்புகளை ஆராய பிரெஞ்சு விண்வெளி இன்ஜின் நிறுவனமான சஃப்ரானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது என்ற தகவல்களின் அடிப்படையில், புதன்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில், இந்த நிறுவனத்தின் பங்குகள் 8% உயர்ந்து, ரூ.1,481.35 ஆக வர்த்தகமானது. கடந்த மூன்று மாதங்களில் சென்செக்ஸ் 2.3% வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் வேளையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 15% வரை அதிகரித்துள்ளது.”

சிமென்ட் பங்குகளின் விலை ஏற்றத்தில் இருக்கிறதே... இப்போது முதலீடு செய்யலாமா?

“வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தைச் சந்தித்தபோது சிமென்ட் பங்குகளின் விலை சற்றே சரிவை சந்தித்தன. தற்போது கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப் பட்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 100 டாலராக வர்த்தகமாகி வரும் நிலையில், தற்போது மீண்டும் சிமென்ட் பங்குகளின் விலை ஏற்றத்தைச் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றன. அதில், குறிப்பாக சாகர் சிமென்ட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 20% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. அல்ட்ராடெக் சிமென்ட், அம்புஜா சிமென்ட்ஸ், ஏ.சி.சி, டால்மியா பாரத், இந்தியா சிமென்ட்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ் மற்றும் சிமென்ட்ஸ் ஆகிய பங்குகள் 2 - 3% வரை அதிகரித்து வர்த்தகமாகின.”

சந்தூர் மாங்கனீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளில், வரிக்கு பிந்தைய வருமானமாக ரூ.109 கோடியைப் பதிவு செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 486% அதிகம். இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 54% வரை அதிகரித்துள்ளது” என்றவர், “எனக்கு அவகாசம் இருந்தால் விழாவில் சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.