Published:Updated:

ஷேர்லக்: மொத்த முதலீடு நடந்த நிறுவனப் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: மொத்த முதலீடு நடந்த நிறுவனப் பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வழக்கம்போல பரபரப்புடன் வந்து சேர்ந் தார் ஷேர்லக். எல்.ஐ.சி ஐ.பி.ஓ குறித்த முக்கியமான செய்திகளைத் தெரிந்துகொள்ள அவர் வருகைக்கு நாம் காத்திருந்தோம். எனவே, முதல் கேள்வியையே இப்படிக் கேட்டோம்.

ஒருவழியாக, எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீடு வருவது முடிவாகிவிட்டதே..!

ஷேர்லக்: மொத்த முதலீடு நடந்த 
நிறுவனப் பங்குகள்..!

“முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) வருகிற மே 4-ம் தேதி வெளியாகிறது. ஒரு பங்கின் விலை ரூ.902 - 949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வெளீயீட்டின் மூலம் ரூ.21,000 கோடி நிதி திரட்ட அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதில் 15.81 லட்சம் பங்குகள் எல்.ஐ.சி ஊழியர்களுக் காகவும், 2.21 கோடி பங்குகள் பாலிசிதாரர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 9.88 கோடி பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்காகவும், 2.96 கோடி பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்காகவும் இதர பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ.பி.ஓ-வில் எல்.ஐ.சி-யின் பங்கு விலையில் பாலிசி தாரர்களுக்கு ரூ.60-ம், எல்.ஐ.சி ஊழியர்களுக்கு ரூ.45-ம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மே 9-ம் தேதி வரை இந்த ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிக்கலாம். மே 17-ம் தேதி பங்குச் சந்தையில் இந்தப் பங்கு பட்டியிடப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை அன்று கிரே மார்க்கெட்டில் எல்.ஐ.சி நிறுவனப் பங்கானது ரூ.969-க்கு வர்த்தகமானது. இது ஐ.பி.ஓ-வில் வெளியிடப்படும் பங்கு விலையைவிட 2% அதிகமாகும். எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் பங்கேற்பதற்கென்றே 6.5 கோடி பேர் தங்களுடைய பான் நம்பரை எல்.ஐ.சி பாலிசியுடன் இணைத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அத்தனை பேரும் எல்.ஐ.சி-யின் பங்குகளை வேண்டி இந்த ஐ.பி.ஓ-வில் விண்ணப்பம் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவிர, இவர்களின் எத்தனை பேருக்கு டீமேட் கணக்கும் இருக்கிறது என்று தெரியவில்லை. பல்லாயிரக் கணக்கான முதலீட்டாளர்கள் புதிதாக டீமேட் கணக்கு களைத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது. 6.5 கோடி பேர் பான் நம்பரை பாலிசியுடன் இணைத்தது போல, மே மாதத்தில் பல கோடி புதிய முதலீட்டாளர்கள் புதிதாக டீமேட் கணக்குத் தொடங்க வாய்ப்பு இருப்பதாக எதிர் பார்க்கப்படுகிறது. பல வகையிலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள எல்.ஐ.சி-யின் இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட் டாளர்களிடம் அமோகமான வரவேற்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.”

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ராலீஸ் இந்தியாவின் பங்கு விலை பெருமளவு சரிவைச் சந்தித்திருக்கிறதே?

“ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ராலீஸ் இந்தியாவின் பங்கு விலை கடந்த 12 மாதங் களில் 15 சதவிகிதமும், நடப்பு ஆண்டில் இதுவரை 12% வரை சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் நாள்களில் இந்த நிறுவனத்தின் பங்கானது 30% வரை ஏற்றம் பெற வாய்ப்பு இருப்பதாக பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவிக் கின்றன. இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 1.38 கோடி பங்குகளையும், அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா 51.8 லட்சம் பங்குகளையும் 2022 மார்ச் 31 நிலவரப்படி வைத்திருந்ததாக அவர்களது பங்கு போர்ட் ஃபோலியோ காட்டுகிறது. அதாவது, இருவரும் சேர்ந்து 9.8% பங்குகளை வைத்திருக் கிறார்கள்.

எம்.கே குளோபல் பங்குத் தரகு நிறுவனம் இந்த நிறுவனத் தின் பங்கை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. இலக்கு விலையை ரூ.275-ஆக நிர்ணயம் செய்திருக்கிறது. அதே போல, ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டிஸ் மற்றும் ஆனந்த் ரதி ஷேர் அண்டு ஸ்டாக் புரோக்கர்ஸ் ஆகிய தரகு நிறுவனங்களும் இந்தப் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்துள்ளன. இலக்கு விலை முறையே அடுத்த 12 மாதங் களில் ரூ.295 மற்றும் ரூ.320-ஆக நிர்ணயம் செய்துள்ளன. கடந்த வியாழன் அன்று வர்த்தகத்தின் போது இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.244 என்கிற விலையில் வர்த்தகமானது.”

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை புதிய உச்சத்தைத் தொட்டது மகிழ்ச்சியான விஷயம்தானே..!

“இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று ரூ.2,827.10-க்கு வர்த்தக மானது. இது இந்தப் பங்கின் புதிய உச்சமாகும். இதன் காரண மாக இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதன்முறையாக ரூ.19 லட்சம் கோடியைத் தாண்டியிருக் கிறது. இந்த நிறுவனத்தின் சிறப் பான செயல்பாடுகளால் இதன் பங்கு விலையானது மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 3.75% இறங்கியுள்ள நிலையில், இந்தப் பங்கு விலை 1.7% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது.”

ருசி சோயா நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றம் கண்டுள்ளதே..!

“கடந்த வாரத்தில் பங்குச் சந்தை சற்றே பலவீனமான காணப்பட்டாலும், பிராண்டட் சமையல் எண்ணெய் விநியோக நிறுவனமான ருசி சோயா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரத்தின் புதன்கிழமை வர்த்தகத்தில் 7% வரை அதிகரித்து வர்த்தகமானது. சில வாரங்களுக்கு முன்பாக இந்த நிறுவனம் கடனை அடைப்பதற்காக எஃப்.பி.ஓ மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.4,300 கோடி நிதி திரட்டியது. இந்த வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.650-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த எஃப்.பி.ஓ விலையைவிட தற்போது 70% வரை விலை அதிகரித்து வர்த்தக மாகிறது. கடந்த வாரம் வியாழக் கிழமை காலை வர்த்தகத்தின் போது இதன் பங்கு விலை ரூ.1,118 என்கிற விலையில் வர்த்தகமானது.”

கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை சரிய என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று கேர் ரேட்டிங் நிறுவனத்தின் பங்கு விலை 13% வரை சரிந்து ரூ.475.35-ஆக வர்த்தகமானது. தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என்கிற உயர் பதவியிலிருந்து அஜய் மகாஜன் ராஜினாமா செய்ததை அடுத்து இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இவருடைய ராஜினாமாவை நிறுவனத்தின் இயக்குநர் குழு ஏற்றுக்கொண்டதாக செபிக்குத் தெரிவித்ததை அடுத்து இந்தச் சரிவு ஏற்பட் டிருக்கிறது. வியாழன் அன்று காலை வர்த்தகத்தின்போது இந்த நிறுவனத்தின் பங்கானது மேலும் சரிந்து ரூ.455 என்கிற விலையில் வர்த்தகமானது. இது அதன் 52 வார குறைந்தபட்ச விலையாகும்.”

வெரண்டா லேர்னிங் ஃப்ரீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமானது ஏன்?

“கடந்த இரண்டு நாள்களில், வெரண்டா லேர்னிங் ஃப்ரீசஸ் நிறுவனம் T.I.M.E (Advanced Educational Activities Pvt Ltd) என்கிற நிறுவனத்தை ரூ.287 கோடி கொடுத்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இதன் பங்கு விலை 15% உயர்ந்துள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 0.65% வரை சரிவை சந்தித்த நிலையில், இதன் பங்கு விலை 10% வரை அப்பர் சர்க்யூட் விலையில் ரூ.229-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கானது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது ரூ.137-க்கு வெளியிடப்பட்டது. தற்போது 67% விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரூ.245.95-க்கு வர்த்தகமானது.”

கடந்த வாரத்தில் ஒரு சில நிறுவனப் பங்குகளில் மொத்த முதலீடு விற்பனை நடந்ததற்கு என்ன காரணம்?

“பிரபல முதலீட்டாளர்களில் ஒருவரான பொரிஞ்சு வெலியத், ஏப்ரல் 26-ம் தேதி அன்று சாஃப்ட்வேர் நிறுவன மான அயுரம் ப்ரோப்டெக் நிறுவனத்தில் 1.39% பங்குகளை அதாவது, நான்கு லட்சம் பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ.15.85 விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். மார்ச் காலாண்டு முடிவின்படி, ஏற்கெனவே இவரிடம் அயுரம் ப்ரோப்டெக் நிறுவனத்தின் 1.05% பங்குகள் இருப்பதாக போர்ட்ஃபோலியோ காட்டுகிறது.

இதே போல, எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எண்டியூரன்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 23.73 லட்சம் பங்குகளைப் பங்கு ஒன்றுக்கு ரூ.1,162 கொடுத்து வாங்கியது. இது இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 1.7% ஆகும். பார்க்லேஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா நந்தன் டெனிம் நிறுவனத்தின் 7.56 லட்சம் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.53.73 விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. முன்னணி முதலீட்டாளர் நீரஜ் ரஜினிகாந்த் ஷா இந்த நிறுவனத்தில் 12 லட்சம் பங்குகளை சராசரியாக ஒரு பங்கின் விலை ரூ.54.75 என்ற விலையில் வாங்கினார். இந்த ‘ப்ளாக் டீல்’களைப் பார்த்து, இந்த நிறுவனப் பங்குகளை சிறு முதலீட்டாளர்கள் வாங்க வேண்டும் என்பதில்லை. இந்த நிறுவனப் பங்குகளை நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு வாங்குவதே சரி.’’

விப்ரோ நிறுவனம் ரைசிங் இன்டர் மீடியேட் ஹோல்டிங்ஸ் இங்க் நிறுவனத்தைக் கையகப்படுத்துகிறதாமே?

“ஆம். விப்ரோ நிறுவனம் எஸ்.ஏ.பி கன்சல்டிங் நிறுவன மான ரைசிங் இன்டர்மீடியேட் ஹோல்டிங்ஸ் என்கிற நிறுவனத்தை 540 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க முடிவு செய்திருக்கிறது. இதற்கான அனைத்துவிதமான ஃபைனான்ஷியல் நடவடிக்கை களையும் விப்ரோ மேற்கொண்டுள்ளது. வருகிற ஜூன் காலாண் டுக்குள் இந்தக் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

பல முக்கியமான நிறுவனங்கள் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியிட்டு வருவதாகத் தெரிகிறதே?

“ஆம், பல முன்னணி நிறு வனங்கள் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட ஆரம்பித் திருக்கின்றன. கடந்த வாரத்தில் வெளியான காலாண்டு முடிவு களில் லோதா குழும நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில், அதன் நிகர லாபம் 97% அதிகரித்து, ரூ.573 கோடியாக உயர்ந்துள்ளதாகப் பதிவு செய்திருக்கிறது.

கடந்த 2021 - 22-ம் நிதி ஆண்டில் இந்தக் குழும நிறுவனங்களின் மொத்த நிகர லாபம் 271% வரை அதிகரித்து, ரூ.1,262-ஆக பதிவாகி யுள்ளது. அதே போல, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் 10.27% வரை அதிகரித்து, ரூ.1,468.95 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,332.07 கோடியாகப் பதிவாகி இருந்தது.’’

ஷேர்லக்: மொத்த முதலீடு நடந்த 
நிறுவனப் பங்குகள்..!

இன்று இந்த மாதத்தின் கடைசி வியாழக்கிழமை. எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி இன்று என்பதால், சந்தை எப்படி இருந்தது?

‘‘இன்றைக்கு எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரி என்பதால், வர்த்தகத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் 1% மேல் உயர்ந்து, அன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தன.

சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்குமேல் அதிகரித்து, 57,521 என்கிற நிலையிலும், நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 17,245 என்கிற நிலையிலும் நிறைவு செய்தன. அன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 57,791 வரையும், நிஃப்டி 17,322 வரையும் ஏற்றமடைந்தன. சென்செக்ஸ் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், நிஃப்டி 50 இன்டெக்ஸில் 45 பங்குகள் ஏற்றத்திலும் முடிந்தன. துறை வாரியாகப் பார்க்கும்போது எஃப்.எம்.சி.ஜி, பவர், ஆட்டோ மற்றும் கேப்பிடல் கூட்ஸ் துறை சார்ந்த பங்குகள் தலா 1 - 2% வரை அதிகரித்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்தன.

அடுத்த வாரம், எல்.ஐ.சி ஐ.பி.ஓ வருகிறது. இன்னும் அதிகமான புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைக்கு வருவார்கள். அவர்களை எல்லாம் நாம் வரவேற்போம். இனிவரும் நாள்களிலாவது பங்குச் சந்தை இறக்கத்தின் போக்கைத் தவிர்த்து, ஏற்றத்தின் போக்கில் செல்லும் என்று எதிர்பார்ப்போம்’’ என்று, ‘‘பை, பை’’ சொல்லிவிட்டுக் கிளம்பினார்!

ஏற்ற இறக்கப் பங்குச் சந்தையில் திறம்பட வர்த்தகம் செய்தல்..!

நாணயம் விகடன் வழங்கும் ‘ஏற்ற இறக்கப் பங்குச் சந்தையில் திறம்பட வர்த்தகம் செய்தல்..!’ என்ற நேரலை ஆன்லைன் பயிற்சி மே 7-ம் தேதி காலை 11.00 மணி முதல் 12.00 மணிவரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இந்தியாவின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் டாக்டர் சி.கே.நாராயண் (நிறுவனர், Growth Avenues) பேசுகிறார். இவர் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். மேலும், செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ரிசர்ச் அனலிஸ்ட் ஆவார். நிகழ்ச்சியில் டாக்டர் சி.கே.நாராயணின் நியோ டிரேடர் சாஃப்ட்வேர் பற்றி விளக்கிச் சொல்லப்படும்.
அனுமதி இலவசம் முன்பதிவு செய்ய: https://bit.ly/3OixU0o

ஷேர்லக்: மொத்த முதலீடு நடந்த 
நிறுவனப் பங்குகள்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism