Published:Updated:

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு... விலை குறைந்து பட்டியல் ஆகுமா?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு... விலை குறைந்து பட்டியல் ஆகுமா?

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வழக்கமான பரபரப்போடு வந்துசேர்ந்தார் ஷேர்லக். “ஏர் இந்தியா சி.இ.ஓ-வாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் துணை நிறுவனத்தில் பணிபுரியும் காம்ப்பெல் வில்சனை நியமித்திருக் கிறது. இவருடைய நியமனத்தையாவது சங் பரிவார் அமைப்புகள் எதிர்க்காமல் இருக்க வேண்டும்...’’ என்று பேச, ‘‘ஜி, இது ஜூ.வி இல்லை, நா.வி... சந்தை தொடர்பான மேட்டருக்கு வாரும்’’ என்றபடி, நம்முடைய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

கள்ளச்சந்தை என்று சொல்லப்படுகிற கிரே மார்க்கெட்டில் (grey market) எல்.ஐ.சி பங்கு விலை குறைந்து வர்த்தகமாவதாகச் சொல்லப்படுகிறதே?

“வருகிற மே 17-ம் தேதிக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தையில் எல்.ஐ.சி பங்கு பட்டியலாகி வர்த்தகமாகத் தொடங்கும். ஆனால், அதற்கு முன்பே இந்தப் பங்கின் விலை கிரே மார்க்கெட்டில் சற்றே குறைந்துவிட்டதாகப் பேச்சு. கிரே மார்க்கெட்டில் சில தினங்களுக்கு முன்புவரை கூட, எல்.ஐ.சி நிறுவனப் பங்கின் விலை அதிகரித்துதான் வர்த்தகமானது. ஆனால், கடந்த வாரத்தில் சந்தைப் புள்ளிகள் கணிசமாக இறங்கியதன் காரணமாக, எல்.ஐ.சி நிறுவனப் பங்குச் சந்தையில் பட்டியலாகும் போது விலை குறைந்து வர்த்தகமாகும் என்கிற எதிர்பார்ப்பில் விலை குறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. வருகிற 17-ம் தேதி அன்று எல்.ஐ.சி நிறுவனப் பங்கு விலை குறையுமா அல்லது விலை உயர்ந்து வர்த்தகம் ஆகுமா என்கிற பலத்த எதிர்பார்ப்பில் அனைத்து முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள்.

சந்தை ஏற்கெனவே இறக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, எல்.ஐ.சி பங்கு விலை இறங்கினால், அதைப் பார்த்து சந்தை மேலும் இறங்க வாய்ப்புண்டு. 2008-ல் ரிலையன்ஸ் பவர் பங்கு பட்டியலானபோது பல முதலீட் டாளர்கள் வெறுத்துப்போனார்கள். அது மாதிரியான அனுபவம் மீண்டும் முதலீட்டாளர் களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதே நம் எதிர்பார்ப்பு.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு பெருமளவு சரிந்து, பெரும் கவலையில் இருக்கிறார்களே..?

“கடந்த வாரத்தின் நான்கு வர்த்தக தினங் களில் சென்செக்ஸ் 1615 புள்ளிகள், அதாவது 2.89% சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரண மாக, பி.எஸ்.இ சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.13.32 லட்சம் கோடி குறைந்துள்ளது. பங்குச் சந்தையின் நிலையற்றத்தன்மையால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று, பாதுகாப்பான முதலீடாக நினைத்து தங்கத் தில் முதலீடு செய்து வருவதாகத் தெரிகிறது. இது பங்கு முதலீட் டாளர்களுக்கு உண்மையி லேயே கஷ்டமான காலம்தான்.”

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலை சரிந்துள்ளதே?

“நடப்பு 2022-ம் ஆண்டில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வின் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றுள்ள டைட்டன் கம்பெனி, ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்ஷூரன்ஸ் கம்பெனி மற்றும் ராலீஸ் இந்தியா ஆகிய மூன்று பங்கு களின் விலை 25% வரைக்கும் சரிவை சந்தித்திருக்கின்றன. இவர் டைட்டன் கம்பெனியில் 3.5 கோடி பங்குகளையும், ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 8.2 கோடி பங்கு களையும், ராலிஸ் இந்தியா நிறுவனத்தில் 1.3 கோடி பங்கு களையும் வைத்திருக்கிறார்.

டைட்டன் நிறுவனப் பங்கு விலை கடந்த புதன்கிழமை அன்று 1.64% இறங்கியது. 2022-ம் ஆண்டில் இதுவரையில் 15% சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், ஷேர்கான் மற்றும் எம்.கே குளோபல் தரகு நிறுவனம் டைட்டனின் பிசினஸ் வளர்ச்சியைக் குறிப்பிட்டு, இந்தப் பங்குகளின் விலை ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாகப் பரிந்துரை செய்துள்ளது.

அதே போல, ஸ்டார்ஹெல்த் அண்டு அலைடு இன்ஷூ ரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த புதன்கிழமை அன்று 3% விலை குறைந்து ரூ.676-க்கு வர்த்தக மானது. 2022-ம் ஆண்டில் இதுவரை 10% வரை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன் வாலாவுடன் அவரின் மனைவி ரேகாவும் 1.7 கோடி பங்கு களை வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி எம்கே குளோபல் மற்றும் மோதிலால் ஆஸ்வெல் தரகு நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது.

அதே போல, ராலிஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 2022-ம் ஆண்டில் இதுவரை 25% வரை சரிவை சந்தித்திருக் கிறது. கடந்த வாரத்தில் இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவு வெளியானது. நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.14 கோடி எனப் பதிவானதால், இதன் பங்கு விலை 9% சரிந்து வர்த்தகமானது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் வைத்திருப்பதற்கு கலவையான கருத்துகளை தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ தரகு நிறுவனம் பங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லியும், எம்.கே குளோபல் தரகு நிறுவனம் பங்குகளை வைத்திருக்கச் சொல்லியும் பரிந்துரை செய்திருக்கிறது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அதிக அளவில் முதலீடு செய்துள்ள டாடா மோட்டார்ஸ் (-12%), கிரிசில் (7%), ஃபோர்ட்டிஸ் (13%), கனரா பேங்க் (22%), இந்தியன் ஹோட்டல்ஸ் (11%) மற்றும் என்.சி.சி (9%) எனப் பல பங்குகளை விலை இறங்கி யுள்ளன. இந்த சரிவின் காரணமாக மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோ மதிப்பு ரூ.5,300 கோடி சரிந்து ரூ.28,436 கோடியாக உள்ளது.”

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு... விலை குறைந்து பட்டியல் ஆகுமா?

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது பெருமளவு குறைந்திருக்கிறதே?

‘‘தற்போதைய நிலையில், இந்திய பங்குச் சந்தைகளின் போக்கு நிலையற்றதாக, அதிக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது ஏப்ரலில் 44% வரை சரிந்து, ரூ.15,890 கோடியாக உள்ளது. உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக எழுந்துள்ள அரசியல் பதற்றம், கச்சா எண்ணெய் விலை மற்றும் உள் நாட்டுப் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தை நிலையற்றதாக காணப்படுகிறது. சந்தையின் இத்தகைய போக்குக்கு வெளி நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வது ஒரு முக்கியமான காரணமாகும்.

மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.11,863 கோடியாகக் குறைந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் ரூ.12,328 கோடி யாக இருந்தது. இருப்பினும், ஏப்ரலில் எஸ்.ஐ.பி சேமிப்புக் கணக்குகளின்எண்ணிக்கை 5.39 கோடியாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 11.29 லட்சம் புதிய கணக்குகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.’’

டெலிவரி ஐ.பி.ஓ வெளியீடு குறித்து..?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று வெளியான டெலிவரி (Delhivery) நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு முதல் நாளில் சுமாரான வரவேற்பைத்தான் மக்கள் வழங்கியிருக் கிறார்கள். அன்றைய தினத்தில் பங்குகள் வேண்டி 21% விண்ணப்பங்கள் வந்தன. இரண்டாம் நாளன்றும் பெரிய மாற்றம் எதுவும் நடந்துவிடவில்லை. 21% என்று இருந்தது 23% என உயர்ந்துள்ளது. ஐ.பி.ஓ முடிவதற்குள் எதிர்பார்த்த அளவு விண்ணப்பம் வருமா என்பது சந்தேகமே. அப்படி வரவில்லை எனில், இந்த ஐ.பி.ஓ-வை ஒத்திவைக்கும் அறிவிப்புகூட வரலாம் என்கிறார்கள். சந்தையில் நெகட்டிவ் மூவ்கள் நிறைந்திருக்கும் இந்த நிலையில், இது மாதிரியான பங்குகளில் அவசரப்பட்டு, வாங்கத் தேவையில்லை. பொறுத்திருந்து முடிவு செய்வதே சரி என்கிறார்கள் நிபுணர்கள்.’’

வீனஸ் பைப்ஸ் ஐ.பி.ஓ வெளியீட்டு முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து...

‘‘வீனஸ் பைப்ஸ் நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.165 கோடி நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட இந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. கடந்த வாரம் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதல் நாளிலேயே மக்கள் அமோக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். முதல் நாளிலேயே வெளியிடப்பட்ட பங்கு அளவைவிட 2.37 மடங்கு கூடுதல் பங்கு வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. ரீடெய்ல் முதலீட்டாளர்கள் பிரிவிலிருந்து வலுவான ஆதரவு வந்திருக்கிறது. பங்கு விலை பட்டை ரூ.310 - 326. இந்த நிறுவனப் பங்கு வருகிற 24-ம் தேதி அன்று சந்தையில் பட்டியல் ஆகிறது. பங்கு விலை உயர்கிறதா, இல்லையா என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.’’

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு... விலை குறைந்து பட்டியல் ஆகுமா?

இதாஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் நிதி திரட்டுகிறதாமே?

‘‘லக்ஸரி மற்றும் பிரீமியம் பிரிவைச் சேர்ந்த வாட்ச் தயாரிப்பு நிறுவனமான இதாஸ் (Ethos) நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவதன் மூலம் ரூ.472 கோடி நிதியை முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. ஐ.பி.ஓ வெளியீட்டுத் தேதி மே 18 - 20. மூன்று நாள்கள் மட்டுமே நடக்கும் இந்த ஐ.பி.ஓ-வில் மொத்தம் ரூ.375 கோடி மதிப்பு உள்ள புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன’’ என்றவர், புறப்படும்முன், முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

‘‘என்னைச் சந்திக்கும் முதலீட் டாளர்கள் அனைவருமே ‘‘என்ன, சந்தை இப்படி இறங்கி விட்டதே... கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடைத்த லாபம் காணாமல் போய்விடும் போலிருக்கிறதே... இப்போதாவது முதலீட்டைத் திரும்ப எடுத்து விடலாமா’’ என்றுதான் கேட்கிறார்கள். ‘‘இரண்டு ஆண்டு நீங்கள் கண்ட லாபம் நிஜமல்ல. இப்போது சந்தை இறங்குவதுதான் நிஜம். பொறுமையாக இருந்தால், சந்தை மீண்டும் உயர்ந்து, நீங்கள் நல்ல லாபத்துடன் இருப்பதைப் பார்ப்பீர்கள். உங்கள் போர்ட் ஃபோலியோவில் உள்ள பங்குகள் மட்டுமே தரமானவையா என்பதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்கிற ஆலோசனையைத் தந்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினார்.

முதலீட்டைப் பெருக்கும் மந்திரங்கள்!

நாணயம் விகடன் நடத்தும் ‘முதலீட்டைப் பெருக்கும் மந்திரங்கள்..!’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி மே 21, 2022, சனிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் (Holisticinvestment.in) பயிற்சியளிக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.300. இந்தக் கருத்தரங்கில், சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பது எப்படி, முதலீட்டுத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி, முதலீடு தொடர்பான தகவல்களை சரியாகப் புரிந்துகொள்வது எப்படி, உங்கள் முதலீட்டுக் கலவையைச் சரியாக ஆய்வு செய்வது எப்படி, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்பது போன்ற பல விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. பதிவு செய்ய: https://bit.ly/3scYo9U

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு... விலை குறைந்து பட்டியல் ஆகுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism