Published:Updated:

ஷேர்லக்: மந்தமான பங்குச் சந்தை... ரூ.1.6 லட்சம் கோடி ஐ.பி.ஓ தள்ளி வைப்பு!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: மந்தமான பங்குச் சந்தை... ரூ.1.6 லட்சம் கோடி ஐ.பி.ஓ தள்ளி வைப்பு!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். பக்கங்களைப் புரட்டியவர், ‘‘ ‘பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்’ பகுதி மீண்டும் வருவது வாசகர் களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்’’ என்றவர், கேள்வி களைக் கேட்கச் சொல்ல, நாம் கேட்கத் தயாரானோம்.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான புதிய பங்கு வெளியீடுகள் தள்ளிப் போயிருக்கிறதே?

“தற்போதைய நிலையில், இந்தியப் பங்குச் சந்தை பலவீனமாக இருப்பதால், ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான புதிய பங்கு வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.89,468 கோடி மதிப்புள்ள பங்கு வெளி யீட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. ரூ.69,320 கோடி மதிப்புள்ள பங்கு வெளியீட்டுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த வெளியீட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செபியின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.

ஏனெனில், பிப்ரவரி பிற்பகுதியில் ரஷ்யா உக்ரைன் போர் மூண்டதிலிருந்து உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் வலுவிழந்து காணப்படுகின்றன. மேலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மற்றும் ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை உயர்த்தியது, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பங்குச் சந்தைகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தது போன்ற காரணங்கள் ஐ.பி.ஓ சந்தைக்குச் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றன.

அதனால் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு அனுமதி கிடைத்தும், கரடியின் பிடியில் இருக்கும் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுவது ஏற்றதல்ல என்பதை உணர்ந்து ஃபேப் இந்தியா, ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ், கோ ஏர்லைன்ஸ், பார்ம்ஈஸி, ஓயோ, ட்ரூம், எபிக்ஸ், ஜெமினி எடிபில்ஸ் அண்டு ஃபேட்ஸ் இந்தியா, ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ், டி.வி.எஸ் சப்ளைசெயின் சொல்யூஷன்ஸ், மர்சன்டீஸ் ஃபார்மாசூட்டிகல்ஸ், நவி டெக்னாலஜீஸ், ஜோய் ஆலுக்காஸ் இந்தியா மற்றும் கே.எஃப்.ஐ.என் டெக் ஆகிய நிறுவனங்கள் சந்தையின் ஏற்றத்துக்கான நேரத்தை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கின்றன.”

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு விலை குறைந்திருக்கிறதே?

“பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகனங் கள் கடந்த மே மாதத்தில் 2,75,868 என்கிற எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று அதிகம்தான் என்றாலும், இதன் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை வர்த் தகத்தில் 4% வீழ்ச்சியைச் சந்தித்து, ரூ.3,709-க்கு வர்த்தகமானது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மொத்த விற்பனை 11% வரை சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது, கடந்த நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் விற்பனை 5,86,642 ஆக சரிந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 6,56,878 ஆக இருந்தது.

இருப்பினும், சந்தையின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது, இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 2% சரிவை சந்தித்துள்ள நிலையில், இதன் பங்கு விலை 5% ஏறி உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 14% வரையும், ஒரு வருடத்தில் 12% வரையும் விலை ஏறி இருக்கிறது.”

அண்மையில் வெளியான ஐ.பி.ஓ-களுக்கு முதலீட் டாளர் களிடையே அவ்வளவாக வர வேற்பு இல்லையே... ஏன்?

“எல்.ஐ.சி நிறுவனத் தின் புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) உட்பட கடந்த மே மாதத்தில் மட்டும் எட்டு ஐ.பி.ஓ-கள் வெளியாகி இருக்கின்றன. இந்த எட்டு ஐ.பி.ஓ-களில் நான்கு ஐ.பி.ஓ-களின் பங்கின் விலை வெளியீட்டு விலைக்குக் கீழே வர்த்தகமாகி வருகின்றன. ஐ.பி.ஓ வரலாற்றில் மிகப்பெரிய ஐ.பி.ஓ-வான எல்.ஐ.சி ஐ.பி.ஓ பங்குச் சந்தையில் பட்டியலான முதல் நாளில் சரிவை சந்தித்தது. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.20,557 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. முதல் நாளில் 9% வீழ்ச்சியைப் பதிவு செய்த இந்தப் பங்கானது மே மாத இறுதியில் 14% வீழ்ச்சியில் வர்த்தகமானது. அதே போல, ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் நிறுவனத்தின் பங்கு விலையும் முதல் நாளில் 7% வரையும், மே மாத இறுதியில் 9% வரையும் இறங்கியுள்ளது.

கேம்பஸ் ஆக்டிவ்வேர் நிறுவனம் முதல் நாள் வர்த்தகத்தில் 22% வரை ஏற்றத்தையும், மாதக்கடைசியில் 26% வரை ஏற்றத்தையும் பதிவு செய்தது. அதே போல, புரூடென்ட் கார்பரேட் அட்வைஸரி சர்வீசஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ முதல் நாளில் 5% பிரீமியம் விலையில் பங்குச் சந்தையில் பட்டியலானது.

ஆனால், மாதக்கடைசியில் 7% சரிந்து வர்த்தகமானது. டெலிவரி நிறுவனத்தின் பங்கு முதல் நாள் வர்த்தகத்தில் 1% வரை ஏற்றத்தைக் கண்டது. மாத முடிவில் 9% வரை லாபத்தைப் பதிவு செய்தது. அதே போல, வீனஸ் பைப்ஸ் அண்டு டியூப்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை ஏற்றத் தையும், மாதக் கடைசியில் ஐ.பி.ஓ வெளியீட்டு விலையில் இருந்து 1% ஏற்றத்தையும் பதிவு செய்தது.

பொதுவாக, நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்திய பங்குச் சந்தையின் போக்கு நிலையாக இல்லை. ரஷ்யா - உக்ரைன் போர், சர்வதேச நாடுகளில் அரசியல் பதற்றம், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், பணவீக்கம் அதிகரிப்பு, அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணிகளால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய குறியீடுகளில் அதிகமான ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் வெளியான ஐ.பி.ஓ-களில் 40% ஐ.பி.ஓ-கள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தைத் தந்துள்ளன.”

ஷேர்லக்: மந்தமான பங்குச் சந்தை... ரூ.1.6 லட்சம் கோடி ஐ.பி.ஓ தள்ளி வைப்பு!

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ஒரு பங்கின் விலை 50 சதவிகிதத்துக்கு மேல் சரிந்திருக்கிறதே?

‘‘பிரபல முதலீட்டாளர்களுள் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்ஃபோலியோவில் உள்ள ஜூபிலன்ட் ஃபார்மோவா (Jubilant Pharmova) நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 54% வரை சரிந்து, ரூ.398.15 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் 52 வார உச்சபட்ச விலை ரூ.890. இந்த நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு முடிவின்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 72% வரை சரிந்து, ரூ.59.55 கோடியாக உள்ளது. அதே போல, வருமானமும் 3.9% சரிந்து, ரூ.1,524.57 ஆக குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 3.61% பங்கு களையும், அவரின் மனைவி ரேகா 3.15% பங்குகளையும் வைத்திருக்கிறார்கள்.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்த பங்கின் இலக்கு விலையை முன்னதாகவே ரூ.550-லிருந்து ரூ.447 ஆக குறைந் திருந்தது. ஆனால், முதலீட்டாளர் களுக்கு பங்குகளைத் தக்க வைத்துக்கொள்ள சொல்லி இருந்த பரிந்துரையை மாற்றி தற்போது பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரைத்திருக்கிறது. அதே போல, மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்குத் தரகு நிறுவனம் இந்தப் பங்குக்கான இலக்கு விலையை ரூ.430 ஆக நிர்ணயித் துள்ளது.”

எல்.ஐ.சி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவைத் தொடர்ந்து அந்தப் பங்கு விலை எப்படி உள்ளது?

“எல்.ஐ.சி நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, முதன்முறையாகத் தனது காலாண்டு முடிவை வெளியிட்டு இருக்கிறது. காலாண்டு முடிவு வெளியான பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த செவ்வாய்க்கிழமை 3% சரிந்து ரூ.810-க்கு வர்த்தக மானது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, மேலும் விலை சரிந்து ரூ.808-க்கு வர்த்தகமானது. சந்தை மீண்டும் காளையின் போக்குக்கு மாறியபிறகுதான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விலை உயரும் போலிருக் கிறது. அதுவரை முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது அவசியம்.’’

கேலக்டிகோ கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

‘‘கடந்த ஐந்து வார வர்த்தக தினங்களில் கேலக்டிகோ கார்ப் பரேட் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 226% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று இதன் பங்கு விலை 5% அப்பர் சர்க்யூட்டில் ரூ.249.65-க்கு வர்த்தகமானது.

கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வர்த்தகத்தின்போது இந்தப் பங்கு விலை ரூ.76.65-க்கு வர்த்தகமானது. கடந்த மே 15-ம் தேதி நிறுவனத்தின் இயக்குநர் குழு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளை ரூ.1 வரை பிரிக்க ஒப்புதல் அளித்தது. மேலும், 3:10 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கவும் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, பங்கு தாரரின் ஒப்புதலுக்கு உட்பட்டு நிறுவனத்தில் வைத்திருக்கும் ஒவ்வொரு 10 பங்குகளுக்கும் தலா 1 ரூபாய் வீதம் மூன்று பங்குகள் வழங்குகிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை வேகமாக அதிகரித்து உள்ளது.’’

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறுகிறார்களே..?

“நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்திய பங்குச் சந்தைகளைப் பல்வேறு சர்வதேசக் காரணிகள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்று வெளியேறி வருகிறார்கள். கடந்த மே மாதத்தில் மட்டும் அவர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து ரூ.44,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருக்கிறார்கள். இது 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குப் பிறகான அதிக விற்பனை ஆகும். அந்த மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோவிட்-19 அச்சம் காரணமாக ரூ.58,632 கோடி மதிப்பிலான பங்கை விற்பனை செய்திருந்தனர். 1993-ம் ஆண்டுக்குப் பிறகு உள்நாட்டு சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்கை விற்பனை செய்தது அப்போதுதான். கடந்த மே மாதத்தில் இரண்டாவது முறையாக அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்திருக்கின்றனர்.”

ரோலெக்ஸ் ரிங்க்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

‘‘கடந்த வாரம் புதன்கிழமை அன்று ரோலெக்ஸ் ரிங்க்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 11% அதிகரித்து, ரூ.1,477-க்கு வர்த்தகமானது. ஆட்டொமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக தேவை எதிர்பார்ப்பு இருப்பதால், இதன் பங்கு விலை அதிகரிப்பதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில், இதன் பங்கு விலை வெளியிடப்பட்ட விலையான ரூ.900-லிருந்து 64% வரை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.”

ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஆயில் இந்திய நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை அதிகரித்து, ரூ.250-க்கு வர்த்தகமானது. இதற்கு முந்தைய மூன்று வர்த்தகத் தினங்களில் இதன் பங்கு விலை 15% வரை அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பான மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருப்பதால், பங்கு விலை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

மார்ச் காலாண்டு முடிவின்படி, நிறுவனத்தின் மொத்த வருமானம் மற்றும் வரிக்குப் பிந்தைய வருமானம் முறையே 74% மற்றும் 92% அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.1,630 கோடியாக அதிகரித்துள்ளது”.

பேமேட் இந்தியா நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

“பேமேட் இந்தியா நிறுவனம் ரூ.1,500 கோடி முதலீட்டாளர் களிடமிருந்து நிதி திரட்டும் நோக்கில் புதிய பங்குகளை வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதற்கு அனுமதி கேட்டு பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி அமைப்புக்கு விண்ணப் பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ-வில் ரூ.1,125 கோடி மதிப்புள்ள பங்குகளை புதிதாக வெளியிடு கிறது.

ஏற்கெனவே, இந்த நிறுவனத் தில் முதலீடு செய்துள்ள அஜய் ஆதிசேஷன், விஸ்வநாதன் சுப்ரமணியன், லைட்பாக்ஸ் வென்சர்ஸ், மே ஃபீல்டு எஃப்.வி.சி.ஐ, ஆர்.எஸ்.பி இந்தியா ஃபண்ட் எல்.எல்.சி மற்றும் ஐ.பி.ஓ வெல்த் ஹோல் டிங்க்ஸ் ஆகிய புரொமோட்டர் களின் ரூ.375 கோடி மதிப்புள்ள பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்கிறது.”

இன்று சந்தை ஏற்றம் கண்டிருக் கிறதே... என்ன காரணம்?

‘‘இந்த வாரம் எக்ஸ்பைரி முடிவு இன்று என்பதால், சந்தை ஏற்றம் கண்டிருக்கிறது. என்றாலும், இதை எல்லாம் ஒரு சிறு முன்னேற்றமாகப் பார்க்க வேண்டுமே தவிர, மீண்டும் காளைச் சந்தை தொடங்கி விட்டது என்று சொல்வதற் கில்லை’’ என்றவர், ‘‘அடுத்த வாரம் புதிய நாணயம் விகடனா, பலே பலே’’ என்று சொன்னபடி, வீட்டுக்குப் புறப்பட்டார்!

சிவராமகிருஷ்ணன்
சிவராமகிருஷ்ணன்

பங்குச் சந்தை முதலீடு: செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்!

நாணயம் விகடன் நடத்தும் ‘பங்குச் சந்தை முதலீடு: செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..!’ என்ற ஆன்லைன் வகுப்பு ஜூன் 18, 2022 (சனிக்கிழமை) காலை 10.30 - 12 மணி வரை நடைபெறுகிறது. ஆடிட்டர் சிவராமகிருஷ்ணன் (நிறுவனர், www.sinceresyndication.com) இந்தக் கட்டண வகுப்பை நடத்துகிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.300. முன்பதிவுக்கு: https://bit.ly/3MNPbgJ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism