Published:Updated:

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு விலை வீழ்ச்சியிலிருந்து 30% உயரும்! பங்குத் தரகு நிறுவனம் கணிப்பு

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு விலை வீழ்ச்சியிலிருந்து 30% உயரும்! பங்குத் தரகு நிறுவனம் கணிப்பு

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஷேர்லக் தகவல் அனுப்பியிருந்தார். “மாலை 5 மணிக்கு முக்கியமான இன்னொரு மீட்டிங் இருப்பதால் 3.30 மணிக்கே வந்துவிடுவேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். சொன்ன படியே சரியான நேரத்துக்கு வந்து சேர, நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயருமா?

“கடந்த ஜூன் 22-ம் தேதி வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 1.74% வரை சரிந்து ரூ.2,539-க்கு வர்த்தகமானது. இருப்பினும் மிக முக்கிய தரகு நிறுவனங்களில் ஒன்றான ஜெஃப்ரீஸ் இந்த பங்கை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. ஏனெனில், தற்போதைய வர்த்தக விலையில் இருந்து 16% வரை பங்கு விலை உயரும் என இந்த தரகு நிறுவனம் கணித் திருக்கிறது. இலக்கு விலை ரூ.2,950-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

எல்.ஐ.சி பங்கு விலை வீழ்ச்சியிலிருந்து 30% உயரும் என முன்னணிப் பங்குத் தரகு நிறுவனம் கணித்திருக்கிறதே?

“பங்குச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய எல்.ஐ.சி பொதுப் பங்கு வெளியீட்டில் பாலிசிதாரர்களும் ஊழியர்களுக்கும் சலுகை விலையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. பங்கு பட்டியலான பிறகு நன்றாக ஏற்றம் அடையும், நல்ல லாபம் பார்க்கலாம் என்ற ஆசையுடன் பலரும் பங்குகளை வாங்கிக் குவித்தனர். ஆனால், மே 17 அன்று பட்டியலான எல்.ஐ.சி தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. பட்டியலான அன்றே ரூ.872-க்கு இறக்கம் கண்டு வர்த்தகமானது. அதன் பிறகும், தொடர்ந்து சரிந்து வந்து ஒரு மாத காலத்தில் ரூ.700-க்குக் கீழாகக் குறைந்தது. அதிகபட்சமாக ரூ.650 வரை இறக்கம் கண்டு வர்த்தகமானது. இந்த அளவு இறக்கத்தை அடையும் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த இறக்கத்தால் எல்.ஐ.சி-யின் சந்தை மதிப்பு ரூ.6.02 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.26 லட்சம் கோடியாகக் குறைந்தது.

இந்நிலையில், சமீப நாள்களில் இப்பங்கில் ஏற்றத்தின் நகர்வுகள் தெரிகின்றன. எல்.ஐ.சி பங்கு குறித்து சர்வதேச ரிசர்ச் நிறுவனமான ஜே.பி.மார்கன் பாசிட்டிவ்வான கணிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வர்த்தகமாகும் விலையிலிருந்து 30% வரை உயர்ந்து ரூ.840 என்ற நிலையை எட்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு விலை வெளியீட்டு விலையைவிடக் குறைவாக இருந்தாலும் தற்போதைய விலையிலிருந்து ஏற்றம் அடைந்தால் அது முதலீட் டாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகவே இருக்கும்.’’

நிஃப்டி 500 இண்டெக்ஸ் பங்குகளில் பெரும்பாலான பங்குகள் சரிவை சந்தித்திருக்கின்றனவே?

“இந்திய பங்குச் சந்தையில் நிலவும் சரிவு காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை நிஃப்டி 500 இண்டெக்ஸ் 12 சதவிகிதமும், பி.எஸ்.இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை தலா 9 சதவிகிதமும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களின் தொகுப்பான நிஃப்டி 500 இண்டெக்ஸின் 83 சதவிகிதப் பங்குகள் 2022-ல் இதுவரை பிளாட் அல்லது நெகட்டிவ் வருவாயை வழங்கியுள்ளன. பெரும்பாலான பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையைவிட விலை குறைந்து வர்த்தகமாகின்றன.”

ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்கு விலை 4% வரை அதிகரித்து, ரூ.68.60-க்கு வர்த்தகமானது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 5.5% வரை பங்கு விலை அதிகரித்தது. பிளிங்கிட் நிறுவனத்தை ஸொமேட்டோ நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்நிறுவனத் தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளிக்கும் என்கிற எதிர்பார்ப்புக்கு இடையில் பங்கு விலை அதிகரித்திருக்கிறது.”

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு விலை       வீழ்ச்சியிலிருந்து 30% உயரும்!
பங்குத் தரகு நிறுவனம் கணிப்பு

எலிகான் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் 6% பங்கு விலை அதிகரித்து, ரூ.274.90-க்கு வர்த்தகமானது. கடந்த மூன்று மாதங்களில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 11% சரிந்துள்ள நிலையில், இதன் பங்கு விலை 83% அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி 24-ம் தேதி ரூ.131.70-க்கு வர்த்தகமான நிலையில், அந்த விலையில் இருந்து 109% வரை தற்போது விலை அதிகரித்துள்ளது.”

ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை என்ன காரணத்தால் அதிகரித்திருக்கிறது?

“ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை வர்த்த கத்தில் பி.எஸ்.இ பங்குச் சந்தையில் 17% உயர்ந்து ரூ.43.90-ஆக வர்த்தகமானது. ஒருங்கிணைந்த கடனைக் குறைக்க Temasek-க்கு சொந்தமான Rivulis Pte Ltd நிறுவனத்துடன் சர்வதேச நீர்ப்பாசன வணிகத்தை இணைக்கப்போவதாக ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனம் கூறிய தைத் தொடர்ந்து பங்குவிலை அதிகரித்திருக்கிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 40% வரை அதிகரித் திருக்கிறது.”

யூ.பி.எல் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்திருக்கிறதே?

“கடந்த மே 20, 2022 அன்று யு.பி.எல் நிறுவனம் 13.43 மில்லியன் பங்குகளை சந்தை யில் இருந்து திரும்பப் பெற்றது. பங்கு ஒன்றுக்கு ரூ.813.92 கொடுத்து வாங்கியது. இந்த பைபேக் ஆஃபரை முடித்த பிறகு, யு.பி.எல்லின் பங்குகள் கடந்த புதன்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் பி.எஸ்.இ-யில் 5% சரிந்து, 52 வாரங்களில் இல்லாத அளவு குறைந்தபட்ச விலையான ரூ.618.05-ஐ எட்டியது. இந்த பங்கு விலையானது கடந்த ஒரு மாதத்தில் 23% சரிவை சந்தித்திருக்கிறது. பிப்ரவரி 24, 2022 அன்று தொட்ட அதன் முந்தைய குறைந்தபட்ச மதிப்பான ரூ.625-க்கு கீழே தற்போது இந்நிறுவனத்தின் பங்கு விலை சரிந்துள்ளது.”

சில பெயின்ட் பங்குகள் நல்ல லாபத்தைத் தந்துள்ளனவே?

“பெயின்ட் நிறுவனங்களில் முதல் மூன்று இடங்களில் உள்ள ஏசியன் பெயின்ட், பெர்ஜர் பெயின்ட் மற்றும் கன்சய் நெரோலக் பெயின்ட் ஆகிய நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாகவே அதன் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூன் 2007 முதல் ஜூன் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்த மூன்று பெயின்ட் நிறுவனப் பங்குகளில் ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்திருந்து, மூன்று ஆண்டு கள் அந்தப் பங்குகளை வைத்திருந்த முதலீட்டாளர் கள் இரட்டிப்பு லாபத்தைப் பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் மூன்று ஆண்டு களில் பெர்ஜர் பெயின்ட்ஸ் 100%-க்கு மேல் முதலீட் டாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது. ஆசியன் பெயின்ட் 60% மற்றும் கன்சய் நெரோலக் பெயின்ட்ஸ் 50% லாபத்தைக் கொடுத்திருக் கிறது.”

பயோகான் பங்கு விலை சரிய என்ன காரணம்?

“பயோகான் நிறுவனம் மீது லஞ்ச புகார்கள் எழுந்ததால், கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தின்போது பயோகான் பங்குகள் விலை சரிவைச் சந்தித்தன. அன்றைய வர்த்தகத்தில் 3.66% வரை பங்கு விலை சரிந்து ரூ.313.20-க்கு வர்த்தகமானது. கடந்த வாரத்தில் ஆரம்பத்தில் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்டு வர்த்தகமான நிலையில், புதன்கிழமை மீண்டும் குறைந்தபட்ச விலையைத் தொட்டு வர்த்தகமானது.

இந்தியாவில் மருந்துகளை அங்கீகரிக்கும் மத்திய அரசு நிறுவனத்துக்கு ரூ.9 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச் சாட்டுகளை அடுத்து பயோகான் பங்குகள் சரிவை சந்தித்திருக்கின்றன. மேலும், மத்திய போதைப் பொருள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.சி.ஓ) மருந்துக் கட்டுப்பாட்டாளர் எஸ் ஈஸ்வர ரெட்டி மற்றும் இணைத் துணைத் தலைவரும், தேசிய ஒழுங்குமுறை விவகாரங்களின் தலைவருமான எல்.பிரவீன் குமார் உட்பட ஐந்து பேரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.”

ஷேர்லக்: எல்.ஐ.சி பங்கு விலை       வீழ்ச்சியிலிருந்து 30% உயரும்!
பங்குத் தரகு நிறுவனம் கணிப்பு

ஸ்டார்ஹெல்த் அண்டு அலைடு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை மேலும் சரிந்திருக்கிறதே?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் ஸ்டார்ஹெல்த் அண்டு அலைடு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2.5% சரிந்து ரூ.595-க்கு வர்த்தகமானது. கடந்த ஒரு வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 1% வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில் இந்த பங்கு விலை 14% வரை சரிவை சந்தித்திருக்கிறது. இந்தப் பங்கானது தனது வெளியீட்டு விலையான ரூ.900-லிருந்து 34% வரை சரிவைச் சந்தித்துள்ளது. அதிகபட்ச விலையான ரூ.940-லிருந்து 375 வரை சரிவைச் சந்தித்துள்ளது.

மார்ச் காலாண்டு முடிவின்படி, முன்னனி முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இந்தப் பங்கில் 14.40% பங்கையும், அவரின் மனைவி ரேகா 3.11% பங்கையும் வைத்திருக்கிறார்கள்.”

கடந்த வாரத்தில் சந்தையின் போக்கு எப்படி இருந்தது?

“கடந்த வராம் புதன்கிழமை வர்த்தகத்தில் பங்குச் சந்தையானது தொடக்கத்தில் இருந்தே சரிந்தே காணப்பட்டது. வர்த்தகம் முடியும்போது சென்செக்ஸ் 709.54 புள்ளிகள் சரிந்து 51,822.53 புள்ளிகளிலும், நிஃப்டி 225.50 புள்ளிகள் வரை சரிந்து 15,413 என்கிற நிலையிலும் வர்த்தகமானது.

அன்றைய தினத்தில் ஏற்றத்தைச் சந்தித்த பங்குகளில் டாப் பங்குகளாக பி.பி.சி.எல், ஹீரோ மோட்டோகார்ப், டிவிஸ் லேப், டி.சி.எஸ் மற்றும் பவர்கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும், சரிவை சந்தித்த பங்குகளில் டாப் பங்குகளாக யு.பி.எல், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனத்தின் பங்குகளும் இருந்தன. குறியீடு களில் மெட்டல் குறியீடு 5% வரை சரிவை சந்தித்தது. நிஃப்டி ஆயில் அண்டு கேஸ் மற்றும் நிஃப்டி ரியாலிட்டி 2% வரை சரிந்தது. நிஃப்டி பேங்க், நிஃப்டி பிரைவேட் பேங்க், நிஃப்டி ஃபைனான்ஷியல் சர்வீசஸ், நிஃப்டி ஐ.டி, நிஃப்டி பார்மா, நிஃப்டி ஹெல்த்கேர் மற்றும் நிஃப்டி கன்ஸ்யூமர் டியூரபிள் ஆகிய குறியீடுகள் 1% வரை சரிந்தன.”

நிஃப்டி குறியீட்டின் இலக்கை முன்னணி பங்குத் தரகு குறைத் துள்ளதே?

“உலக நாடுகளின் நிதி நெருக்கடி, பொருளாதார மந்த நிலை, அமெரிக்காவில் மந்த நிலை பற்றிய அச்சம் உள்ளிட்ட பல காரணங்களைக் குறிப்பிட்டு பேங்க் ஆஃப் அமெரிக்கா நடப்பு ஆண்டின் இறுதியில் நிஃப்டி குறியீடு 14500 என்கிற நிலையில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே 16000 என்று குறிப் பிட்டிருந்த இலக்கை தற்போது குறைத்துக்கொண்டுள்ளது.”

ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி புதிய பங்கு வெளியிடுகிறதாமே?

“ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி நிறுவனம் புதிய பங்கு வெளியிடு (ஐ.பி.ஓ) வெளியிடுவதன் மூலம் ரூ.740 கோடி நிதியை முதலீட் டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடன் இந்த நிறுவனம் டி.ஆர்.ஹெச்.பி. ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.

புதிய பங்குகளை வெளியிடு வதன்மூலம் ரூ.370 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து இந்த நிறுவனம் திரட்டுகிறது’’ என்றவர், ‘‘சந்தை இப்போதி ருக்கும் நிலையில் இருந்து இன்னும்கூட நன்கு இறங்கலாம். நல்ல பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கிச் சேர்க்க முதலீட்டாளர்களுக்கு இது அருமையான வாய்ப்பு’’ என்று சொல்லிவிட்டு, மீட்டிங்குக்குப் புறப்பட்டார் ஷேர்லக்..!

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்ட் லாபங்கள்..!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்ட் லாபங்கள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, ஜூலை 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி தரியன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru