Published:Updated:

ஷேர்லக்: விற்பனை அதிகரிப்பு எதிரொலி... வேகமெடுக்கும் வாகனப் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: விற்பனை அதிகரிப்பு எதிரொலி... வேகமெடுக்கும் வாகனப் பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

முன்கூட்டியே சொன்ன படி, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஷேர்லக் நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். இதழுக்கான கடைசி பாரத்தின் பக்கங் களை வேகமாக ஓட்டியவர், ‘‘அடடே, பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரி யாமல் இருந்தது. நீர் அதைச் செய்து புண்ணியம் தேடிக் கொண்டீர். (பார்க்க, 78-ம் பக்கத்தில் உள்ள கட்டுரை!) மக்கள் மீது விகடனுக்கு இருக்கும் அக்கறையே அலாதிதான்’’ என்றபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார் ஷேர்லக்.

ஆட்டோ பங்குகள் மீண்டும் ஏற்றம் அடைய ஆரம்பித்திருக் கின்றனவே?

“கொரோனா தொற்று பரவல் பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரண மாகக் கடந்த 2021-ல் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் ஜூன் விற்பனை முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும்.

தேவை காரணமாக அனைத்து வகையான வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் நிலையில், அனைத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் விற்பனை டேட்டாக்களும் சிறப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகக் கடந்த ஜூன் 28-ம் தேதி வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் இண் டெக்ஸ் 1% வரை அதிகரித்து வர்த்தகமானது. அன்றைய வர்த்தகத்தில் டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 7% வரை அதிகரித்தது. மஹிந்திரா அண்டு மஹிந்திரா, அசோக் லேலாண்டு, டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி, பாரத் ஃபோர்ஜ் மற்றும் எம்.ஆர்.எஃப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை 1.5 - 3% வரை அதிகரித்தது.

எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், எய்ஷர் மோட் டார்ஸ், மாருதி சுஷூகி, போஸ், ஹீரோ மோட்டோ கார்ப், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அமரராஜா பேட்டரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின. நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் 1.25% வரை அதிகரித்து, 11,832 ஆக வர்த்தகமானது. ஜூன் 20-ம் தேதி வீழ்ச்சியில் இருந்து 10% வரை நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் அதிகரித்திருக்கிறது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தைகள் ஜூன் மாதத்தில் அதிக வீழ்ச்சியைச் சந்தித்தது ஏன்?

“இந்திய பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடு களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஜூன் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5% சரிவை சந்தித்தன. இது கடந்த 27 மாதங்களில் மிக அதிக இறக்கமாகும். ஏனெனில், சர்வதேச சந்தைகளின் செயல்பாடு மோச மாக இருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் அதிக அளவில் பங்குகளை விற்று இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். இருப்பினும், கடந்த வாரத்தின் இறுதி நாள்களில் இந்திய சந்தைகள் கச்சா எண்ணெய் விலைகள் தளர்த்தப்படுவதாலும், சீனாவில் கோவிட் தொற்று பரவலால் போடப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு நீக்கியதாலும் ஓரளவு ஏற்றம் கண்டன.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ) கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 28.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2.27 லட்சம் கோடி அளவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.”

எம்.டி.ஏ.ஆர் (MTAR) டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்கு விலைச்சரிவை சந்தித்திருக்கிறதே?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் இந்த நிறுவனப் பங்கு விலை 9% வரை சரிவை சந்தித்து, ரூ.1,223 ஆக வர்த்தகமாகின. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 13% வரை இந்தப் பங்கு விலை இறங்கியது. கடந்த மூன்று மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 8% வரை சரிவை பதிவு செய்திருக்கும் நிலையில், இந்த பங்கானது 30% வரை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.”

பெயின்ட் நிறுவனப் பங்குகளின் செயல்பாடு கடந்த வாரத்தில் எப்படி இருந்தது?

“ஷாலிமார் பெயின்ட்ஸ் (எஸ்.பி.எல்) பங்குகள் கடந்த வாரம் புதன்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் பி.எஸ்.இ-யில் 7% உயர்ந்து, ரூ.158.85-ஆக வர்த்தகமானது. கடந்த ஒரு வாரத்தில் 32% உயர்ந்தது. வியாழக்கிழமை மதியம் மேலும் 3% வரை விலை அதிகரித்து, ரூ.164-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் லாப வரம்பு அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பில் பங்கின் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் பெயின்ட் இண்டெக்ஸ் 2.3% வரை ஏற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கன்சாய் நெரோலக் மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 4% மற்றும் 1% வரை விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. இண்டிகோ பெயின்ட்ஸ், அக்ஜோ நோபிள் இந்தியா மற்றும் பெர்ஜர் பெயின்ட் ஆகிய பங்கு விலை 1 - 2% வரை விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.”

ஷேர்லக்: விற்பனை அதிகரிப்பு எதிரொலி... வேகமெடுக்கும் வாகனப் பங்குகள்..!

ஓரியன்ட் பெல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருப்பது பற்றி?

“கிரிசில் தரக்குறீயீட்டு நிறுவனம் ஓரியன்ட் பெல் நிறுவனத் துக்கு வழங்கியிருந்த ‘CRISIL A-/Stable/CRISIL A2+’. என்கிற தரக் குறியீட்டில் இருந்து ‘CRISIL A/Stable/CRISIL A1’ என்கிற தரக்குறியீட்டை வழங்கியதால், இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் 18% அதிகரித்து, ரூ.684-க்கு வர்த்தகமானது. கடந்த ஜூன் 2-ம் தேதி வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ.688-க்கு வர்த்தகமானது. கடந்த ஆறு மாதங் களில் இந்த பங்கானது சுமார் 100% ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.”

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுகிறதாமே?

“பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தன் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,500 கோடி மதிப்புள்ள பங்குகளைத் திரும்பப் பெறும் ‘பைபேக்’ திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்மூலம் திரும்பப் பெறப்படும் பங்கு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.4,600-ஐ தர இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது ஜூன் 27-ம் தேதி வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3.7% வரை அதிகரித்தது. ஆனால், ஜூன் 30-ம் தேதி மதிய வர்த்தகத்தின்போது 4% வரை சரிந்து, ரூ.3,717 என்கிற விலையில் வர்த்தகமானது.”

ஸொமேட்டோ பங்கின் விலை மிகப் பெரிய சரிவை சந்தித்திருக் கிறதே?

“கடந்த ஜூன் 24-ம் தேதி ஸொமேட்டோ நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடந்தது. அதில், பிளிங்கிட் காமர்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டத் துக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது. அதன்படி கடந்த ஜூன் 28-ம் தேதி ரூ.4,447 கோடி மதிப்புள்ள பிளிங்கிட் பங்குகளை ஸொமேட்டோ நிறுவனம் கையகப்படுத்தியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் மளமளவென சரிவை சந்திக்க ஆரம்பித்தன. கடந்த வாரத்தின் செவ்வாய் மற்றும் புதன்கிழமை வர்த்தகத்தில் மொத்தம் 15% வரை பங்கு விலை சரிந்து ரூ.60 என்ற விலைக்கு வர்த்தக மானது. இந்தப் பங்கின் அதிக பட்ச விலையான ரூ.169-ல் இருந்து 64% வரை சரிவை சந்தித்துள்ளது. வியாழக் கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை மேலும் சரிந்து, ரூ.55 என்கிற அளவில் வர்த்தகமானது.”

எம்.சி.எக்ஸ் பங்குவிலை அதிகரிக்க என்ன காரணம்?

“செபி அமைப்பு வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட் டாளர்களுக்கு (FPI) கமாடிட்டி டெரிவேடிவ்களில் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கியதை அடுத்து வியாழக்கிழமை மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) பங்குகள் கிட்டத்தட்ட 4% அதிகரித்தது. அன்றைய வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் 3.82% விலை அதிகரித்து, ரூ.1,324-க்கு வர்த்தகமானது.”

அலைய்டு பிளெண்டர்ஸ் மற்றும் டிஸ்டில்லர்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியிடுகிறதாமே?

“புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ) மூலம் ரூ.2,000 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட, அலைய்டு பிளெண்டர்ஸ் மற்றும் டிஸ்டில்லர்ஸ் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளையும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.500 கோடி மற்றும் ரூ.250 கோடி வரை விற்பனை செய்ய இருக்கிறது’’ என்றவர், ‘‘இ.டி.எஃப் & இண்டெக் ஃபண்ட் முதலீடுகள் பற்றிக் கூட்டம் நடத்தப்போகிறீரா? அருமை, அருமை! இந்தக் கூட்டத்தில் வாசகர்கள் பலரும் கலந்துகொண்டு இந்த முதலீடுகளின் சிறப்பம்சங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

ஏ.கே.நாராயண்
ஏ.கே.நாராயண்
ஜீவன் கோஷி தரியன்
ஜீவன் கோஷி தரியன்

செலவு குறைந்த இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்ட் முதலீடுகள்..!’

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்ட் லாபங்கள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, ஜூலை 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இ.டி.எஃப் என்கிற எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட், குறியீட்டை பின்பற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் கிட்டத்தட்ட பங்குச் சந்தையின் வருமானத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இவற்றில் செலவு விகிதம் மிகக் குறை வாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி தரியன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். கூட்டத்தில் கலந்துகொள்வதற்குப் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru