Published:Updated:

ஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்த நிறுவனப் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்த நிறுவனப் பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஏற்கெனவே சொன்ன படி வியாழக்கிழமை மாலை சரியாக 4 மணிக்கு நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். ‘‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மம் ஜெயிக்கும். மக்கள் பேராசைக்கு அடிமையாகும் போது சூது ஜெயித்துவிடுகிறது. அவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது’’ என்று பேசியவருக்கு பிளாஸ்க்கில் தயாராக இருந்த இஞ்ஜி டீயை கப்பில் ஊற்றித் தர, அதைப் பருகியபடியே நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த வாரம் புதன் அன்று வர்த்தகத்தில் 2% வரை அதிகரித்து, ரூ.440 என்கிற விலையில் வர்த்தகமானது. அதே போல, டாடா மோட் டார்ஸ் டி.வி.ஆர் பங்கு விலையும் 3% வரை அதிகரித்து ரூ.218-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியிடுவதன் (ஐ.பி.ஓ) மூலம் நிதி திரட்டத் திட்டமிட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளியான தால், இந்த நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருக்கிறது.

மேலும், மெட்டல் உட்பட சில மூலப்பொருள்களின் விலை குறைந்ததும் இந்த நிறுவனப் பங்கின் விலை அதிகரிக்கக் காரணம் ஆகும். கடந்த ஐந்து நாள் வர்த்தகத்தில் இந்த நிறுவனப் பங்கு விலை 7% வரை அதிக ரித்துள்ளது. இருப்பினும் நடப்பு ஆண்டின் இதுவரை 11% வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல்வேறு தரகு நிறுவனங்கள் இந்த பங்கை வாங்கலாம் என கணித்திருக்கின்றன. இலக்கு விலை ரூ.500 ஆகும்.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நல்ல மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறதே... ஏன்?

“கிரெடிட் சூஸ் பங்குத் தரகு நிறுவனம் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ‘மிகச் சிறந்த’ மதிப்பீட்டை வழங்கி 12 மாதங்களில் இந்த நிறுவனப் பங்கு இலக்கு விலையை ரூ.600-ஆக நிர்ணயம் செய்தது. இதைத் தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் இதன் பங்கு விலை 11% வரை அதிகரித்து என்.எஸ்.இ சந்தையில் ரூ.530.20-க்கு வர்த்தகமானது.

கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்த நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட்டபோது பங்கு விலை ரூ.900. அந்த விலையில் இருந்து தற்போது 42% வரை சரிந்து வர்த்தக மாகி வருகிறது. இந்நிலையில், பங்குத் தரகு நிறுவனம் இலக்கு விலையை அதிகப் படுத்தியிருப்பது முதலீட் டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக் கிறது. கடந்த வாரம் வியாழன் காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரூ.576.25 என்கிற விலையில் வர்த்தகமானது.”

அலுவாலியா கான்ட்ராக்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகத்தில் 12% வரை அதிகரித்து, ரூ.465.50-க்கு வர்த்தகமானது. ஏனெனில், இந்த நிறுவனம் பெங்களூருவில் உள்ள அமிட்டி கேம்பஸ் கட்டுமானத்துக்காக ரூ.150 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டரை ரிட்னந்த் சால்வேட் எஜுகேஷன் ஃபவுண்டேஷனிடமிருந்து பெற்றிருக்கிறது. இந்தத் தகவல் வெளியானதும் பங்கு விலை அதிகரித்து வர்த்தகமானது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை இந்த நிறுவனம் ரூ.863 கோடி மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றிருக்கிறது. கடந்த வாரம் வியாழன் அன்று வர்த்தகத்தின்போது இந்த நிறுவனப் பங்கு விலை இறக்கத்தில் ரூ.438 என்கிற விலையில் வர்த்தகமானது.”

யூரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனப் பங்கு விலை அதிகரித்தது எதனால்..?

“யூரேகா ஃபோர்ப்ஸின் பங்கு விலை கடந்த ஜூலை 12 அன்று காலை வர்த்தகத்தில் 5.1% வரை விலை அதிகரித்து, ரூ.389.60-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனம் அதன் புதிய நிர்வாகத் தலைவராக ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிக் போட்டாவை வருகிற ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமித்ததை உறுதிப் படுத்தியது. இதன் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்து வர்த்தகமானது. வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது இதன் பங்கு விலை ரூ.401.60 என்கிற விலையில் வர்த்தகமானது.”

கடந்த ஜூனில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்த நிறுவனப் பங்குகள் என்னென்ன?

“கடந்த ஜூனில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்த நிறுவனப் பங்குகள், விற்ற பங்குகள் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. வேதாந்தா, பிரமல் என்டர்பிரைசஸ், ஐ.ஆர்.சி.டிசி, ஹேவல்ஸ் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ், மாரிகோ, டெக் மஹிந்திரா, கோத்ரேஜ் கன்ஸ்யூமர், இன்டர் குளோபல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய மிகப் பெரிய நிறுவனங்களில் (லார்ஜ்கேப்) ஃபண்ட் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்துள்ளன. அதே நேரத்தில், எல்.ஐ.சி, டி.எல்.எஃப், எம்பசிஸ், எல்&டி இன்ஃபோடெக், ஸொமேட்டோ, ஹிந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ், டாடா ஸ்டீல், அம்புஜா சிமென்ட்ஸ், மாக்ரோடெக் டெவலப்பர்ஸ் ஆகிய லார்ஜ்கேப் பங்குகளை அதிக எண்ணிக்கையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்றுள்ளன.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி, டாடா கம்யூனிகேஷன்ஸ், இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், பாடா இந்தியா, மதர்சன் சுமி வையரிங், பெட்ரோநெட் எல்.என்.ஜி. பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ், லாரஸ் லேப் ஆகிய மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதே சமயம், சன் டிவி, ஆயில் இந்தியா, எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், ஜி.எம்.ஆர் இன்ஃப்ரா, வோடா ஃபோன் ஐடியா, பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஆகிய மிட்கேப் பங்குகளை அதிகம் விற்றுள்ளன.

மிர்சா இன்டர்நேஷனல், டாடா காபி, ஈதோஸ் (Ethos), அனுபம் ரசாயன் இந்தியா, நஸரா டெக்னாலஜிஸ், ரெயின் இண்டஸ்ட்ரீஸ், சஃபரி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா, சஃபையர் ஃபுட்ஸ் இந்தியா உள்ளிட்ட ஸ்மால்கேப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய் துள்ளன. அதேநேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவ னங்கள், ஆர்.பி.எல் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ், சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன், மாஸ்டெக், கிரிவ்ஸ் காட்டன், அல்கைல் அமைன்ஸ் கெமிக்கல் இந்தியா சிமென்ட்ஸ், ஐ.ஐ. எஃப்.எல் வெல்த் மேனேஜ் மென்ட், குஜராத் நர்மதா வேலி ஃபெர்டி லைசர்ஸ் & கெமிக்கல்ஸ் ஆகிய ஸ்மால் கேப் பங்குகளை அதிகமாக விற்பனை செய்துள்ளன.”

ஹெச்.எஃப்.சி.எல் நிறுவனப் பங்கு விலை திடீரென உயர்ந்து ஆச்சர்யம் தந்துள்ளதே..!

“ஹெச்.எஃப்.சி.எல், தொலைத்தொடர்பு சாத னங்கள், ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் மற்றும் பவர் சிஸ்டம்களைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம். இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனம் ஒன்றிடமிருந்து ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) நெட்வொர்க் மற்றும் பல்வேறு தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள நீண்ட தூர ஃபைபர் நெட்வொர்க்குக்கான ரூ.59 கோடி மதிப்பிலான ஆர்டர்களை இந்த நிறுவனம் பெற்றிருப்பதாகத் தெரிவித்து உள்ளது. இந்தத் தகவல் வெளி யான பிறகு, இந்த நிறுவனப் பங்கு விலை ஜூலை 12-ம் தேதி வர்த்தகத்தில் 6% வரை அதிகரித்து, ரூ.66.30-க்கு வர்த்தகமானது.”

ஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்த நிறுவனப் பங்குகள்..!

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அதிக டிவிடெண்ட் வழங்குகிறதாமே?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், தனது முதலீட் டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இந்த நிறுவனம் ரூ.21-ஐ பங்கு முதலீட்டாளர் களுக்கு வழங்குகிறது. ஜூலை 21-ம் தேதியை டிவிடெண்ட் வழங்கும் தேதியாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. டிவிடெண்ட் வழங்குவதால், ரூ.8,873 கோடி இந்த நிறுவனத்துக்கு செலவாகும் என நிறுவனத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக, அன்றைய வர்த்தகத்தில் பங்கு விலை 1.44% அதிகரித்து, ரூ.271.85-ஆக வர்த்தகமானது. அனில் அகர்வால் தலைமை யிலான வேதாந்தா நிறுவனத்துக்கு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் 64.9 % பங்குகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் இந்திய அரசு 29.5% பங்குகளை வைத்து உள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5.47% அதிகரித்து, ரூ.286.25 என்கிற விலையில் வர்த்தகமானது.”

கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறும் திட்டம் குறித்து..?

“கடந்த ஆறு மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 12% வரை சரிந்துள்ள நிலையில், கேர் ரேட்டிங்ஸ் நிறுவனப் பங்கு விலை கடந்த ஆறு மாதத்தில் 27% வரை சரிந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 13-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 10% வரை ஏற்றத்தை சந்தித்து, ரூ.457.15-க்கு வர்த்தகமானது. அதற்குக் காரணம், இந்த நிறுவனம் அன்றைய தினத்தில் தனது முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி, இந்த நிறுவனம் தன் முதலீட்டாளர்களிடம் இருந்து ஜூலை 20-ம் தேதி பங்குகளை திரும்பப் பெறுகிறது.”

சுமேதா ஃபிஸ்கல் சர்வீசஸ் நிறுவனப் பங்கு விலை ஒரே வருடத்தில் மிக அதிக வருமானத்தை வழங்கியிருக்கிறதே?

‘‘முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களுள் ஒன்றான சுமேதா ஃபிஸ்கல் சர்வீசஸ் நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 292.95% வருமானத்தை, அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக் கிறது. இந்த நிறுவனம் கார்ப்பரேட் ஃபை னான்ஸ், ஈக்விட்டி, கமாடிட்டி, இன்ஷூ ரன்ஸ், வெல்த் அட்வைஸரி, போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட், பர்சனல் ஃபைனான்ஸ், கரன்சி ஃப்யூச்சர்ஸ், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் இன்ஸ்டிடியூஷனல் புரோக்கிங் சர்வீசஸ் வரையிலான நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. 2021-ம் ஆண்டின் ஜூலை 13-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரூ.32.65-ஆக இருந்தது. கடந்த ஜூலை 13-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு ரூ.128.30-ஆக வர்த்தகமானது. அன்றைய வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது ரூ.133.50 என்ற புதிய உச்சத்தையும் பதிவு செய்தது. ஆனால், ஜூலை 14-ம் தேதி மதிய நேர வர்த்தகத்தில் பங்கு விலை 4.5% வரை சரிந்து, ரூ.122.60-க்கு வர்த்தகமானது.’’

தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதே..?

“ஃபோர்டீஸ் ஹெல்த்கேர் தொடர்பான வழக்கு தொடர் பாக செபி விதித்த அபராதத்தில் 50% தொகையை ஆறு வாரங் களுக்குள் டெபாசிட் செய்யுமாறு தொழிலதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்குக்கு செக்யூரிட்டீஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, ஃபோர்டீஸ் ஹெல்த் கேரின் விளம்பரதாரர்களான ஷிவிந்தர் மோகன் சிங் மற்றும் அவரின் சகோதரர் மல்விந்தர் மோகன் சிங் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி செபி அபராதம் விதித்தது.”

ஃபண்ட் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே?

“ஜூன் காலாண்டில் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, இந்தக் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட் டாளர்கள் 51 லட்சம் புதிய கணக்குகளைத் தொடங்கியிருக் கிறார்கள். இதற்கு முந்தைய மார்ச் காலாண்டில் 93 லட்சம் கணக்குகள் தொடங்கப் பட்டன. இதன் காரணமாக மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 13.46 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் 3.2 கோடி புதிய ஃபண்ட் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக ஆம்ஃபி தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றம், ரஷ்யா - உக்ரைன் போர், பணவீக்கம் அதிகரிப்பது, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கு நிலையற்றதாக இருக் கிறது. இதன் காரணமாக நேரடியாக பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். அதனால் மியூச்சுவல் ஃபண்ட் வாயிலாக முதலீட்டை அதிகப்படுத்த ஆரம்பித்திருக் கிறார்கள்” என்றவர் வீட்டுக்குப் புறப்பட்டார்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்
எஸ்.குருராஜ்
எஸ்.குருராஜ்

முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்..!’ என்ற நிகழ்ச்சி சென்னையில் ஜூலை 23, சனிக்கிழமையும் (6pm – 8.30pm), காஞ்சிபுரத்தில் ஜூலை 24, ஞாயிற்றுக் கிழமையும் (10 am – 1 pm) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 4.7%... நொமுரா கணிப்பு!

உலகம் முழுவதும் அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக, பொருளாதார மந்தநிலை பற்றிய கவலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் தங்களது பொருளாதார வளர்ச்சி அளவீட்டைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், நொமுரா நிறுவனம் இந்தியாவின் 2023 ஜி.டி.பி வளர்ச்சியைக் குறைத்து கணித்துள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 5.4% இருக்கும் என முன்பு கணித்திருந்த நிலையில், தற்போது 4.7 சதவிகிதமாகக் குறைத்துள்ளது நொமுரா. தவிர, அடுத்த ஆண்டிலும் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. அதிக பணவீக்கம், பணவியல் கொள்கை இறுக்கம், தனியார் தொழில் விரிவாக்கத்தில் மந்தநிலை, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய வளர்ச்சி மந்தநிலை ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும் முக்கியமான காரணிகளாக விளங்குகின்றன எனவும் நொமுரா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கச்சா மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, மே மாதத்தில் 7.04 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம், ஜூன் மாதத்தில் வருடாந்தர அடிப்படையில் 7.01 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.