Published:Updated:

ஷேர்லக்: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... விலை ஏறும் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... விலை ஏறும் பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வழக்கம் போல பரபரப்புடன் வந்து சேர்ந்த ஷேர்லக், ‘‘இன்றும் சந்தை ஏற்றத்திலேயே முடிந்திருக்கிறது. சந்தையுடன் தொடர்ந்து பயணிக்கும் முதலீட்டாளர் கள் கடந்த சில மாதங்களில் இழந்த பணத்தை மீண்டும் லாபமாகப் பெற்றிருப்பார்கள். இதற்குத்தான் சொல்கிறேன், நாம் தொடர்ந்து சந்தையுடன் இருக்க வேண்டும்’’ என்றபடி சீட்டில் அமர்ந்து நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தின் பங்குகளை ராகேஷ் ஜுன் ஜுன்வாலா விற்றிருக்கிறாராமே?

“ஜூன் காலாண்டு இறுதி, டாடா மோட்டார்ஸ் நிறு வனத்தில் முன்னணி முதலீட் டாளர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலாவின் முதலீடு 1.09 சதவிகிதமாக இருந்தது. இது அதற்கு முந்தைய மார்ச் காலாண்டில் 1.18 சதவிகிதமாக காணப்பட்டது. அவர் டாடா மோட்டார்ஸ் பங்குகளில் 0.09 சதவிகிதத்தைக் குறைத் திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரண மாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஜூலை 19-ம் தேதி வர்த்தகத்தில் இறங்கி வர்த்தகமானது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதன் பங்கு விலை 45% வரை ஏற்றத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால், நடப்பு ஆண்டில் இதன் பங்கு விலை 11% வரை சரிவை சந்தித்திருக்கிறது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஓப்ராய் ரியாலிட்டி நிறுவனப் பங்கை வாங்க பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்திருப்பது ஆச்சர்யமாக இருக் கிறதே...!

“கடந்த ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.403 கோடியாக அதிகரித்துள் ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.80.63 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு முடிவைக் காரணம் காட்டி, ஹெச்.டி. எஃப்.சி செக்யூரிட்டீஸ் பங்குத் தரகு நிறுவனம் இந்த பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.1,118-ஆக நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த ஜுலை 20-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 3% அதிகரித்து ரூ.882-ஆக வர்த்தகமான நிலையில், 12 மாதங்களில் இதன் பங்கு விலை 28% வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பங்குத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல, மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனமும் இந்தப் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.1,100-ஆக நிர்ணயம் செய்துள்ளது.

அதே சமயம், ஜெஃப்ரிஸ் தரகு நிறுவனம் இதை தொடர்ந்து வைத்திருக்குபடி (Hold) பரிந்துரை செய்திருக்கிறது. இலக்கு விலையை ரூ.860-ஆக நிர்ணயம் செய்துள்ளது. மார்கன் ஸ்டான்லியும் ‘ஈக்வெல் வெயிட்டேஜ்’ மதிப்பீட்டை வழங்கி, இதன் இலக்கு விலையை ரூ.885-ஆக நிர்ணயம் செய்துள்ளது. இந்தப் பங்கின் விலை தற்போது ரூ.880 என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.”

நியூக்ளியஸ் சாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனப் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடன் செயல்பாடுகள் தொடர்பாக வியட்நாம் பி.வி.காம்பேங்க் (PVcomBank) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக இந்த நிறுவனம் கூறியதை அடுத்து, இதன் பங்கு விலை ஜூலை 19 அன்று காலை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 9% வரை உயர்ந்து ரூ.444 என்கிற விலையில் வர்த்தகமானது.

பி.வி.காம்பேங்க் என்பது பெட்ரோவியட்நாம் ஃபைனாஸ் கார்ப், வெஸ்டர்ன் பேங்க் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவை வியட்நாமில் இணைந்த பிறகு உருவாக்கப்பட்ட ஒரு வங்கி நிறுவன மாகும். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டுள்ளது. நியூக்ளியஸ் சாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை நடப்பு ஆண்டில் இது வரை 21% வரை சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 54% ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது.”

வேதாந்தா நிறுவனம் இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் அறிவித்திருக்கிறதே?

“இந்த நிறுவனம் இரண்டாவது இடைக்கால ஈவுத் தொகையை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு கடந்த ஜூலை 20-ம் தேதி அன்று காலை வர்த்தகத்தில் இந்த நிறுவன பங்கு விலை 5% வரை அதிகரித்து, ரூ. 251-ஆக வர்த்தகமானது. வியாழக்கிழமை காலை ரூ.254 ஆக அதிகரித்தது. கச்சா எண்ணெய் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட கூடுதல் கலால் வரியைக் குறைக்கும் அரசின் முடிவும் இந்தப் பங்கு விலை அதிகரிக்க ஒரு காரணமாக இருந்தது.

இந்த நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.19.5-ஐ வழங்குகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்துக்கு ரூ.7,250 கோடி செலவாகிறது. இதுவரை இந்த நிறுவனம் 2022-23-ம் நிதி ஆண்டின் மொத்தம் ரூ.19,000 கோடியைத் தன் முதலீட்டாளர்களுக்கு டிவிடென்டாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.’’

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம் என்று சொல்லுங்கள்...

“கடந்த ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கி ணைந்த நிகர லாபம் 13.89% அதிகரித்து, ரூ.2,391 ஆக உயர்ந்துள்ளது. இது பங்குச் சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாகும். அதே போல, தனித்த நிகர லாபம் 11% அதிகரித்து ரூ.2,289 கோடியாக உள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை சிறிது அதிகரித்து, ரூ.2,592 என்கிற நிலையில் வர்த்தகமானது. வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரூ.2,621 ஆக அதிகரித்து வர்த்தகமானது.

உலகளாவிய பங்குத் தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ இந்தப் பங்குக்கு மிகச்சி றந்த மதிப்பீட்டை வழங்கி, இதன் இலக்கு விலையை ரூ.2,660-ஆக நிர்ணயம் செய்துள்ளது. சிட்டி பங்கு தரகு நிறுவனம் முதலீட்டாளர்களை இந்தப் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப்பதுடன், இந்த பங்குக்கான இலக்கு விலையை ரூ.2,920-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால், எந்தெந்த துறைகள் பாதிக்கப்படையும் என்று சொல்ல முடியுமா?

“அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை காலை ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.79.95 என்கிற நிலையில் காணப் பட்டது.

கடந்த ஜூலை 19-ம் தேதி ரூ.80-ஐ கடந்து காணப்பட்டது. இதன் காரணமாகத் தகவல் தொழில்நுட்பம், பார்மா மற்றும் ஜவுளித் தொழில்கள் நிகர ஏற்றுமதியாளர்களாக இருப்பதால் பயனடையலாம். எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் விமானப் போக்கு வரத்து ஆகிய துறை சார்ந்த நிறுவனங்கள் ரூபாய் மதிப் பின் வீழ்ச்சியில் பாதிப் படையக்கூடும்.

இதன் அடிப்படையில் இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், ட்ரிடென்ட் (Trident), சன் பார்மா, டி.சி.எஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றமடைய வாய்ப்பு கள் இருப்பதாக பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவிக் கின்றன.

அதே சமயம், பி.பி.சி.எல், ஹெச்.பி.சி.எல், ஐ.ஓ.சி, இன்டர் குளோப் ஏவியேஷன் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி யைச் சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் முக்கியமான பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.”

வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் பல நிறுவனப் பங்குகளின் இலக்கு விலையை குறைத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறதே?

‘‘ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், பணவீக்க உயர்வு , பருவமழை, வட்டி விகித உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் வர்த்தக மாகி வருகின்றன. இந்த நிலையில், வெளிநாட்டுப் பங்குத் தரகு நிறுவனங்கள் பல நிறுவனங்களின் பங்குக்கு நிர்ணயம் செய்திருந்த இலக்கு விலையைக் குறைத்துள்ளன.

முதலாவதாக, ஜெஃப்ரிஸ் பங்குத் தரகு நிறுவனம் ஐ.சி. ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.700 ஆக குறைத் துள்ளது.

நோமுரா பங்கு தரகு நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.1,690 ஆக குறைத்துள்ளது.

ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனத்தின் இலக்கு விலையை சிட்டி பங்கு தரகு நிறுவனம் ரூ.590-லிருந்து ரூ.45-ஆக குறைத்துள்ளது. அதே போல, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் இலக்கு விலையையும் இந்தப் பங்குத் தரகு நிறுவனம் ரூ.330-லிருந்து ரூ.255-ஆக குறைத்துள்ளது.

கிரெடிட் சூஸ் பங்குத் தரகு நிறுவனம் ஏ.சி.சி நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.2,450-லிருந்து ரூ.2,000-ஆக குறைத்துள்ளது. அதே போல, டி.சி.எஸ் நிறுவனத்தின் இலக்கு விலையையும் இந்த பங்குத் தரகு நிறுவனம் ரூ.4,350-லிருந்து ரூ.3,275-ஆக குறைத்துள்ளது.

ஓப்ராய் ரியாலிட்டி நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையை சி.எல்.எஸ்.ஏ தரகு நிறுவனம் ரூ.1,005-லிருந்து ரூ.925-ஆகக் குறைத்துள்ளது.’’

ஷேர்லக்: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... விலை ஏறும் பங்குகள்..!

நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் அதிகரித்தது ஏன்?

‘‘ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதால், அந்தத் துறை சார்ந்த பங்குகள் மட்டுமல்லாமல், நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் இதுவரை இல்லாத அளவான ஏற்றத்தை சந்தித்துள்ளது. ஜூலை 18-ம் தேதி வர்த்தகத்தில் ஆட்டோ இண்டெக்ஸ் 0.76% அதிகரித்து, 12,455.85-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு மாதங் களில் நிஃப்டி 50 இண் டெக்ஸ் 4% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், ஆட்டோ இண்டெக்ஸ் 35% அதிகரித் துள்ளது. இந்தக் கால கட்டத்தில் மற்ற துறை களைக்காட்டிலும் ஆட்டோமொபைல் துறை சிறப்பான செயல்பாடு களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.’’

ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘விமான எரிபொருளுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் 2 சதவிகிதத்துக்கும் மேலாக குறைத்ததால், கடந்த ஜூலை 18-ம் தேதி வர்த்தகத்தில் விமானப் பங்குகளுக்கு தேவை அதிகரித்துக் காணப்பட்டது.

அன்றைய பி.எஸ்.இ சந்தை வர்த்தகத்தில் இன்டர்குளோப் ஏவியேஷன் 1% அதிகரித்து ரூ.1,800.50-க்கு வர்த்தகமானது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலை 3.7% வரை அதிகரித்து ரூ.39.55-க்கு வர்த்தகமானது.

விமான எரிபொருளின் விலையானது, சர்வதேச எண்ணெய் விலை அடிப்படையில் ஒவ்வொரு மாதமுமும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது. விமான எரிபொருள் விலையானது கிலோ லிட்டருக்கு ரூ.3,084 அல்லது 2.2% குறைக்கப்பட்டு ரூ.138,147 -ஆக தற்போது உள்ளது. விமான எரிபொருளானது நடப்பு ஆண்டில் இரண்டாவது முறை குறைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.’’

குயிக் ஹீல் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்குமா?

‘‘முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளைத் திரும்பப் பெறும் (buyback) திட்டத்தை குயிக் ஹீல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிசீலிக்கும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கடந்த ஜூலை 18-ம் தேதி பங்குச் சந்தை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 16.48% வரை அதிகரித்து, ரூ.194.40-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனம் இதற்கு முன்பாக 2021 மற்றும் 2019-ல் முதலீட்டாளர் களிடம் இருந்து பங்குகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது. இப்போது மீண்டும் திரும்பப் பெற்றால், அது மூன்றாவது முறையாக இருக்கும்.’’

பார்தி ஏர்டெல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துக்கு பங்குகளை ஒதுக்கி யிருக்கிறதாமே..?

‘‘கூகுள் நிறுவனத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் 7.11 கோடி பங்குகளை ஒதுக்கு வதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. இதை அடுத்து, ஜூலை 15 அன்று, பார்தி ஏர்டெல் பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்து, ரூ.653-க்கு வர்த்தக மாகின.

ஏர்டெல் நிறுவனத்தின் ‘முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கான இயக்குநர்களின் சிறப்புக் குழு’ 7,11,76,839 பங்குகளை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்குகள் ரூ.734 என்கிற விலையில் கூகுள் நிறுவ னத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.678.35-க்கு வர்த்தகமானது’’ என்றவர் புறப்படுவதற்குமுன், தனது வாட்ச்சைப் பார்த்தார்.

‘‘ஐரோப்பிய சென்ட்ரல் பேங்க் 50 அடிப்படைப் புள்ளி களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கிறது’’ என கடைசித் தகவலைச் சொல்லி விட்டுக் கிளம்பினார்!

ஏ.கே.நாராயண்
ஏ.கே.நாராயண்
ஜீவன் கோஷி
ஜீவன் கோஷி

‘மியூச்சுவல் ஃபண்ட் மூன்று மந்திரங்கள் SIP, STP, SWP’

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூன்று மந்திரங்கள் SIP, STP, SWP’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, ஆகஸ்ட் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில் நிதி ஆலோசகர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பேசுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru