Published:Updated:

ஷேர்லக்: பங்கு முதலீடு... வெளிநாட்டினரை பின்னுக்குத் தள்ளிய உள்நாட்டு முதலீட்டாளர்கள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: பங்கு முதலீடு... வெளிநாட்டினரை பின்னுக்குத் தள்ளிய உள்நாட்டு முதலீட்டாளர்கள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஏற்கெனவே சொன்னபடி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சரியாக வந்து சேர்ந்தார் ஷேர்லக். “பேராசை பெருநஷ்டம். அதிக வருமானம் கிடைக்கும் என யார் சொன்னாலும், அவர்களால் எப்படித் தர முடியும், என்ன பிசினஸ் செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளாமல் பணம் போட்டுவிட்டு, பிற்பாடு வருத்தப்படுவதில் என்ன பயன்’’ என்றவருக்கு, சூடான சுக்கு காபியை கப்பில் ஊற்றித் தர, அதை வாங்கிப் பருகியபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

தொடர்ந்து ஐந்து நாள்களாக உயர்ந்த பங்குச் சந்தை வியாழக் கிழமை அன்று கொஞ்சம் இறங்கி வர்த்தகமாகி முடிந்திருக்கிறதே...!

“கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக இருந்தது. இன்று வியாழன் அன்றுகூட காலை வர்த்தகத் தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து, 58700 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. அதே போல, நிஃப்டியும் 50 புள்ளிகள் வரை அதிகரித்து, 17500 புள்ளிகள் வரை தொட்டு வர்த்தகமானது.

இந்தியாவின் பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்து வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. மீண்டும் 0.50% வரை உயர்த்தலாம் என எதிர் பார்க்கப்படுவதால், இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன. புளூம்பர்க் ஆய்வு செய்த 27 பொருளாதார வல்லுநர்களில் 13 பேர் இந்திய ரிசர்வ் வங்கி 0.50% மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 51 புள்ளிகளும், நிஃப்டி 6 புள்ளிகளும் இறங்கி வர்த்தகம் ஆகி முடிந்தது. இன்றைக்கு மதியம் சந்தைப் புள்ளிகளும் இன்னும் அதிக மாக இறங்கி வர்த்தகமாகின. மதியத்துக்குப் பிறகு புள்ளிகள் மீண்டும் முன்னேறியது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகளை ஊபர் டெக்னாலஜிஸ் நிறுவனம் விற்கிறதாமே?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஸொமேட்டோ நிறுவனப் பங்கு விலை 7% வரை சரிந்து வர்த்தகமானது. ஏனெனில், ஊபர் டெக்னால ஜிஸ் நிறுவனம் ஸொமேட் டோ நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 7.8% முதலீட்டை அதாவது, மொத்தம் 612 மில்லியன் பங்குகளையும் விற்பனை செய்யப்போவதாக அறிவித்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3,087 கோடி.

ஊபர் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஸொமேட்டோ பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ.48 - 54 என்கிற விலையில் விற்பனை செய்கிறது. வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் ஸொமேட்டோ பங்கு விலை உயர்ந்தது. அன்றைய தினம் வர்த்தக முடிவில் ரூ.57.85-ஆக வர்த்தகமாகி முடிந்தது.”

இ-கிளெர்க்ஸ் சர்வீசஸ் நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்க முடிவு செய்திருக்கிறதாமே?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்த நிறுவனத் தின் பங்கின் விலை, ஒரே நாளில் பி.எஸ்.இ சந்தையில் 14% வரை அதிகரித்து, ரூ.2,505-க்கு வர்த்தகமானது. ஆகஸ்ட் 9-ம் தேதி நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் போனஸ் பங்குகளை வழங்குவது தொடர்பான முடிவு எடுக்கப்பட இருப்பதே இதற்குக் காரணம்.’’

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரிக்க என்ன காரணம்..?

“ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான அஜய் சிங் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 59.40% பங்குகளை வைத்துள்ளனர். இவர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் ஓரளவு பங்குகளை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்கு விலை வியாழன் அன்று 6.09% வரை இறங்கி, ரூ.47.05-ஆக முடிந்தது. கடந்த மூன்று வர்த்தகத் தினங்களில் இந்தப் பங்கு விலை 20 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்து, பிற்பாடு குறையத் தொடங்கியிருக்கிறது.”

கடந்த ஜூன் காலாண்டில் பங்கு முதலீட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்திய முதலீட்டாளர்கள் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்களே?

“இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்தியப் பங்குச் சந்தையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர் களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இறக்கம் கண்டிருக்கிறது.

உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் என்பதில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பென்ஷன் ஃபண்டுகள் ஆகியவை அடங்கும். மேலும், சிறு முதலீட்டாளர்கள், பெரு முதலீட்டாளர்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த முதலீடு 2022 ஜூன் 30-ம் தேதி 23.53% உயர்ந்துள்ளது. இது 2022 மார்ச் 31-ம் தேதி ரூ.23.34 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஜூன் காலாண்டில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நிகர பங்கு முதலீடு ரூ.1.28 லட்சம் கோடியாக உள்ளது. இதே காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர பங்கு விற்பனை ரூ.1.07 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியப் பங்குச் சந்தையில் 2022 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 20.16 சதவிகிதமாக இருந்தது. இது 2022 ஜூன் 30 நிலவரப்படி, 19.20 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இந்தியப் பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் பங்களிப்பு 2022 ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, 7.95 சதவிகிதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகமாகும். தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக பங்களிப்பு அதிகரித்து வந்துள்ளது.

காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு முதலீடு 2022 மார்ச் 31-ல் 5 சதவிகிதமாக இருந்தது. இது 2022 ஜூன் 30-ல் 5.15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எல்.ஐ.சி-யின் பங்கு முதலீட்டு பங்களிப்பு இந்தியப் பங்குச் சந்தையில் இதே காலகட்டத்தில் 3.8 சதவிகிதத்தில் இருந்து 3.92 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

காப்பீடு நிறுவனங்களின் மொத்தப் பங்கு முதலீட்டில் எல்.ஐ.சி-யின் பங்களிப்பு 76 சதவிகிதமாக உள்ளது. இதன் மதிப்பு ரூ.9.30 லட்சம் கோடி ஆகும். கிட்டத்தட்ட 285 நிறுவனப் பங்குகளில் சுமார் 1 சதவிகிதத்துக்குமேல் முதலீடு செய்திருக்கிறது.

இந்தியப் பங்குச் சந்தை மிகவும் வீழ்ச்சி அடையாமல் இருக்கவும் இப்போது ஏற்றம் காணவும் உள்நாட்டு நிறுவனங் களின் பங்கு முதலீடுதான் காரணம். இதற்காக சிறு முதலீட்டாளர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.’’

தேவ்யாணி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று தேவ்யாணி இன்டர் நேஷனல் நிறுவனத்தின் பங்கு விலை 7% வரை அதிகரித்து, ரூ.188.40-க்கு வர்த்தகமானது. இது ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயர் வாகும். பங்கு விலை உயர்வுக்கு நல்ல காலாண்டு முடிவு வெளியாகி இருப்பதாகும்.

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 100% அதிகரித்து, ரூ.705 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.353 கோடியாக இருந்தது. அதே போல, வரிக்குப் பிந்தைய வருமான மும் ரூ.74.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால், வியாழன் அன்று வர்த்தக முடிவில் இந்தப் பங்கின் விலை 1.26% குறைந்து வர்த்தக மாகி முடிந்தது.”

அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறதே?

“இந்த நிறுவனம் சிறப்பான ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருப்பதால், கடந்த வாரம் புதன்கிழமை இதன் பங்கு விலை ரூ.3,530 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் காரணமாக இந்த நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு ரூ.3.88 லட்சம் கோடி யாக அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களின் சந்தை மதிப்பு பட்டி யலில் 12-வது இடத்தை இந்த நிறுவனம் அடைந்திருக்கிறது. இந்த இடத்தில் இருந்த ஐ.டி.சி நிறுவனம் ஒரு இடம் சரிந்து ரூ.3.77 லட்சம் கோடியுடன் இப்போது 13-வது இடத்தில் இருக்கிறது.

கடந்த ஒரு வார வர்த்தகத் தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 3.9% அதிகரித்த நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 16% வரை ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் 45% மற்றும் கடந்த ஆறு மாதத்தில் 73% ஏற்றத்தை சந்தித்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதன் பங்கு விலை 280% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 8% வரை ஏற்றத்தை சந்தித்திருக்கிறது. வியாழன் அன்று வர்த்தக முடிவிலும் 0.72% வரை ஏற்றம் கண்டது இந்தப் பங்கு.”

ஐ.டி.எஃப்.சி பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்கு விலை 4% வரை அதிகரித்து, ரூ.59-க்கு வர்த்தகமானது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பந்தன் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ், சைரஸ் கேப்பிடல் மற்றும் சிங்கப்பூர் சாவரின் ஃபண்ட் ஜி.ஐ.சி ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து ஐ.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்குகளை ரூ.4,500 கோடிக்கு வாங்கு வதாக அறிவித்திருந்தது. அதற்கு இந்திய போட்டி கமிஷனான சி.சி.ஐ தற்போது ஒப்புதல் வழங்கியிருக் கிறது. பங்கு விலை அதிகரிக்கவே இதுவே காரணம்.’’

ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணைப்பு பற்றி ஏதாவது அப்டேட் வந்திருக்கிறதா?

‘‘கடந்த டிசம்பரில் ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட் வொர்க் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதற்கான ஒப்புதலை தற்போது பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ சந்தைகள் வழங்கியிருக்கின்றன.

இந்த இணைப்புக்குப் பிறகு ஜீ என்டர்டெயின் மென்ட் பங்குதாரர்கள் 45.15% பங்குகளையும், சோனி 50.86% பங்கு களையும் மற்றும் ஜீ நிறுவனத்தின் இயக்குநர் குழு 3.99% பங்கு களையும் வைத்திருப்பார்கள். கடந்த வாரம் வியாழன்கிழமை மதிய வர்த்தகத்தில் ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.241-க்கு வர்த்தகமானது.’’

ஷேர்லக்: பங்கு முதலீடு...
வெளிநாட்டினரை பின்னுக்குத் தள்ளிய உள்நாட்டு முதலீட்டாளர்கள்..!

2023 மார்ச் மாதத்துக்குள் நிஃப்டி 18400 புள்ளிகளைத் தொடும் என ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளதே?

‘‘கடந்த ஜூலை மாதத்தில் எஃப்.ஐ.ஐ-கள் இந்திய பங்குச் சந்தைக்குத் திரும்பியதால், இந்திய பங்குச் சந்தைகள் 9% வரை ஏற்றம் கண்டது, கமாடிட்டி பொருள்களின் விலைகள் குறைந்தது, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வைத் தாமதப்படுத்துவது மற்றும் பணவீக்கம் அதிகரிப்பதில் காணப்படும் பலவீனம் போன்ற விஷயங்களைக் காரணம் காட்டி, எதிர்வரும் மாதங்களில் இந்திய பங்குச் சந்தைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. அதனால் வரும் மார்ச் மாதத்துக்குள் நிஃப்டிக்கான இலக்கை 18,400 புள்ளிகளாக நிர்ணயம் செய்துள்ளது ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ்.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், டெக் மஹிந்திரா, மாருதி சுஸூகி இந்தியா, பாரத ஸ்டேட் பேங்க், சிப்லா, ஃபெடரல் பேங்க், வருண் பெவரேஜஸ், அசோக் லேலாண்ட், அஸ்ட்ரல் (இந்தியா), பாட்டா இந்தியா, ஏ.பி.எல் அப்பல்லோ டியூப்ஸ், ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ், பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், சி.சி.எல் புராடக்ட்ஸ் (இந்தியா), கோல் இந்தியா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவில் மொத்த 16 பங்குகளை முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ்.’’

எஸ்கார்ட்ஸ் குபோடாவை எஃப் அண்டு ஓ தடை பட்டியலில் என்.எஸ்.இ இணைத்திருக்கிறதே?

‘‘கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி டிராக்டர் தயாரிப்பு நிறுவன மான எஸ்கார்ட்ஸ் குபோடாவை, தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ எஃப். அண்டு ஓ தடைப் பட்டியலில் இணைத்தது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் எஃப் அண்டு ஓ தடைப் பட்டியலில் இணைக்கப்பட்ட முதல் நிறுவனம் இதுவாகும். இதன் காரணமாக, பங்கின் விலையானது செவ்வாயன்று 5.2% சரிந்து, ரூ.1,633.45-ல் முடிவடைந்தது’’ என்றவர், புறப்படும்முன் சொன்ன கடைசி செய்தி.

‘‘சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத் தின் மீது காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார். கார்த்திக் தரப்பில் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் ஆஜரானார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ``வரும் திங்கள் கிழமைக்குள் (8.8.2022-ம் தேதி) சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்” எனத் தமிழக காவல்துறைக்கு உத்தர விட்டார். நீங்கள் கட்டுரையில் எழுதியதையே நீதிபதியும் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு பாராட்டுகள்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஷேர்லக்!

லாபத்தை அள்ளித் தந்த ஸ்மால்கேப் ஃபண்டுகள்..!

ஸ்மால்கேப் ஃபண்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் சும்மார் 30% வருமானத்தை வழங்கியதால், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, 12 ஃபண்ட் திட்டங்கள் 30 சதவிகிதத்துக்கும் மேலாக வருமானத்தை வழங்கியிருக்கின்றன. அதில் முக்கியமாக, குவான்ட் ஸ்மால்கேப் ஃபண்ட் 44% வருமானத்தையும், பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் 40% வருமானத்தையும், கனரா ராபிகோ ஸ்மால்கேப் ஃபண்ட் 39% வருமானத்தையும் மற்றும் ஆதித்ய பிர்லா ஸ்மால்கேப் ஃபண்ட் 18% வருமானத்தையும் வழங்கியிருக்கின்றன. பொதுவாக, ஸ்மால்கேப் ஃபண்டுகள் 65% தொகையை ஈக்விட்டி பிரிவில்தான் முதலீடு செய்யும். அதன்படி பார்க்கும்போது, இந்த ஃபண்டுகள் அதிக ரிஸ்க் கொண்டதுடன், அதிக வருமானத்தைத் தருவ தாக இருக்கிறது. தனிப்பட்ட ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைவிட ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ரிஸ்க் குறைவாகும். காரணம், இங்கு பல ஸ்மால்கேப் பங்குகளில் பிரித்து செய்யப்படுவதாகும்.