Published:Updated:

ஷேர்லக்: சென்செக்ஸ் 60000 புள்ளிகள்... சந்தை ஏற்றம் தொடருமா?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: சென்செக்ஸ் 60000 புள்ளிகள்... சந்தை ஏற்றம் தொடருமா?

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

நாணயம் விகடன் இதழ் முடிக்கும் பணியில் தீவிரமாக இருந்த வேளையில், சோகமான முகத்துடன் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘ஈடுசெய்ய முடியாத இழப்பு. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதுபோல, பங்குச் சந்தை முதலீட்டின் பவரை பலருக்கும் பட்டவர்த்தனமாக உணர்த்தி, பங்கேற்கச் செய்த வர் ராகேஷ். சந்தையின் ரகசியங்களை எல்லாம் அத்துப்படியாக அறிந்து வைத்திருந்தவர், உடல்நலம் தொடர்பான விஷயங் களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். நம் எல்லோருக்குமே பணம் சம்பாதிப்பது முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியம் நம் உடல்நலனைப் பேணுவது என்கிற உண்மையை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான், ராகேஷ் தன் மரணத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தரும் பாடம்’’ என்றபடி, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே, என்ன காரணம்?

“மெக்குரீஸ் கேப்பிடல் செக்யூரிட்டீஸ் பங்குத் தரகு நிறுவனம் எல்.ஐ.சி பங்கு களுக்கான குறியீட்டை நியூட்ரலில் இருந்து அவுட் பர்ஃபார்ம் என்கிற நிலைக்கு உயர்த்தியதால், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி வர்த்தகத் தில் அந்தப் பங்கு விலை என்.எஸ்.இ சந்தையில் 3% அதிகரித்து, ரூ.703 என்கிற நிலைக்கு உயர்ந்து வர்த்தக மானது.

கடந்த ஜூன் காலாண்டில் எல்.ஐ.சி-யின் நிகர லாபம் 71.2% குறைந்து, ரூ.2,371.60 கோடியாக இருந்தது. அதே போல, தனித்த மொத்த பிரீமியம் 31.6% சரிந்து, ரூ.98,351.80 கோடியாக இருந்தது. இப்படி பாசிட்டிவ் செய்திகள் ஒருபக்கம் வந்தாலும், வியாழன் காலை வர்த்தகத்தில் இந்த நிறுவனப் பங்கு விலை சற்று சரிந்து, ரூ.697.50 என்ற விலையில் வர்த்தகமானது.”

மறைந்த முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட் ஃபோலியோவில் உள்ள பங்கு களின் நிலை கடந்த வாரம் எப்படி இருந்தது?

‘‘மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். டைட்டன் நிறுவனத்தில் அதிக அளவில் அவர் முதலீடு செய்திருக் கிறார். இவரது போர்ட் ஃபோலியோவில் உள்ள பெரும்பாலான நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் குறைந்தும், ஒரு சில பங்குகள் அதிகரித்தும் முடிவடைந்தன.

அவர் அதிக அளவில் முதலீடு செய்திருக்கும் டைட்டன் நிறுவனத்தின் பங்கு விலை 0.88% அதிகரித்து, ரூ.2,493.65-க்கு நிறை வடைந்தது. அன்றைய தினத்தில் இந்தப் பங்கு 1.09% வரை ஏற்றத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஆப்டெக் நிறுவனத்தின் பங்கு அன்றைய தினம் 5.92% வரை சரிவை சந்தித்து ரூ.218.95-க்கு வர்த்தகமானது.

மெட்ரோ பிராண்டு நிறுவனத்தின் பங்கு விலை அன்றைய தினம் 3.13% வரை சரிவை சந்தித்தது. அக்ரோ டெக் நிறுவனத்தின் பங்கு விலை 0.62% வரை சரிந்தது. அன்றைய தினம் ஸ்டார்ஹெல்த் 4.99% வரை சரிவை சந்தித்தாலும், வர்த்தகம் முடியும்போது 1.62% வரை ஏற்றத்தைப் பதிவு செய்தது. டாடா மோட்டார்ஸ் (2.55%), நஜரா டெக்னாலஜீஸ் (2.44%), என்.சி.சி (2.09%), இந்தியன் ஹோட்டல்ஸ் (1.32%), கிரிசில் (1.02%) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன.’’

ஷேர்லக்: சென்செக்ஸ் 60000 புள்ளிகள்... சந்தை ஏற்றம் தொடருமா?

சிங்கர் இந்தியாவில் ரேர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பது குறித்து?

“ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ரேர் இன்வெஸ்ட் மென்ட்ஸ் நிறுவனம், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் தையல் இயந்திரம் தயாரிப்பாளரான ‘சிங்கர் இந்தியா’ என்ற நிறுவனத்தின் 42.50 லட்சம் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.53.50 கொடுத்து வாங்கியது. இதன் காரணமாக சிங்கர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வர்த்தகத்தில் 18% வரை அதிகரித்து, ரூ.82 என்ற விலையில் வர்த்தக மானது. அதற்கு முந்தைய தினம் 20% அப்பர் சர்க்யூட்டில் ரூ.69.15-க்கு வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 90% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங் களில் 40% வரை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை இந்தப் பங்கு விலை 30% உயர்ந்துள்ளது.”

பாரத் கியர்ஸ் நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கு கிறதாமே?

“கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வர்த்தகத்தில் பாரத் கியர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17% வரை அதிகரித்து, பி.எஸ்.இ சந்தையில் ரூ.171.55 என்கிற நிலையில் வர்த்தகமானது. ஆகஸ்ட் 19-ம் தேதி இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் கூடி, முதலீட் டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவதற் கான முடிவை பரிசீலனை செய்யும் என்ற செய்தியின் எதிரொலியாக பங்கு விலை அதிகரித்திருக்கிறது.”

பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகளை அதிக அளவில் வாங்கியிருப்பதாகச் சொல்லப் படுகிறதே...! இது சரியான முடிவுதானா?

“மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய மற்றும் விற்ற பங்குகளின் ஜூலை மாத நிலவரப்படி, பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஸொமேட்டோ நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. நிப்பான் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஸொமேட்டோ நிறுவனத்தின் ஏழு கோடி பங்குகளை ஜூலை மாதத்தில் வாங்கியுள்ளது. அதே போல, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் 2.54 கோடி பங்குகளையும், மோதிலால் ஆஸ்வால் ஏ.எம்.சி 1.3 கோடி பங்குகளையும், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் 99 லட்சம் பங்கு களையும் மற்றும் யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் 38 லட்சம் பங்குகளையும் ஜூலை மாதத்தில் வாங்கி இருக்கின்றன.

அதே சமயம், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் 1.43 கோடி ஸொமேட்டோ பங்கு களை விற்றுள்ளது. கோட்டக் பங்குத் தரகு நிறுவனம் ஸொமேட்டோ பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட் டாளர்களுக்குப் பரிந்துரை செய்ததுடன், இதன் இலக்கு விலையை ரூ.79-ஆக நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல, ஜெஃப்ரீஸ் தரகு நிறுவனம் ஸொமேட்டோ நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.100-ஆக நிர்ணயித்துள்ளது.

ஸொமேட்டோ நிறுவனப் பங்கை வாங்குவது சரியா என்று கேட்டால், பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதுதான் பதில். பங்குச் சந்தையில் ஒரு நிறுவனப் பங்கை எல்லோரும் ஒரேமாதிரி நினைக்க மாட்டார்கள் இல்லை என்பதுதானே உண்மை!”

யு.டி.ஐ ஏ.எம்.சி நிறுவனத்தின் பங்கு விலை பெருமளவு சரிந்துள்ளதே என்ன காரணம்?

“இந்த நிறுவனப் பங்கு விலை டாடா குழுமத்துக்கு 45% பங்குகளை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளி யானது. இதை யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மறுத்ததை அடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் யு.டி.ஐ பங்கு விலை 4.9% சரிந்து ரூ.819-ஆக வர்த்தகமானது.’’

சென்செக்ஸ் 60000 புள்ளிகளைத் தாண்டிருக்கிறதே? இந்த ஏற்றம் தொடருமா?

“இந்தியப் பங்குச் சந்தை கரடியின் பிடியிலிருந்து மீண்டு, காளையின் பிடிக்கு வந்திருக்கிறது. புதன்கிழமை பி.எஸ்.இ சென்செக்ஸ் 60000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமானது. கடந்த இரு மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தை சுமார் 16% ஏற்றம் கண்டுள்ளது.

2022–ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை இதுவரைக்கும் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் சுமார் 1.5 சதவிகிதம்தான் இந்தியச் சந்தை ஏற்றம் கண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வட்டி விகித உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்காவில் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி ஏற்படுமோ என்கிற பயம், இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைத் தொடர்ந்து விற்றுவருவது காரணமாகக் கடந்த நான்கு மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திலேயே காணப்பட்டது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகர விற்பனையாளர்கள் என்கிற நிலையிலிருந்து நிகர முதலீட்டாளராக மாறியது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது போன்ற காரணங்களால் இந்தியச் சந்தை ஏற்றத்துக்குத் திரும்பியது. ஆனாலும், பணவீக்க விகிதம் மற்றும் வட்டி விகிதம் தொடர்ந்து கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்து வருவது சந்தைக்கு பாதகமான அம்ச மாக இருக்கிறது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் இந்தப் பங்குச் சந்தை நல்ல வருமானத்தைக் கொடுத்தது. அதே போன்ற வருமானத்தை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். காரணம், உலக அளவில் பணவீக்க விகிதம் என்கிற பூதம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகும். இதனால், குறுகிய காலத்தில் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள், அவர்கள். எனவே, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் மற்றும் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் முறையில் மேற்கொள்வது ரிஸ்க்கைக் குறைப்பதாக இருக்கும்.

தற்போதைய சூழலில் குறுகிய கால முதலீட்டாளர்கள் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும். மூன்றாண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட் டாளர்கள் மட்டுமே இப்போது பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்யலாம்.”

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் புதிய ஃபண்டை அறிமுகம் செய்துள்ளதாமே..!

“ஆமாம். சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டமான சுந்தரம் ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் (Sundaram Flexi Cap Fund) திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இந்த அறிமுகம் குறித்து சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சுப்ரமணியம், ‘இந்தத் ஃபண்டில் திரட்டப்படும் நிதி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 45 முதல் 70 நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும். அதிக நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்படுகிறது. இந்த ஃபண்ட் அனைத்து சந்தை சுழற்சியிலும் சிறப்பாகச் செயல்படுவதாக வடிவமைக்கப் பட்டுள்ளது” எனச் சொல்லியுள்ளார்.”

ஜெயந்த் இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் பங்கு அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமாகி இருக்கிறதே?

‘‘கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் இந்த நிறுவனப் பங்கு விலை 5% அதிகரித்து, ரூ.280.55 என்கிற அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தக மானது. தொடர்ந்து 23 நாளாக இது அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தமாகிறது. ஒரு மாதத்தில் மட்டும் இந்த நிறுவனப் பங்கின் விலை 200% வரை அதிகரித்துள்ளது. எஸ்.எம்.இ இன்ஃப்ரா துறை சேர்ந்த இந்த நிறுவனப் பங்கு அண்மையில்தான் பட்டிய லிடப்பட்டது. இந்தப் பங்கு எஸ்.எம்.இ பிரிவின்கீழ் வருவதால், இதை வாங்கும் முதலீட்டாளர்கள் பங்கைக் கட்டாயம் டெலிவரி எடுக்க வேண்டும்.

எனவே, ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர் கள் மட்டும் இதைக் கவனிக் கலாம்’’ என்றவரின் செல் போன் ஒலிக்க, சட்டென்று வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்!

ஷேர்லக்: சென்செக்ஸ் 60000 புள்ளிகள்... சந்தை ஏற்றம் தொடருமா?

நெல்லையில்... உங்களை செல்வந்தர் ஆக்கும் முதலீட்டுக் கூட்டம்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி நெல்லையில் செப்டம்பர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (10.00 am – 1.00 pm) நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர், பேச்சாளர் சௌந்தர மகாதேவன் சிறப்புரையாற்றுகிறார். நிதி நிபுணர்கள் பி.வி.சுப்ரமணியம், வ.நாகப்பன் ஆகியோர் முதலீட்டு அம்சங்கள் குறித்து பேசுகிறார்கள். ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

ஷேர்லக்: சென்செக்ஸ் 60000 புள்ளிகள்... சந்தை ஏற்றம் தொடருமா?

மதுரை மாநகரில் முதலீட்டுத் திருவிழா!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி மதுரையில் செப்டம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.00 pm – 8.30 pm) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர், பேச்சாளர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றுகிறார். நிதி நிபுணர்கள் பி.வி.சுப்ரமணியம், வ.நாகப்பன் ஆகியோர் முதலீட்டு அம்சங்கள் குறித்து பேசுகிறார்கள்.

ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla