Published:Updated:

ஷேர்லக்: 4 ஆண்டுகளில் சென்செக்ஸ் 125000, நிஃப்டி 40000 புள்ளிகள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: 4 ஆண்டுகளில் சென்செக்ஸ் 125000, நிஃப்டி 40000 புள்ளிகள்!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழன் அன்று மதியம் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 337 புள்ளிகள் நிஃப்டி 88 புள்ளிகள் இறங்கி வர்த்தகமானதைப் பார்த்துக்கொண்டிருக்க, ‘‘சந்தை இறக்கத்தைப் பார்த்துக் கவலைப்படாதீர்கள்’’ என்று சொன்னபடி, நம் கேபினுக்குள் நுழைந்தார். ‘‘அட, என்ன விஷயம்?’’ என்று கேட்டவுடன் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘அடுத்த நான்கு ஆண்டுகளில் சென்செக்ஸ் 125000, நிஃப்டி 40000 புள்ளிகளை எட்டும் என யெஸ் செக்யூரிட்டீஸ் சொல்லியிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் மீது உள்ள வலுவான நம்பிக்கையின் அடிப்படையில் இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் செயல்பாடு பொருளாதாரத்தில் அப்படியே பிரதிபலிக்காது என்றாலும், நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு நன்றாக இருக்கும். நிறுவனங்களின் வருவாய், லாப வளர்ச்சி அதிகரிக்கும்போது அது பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கும் உதவும். அந்த வகையில், இந்தியப் பொருளாதாரம் மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் பொருளாதாரங்கள் சற்று நெருக்கடியில் உள்ளன. சீனாவின் பொருளாதாரம் கொரோனாவுக்குப் பிறகு பல பிரச்னைகளைச் சந்தித்துவருகிறது. இதனால் இந்தியாவை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. அந்நிய நேரடி முதலீடு மூலமாகவும், பங்குச் சந்தை முதலீடு மூலமாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

இதன் அடிப்படையில் யெஸ் செக்யூரிட்டீஸ் இந்தியப் பங்குச் சந்தைகளின் வளர்ச்சி அடுத்த நான்கு ஆண்டுகளில் 20% கூட்டு வளர்ச்சியை எட்டும் என்று கணித்திருக்கிறது. நிஃப்டி 2011-2020 வரையிலான பத்தாண்டுகளில் சராசரியாக 6% எனும் வளர்ச்சி கண்டுவந்த நிலையில், தற்போது பொருளாதாரம் வலுவாக இருப்பதால், அடுத்த மூன்று ஆண்டுகளில் 23.4% அளவுக்கு வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளதாகக் கணித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் வங்கிகள் குறிப்பாக ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள், ஆட்டோ மொபைல், ஆட்டோ உதிரிபாகங்கள் மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள் துறை நிறுவனங்கள் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் எனவும், ஐ.டி, பார்மா துறை பங்குகளின் செயல்பாடு அடுத்த ஆறு மாதங்களுக்கு சற்று மந்தமாகவே இருக்கும் எனவும் கூறியுள்ளது. உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எலெக்ட்ரிக் வாகனம், பாதுகாப்புத்துறை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகள் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகளாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. யெஸ் செக்யூரிட்டீஸ் சொன்ன இந்தக் கணிப்பு அப்படியே நடக்கும் என்று எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை என்றாலும், முதலீட்டாளர்கள் நீண்டகால அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.’’

ஆனால், புதன்கிழமை இரவு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்ததால், வியாழன் அன்று உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தையில் சரிந்துவிட்டதே..!

“அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்ந்தும் என அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்வானது வட்டி விகிதத்தை 0.75% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக, புதன்கிழமை இரவு அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிந்தன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதம் இன்னும்கூட உயர்த்தப்படும் என ஃபெடரல் ரிசர்வ் சிக்னல் கொடுத்துள்ளது.

இந்த வட்டி உயர்வு காரணமாக, கடந்த வாரம் வியாழக் கிழமை அன்று சென்செக்ஸ் 0.51% சரிந்து, 59150 என்கிற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நிஃப்டியும் 0.53% சரிவுடன் 17,624 என்கிற நிலையில் வர்த்தகத்தை ஆரம்பித்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து ரூ.80.45 ஆக சரிந்தது. சந்தை சரிவின் போக்கு அடுத்தடுத்த நாள்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.’’

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“வங்கிசாரா நிதி நிறுவனங் களில் ஒன்றான டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்ப ரேஷன் நிறுவனப் பங்கு விலை கடந்த ஆறு மாதத்தில் 98% அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் 46% ஏற்றத் தையும், கடந்த ஒரு மாதத்தில் 82% ஏற்றத்தைப் பதிவு செய் திருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளால் இதன் வருமானம் பெருகி வருகிறது. இதன் காரணமாக இந்த பங்கு விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. கடந்த வாரம் வியாழன் அன்று காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 1.23% அதிகரித்து, ரூ.2,508-ஆக வர்த்தகமானது.”

வங்கிப் பங்குகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது..?

“அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல் மற்றும் டெபாசிட்டுகள் அதிகரிப்பு காரணமாகவும் வங்கிகளின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாகவும் கடந்த இரு வாரங்களாக இந்திய வங்கிப் பங்குகள் ஏற்றத் தில் வர்த்தகமாகி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் 8.69% ஏற்றத்தை சந்தித்திருக் கிறது. ஆனால், நிஃப்டி 50 2.39% ஏற்றத்தையும், பி.எஸ்.யு பேங்க் இண்டெக்ஸ் 16.48% ஏற்றத்தையும் கடந்த ஒரு மாதத்தில் பதிவு செய்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான வங்கியான எஸ்.பி.ஐ கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் பங்குகளின் விலை அதிகரிப்பால் ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை தாண்டிய 3-வது வங்கி என்ற நிலையை அடைந்துள்ளது.”

எஃப்.எம்.சி.ஜி நிறுவனப் பங்கு களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

‘‘அடுத்த சில மாதங்கள் விழாக்காலம். இது எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். குறிப்பாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த நான்கு தினங்களில் அதிகரித்துள்ளது. உளகளாவிய பங்குத் தரகு நிறுவனமான நோமுரா, இந்த நிறுவனத்தின் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.2,975-ஆக நிர்ணயம் செய்துள்ளது. அதே போல மெக்குரீஸ் பங்கு தரகு நிறுவனம் மிகச் சிறந்த தரகு குறியிட்டை வழங்கி, இலக்கு விலையை ரூ.3,000-ஆக நிர்ணயம் செய்துள்ளது. ஷேர்கான் தரகு நிறுவனமும் முதலீட்டாளர்களை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப்பதோடு, இலக்கு விலையை ரூ.2,850-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

ஷேர்லக்: 4 ஆண்டுகளில் சென்செக்ஸ் 125000, நிஃப்டி 40000 புள்ளிகள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

‘‘மோதிலால் ஆஸ்வல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்குத் தரகு நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகளை பரிந்துரை செய்து, இலக்கு விலையை ரூ.520-ஆக அதிகரித்து உள்ளது. இது தற்போதைய வர்த்தக விலையைவிட 17% அதிகம். இதன் காரணமாக கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 4% அதிகரித்து, ரூ.443.20-ஆக வர்த்தகமானது. ஆனால், வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரூ.430.70 என்கிற விலையில் இறங்கி வர்த்தகமானது.’’

டி.ஆர்.எஃப் நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

‘‘டாடா குழும நிறுவனமான டி.ஆர்.எஃப் பங்கு விலை கடந்த ஆறு வர்த்தக தினங் களில் 100 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து, இது 172% உயர்ந்துள்ளது. மேலும், இந்தப் பங்கின் விலை ஆறு ஆண்டுகால உச்சத்தை எட்டியுள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனம் டி.ஆர்.எஃப் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் ரூ.165 கோடி முதலீடு செய்ததை குறிப்பிட்டும், நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளைக் காரணம் காட்டியும் கேர் ரேட்டிங் பங்குத் தரகு நிறுவனம் டி.ஆர்.எஃப் நிறுவனத்தின் நீண்ட கால மதிப்பீட்டை ‘எதிர்மறை’யிலிருந்து ‘நிலை யானது’ என மாற்றி அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பில் 75% டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட ஆர்டராக இருக் கிறது. ஜூலை 1 நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு ரூ.363 கோடியாக இருக்கிறது’’ என்றவரிடம்,

“நாணயம் விகடன் மற்றும் கிளாசிக் போலோ (Classic Polo) இணைந்து ‘ஆயத்த ஆடை ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் & வளர்ச்சி..!’ என்ற கட்டண மில்லா ஆன்லைன் பயிலரங்கை அக்டோபர் 1, 2022 (சனிக் கிழமை) காலை 11.00 - 12.00 மணி வரை நடத்த உள்ளன. இதில் ஃப்ரான்சைஸ் நிபுணர் ஐயப்பன் ராஜேந்திரன், கிளாசிக் போலோ தென் பிராந்திய மேலாளர் தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். (பதிவு செய்ய https://events.vikatan.com/411-classic-polo-franchise/)” என்ற தகவலைச் சொன்னோம்.

‘‘வெரி குட். பிசினஸ் வாய்ப்பை அறிந்துகொண்டு வாசகர்கள் தொழில் தொடங்க வாழ்த்துகள்” எனச் சொல்லி விட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

உங்கள் ஓய்வுக்காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘உங்கள் ஓய்வுக்காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, அக்டோபர் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும். இதில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி, மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

ஷேர்லக்: 4 ஆண்டுகளில் சென்செக்ஸ் 125000, நிஃப்டி 40000 புள்ளிகள்!