நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: விழாக் காலம்... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். ஏதோ யோசனையில் இருந்த நம்மை தட்டி எழுப்பிவிட்டு, “சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறதே... அடுத்து மேல்நோக்கி எப்போது திரும்பும்... என்பது பற்றித்தானே யோசிக் கிறீர்கள்?” என்று கேட்க, முதலீட்டாளர்களின் நாடித் துடிப்பை இவ்வளவு துல்லிய மாகத் தெரிந்து வைத்திருக் கிறாரே என்று அதிசயித்துப் போனோம். நாம் கொடுத்த சூடான ஏலக்காய் டீயைக் கொஞ்சம் உறிஞ்சிக் குடித்த படி நாம் கேட்ட கேள்வி களுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி இந்திய நிறுவனங்கள் பலவற்றுக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்கி இருக்கிறதே?

“கடந்த மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்ட அதிக தேவை காரணமாக விலை ஏற்றம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு பேரல் 140 டாலர் என்கிற அளவுக்குப் போனது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை சர்வேதச சந்தையில் ஒரு பேரல் 80 டாலர் என்கிற அளவுக்குக் குறைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயை அதிகம் பயன் படுத்தும் பல நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றன. இதனால் அவற்றின் பங்குகளும் விலை ஏற்றம் கண்டு வருகின்றன.

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவில் மூலப்பொருள் களுக்கான செலவு 60% ஆகும். இதில் கச்சா எண்ணெய்க் கான செலவு அதிகம். ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் செலவும் வெகுவாகக் குறைந் துள்ளது. அதே போல, இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் விமான எரிபொருளுக்கான செலவு பங்களிப்பு 20% என்பதால், அந்த நிறுவனத்தின் செலவும் குறையும். இப்படி பெர்ஜர் பெயின்ட்ஸ், ஆஸ்ட்ரல், எம்.ஆர்.எஃப், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், வினதி ஆர்கானிக்ஸ், கன்சாய் நெரோ லக், சுப்ரீம் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் மூலதனச் செலவுகள் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி யால் குறைந்து, நிகர லாபம் அதிகரிக்கும் என்கிற கணிப்பில் அந்தப் பங்குகளின் விலையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் உரிமைப் பங்குகளை வெளியிடு கிறதாமே?

“ஆம், வருகிற அக்டோபர் 11-ம் தேதி சுஸ்லான் எனர்ஜி ஏற்கெனவே பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர் களுக்கு உரிமைப் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,200 கோடி நிதியைத் திரட்ட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. 21 பங்குகளுக்கு 5 பங்குகளை ரூ.5 என்கிற விலையில் வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.8.30-க்கு வர்த்தகமானது.”

கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனப் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்துவருவது ஏன்?

‘‘இந்த நிறுவனப் பங்கு விலை ஐ.பி.ஓ வந்தபோது வெளியிடப்பட்ட விலையைவிட தற்போது 64% வரை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில், இந்தப் பங்கின் விலை இன்னும் சுமார் 20% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோட்டக் இன்ஸ்டி டியூஷனல் பங்குத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட் டாளர்களுக்கு பரிந்துரையும் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், இதன் இலக்கு விலையை ரூ.1,590-ஆக நிர்ணயம் செய்துள்ளது. கடந்த வாரம் வியாழக் கிழமை அன்று இந்தப் பங்கு ரூ.1,387-க்கு வர்த்தக மானது.”

விழாக் காலங்களையொட்டி கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்...

“நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக் காலங்களில் மக்கள் அதிக அளவில் ஷாப்பிங் செய்வது வழக்கம். ஒவ்வொரு வருடமும் இந்த விழாக் காலங்களில் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையேற்றம் பெறும். அந்த வகையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் வந்த நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி டி.வி.எஸ் மோட்டார், வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ், இகிளெர்க்ஸ் சர்வீசஸ், ஃபினோ லெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட் ஆகிய ஐந்து நிறுவனங் களின் பங்குகள் நல்ல வருமானம் தந்துள்ளன. அதாவது டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 9 விழாக்கால மாதங்களில் 3 - 30% வரை ஏற்றம் கண்டுள்ளது. ஷேர்கான் தரகு நிறுவனம் இந்த நிறுனத்தின் இலக்கு விலையை ரூ.1,254-ஆக நிர்ணயம் செய்துள்ளது. கடந்த வாரம் வியாழன் அன்று இதன் பங்கு விலை ரூ.1,029-க்கு வர்த்தகமானது. வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒன்பது ஆண்டுகளின் விழாக்கால மாதத்தில் 3% - 18% வரை வருமானம் தந்துள்ளது. இகிளெர்க்ஸ் 16%, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 19% மற்றும் பஜாஜ் ஹோல்டிங்ஸ் 20% வருமானத்தைத் தந்துள்ளது. இந்தப் பங்குகள் நடப்பு ஆண்டின் விழாக் காலத்திலும் நல்ல வருமானம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

சுப்ரியா லைஃப் சயின்ஸ் நிறுவனப் பங்கு விலை சரிய என்ன காரணம்...?

‘கடந்த செப்டம்பர் 28-ம் தேதி வர்த்தகத்தில் இந்த நிறுவனப் பங்கு விலை 6% வரை சரிந்து ரூ.303-க்கு வர்த்தக மானது. ஏனெனில், ஷீரேஷ் அபய்கர் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதை நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதன் காரணமாக இதன் பங்கு விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதே நேரத்தில், ராஜீவ் குமார் ஜெயின் வருகிற அக்டோபர் 3-ம் தேதி நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்படுவதற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை வர்த்தகம் முடியும்போது இந்தப் பங்கு ரூ.298-க்கு வர்த்தகமானது.”

ஏ.சி.இ ஈக்விட்டி நிறுவனம் ஏழு பங்கு நிறுவனங்களின் லாபம் குறைந்திருப்பதைக் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறதே?

“ஒரு நிறுவனத்தின் லாபம், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக சில பங்கு நிறுவனத்தின் லாபமானது தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதை ஏ.சி.இ ஈக்விட்டி குறிப்பிட்டுள்ளது. இந்தப் பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும்.

பல்ராம்பூர் சினி மில்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 30% வரை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் நிகர லாபம் 2021-22-ல் ரூ.453 கோடியாகக் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய இரண்டு நிதி ஆண்டுகள் முறையே ரூ.460 கோடி மற்றும் ரூ.512 கோடியாக இது இருந்தது.

அதே போல, ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்கு பங்கு விலை 29% வரை நஷ்டத் தைப் பதிவு செய்துள்ளது. இதன் நிகர லாபமும் படிப் படியாகக் குறைந்து, கடந்த 2021-22-ல் ரூ.29 கோடியாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் பங்கு விலை 28% இழப்பையும், ப்ரிவி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் 24% இழப்பையும், ஜஸ்ட் டையல் 23% இழப்பையும், நாட்கோ பார்மா 21% இழப் பையும், சுதர்ஷன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் 20% இழப் பையும் பதிவு செய்துள்ளது.”

கடந்த செப்டம்பர் காலாண்டில் சில பங்குகள் மல்ட்டிபேகர் பங்கு களாக மாறியிருக்கின்றனவே..!

“கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் மொத்தம் 130 பங்கு கள் மல்ட்டிபேகர் பங்குகளாக உருவெடுத்துள்ளன. இந்தப் பங்குகளில் சில பங்குகள் 1,000 சதவிகிதத்துக்கு மேல் வருமானத்தை முதலீட்டாளர் களுக்கு வழங்கியுள்ளன.

இதில் பரோடா ரேயன் கார்ப்பரேஷன் பங்கு 1,560% லாபத்தை அதன் முதலீட்டாளர் களுக்கு வழங்கியுள்ளது. அதே போல, அம்பர் புரோட்டின் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு 1,285% லாபத்தைத் தந்திருக்கிறது. ரெஜென்ஸி செராமிக்ஸ் 950%, தீப் டைமண்ட் இந்தியா 595%, குவான்ட்டம் டிஜிட்டல் விஷன் 550%,  கங்கா இண்டஸ்ட்ரீஸ் அண்டு அலைடு புராடக்ட்ஸ் 510% லாபத்தை வழங்கியிருக்கிறது.

அது போல, மெர்க்குரி மெட்டல்ஸ், என்.ஐ.பி.இ, கொரே ஃபுட்ஸ், ஆக்ரோ இந்தியா, மயுர் ஃப்ளோரிங்ஸ், சாம்ப்ரே நியூட்ரியன்ஸ், கே.பி.எஸ் இந்தியா, டி.எஸ்.ஜே கீப் லேர்னிங் மற்றும் ஏ.பி.சி கேஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 300 - 500% வரை லாபத்தைப் பதிவு செய்திருக்கின்றன. அட்ரா சக்கை என்று நினைத்து எல்லா முதலீட்டாளர்களும் இந்தப் பங்குகளை வாங்கத் தேவையில்லை. காரணம், இந்தப் பங்குகளில் அதிகம் ரிஸ்க்கும் உண்டு.”

டாரன்ட் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை சரிய என்ன காரணம்?

“காஸ்மெடிக் டெர்மட்டாலஜி பிளேயர் குரேஷியோ ஹெல்த்கேர் நிறுவனத்தை ரூ. 2,000 கோடிக்கு வாங்குவதற் கான ஒப்பந்தத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று டாரன்ட் பார்மா நிறுவனம் கையெழுத்திட்டது. இதற்கடுத்து, புதன்கிழமை வர்த்தகத்தில் டாரன்ட் பார்மாசூட்டிகல்ஸ் பங்குகள் பி.எஸ்.இ-யில் 6% சரிந்து, ரூ.1,449-ஆக வர்த்தகமானது. வியாழக்கிழமை மதியத்துக்குப் பிறகான வர்த்தகத்தில் 2.90% வரை விலை அதிகரித்து, ரூ.1,538.45-க்கு வர்த்தகமானது.”

ஷேர்லக்: விழாக் காலம்... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

லிபர்டி ஷூஸ் பங்கு விலை அதிகரிக்க காரணம்...?

“இந்த நிறுவனப் பங்கு விலை, கடந்த புதன் கிழமை அன்று பி.எஸ்.இ வர்த்தகத்தில் 8% வரை அதிகரித்து, ரூ.270.40-க்கு வர்த்தகமானது. இது 2018-க்குப் பிறகான உச்சபட்ச விலையாகும். கடந்த இரண்டு தினங்களில் மட்டும் இதன் பங்கு விலை 25% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 4.5% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 6% ஏற்றத்தை சந்தித்துள்ள நிலையில், இந்த பங்கு விலை 90% ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.”

ஐ.டி.ஐ நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே..?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஐ.டி.ஐ நிறுவனத்தின் பங்கு விலை 10% வரை அதிகரித்து, ரூ.113 என்ற விலையில் வர்த்தகமானது. அரசுக்குப் பங்குகளை வழங்குவது குறித்த முடிவு களை இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு எடுப்பதற்காகக் கூடுகிறது என்பதையொட்டி இந்தப் பங்கு விலை அதிகரித்துள்ளது.”

ஹர்ஷா இன்ஜினீயரிங் நிறுவனப் பங்கு முதல் நாளில் எப்படி வர்த்தகமானது?

‘‘இந்த நிறுவனப் பங்கின் ஐ.பி.ஓ கடந்த செப்டம்பர் 14-16-ம் தேதிகளில் வெளியிடப் பட்டது. கடந்த செப்.26-ம் தேதி இந்தப் பங்கு பங்குச் சந்தையில் பட்டியலானது. முதல் நாளி லேயே ஐ.பி.ஓ விலையைவிட 36% பிரீமியம் விலையான ரூ.450-க்கு வர்த்தகமானது. இதன் ஐ.பி.ஓ விலை ரூ.330 மட்டுமே. அன்றைய வர்த்தகம் முடிவில் பங்கு விலை 47% அதிகரித்து, ரூ.486-க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஆனால், வியாழன் வர்த்தக முடிவில் ரூ.470.80-க்கு வர்த்தகம் ஆகி முடிந்தது.’’

எஸ்.பி அப்பேரல்ஸ் நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுகிறதாமே?

“இந்த நிறுவனம் 6 லட்சம் பங்குகளை அதாவது, 2.34% பங்குகளை முதலீட்டாளர் களிடம் இருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.585 கொடுக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, கடந்த வாரம் புதன்கிழமை அன்று இதன் பங்கு விலை 2.8% வரை விலை உயர்ந்து, ரூ.431.60-க்கு முடிவ டைந்தது. வியாழக்கிழமை மதிய வர்த்தகத்தில் ரூ.427.25 என்கிற விலையில் வர்த்தகமானது” என்றவர், ‘‘முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகம் நடத்துகிறீர்களே! சபாஷ், இன்றைக்கு நம் மக்களுக்கு அதுதான் தேவை’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

ஷேர்லக்: விழாக் காலம்... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

உங்கள் ஓய்வுக்காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘உங்கள் ஓய்வுக்காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, அக்டோபர் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பேசுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru