Published:Updated:

பங்குச் சந்தை கடும் சரிவு; 1,300 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்; என்ன காரணம்?

Share Market (Representational Image)
News
Share Market (Representational Image) ( Photo by energepic.com from Pexels )

``அந்நிய முதலீட்டாளர்கள் டிசம்பர் மாதத்தில் பலவீனமாக உள்ள போர்ட்ஃபோலியோக்களிலிருந்து வெளியேறுவார்கள். புத்தாண்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான பணத்தை தயாராக வைத்திருப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை இது." - ரெஜி தாமஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தை கடும் இறக்கத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் வரை விழுந்திருக்கிறது. நிஃப்டி 400 புள்ளிகள் வரை இறங்கியது. ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், வங்கி, மெட்டல், ஆயில் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பெரும்பாலான துறைகளின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் 3 சதவிகிதம் வரை இறக்கம் கண்டுள்ளன.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by Lorenzo from Pexels

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த வாரம் வெள்ளியன்றே இந்த இறக்கத்துக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்தது. இது இந்த வார தொடக்கத்திலும் கடுமையாகத் தொடர்கிறது. இந்த அளவு சந்தை இறக்கம் காண என்ன காரணம், இந்த இறக்கம் தொடருமா என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

``இது வழக்கமான ஒன்றுதான். காரணம் அந்நிய முதலீட்டாளர்கள் டிசம்பர் மாதத்தில் பலவீனமாக உள்ள போர்ட்ஃபோலியோக்களிலிருந்து வெளியேறுவார்கள். புத்தாண்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான பணத்தைத் தயாராக வைத்திருப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை இது.

மேலும் அமெரிக்காவின் ஃபெட் உட்பட உலகம் முழுவதுமே வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக எதிர்பார்ப்புகள் உள்ளன. எனவே, அதற்கேற்ப தங்களின் முதலீடுகளைத் திட்டமிடவும் தயாராகிவருகிறார்கள்.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

இவை ஒரு பக்கம் இருக்க கொரோனாவின் புதிய வைரஸ் ஒமைக்ரான் பரவல் பற்றி அச்சம் அதிகமாக இருக்கிறது. வேகமாகப் பரவக்கூடிய இந்த வைரஸ், இந்தியா உட்பட 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பரவல் அதிகரிக்கும்பட்சத்தில் பழையபடி ஊரடங்கு, எல்லைகள் மூடல்போன்ற கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவையாகிவிடும். அந்தச் சூழலில் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகும். இதன் காரணமாகவும் சந்தை இறக்கம் கண்டுவருகிறது.

இந்த இறக்கத்தின் போக்கானது 2022 ஜனவரி வரை தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தக் காலத்தில் ஏற்றம் என்பது குறைவான வரம்பிலேயே காணப்படும். அதன் பிறகு பங்குச் சந்தை மீண்டு வரும்" என்றார்.

எனவே, இந்த இறக்கத்தின் போக்கை முதலீடு செய்யும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். சிறந்த பங்குகளைத் தேர்வு செய்து அதில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.