Published:Updated:

பணவீக்கத்தால் பாதிக்கப்படாத தரமான நிறுவனங்கள்..!

ஷேர் மார்க்கெட் 
ஸ்ட்ராட்டஜி
பிரீமியம் ஸ்டோரி
ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 3

பணவீக்கத்தால் பாதிக்கப்படாத தரமான நிறுவனங்கள்..!

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 3

Published:Updated:
ஷேர் மார்க்கெட் 
ஸ்ட்ராட்டஜி
பிரீமியம் ஸ்டோரி
ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைய விஷயங்களை நாம் எதிர்கொண்டு விட்டோம். சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக ரீதியான உறவுகளில் பல சிக்கலான சூழ்நிலை களை எதிர்கொண்டோம். கோவிட்-19 குறித்து விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை. அமெரிக்கத் தேர்தல்களில் ரஷ்யா மறைமுக மாகத் தலையீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டு அமெரிக்கர்களுக்குப் பழகிப்போன ஒன்றாகி விட்டது. இறுதியாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்த போர்.

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

இரண்டாம் பனிப்போர்...

இவை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து ஒரு பனிப்போரை உருவாக்கிவிட்டது. இந்தப் பனிப்போரை இரண்டாம் பனிப்போர் என்று கூட சொல்லலாம். 1989-களில் பெர்லின் சுவரானது தகர்க்கப்பட்ட பின்னால் தொடங்கிய உலகமயமாக்கல் என்கிற மகத்தான நடைமுறையானது ரஷ்யா - உக்ரைன் மீது போர் தொடுத்ததாலும், ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு சீனா முழு ஆதரவு அளித்ததாலும் பெருமளவுக்கு மாறப்போகிறது என்றே தோன்றுகிறது.

சர்வாதிகார ரஷ்யாவும் சீனாவும்...

கடந்த கால வரலாற்றை உற்றுப் பார்த்தால், ரஷ்யாவிலும் சீனாவிலும் ஜனநாயகம் என்பது கிஞ்சித்தும் இல்லாமல், சர்வாதிகார ஆட்சி என்ற பின்னணியில் நீண்ட காலமாகச் செயல் பட்டு வருவது தெளிவாகத் தெரியும்.

கடந்த 500 வருடங்களில் ரஷ்யா தன்னுடைய மேற்கு மற்றும் கிழக்கு எல்லையைக் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு போர்களில் ஈடுபடவேண்டி யிருந்தது. இயற்கையான பாதுகாப்பு அரண்கள் (மலை, கடல் போன்ற) எதுவும் இல்லாமல் போனதே இதற்குக் காரணம். இதனாலேயே ரஷ்யாவானது மாஸ்கோவில் ஓர் உறுதியான தலைமையின் கீழ் தொடர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்தத் தலைவர்கள் மிகவும் அரிதாகவே ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

சீனாவும் ரஷ்யாவைவிட அதிகமான காலத்துக்கு ஜனநாயகம் என்பது இல்லாமலேயே செயல்பட்டு வந்துள்ளது. பல நூறு ஆண்டுகளுக்குமுன், சீனா தன் மிகப் பெரிய நிலப்பரப்பை நிர்வகிக்க ஒருங்கிணைந்த நிர்வாக முறையை அறிமுகப்படுத்தி, அதை இன்றுவரை தொடர்கிறது.

பணவீக்கத்தால் பாதிக்கப்படாத
தரமான  நிறுவனங்கள்..!

தார்மீகப் பொறுப்புடைய இந்தியா...

இந்தியாவானது இந்த நடைமுறைகளில் சீனா மற்றும் ரஷ்யாவைவிட முற்றிலும் மாறுபட்ட தாகவே இருந்துவந்துள்ளது. இந்தியா பல்வேறு ராஜாக்களைக் கொண்ட ராஜ்ஜியமாகவே இருந்தது. அவ்வப்போது இவர்களுக்குள் போரும் நடந்தது. அவ்வப்போது இந்த ராஜ்ஜியங்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமையாகவும் செயல்பட்டு வந்தது. சீனாவைப் போன்றோ ரஷ்யாவைப் போன்றோ பலநூறு ஆண்டுகள் போர் என்பதை பெரிய அளவில் எதிர்கொள்ளாத நாடாகவே இந்தியா இருந்து வந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆளும் நபர் கள் (ராஜாவாக இருந்தாலும் சரி, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருந்தாலும் சரி) சீனா மற்றும் ரஷ்யாவைப்போல் அல்லாமல், தார்மீகப் பொறுப்பை உணர்ந்து செயல் படுபவர்களாகவே இருந்து வந்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்க மற்றும் ஐரோப் பாவைப் போன்ற அளவிலான தார்மீகப் பொறுப்பு இருந்து வந்துள்ளது என்றுகூட சொல்ல லாம். இதனாலேயே இன்றைக்கு உருவாகி இருக்கும் இரண்டாம் பனிப்போரில் மிகவும் கவனத்து டன் (அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற) கூடிய நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டியுள்ளது.

இரண்டாம் பனிப்போரால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள்...

இன்றைய சர்வதேச சூழ்நிலையில், இந்தியா ஏனைய முக்கியமான ஜனநாயக நாடுகள் எடுக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் என்ற நிலையே இருக் கிறது. இந்த நிலை கிட்டத்தட்ட நாட்டோவின் (NATO) ஆசிய அணுகுமுறையைப் போன்றே இருக்கிறது. இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு, அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடு மற்றும் வர்த்தக வரவு (ஐ.டி சர்வீசஸ், ஃபைனான்ஸ், ஹெச்.ஆர், அவுட்சோர்ஸிங் & மார்க் கெட்டிங்) போன்றவை தொடர்ந்து இந்தியாவை நோக்கி வருவதற்கு இந்த ஜனநாயக நாடுகளின் நிலைப்பாட்டை யொட்டியே இருப்பது உதவும் என எதிர்பார்க்கலாம். இந்த வித முதலீடுகள் மற்றும் வர்த்தக ரீதியான வரவுகள் இந்தியா வைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

பணவீக்கத்தால் பாதிக்கப்படாத
தரமான  நிறுவனங்கள்..!

இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, சேவைகளின் மதிப்பு என்பது 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. அமெரிக்கா, கனடா, யுகே மற்றும் யூரோப்பியன் யூனியனின் ஒட்டு மொத்த சேவைகளின் மதிப்பு 15.2 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 10% அளவு தற்போது இந்தியாவின் பங்களிப்பு (அவுட்சோர்ஸிங் முறையில்) உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பங்களிப்பு இதில் 1.5 டிரில்லியன் டாலர் என்ற அளவில் வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது (20% ஆண்டு கூட்டு வட்டி வளர்ச்சி அடிப்படையில்). ஏனைய விஷயங் கள் எல்லாம் சரிசமமாக இருக்கும் போது, இந்தியாவின் பண வீக்கத் தைக் கணக்கில் கொள்ளாத நாமினல் ஜி.டி.பி-யில் இது 1.2% அளவிலான வளர்ச்சிக்கு காரண மாக இருக்கும் எனலாம். இதனால் அடுத்த 10 வருடங்களில் இந்தியாவின் ஜி.டி.பி-யில் கிட்டத்தட்ட 21% சேவைகளின் பங்களிப்பாக இருக்க வாய்ப்புள்ளது. இ.பி.எஃப்.ஓ மற்றும் சி.எம்.ஐ.இ வெளிடும் தரவுகளைப் பார்க்கும் போது, கடந்த மூன்று வருடங்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பார்மல் செக்டாரின் பங்களிப் பானது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதையே காட்டு கிறது. 2020-22 நிதியாண்டுகளில் 33 மில்லியன் வேலைகள் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. (பார்க்க, எதிர்பக்கம் உள்ள சார்ட்)

முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதால், அடுத்த பத்து வருடங்களுக்கு பணி யாளர்களுக்கான சம்பள உயர்வானது (Wage inflation) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சீனாவின் விலை குறைந்த பொருள்களின் (கெமிக்கல், விளையாட்டுச் சாமான்கள் போன்றவற்றில்) உற்பத்தி மையமாக இருப்பது குறைய ஆரம்பித்துள்ளதும், குளோபல் சப்ளை செயினில் உருவாகி வருகிற மாறுதல் களாலும் இந்தியாவின் சி.பி.ஐ இன்ஃப்ளேஷனானது 6% என்கிற அளவில் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

பணவீக்கத்தால் பாதிக்கப்படாத
தரமான  நிறுவனங்கள்..!

பணவீக்கத்தால் தரமான நிறுவனங்கள் பாதிப்படையுமா?

இரண்டாம் பனிப்போரால் அதிகரிக்கும் இன்ஃப்ளே ஷனின் காரணமாக முதலீட்டாளர்கள் உடனடியாக வங்கியின் எஃப்.டி-கள், அரசாங்கத்தின் பாண்டுகள் மற்றும் கார்ப்பரேட் பாண்டுகளுக்கு தங்களுடைய முதலீடுகளை மாற்றிவிட்டுவிடுவார்கள். ஆனால், இன் ஃப்ளேஷன் என்பது இந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை வெகுவாகக் குறைத்துவிட வாய்ப்புள்ளது. உதாரணமாக, கடந்த 12 மாதங்களில் அரசின் 10 வருட பாண்டுகளில் முதலீடு செய்தவர்கள் கிட்டத்தட்ட 2% வருமானத்தையே பெற்றுள்ளனர். இது இன்ஃப்ளேஷனுக்கு ஈடானதாக இல்லாமல், பணத்தை நஷ்டப்படுவதற்கு ஈடானதாகவுமே இருக்கிறது.

இதற்கு மாறாக, தலைசிறந்த பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம். ஏனென்றால், இன் ஃப்ளேஷன் காரணமாக உயரும் செலவினங்களை (மூலப் பொருள்களின் விலை, சம்பளம் மற்றும் இதர செலவுகள்) விலையை அதிகரிப்பதன் மூலம் (Pricing power) வாடிக் கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் இந்த நிறுவனங்கள் சீரான லாபத்தைப் பெற்று சந்தை தரும் வருமானத்தைவிட (Nifty return) அதிக அளவிலான வருமானத்தை முதலீட்டாளருக்குத் தர வாய்ப்புள்ளது. (பார்க்க, மேலே உள்ள அட்டவணை)