Published:Updated:

அமெரிக்கா போல இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உதவும் நான்கு முக்கியமான சீர்திருத்தங்கள்!

முக்கியமான சீர்திருத்தங்கள்
பிரீமியம் ஸ்டோரி
முக்கியமான சீர்திருத்தங்கள்

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 5

அமெரிக்கா போல இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உதவும் நான்கு முக்கியமான சீர்திருத்தங்கள்!

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 5

Published:Updated:
முக்கியமான சீர்திருத்தங்கள்
பிரீமியம் ஸ்டோரி
முக்கியமான சீர்திருத்தங்கள்

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

கடந்த பத்து வருடத்தில் இந்தியாவில் நடந்த கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத் தங்களின் (Structural reforms) பலனை முழுமையாக அனுபவிக்கப்போகும் நேரத்தில் இருக்கிறோம்.

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

``1870-ம் ஆண்டில்தான் அமெரிக்காவின் எழுச்சி உதயமான வருடமாகும். அதற்கடுத்து வந்த 60 ஆண்டுகளில் ஒவ்வொரு அமெரிக்கரின் வாழ்விலும் பல்வேறு விதமான அதிரடியான முன்னேற்றங்கள் ஏற்பட்டது. 1929-ம் ஆண்டில் அமெரிக்கா நகரங்களில் இருந்த வீடுகள் அனைத்தும் மின்சாரம், இயற்கை எரிவாயு, தொலைபேசி, குழாயில் விநியோகிக்கப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றத்துக்கான பொதுவான வடிகால் குழாய் வசதி போன்ற அனைத்து விஷயங்களிலும் நெட்வொர்க் செய்யப்பட்டுவிட்டது.

இந்த வித நெட்வொர்க் இணைப்பால் குடிமக்களின் சமநிலை என்பதையே குறிப்ப தாக இருந்தது. அதாவது, ஏழை, பணக்காரர் என்றில்லாமல் அனைவருமே மின்சாரம், தொலைபேசி, எரிவாயு, தண்ணீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றுதல் என்ற ஐந்து விஷயங் களைப் பெறுவதற்கு ஒரே நெட்வொர்க்கில் இணைந்தனர்” என ராபர்ட் கோர்டான் எழுதிய `தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் அமெரிக்கன் குரோத்’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா அடைந்த வளர்ச்சி...

இரண்டாவது உலக யுத்தம் தொடங்கு வதற்கு 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் உருவான இந்த நெட்வொர்க்கானது, அமெரிக்காவில் தொழில் மற்றும் வர்த்தகம் நடைபெறும் விதத்தில் கணிசமான முன்னேற் றத்தைக் கொண்டுவந்தது. 1880-களில் ரயில்வே இருப்புப்பாதைகள் முழுமையாக போடப் பட்டது. புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் டெலிபோன்கள் மூலம் இணைக்கப்பட்டுவிட்டன. 1908-ம் ஆண்டில் போர்டு-டி மாடல் கார்கள் அறிமுகப் படுத்தப்பட்டபின், 1940-களில் தார்ச்சாலைகள் அமெரிக்கா முழுக்க போடப்பட்டன.

நாடு முழுக்க அமைந்த இந்த நெட்வொர்க்கால் சின்னச் சின்ன சந்தைகளாகவும், குறிப்பிட்ட நிலப்பரப்புடன் இணைந்த பிராந்தியப் பொருளாதாரமாக இருந்த நிலை மாறி, ஒட்டுமொத்த அமெரிக்காவையும் ஒருங்கிணைத்த மிகப் பெரிய சந்தையாக (பொருளாதாரமாக) உருவெடுத்தது. தேசிய அளவிலான விற்பனை மற்றும் விநியோகத்துக்கான நெட்வொர்க் உருவான காரணத்தால் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக மிகப் பெரிய நிறுவனங்களாக உருவெடுத்தன. அதற்குத் தேவையான அளவில் தங்களுடைய ஆராய்ச்சி வசதிகளைக் கட்டமைத்துக் கொண்டு வெற்றிகரமாக இயங்க ஆரம்பித்தன. இதற்கான முதலீடுகள் அமெரிக்கப் பங்குச் சந்தை வழியாகவும், அன்றைய காலத்தில் இருந்த முதல் தலைமுறை இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் நிறுவனங்களான ஜேபி மார்கன், லசார்ட் (Lazard), கோல்டுமேன் போன்ற நிறுவனங்கள் வாயிலாகக் கிடைத்து வந்தன.

அமெரிக்கா போல இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உதவும் நான்கு முக்கியமான சீர்திருத்தங்கள்!

அப்போதிருந்த அமெரிக்க நிலையில் இன்று இந்தியா...

இன்றைக்கு இந்தியா 1870 முதல் 1940 வரையிலான கால கட்டத்தில் அமெரிக்கா இருந்த சூழ்நிலையில் இருக் கிறது. பெருந்தொற்று காலத் துக்குப்பின் இந்தியா பல்வேறு பொருளாதார ரீதியிலான ஒருங்கிணைந்த சக்திகளின் சங்கமத்தால் அதிவேகமாக மீண்டுவருகிறது. இந்த ஒருங்கிணைந்த சக்திகளால் இந்தியா ஆசியாவிலேயே வேகமாக வளரும் ஒரு பொருளாதாரம் என்ற நிலையை 2022-ம் ஆண்டில் எட்டிவிடும். அதுமட்டுமல்ல, அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்த அளவுக்கு அதிக அளவிலான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நிலைமை யைத் தொடர்ந்து தக்கவைத் துக் கொள்ளவும் வாய்ப் புள்ளது என்று மே 14-ம் தேதியிட்ட ‘தி எகனாமிஸ்ட்’ இதழின் தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது குறிப் பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். (ஆதாரம்: https://www.economist.com/leaders/2022/05/13/the-indian-economy-is-being-rewired-the-opportunity-is-immense).

இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் 4 கட்டமைப்பு முன்னேற்றங்கள்...

எகனாமிஸ்ட் பத்திரிகை இந்தியாவின் வளர்ச்சி குறித்து இந்தளவுக்கு உறுதி யாக நம்பிக்கை தெரிவிக்கக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால், பின்வரும் நான்கு அடிப்படைக் கட்டமைப்பு முன்னேற் றங்கள் என்பது நன்றாகப் புரியும்.

1. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு நெட் வொர்க் கில் உருவான முன்னேற்றங்கள்...

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய நெடுஞ்சாலைகளின் நெட்வொர்க்கானது இரு மடங்கானது. விமானப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது. பத்து ஆண்டு களுக்கு முன் பூஜ்ஜியம் (ஆதாரம்: Investtech) என்ற அளவில் இருந்த சரக்குகள் கொண்டு செல்லும் சிறப்பு வழிப்பாதை (Frieght Corridor) மார்ச் 2021 இறுதி வாக்கில் 1,110 கிலோ மீட்டர் என்ற அளவில் உருவாக்கப்பட்டு இருந்தது.

மேலும், இணைய வசதியை உபயோகிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 8% (2010-ம் ஆண்டு அளவீடு) என்ற அளவில் இருந்து 43% (2020-ம் ஆண்டு அளவீடு) என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது (ஆதாரம்: https://bit.ly/3O2lmtD).

இதே காலகட்டத்தில் டேட்டாவைப் பயன்படுத்துவதற்கு ஆகும் செலவானது கணிசமான அளவு குறைந்தும் இருக்கிறது. உலக நாடுகளில் இருக்கும் அனைத்து நாடுகளையும்விட அதிக அளவிலான டேட்டாவை இந்தியா உபயோகிக்கிறது.

மேலும், இதிலுள்ள மிக முக்கியமான மற்றொரு விஷயம், கடந்த பத்து ஆண்டுகளில் ரீடெயில் பணப் பரிமாற்றம் என்பது கரன்சி (ரூபாய் நோட்டுக்கள் பரிமாற்றம்) என்பதில் இருந்து கிட்டத்தட்ட 100% அளவுக்கு எலெக்ட்ரானிக் கிளியரிங்குக்கு மாறியுள்ளது. (பார்க்க அட்டவணை 1).

அமெரிக்கா போல இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உதவும் நான்கு முக்கியமான சீர்திருத்தங்கள்!

இந்த அளவுக்குப் பணப்பரிமாற்றம் டிஜிட்டல் மயமாவதற்கு காரணமாக இருந்தது ‘யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்பேஸ்’ (UPI) என்னும் நடைமுறையே ஆகும். 2016-17 நிதியாண்டில் ஒரு பில்லியன் டாலர் என்ற அளவீட்டில் இருந்த யு.பி.ஐ மூலமான பணப்பரிமாற்றம், 2020-21 நிதியாண்டில் 560 பில்லியன் டாலர் என்ற அளவாக இருக்கிறது. யு.பி.ஐ நடைமுறையில் உள்ள ‘பீம்’ (BHIM) என்னும் இலவச ஆப் வழியாக 2019-20 நிதியாண்டில் நடைபெற்ற பரிமாற்றம் என்பது இந்திய ஜி.டி.பி-யில் 15% அளவிலானது என்பதை அவசியம் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும் (ஆதாரம்: https://bit.ly/3xKmkoq).

2. வரி சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் கணிசமான அளவில் தொடர்ந்து வரிச் சீர்திருத்தங்கள் (நேரடி மற்றும் மறைமுக வரி) நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த சீர்த்திருத்தங்கள் வாயிலாக மேம்படுத்தப்பட்ட வரி அமலாக்கம் மற்றும் வரி செலுத்துவோர் விருப்பத் துடன் சரியான அளவிலான வரிசெலுத்துதல் போன்றவை அதிக அளவிலான வரி வசூலுக்கு வழிவகை செய்தது. இதன் காரணமாக நேரடி மற்றும் மறைமுக வரி என்ற இரண்டும் வசூலான அளவானது, கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்தது. (பார்க்க, அட்டவணை 2)

வரி ஏய்ப்பு செய்வது கடினமாகி வருவதால், வரிவசூ லானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வரி செலுத்த தயங்கும்/மறுக்கும் அன்-ஆர்கனைஸ்டு பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து, ஆர்கனைஸ்டு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளன. உதாரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில் பிளாஸ்ட்டிக் பைப்புகள் உற்பத்தியில் அன்-ஆர்கனைஸ்டு உற்பத்தியாளர்களின் பங்களிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. (பார்க்க, அட்டவணை 3)

அமெரிக்கா போல இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உதவும் நான்கு முக்கியமான சீர்திருத்தங்கள்!

3. வங்கிகளின் செயல்பாடுகளை சீராக்கியது

இந்திய வங்கிகள் எனர்ஜி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறைக்கு 2011-ம் ஆண்டு முதல் அதிக அளவில் கடன் வழங்க ஆரம்பித்தன. இதன் காரணமாக 2015-ம் ஆண்டில் ஒட்டுமொத்த வங்கித் துறையும் அதிகப்படியான வாராக் கடன் என்ற சிக்கலில் மாட்டிக்கொண்டது.

இந்திய ரிசர்வ் வங்கி 2015-ம் ஆண்டில் வங்கிகளின் சொத்துகளின் தரத்தை (Asset quality) பரிசீலனை செய்து, பின்னர் 2016-ம் ஆண்டில் வங்கி திவால் சட்டத்தை (IBC - Insolvancy & Bankruptcy Code) நடைமுறைக்குக் கொண்டு வந்தது. மேலும், சில பொதுவுடமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு அதிகரிப்பும் (Recapitalization) சில வங்கிகளின் இணைப்பும் பரிந்துரைக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டும் விட்டது.

இவ்வாறு வங்கித் துறையில் ஒருங்கே எடுக்கப்பட்ட மூன்று நடவடிக்கைகளும் வாராக்கடன் அளவைக் கணிசமாகக் குறைக்கவும், வங்கிகள் போதுமான அளவு மூலதனத்துடன் (capital adequacy) செயல்படவும் வழிவகை செய்தது. (பார்க்க, அட்டவணை 4)

அமெரிக்கா போல இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உதவும் நான்கு முக்கியமான சீர்திருத்தங்கள்!

4. ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் போன்

டிஜிட்டல் முறையில் சோஷியல் செக்யூரிட்டி (தனி மனிதனுக்கான சமூக பாதுகாப்பு) என்பதை நடைமுறைப்படுத்துவதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட 330 மில்லியன் ஜன்தன் யோஜ்னா கணக்குகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

இந்த வித டிஜிட்டல் நடவடிக்கை களின் காரணமாக பயனாளர் களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் நேரிடையாக அரசாங்கம் வழங்கும் மானியங்கள் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகள் மட்டுமே பலனடைவது உறுதி செய்யப்பட்டும், ஒரே பயனாளி பலமுறை அரசு வழங்கும் சலுகை களைப் பெறுகிற முறைகேடு முழுமையாகத் தடுக்கப்பட்டும் விடுகிறது.

இந்தியாவில் வசிக்கும் 300 மில்லியன் குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்கு தலா குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக அமெரிக்க டாலர் அளவீட்டில் 250 டாலர்கள் என்ற அளவிலான தொகை நேரடியாகத் தற்போது பல்வேறு திட்டங்கள் வாயிலாக சென்றடைகிறது.

இந்தத் தொகை யின் ஒட்டுமொத்த மதிப்பு 70 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்தவித நேரடியான பலன்களைத் தகுதி யான பயனர்களுக்கு வழங்கும் நடைமுறையே இந்தியாவில் பெருந் தொற்றுக் காலத்திலும்கூட வறுமையை ஒழிப்பதில் பெரும் பங்கு வகித்தது.

மேலே சொன்ன நான்கு சீர்திருத்தம் சார்ந்த விஷயங்களும் இந்தியப் பொருளாதாரத்தின் மீது கணிசமான தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த ஐந்து வருடங்களில் இந்திய குடும்பங்களின் சேமிப்பு ஜி.டி.பி-யின் சதவிகித அளவீட்டில் பார்த் தால், கிட்டத்தட்ட இரட்டிப் பாகி இருந்தது.

மேலும், பத்து ஆண்டு களுக்குமுன் 5 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, தற்சமயம் 1.5% என்கிற அளவுக்குக் குறைந்திருக் கிறது. இது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்தது (நீண்ட நாள் சராசரியாக 4 சத விகிதமாக இருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 3% என்ற அளவில் உள்ளது).

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப் பிழப்பு என்பது இந்தியாவுக் கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே நிலவும் பண வீக்கத்தில் இருக்கும் வித்தியா சத்தை உள்ளடக்கியதாகும். இந்தியாவில் சராசரி அளவீட்டில் குறைவாக இருக்கும் பணவீக்கத்தின் அளவும் இந்த விஷயத்தில் நம் நாட்டுக்கு சாதகமாகவே இருக்கிறது.

ஆக, இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான் இந்தியா கடந்த காலத்தில் எதிர்கொண்ட கடுமையான சூழல்களிலும் (கட்டமைப்பு ரீதியிலான நிலைகளிலும்) அதன் ரியல் ஜி.டி.பி-யின் வளர்ச்சி யானது திடமாக (10 வருட சராசரி அளவு 6% என்ற அளவில்) இருக்க பெரிய அளவில் உதவியாக இருந்தது.

முதலீட்டுத் திட்டங்களில் இதன் பிரதிபலிப்பு...

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நல்ல ஸ்திர மான நிலையில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் உருவான இந்தவித அனுகூலங்களைத் தங்களுக்கு மிகவும் சாதகமாக பின்வரும் வழிமுறைகள் மற்றும் யுக்திகளைக் கையாண்டதன் மூலம் பயன்படுத்திக் கொண்டன.

(அ) அஸெட் - டேர்ன்ஓவரை அதிகப்படுத்துதல், (ஆ) வரிக்குப் பிந்தைய வருமானத்தை (EBITA) அதிகப் படுத்துதல் (அதாவது, செயல்திறன் வாயிலாக லாபத்தை அதிகரித்தல்), (இ) செயல்பாட்டு ரீதியான பணத்தைத் திறமையாக நிர்வகித்தல் (Improving cash conversion cycles).

இந்த வகை நடைமுறை முன்னேற்றங்களால் இந்த நிறுவனங்களால் அதிக அளவிலான தங்கு தடையில்லாத பண வரத்தை உருவாக்கிக் கொள்ளவும், அவ்வாறு உருவான பணவரத்தை விரிவாக்கங்களில் மறுமுதலீடு செய்து தன்னுடைய வியா பாரத்தின் அளவை 4 - 5 மடங்காக கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்துக்கொள்ள வும் முடிந்தது என்பதை நீங்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.

அது போன்ற நிறுவனப் பங்குகளைக் கண்டடைவதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்!

(முதலீடு தொடரும்)