Published:Updated:

இந்திய முதலாளிகள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்வது சரியான வாதமா?

ஷேர் மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர் மார்க்கெட்

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 7

இந்திய முதலாளிகள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்வது சரியான வாதமா?

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 7

Published:Updated:
ஷேர் மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர் மார்க்கெட்

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

பல காலமாக இந்தியா குறித்து சொல்லப்பட்டுவந்த விஷயங்கள் இப்போது நியாய மற்றதாக மாறியிருக்கிறது. இந்திய கார்ப்ப ரேட்டுகள் குறித்து பேசினாலே நட்பின் காரணமாகத் தரப்படுகிற சலுகைகள் சார்ந்த முதலாளித்துவம் (Crony capitalism) கொண்ட சூழல் நிலவும் நாடு என்கிற எதிர்மறைக் கருத்து தான் காலம்காலமாகப் பேசப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் ஒருவருக்கெதிராக ஒருவர் ‘க்ரோனி கேப்பிடலிஸத்’தால் பலன் அடைந்தவர் எனக் குற்றம் சாட்டிக்கொள்வது, ‘க்ரோனி கேப்பிடலிஸ’த்தால் பலனடைந்த பில்லியனர்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் விரும்பி வெளியிடுவது போன்ற காரணங்களால் இந்தியாவில் கேப்பிடலிஸம் பற்றி புரிந்துகொள்ள நினைப்பவர்கள்கூட, ‘இதுதான் உண்மை போல’ என்று நினைக்கிற அளவிலேயே சூழல் இருக்கிறது.

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, உலக வங்கியின் அளவீட்டின் படி பார்த்தால், இந்தியா குறைந்த நடுத்தர வருமானம் (ஆண்டுக்கு சராசரியாக 2,000 டாலர் தனிநபர் வருமானம்) கொண்ட நாடு என்கிற நிலையில் இருந்து, உயர் நடுத்தர வருமானம் (ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 4,000 டாலர்கள் என்ற தனிநபர் வருமானம்) கொண்ட நாடு என்று மாற்றத்தை நோக்கி வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக் கிறது. இந்த நிலையில், இந்தியா எதிர்கொள்கிற வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் என்பவை எந்த மாதிரியானவை என்று பார்ப்போம்.

அராஜகம் செய்யும் குண்டர்கள்...

முதலில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்று பார்ப்போம். ‘டயமண்ட்ஸ் இன் தி டஸ்ட்: கன்சிஸ்டன்ட் காம்பவுண்டிங் ஃபார் எக்ஸ்ட்ரார்டினரி வெல்த்’ என்கிற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் கூறியதைப் போல், இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலானது, பிசினஸில் ஈடுபட்டு அராஜகம் செய்யும் குண்டர்களால் (பிசினஸ் செய்யும்) உருவாவதுதானே தவிர, ‘க்ரோனி கேப்பிடலிஸ்ட்’களால் அல்ல. ஏனென்றால், இப்படி அராஜகம் செய்யும் குண்டர்கள் போன்ற பிசினஸ் மேன்கள் ஊழல் பேர்வழிகளாக இருக்கின்றனர். இவர்கள் அரசின் கண்காணிப்புக்குள் வராமல், ஒரு கட்டத்தில் முதலீட் டாளர்கள் மற்றும் கடன் தந்தவர்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் பற்றிய செய்திகள் அதிகம் வருவதில்லை.

இந்திய முதலாளிகள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்வது சரியான வாதமா?

ஆண்டறிக்கையைப் படிக்காமல் முதலீடு செய்யும் நிறுவனங்கள்...

அது மட்டுமல்ல, இந்த நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் செய்த முதலீட்டை எப்படி மதிப்பிழக்கச் செய்தார்கள் என்பதைப் பற்றியும் எழுதியுள்ளோம். இது போன்ற முதலீட்டு மதிப்பிழப்புக்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, காக்ஸ் & கிங்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் குறித்து அமலாக்கத் துறை ஆய்வு செய்ததைப் போல், ஒரு தீவிரமான ஆராய்ச்சியை இந்த நிறுவனத்தின் கணக்குவழக்குகளில் செய்தால், பங்குச் சந்தையில் திரட்டப்பட்ட நிதி மற்றும் பல்வேறு வங்கிகளில் கடனாகப் பெறப்பட்ட தொகை எப்படி மாயமானது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

இது பற்றி நாங்கள் ஆய்வு செய்தபோது எங்களுக்கு ஒரு கேள்வி எழுந்தது. முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன் இந்த நிறுவனம் வெளியிட்ட ஆண்டறிக் கைகளைக் கொஞ்சமும்கூட படித்துப் பார்த்து, புரிந்து கொண்டு செயல்படவில்லையே, ஏன் என்கிற கேள்வி எங்களுக்கு வந்தது. இந்த நிறுவனம் மட்டுமல்ல, அம்டெக் ஆட்டோ, திவான் ஹவுஸிங் என்பது போன்ற நிறுவனங்களின் ஆண்டறிக்கையைப் படிக்காமலே அதில் முதலீடு செய்தார்களா என்பது குறித்து விரிவாக ஆராய்ந்தோம்.

எங்கள் ஆராய்ச்சி முடிவின்படி, இந்தியாவில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களில் கிட்டத்தட்ட எண்ணிக்கையில் பாதி அளவிலான நிறுவனங்களின் கணக்குவழக்குகளில் சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. இந்த நிறுவனங்கள் செயல்படும் துறைகள் எல்லாம் அரசின் தலையீடு என்பது மிகக் குறைவாக இருக்கும் துறைகள் ஆகும். இன்றைய தலையாய பிரச்னை, இது மாதிரி குளறுபடியாகக் கணக்குவழக்குகளை வைத்திருக்கும் பிசினஸ்மேன்களே அன்றி கடந்த காலத்தில் தொடர்ந்து நாம் பேசி வந்த பிரச்னையான ‘க்ரோனி கேப்பிடலிஸம்’ இல்லை. எனவே, இன்றைய முக்கியமான பிரச்னையாக இருக்கும் இதைப் பற்றி பேசாமல், கடந்த காலப் பிரச்னையைப் பற்றியே பேசிவருகிறோம். பழங்கால பிரச்னை பற்றிப் பேசுவதால், இன்றைய இந்த முக்கியமான பிரச்னைக்கு முடிவு காண முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.

வளர்ந்துவரும் இந்தியா...

நவீன இந்தியா எதிர்கொள்ளும் இந்த இரண்டு பிரச்னைகளும் நமக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளை நமக்குத் தருகிறது. கடந்த பத்தாண்டுகளாக ஒருங்கிணைந்த பொருளாதாரமாக உருவெடுத்து வருகிறது நம் நாடு. நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலையின் அளவு இரட்டிப்பாகியுள்ளது. விமானத்தில் பயணிப்பவர் களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைப்பைப் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 50 மடங்கு அதிகரித்துள்ளது. 13 ஆண்டுகளுக்குமுன் மூன்றில் ஒரு குடும்பத்துக்கே வங்கிக் கணக்கு இருந்தது. இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்குகள் இருக் கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, சரக்கு மற்றும் பொருள்களுக்கான வரி யானது (GST) நமது பொருளா தாரத்தை அர்த்தமுள்ள வகையில் ஒருங்கிணைத்து உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

இது போன்ற ஒருங் கிணைக்கப்பட்ட இந்தியா வானது, திறமையாக நிர்வாகம் செய்யப்படும் செயல்திறன் மிக்க பெரு நிறுவனங்கள் தங்களுடைய சிறகுகளை அகில இந்திய ரீதியாக விரிக்க உதவியது. ஆங்காங்கே செயல்பட்டு வந்த சிறு மற்றும் மண்டல அளவிலான நிறுவனங்களை வெற்றி கொண்டு செயல் படவும் மிகவும் உதவியாக இருக்கிறது.

உதாரணமாக, இந்தியா ஒருங்கிணைந்த பொருளா தாரமாக உருவெடுத்ததன் காரணமாக ஒரு காலத்தில் மண்டல ரீதியான நிறுவனங் களே பெரும்பங்கு வகித்த கடன் வழங்கும் தொழிலில் (வங்கி/வங்கி அல்லாத) இன்றைக்கு ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி போன்ற நிறுவனங்கள் அகில இந்திய ரீதியாக சிறப்பாக செயல்பட்டு, டாப்-20 லாபம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.

இதேபோல், இந்தியாவில் உருவான நூற்றுக்கும் மேற் பட்ட யூனிகார்ன் ஸ்டார்ட் அப்களில் பெரும்பாலானவை இந்தப் பொருளாதார ரீதியான ஒருங்கிணைப்பை டெக்னாலஜி ரீதியாக பலப் படுத்தி செயல்பட வைக்கிற முயற்சியில் ஈடுபடுபவை யாகவே இருக்கின்றன. உதாரணமாக, டாக்சிகளை இணைக்கும் அக்ரி கேட் டர்கள், உணவு டெலிவரி, இறைச்சி நுகர்வு, பலசரக்கு, வேலைவாய்ப்பு விளம் பரங்கள் / சேவை மற்றும் கல்வி போன்ற துறைகளைக் கூறலாம்.

இந்திய முதலாளிகள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்வது சரியான வாதமா?

முன்மாதிரியாகத் திகழும் பங்கு நிறுவனங்கள்...

ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், கோட்டக் பேங்க் மற்றும் பிடிலைட் போன்ற நிறு வனங்கள் டெக்னாலஜியை உபயோகப்படுத்தி நவீன இந்தியாவில் உருவாகும் வாய்ப்புகளை வியாபாரமாக மாற்றிக்கொள்வதில் முனைப்பாக இருக்கின்றன. இது போன்ற திறன் வாய்ந்த நிறுவனங்கள் எப்படி நவீன மார்க்கெட்டிங், நவீன ஆராய்ச்சி மற்றும் நவீன டெக்னாலஜி மூலம் தங்களுடைய லாபத்தை வேறு உயரத்துக்கு எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பணியாற்றிய ஜான் சுடான் என்பவர் எழுதிய ‘சங்க் காஸ்ட்ஸ் அண்ட் மார்க்கெட் ஸ்ட்ரக்சர்’ புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளதைப் போன்றே தற்போதைய நிகழ்வுகள் இருக்கின்றன.

இந்திய முதலாளிகள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்வது சரியான வாதமா?

எப்படி சாதித்தது ஏசியன் பெயின்ட்ஸ்?

ஜான் சுடானின் புத்தகத்தின் கருத்தை ஏசியன் பெயின்ட் நிறுவனத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் 1970-ம் ஆண்டில் 80 மில்லியன் ரூபாய் முதலீட்டைச் செய்து ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை வாங்கியது. இந்த கம்ப் யூட்டரை உபயோகித்து ஒவ்வொரு டீலருக்கும் டெலிவரி செய்யச் செல்லும் டிரக்குகளில் அனுப்பப் படும் சரக்குகளின் அடிப்படையில் பெயின்டுக்கான தேவை குறித்த தரவுகளை – டீலர் வாரியாக, நிற வாரியாக ஆராய்ந்து அறிந்துகொண்டது. இதன்மூலம் ஏனைய பெயின்ட் உற்பத்தியாளர்களைவிட அதிக அளவில் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் விருப்பம் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.

மேலும், இந்த விதமான தரவுகளை எப்படி சேகரிப்பது / கையாள் வது என்ற இரண்டிலும் இந்த நிறுவனம் கணிச மான அளவிலான நிபுணத்துவத்தையும் இதே காலகட்டத்தில் பெற்றுவிட்டது. 1980, 90-களில் ஆரம்பித்து இன்றைக்கு வரை இந்தத் தரவுகளைப் பல்வேறு மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களின் மூலம் சேகரித்து ஆய்வு செய்துவருகிறது ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம்.

இந்த ஆய்வுகளின் மூலம் டிமாண்ட் குறித்த கணிப்புகளை சரிவர செய்தும், உருவாகும் தேவைக்கேற்ப மூலப்பொருள்களை சரியான நேரத்தில் கொள்முதல் செய்தும், பெயின்ட்டின் ஸ்டாக்கை சரிவர நிர்வகித்தும், உற்பத்தித் திட்டங்களைத் துல்லியமாகத் திட்டமிட்டும் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தால் செயல்பட முடிவதால், 25 ஆண்டுகளுக்கு முன் நூறு நாள்கள் என்றளவில் இருந்த ‘வொர்க்கிங் கேப்பிடல் சைக்கிள்’, தற்போது ஆறு நாள் என்கிற அளவுக்கு இந்த நிறுவனத்தால் குறைக்க முடிந்துள்ளது.

இதன்மூலம் போட்டியாளர்களைவிட எட்டு மடங்கு அதிக அளவில் கேஷ் ஃப்ளோவை உருவாக்குகிற அளவுக்குச் செயல்பட வைத்து உள்ளது. இந்த கேஷ்ஃப்ளோவை ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் தன்னுடைய விரிவாக்கங் களுக்காகத் திறம்பட முதலீடு செய்து (கடந்த 25 ஆண்டுகளில் 15 மடங்கு என்ற அளவுக்கு) தனது நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி அளவை அதிகரித்துக்கொண்டது. மேலும், டெக்னாஜி சார்ந்த முதலீடுகள் (உதாரணமாக, அழகான இல்லம் என்ற திட்டத்தில் 3D விஷுவலைசேஷன் டெக்னாலஜி) பலவற்றையும் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தால் செய்ய முடிந்தது.

அதுமட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளில் ஃப்ரீ கேஷ் ஃப்ளோவை 70 மடங்கு அதிகரித் ததால் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் சிறந்த கன்சிஸ்டன்ட் காம்பவுண்டிங் நிறுவனமாகத் திகழ்ந்துவருகிறது.

முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

இன்றைக்கு டாப் 15 நிறுவனங் களே இந்திய கார்ப்பரேட்டு களின் லாபத்தில் 90% அளவிலான லாபத்தில் பங்களிப்பைத் தருவ தாக இருக்கின்றன. 10 ஆண்டு களுக்குமுன் இந்த டாப் 15 நிறுவனங்கள் மொத்த கார்ப்ப ரேட் லாபத்தில் 30% என்ற அளவிலான பங்களிப்பையே கொண்டிருந்தன.

இந்த அளவுக்கு ஒட்டுமொத்த இந்திய கார்ப்பரேட் நிறுவனங் களின் லாபத்தில் மிகக் குறைந்த நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதனாலேயே நிஃப்டி 50-யில் இருக்கும் நிறுவனங்களில் உள்ள 16 நிறுவனங்கள் மட்டுமே சேர்ந்து 80% செல்வப் பெருக்கத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கி யிருக்கிறது. இவற்றில் ஒரு சில நிறுவனங்களே ‘க்ரோனி கேப்பிடலிஸ்ட்’ நிறுவனங் களாக இருக்கின்றன என்கிற உண்மையை ‘க்ரோனி கேப்பி டலிஸம்’ இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று அடிக்கடி பேசிவருபவர்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பு: ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டக் பேங்க் மற்றும் பிடி லைட் நிறுவனங்களின் பங்கு களில் மார்செல்லஸ் இன்வெட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோக்களின் வாயிலாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.