Published:Updated:

பொதுத்துறை நிறுவனங்களின் தயாள குணம்தான் தனியார் நிறுவனங்கள் வளரக் காரணமா?

பொதுத்துறை நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பொதுத்துறை நிறுவனங்கள்

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 9

பொதுத்துறை நிறுவனங்களின் தயாள குணம்தான் தனியார் நிறுவனங்கள் வளரக் காரணமா?

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 9

Published:Updated:
பொதுத்துறை நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பொதுத்துறை நிறுவனங்கள்

இந்திய வங்கித் துறையில் பொதுத்துறை நிறுவனங்களால் மூலதனத்துக்கான செலவைவிட (Cost of Capital) அதிகம் பங்கு மூலமான வருமானத்தை (Return on Capital) ஈட்ட முடிவதில்லை. சிறுபான்மை பங்குதாரர் களுக்கு நல்ல வருமானத்தைத் தரும் முயற்சியை எடுப்பதா அல்லது பெரும்பான்மை பங்குதார ரான அரசின் சமூக மற்றும் அரசியல் ரீதியான நோக்கங்களை நிறைவேற்றுவதா என்கிற குழப்பமே இதற்குக் காரணம்.

செளரப் முகர்ஜி
நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

இந்தக் குழப்பத்தின் காரணமாகவே பொதுத் துறை வங்கிகளின் பங்கு மூலமான வருமான மானது அதன் போட்டியாளர்களான தனியார் வங்கிகளின் பங்கு மூலமான வருமானத்தை விட கணிசமான அளவில் குறைவாகவே உள்ளது. இதனாலேயே தொடர்ந்து இந்த வங்கிகள் தங்களுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தத் தேவையான மூலதனத்தைப் (Capital Adiquacy Ratio) பெற அரசின் தயவை எதிர்பார்த்து நிற்க வேண்டியிருக்கிறது.

அரசாங்கமானது வெவ்வேறு காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவையான மூலதனத்தை (வியாபாரத்தை விரிவாக்க உதவும் வகையில்) அளித்துவந்தபோதிலும், வங்கித் துறையில் தனியார் வங்கிகள் தொடர்ந்து தங்களுடைய சந்தைப் பங்களிப்பை (பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கைப் பற்றியதன் மூலம்) அதிகரித்து, சிறுபான்மை பங்குதாரர்களுக்கு நல்லதொரு லாபத்தை உருவாக்கித் தந்து வருகின்றன. (பார்க்க, அட்டவணை - 1)

இதே மாதிரியான நிலையே இன்ஷூரன்ஸ் துறையிலும் இருக்கிறது. இன்ஷூரன்ஸ் துறையிலும் (ஆயுள் மற்றும் பொதுக் காப்பீடு ஆகிய இரண்டிலுமே) தனியார் நிறுவனங்கள் வேகமாகத் தங்களுடைய சந்தைப் பங்களிப்பை அதிகரித்துக்கொண்டே (பொதுத்துறை நிறுவனங்கள் இழக்கின்றன) வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களின்
தயாள குணம்தான் தனியார் நிறுவனங்கள் வளரக் காரணமா?

பொதுக் காப்பீட்டுத் துறையில் இயங்கும் பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அவற்றுக்குத் தேவையான மூலதனம் இல்லாமலும் (நான்கு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் இன்ஷூரன்ஸ் ஆணையம் குறிப்பிட்டுள்ள சால்வன்சி லெவலுக்குக் கீழேயே இயங்கி வருகின்றன), நவீன புராடெக்ட்டுகளை அறிமுகப்படுத்தாமலும், குறைந்த தரம் கொண்ட ரிஸ்க்குகளை ஏற்றுக்கொண்டும் (பயிர்களுக்கான இன்ஷூரன்ஸ், அரசாங்கம் வழங்கும் பொதுமக்களுக்கான இன்ஷூரன்ஸ் போன்றவை), தொடர்ந்து அன்றாடம் வந்து சேரும் பிரீமியம் தொகையை சரிவர நிர்வகிக்காமலும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், இந்தப் பொதுத்துறை நிறுவனங்களை அரசாங்கம் வருங்காலத்தில் அது தீட்டுகிற சமூகநலத் திட்டங்களில் பங்கேற்க வைக்கும் (லாபம் குறைவான) என்றே எதிர்பார்க்கலாம். இது தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மேன்மேலும் தங்கள் சந்தைப்பங்களிப்பை உயர்த்தி, லாபம் பார்க்கவே உதவும்.

ஆயுள் காப்பீட்டுப் பிரிவில் எல்.ஐ.சி நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய சந்தைப்பங்களிப்பை இழந்துவருகிறது. இதற்குக் காரணம் அந்த நிறுவனத்தின் விநியோக சேனலும் (ஏஜெண்ட்டுகள் மூலம் பாலிசிகளை விற்பது), அது வழங்குகிற ஒரே மாதிரியான இன்ஷூரன்ஸ் புராக்ட்டுகளுமே (இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் ‘பார்ட்டிசிப்பேட்டிங்’ வகையிலானவை) ஆகும். இந்த வகை பாலிசிகளையே பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து விற்று வருவதால், புதிய நவீன வகையான பாலிசிகளை இந்த ஏஜென்டுகளுக்கு மிகவும் கடினமாகவே இருக்கும். ஆனால், தற்சமயம் இந்த மாதிரியான நவீன வகையிலான பாலிசிகளே வாடிக்கையாளர்கள் மத்தி யில் பெருமளவிலான வரவேற்பைப் பெறுகிறது.

இது தவிர, இந்த நிறுவனத் தில் வேறு ஒரு சிக்கலும் இருக்கிறது. காலம் காலமாக இந்த நிறுவனமானது பாலிசி தாரர் நலத்தை மட்டுமே பேணி வருவதை கொள்கை யாகக் கொண்டிருந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு சிறப்பான லாபத்தைத் தர முடியாது.

ஒரு வங்கியின் புத்தக மதிப்பு என்பது (book value) மூன்று விஷயங்களை அடிப் படையாகக்கொண்டு நிர்ண யிக்கப்படுகிறது. அதிக பங்கு மூலதனத்தின் மூலம் கிடைக் கும் அதிக வருமானம், அதிக அளவிலான மறு முதலீடுகள் (லாபத்தில் இருந்து) செய்யப் படுதல், அதிக அளவிலான ப்ரைஸ்-டு-புக்வேல்யூ அடிப்படையில் முதலீடுகள் திரட்டப்படுதல் என்பவையே அந்த மூன்று விஷயங்கள் ஆகும்.

கடந்த பத்து வருடங்களில் அதிக தரம் கொண்ட சில இந்திய வங்கிகள் தங்கள் பங்குகளின் புத்தக மதிப்பை கணிசமான அளவில் அதிகரித்துள்ளன. இதை செய்வது சாதாரண காரியம் அல்ல. பங்கு மூலதனத்தின் மூலமான வருவாயை அதிகரிக்காமல், புதிய நிதியை அதிக ப்ரைஸ்-டு-புக்வேல்யூ-வில் திரட்டியதாலேயே இது சாத்தியமானது. இப்படி அதிக ப்ரைஸ்-டு-புக்வேல்யூ-வில் புதிய நிதியைத் திரட்டு வது எப்படி சாத்தியம் எனக் கேட்டால், அந்த நிதியை (அதிக அளவிலான) லாபகர மான விதத்தில் கடனாக வழங்கும் திறன் அந்த வங்கிக்கு இருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் நம்புவதால்தான்.

பொதுத்துறை நிறுவனங்களின்
தயாள குணம்தான் தனியார் நிறுவனங்கள் வளரக் காரணமா?

இந்த நிலை அடுத்த பத்து வருடத்துக்குத் தொடரும் என்றே நான் எதிர்பார்க்கி றேன். குறைந்த வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீடுகளை இனி எதிர்பார்க்க முடியாது என்று பலரும் கூறி வரும் இந்த வேளையிலும், இது போன்று கூடுதலாக கிடைக் கும் முதலீடுகளைக் கொண்டு அதிக லாபத்தை உருவாக்கத் தெரிந்த பெரிய வங்கிகளுக்குக் குறைந்த வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீடுகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்க வாய்ப் புள்ளது.

இனி வங்கித் துறையில் பெரிய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லை என்று பலரும் கூறிவந்தாலுமே என் பார்வையில் அடுத்த பத்து வருடங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்றே பின்வரும் காரணங் களால் தோன்றுகிறது.

1. கடந்த பத்து ஆண்டு களில் இந்தியாவில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் பலவும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் இப்போது செயல்பட ஆரம்பித்துள்ளது. மேலும், வரும் பத்து ஆண்டுகளில் நாமினல் ஜி.டி.பி வளர்ச்சி அளவானது இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருக்கும் வாய்ப்பு இருப்பதால், கடன்களுக் கான தேவையும் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

2. பொதுத்துறை வங்கிகள் கணிசமான பங்களிப்பை ஏற்கெனவே இழந்திருந்தாலும் இன்னமும் சுமார் 60% அளவிலான சந்தைப் பங்களிப்பு அவற்றின் வசமே இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் டேட்டாக்களின்படி, இந்தியப் பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ள கடன்களில் சுமார் 56% அளவிலானவை முதன்மை நிலை பாதுகாப்பான கடன் இல்லை என்பதை நாம் மறக்கக் கூடாது. (பார்க்க, அட்டவணை-2)

பொதுத்துறை நிறுவனங்களின்
தயாள குணம்தான் தனியார் நிறுவனங்கள் வளரக் காரணமா?

3. கடனை வழங்குவதில் முக்கியமான அம்சமாக விளங்குவது, வங்கிகளின் கிளைகளாகும். தனியார் வங்கிகள் இதைத் தொடர்ந்து அதிகரித்தும் பொதுத்துறை வங்கிகள் இதைக் குறைத்தும் வருகின்றன.

டெக்னாலஜி தரப்பில் ஒரு வங்கியின் வெப்சைட்டை எத்தனை முறை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற அளவீட்டில் பார்த்தால், பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளின் வெப்சைட்டுகள் அதிக அளவில் பயன் படுகிறது என்றே சொல்ல வேண்டும்.

உதாரணமாக, பொதுத் துறை வங்கிகளில் அதிக அளவில் பயன்படும் வெப்சைட்டான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வெப்சைட்டைவிட (2.3 முறை வாடிக்கையாளர்களால் சராசரியாகப் பயன் படுத்தப்படுகிறது) தனியார் வங்கிகளின் வெப்சைட்டுகளின் இடையே அதிக அளவில் பயன்படுத்தப்படும் வெப்சைட்டான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வெப்சைட் (11.2 முறை) கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிக உபயோகமாகிறது. இதனால் பிராண்ட் ரீகால் மற்றும் குறுகியகால நிதி போன்றவற்றிற்கு வங்கிகளுக்கு மிக உதவியாக இருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களின்
தயாள குணம்தான் தனியார் நிறுவனங்கள் வளரக் காரணமா?

இன்ஷூரன்ஸ் துறையிலும் இதே நிலைதான். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கிளைகளையும் வாடிக்கையாளர் சேவை மையங்களையும் அதிகரித்துக்கொண்டே போகவும் செய்யும் வேளையில் பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைக்கான வசதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே போகின்றன. இது தவிர, தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் பாலிசிகளில் பல்வேறு நவீனங்களை (Product Innovation) கொண்டுவந்துகொண்டே இருக்கின்றன. உதாரணமாக, கிரெடிட் லைஃப், டேர்ம் இன்ஷூரன்ஸ், லாங் டேர்ம் கியாரண்டீட் புராடெக்ட்ஸ் முதலியன). இது தவிர, தங்களது புராடக்ட்டுகளை வாடிக்கையாளரிடம் கொண்டுசேர்க்கும் ஏஜென்டுகளைச் சேர்ப்பது, பயிற்றுவிப்பது, வியாபாரத்தை விருத்தி செய்ய வைப்பது போன்ற பல்வேறு விஷயங்களிலும் சிறப்பாகக் கையாண்டு வருகின்றன.

ஆனால், எல்.ஐ.சி-யோ காலம்காலமாக ஒரே விதமான புராடக்ட்டை விநியோகம் செய்வதிலேயே தன்னுடைய நெட்வொர்க்கைப் பயன்படுத்தி வந்துள்ளது. அதே போல, பொதுக் காப்பீட்டுப் பிரிவில் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் (உதாரணமாக, மோட்டார் இன்ஷூரன்ஸ்) டெக்னாலஜியைப் பெருமளவில் உபயோகிப்பதன் மூலம் பாலிசிதாரரைச் சேர்த்தல், இழப்பீட்டை வழங்குதல், புதிய வசதிகளை பாலிசிகளில் சேர்த்தல் போன்றவற்றை வாடிக்கை யாளர்களே செய்துகொள்ளும் அளவுக்கு வசதியை செய்து தருகின்றன. இவை அனைத்தும் பொதுக் காப்பீட்டுத் துறையில் பெரிய அளவிலான முன்னேற்றத்தைத் தனியார் நிறுவனங் களுக்கு தரும் என எதிர்பார்க்கலாம்.

இதனாலேயே இன்றைக்கு தலைசிறந்த அளவில் கடன் வழங்கும் மற்றும் இன்ஷூ ரன்ஸ் தொழில் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து அடுத்த பத்து ஆண்டுகளிலும் மென்மேலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் காணப் போகும் வளர்ச்சியானது இன்றைய சூழலில் இந்தியா வில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிற மிகப் பெரிய தனியார் வங்கிகள் மற்றும் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற வற்றுக்கு தொடர்ந்து கணிச மான வளர்ச்சியை (பொதுத் துறை நிறுவனங்களின் இழப்பில் இருந்து) அடையப் பெருமளவில் உதவியாக இருக்கும்!