பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இந்தியப் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க 3 வழிகள்..!

ஷேர் மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட்

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 10

மேக்ரோ டிரெண்டுகள், ஃபெடரல் ரிசர்வுடைய முடிவுகள், எஃப்.ஐ.ஐ-க்கள் எவ்வளவு முதலீட்டைச் செய்துள்ளனர் என்பது போன்ற டேட்டாக்களைத் தொடர்ந்து ஃபாலோ செய்யும் நபரா நீங்கள்?

ஷேர்களின் பி/இ மல்ட்டிஃபிளைத் தொடர்ந்து ஃபாலோ செய்துகொண்டிருப் பவரா நீங்கள்?

மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் உலாவும் பங்குகள் குறித்த கிசுகிசுக் களை இந்த நிமிடம் வரை அப்டேட்டாக வைத்திருப்பவராக நீங்கள்?

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

இவை அனைத்தையும் செய்த பின்னாலும் கோவிட் 19-க்குப் பின்னால் வந்த பங்குச் சந்தையின் ஏற்றத்தில் உங்களால் பெரிய அளவிலான லாபம் பார்க்க முடியவில்லையா? கவலை வேண்டாம். எங்கள் மார்செல்லஸ் நிறுவனத்தின் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு சிறப்பு பரிசை உங்களுக்குத் தந்து உதவப் போகிறோம். பங்குச் சந்தையில் லாபம் பார்க்க உதவும் மூன்று சிறந்த வழிகளை இந்த வாரம் சொல்கிறேன். மேக்ரோ, செய்திகள், பங்கின் விலை போன்றவற்றைத் தொடர்ந்து பின்பற்றாமலேயே பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க உதவும் மூன்று வழிகள் பின்வருவனவாகும்.

1. பொதுத்துறை நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பானது தொடர்ந்து குறைவதால் உருவாகும் அனுகூலத்தைப் பெறுவது.

இந்திய பொருளாதாரத்தின் ஒரு சில செக்டார்களில் பொதுத்துறை நிறுவனங்களே இன்றைக்கும் கணிசமான சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. நிர்வாகத்திறன் மிக்க நிர்வாகிகள் கிடைப்பது அரிய விஷயமாக இருக்கிற இந்த நாட்டில் பொதுத்துறை நிறுவனங் களால் சிறந்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தவும், அவர்களைப் பணியில் நிலைநிறுத்திக்கொள்ளவும் முடிவதேயில்லை. திறமையைத் தன்வசம் ஈர்த்து வைத்துக்கொள்ளும் இந்தப் போரில் வெற்றி பெறுகிற முன்னணித் தனியார் நிறுவனங்களால் இந்தவித திறமையான நபர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடிவதாலேயே இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பைத் தொடர்ந்து கபளீகரம் செய்துவருகின்றன. இந்த நிலை ஆண்டாண்டு காலமாகவும் ஏன் தசாப்தங்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறது. பொதுத்துறையில் செயல்படும் வங்கிகள், ஆயுள் காப்பீடு மற்றும் ஏனைய பொதுக் காப்பீடுகளை வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து தனியார் நிறுவனங்களிடம் தங்களுடைய சந்தைப் பங்களிப்பை இழந்துவருகிறது. இந்த வித சந்தைப் பங்களிப்பு இழப்பானது ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் (ஆயுள் காப்பீடு) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்ட் (பொது காப்பீடு) போன்ற நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்கிறது. இந்த சந்தைப் பங்களிப்பு அதிகரிப்பால் இதுபோன்ற தனியார் நிறுவனங்களின் பங்கின் விலையும் ஏற்றத்தைச் சந்திக்கிறது.

இந்தியப் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க 3 வழிகள்..!

2. கறுப்புப் பணம் குறைவதால் உருவாகும் அனுகூலத்தைப் பெறுவது...

நான் ஏற்கெனவே பல கட்டுரைகளில் கூறியுள்ளபடி, 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யும், அதன் பின்னால் ஜி.எஸ்.டி ஏய்ப்பைச் செய்யும் நிறுவனங் களைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்தால் காட்டப்படும் முனைப்பையும் பார்த்த பின் வரி ஏய்ப்பை செய்து வந்த நிறுவனங்கள் வரியை ஒழுங்காகக் கட்ட ஆரம்பித்தன. வரி ஏய்ப்பின் மூலம் சம்பாதித்த அதிகமான லாபமானது ஒரேயடியாகக் குறைந்த காரணத் தால் தங்களுடைய உற்பத்தியையும் அதுவரை வரி ஏய்ப்பின் மூலம் அதிக லாபம் சம்பாதித்துவந்த நிறுவனங்கள் குறைத்துக் கொண்டன. அல்லது ஒரேயடியாகத் தங்களுடைய நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டன (2021-22 நிதியாண்டில் கிட்டத்தட்ட 7.2 லட்சம் நிறுவனங்கள் மூடப் பட்டுவிட்டன).

இது போன்ற வரி ஏய்ப்பு நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட மூடுவிழா மற்றும் அவை தாமாகவே செய்துகொண்ட உற்பத்திக் குறைப்பு போன்றவை செயல்திறன் மிக்க, நன்கு நிர்வகிக்கப்பட்டு வருகின்ற மற்றும் நேர்மையாக வரியைச் செலுத்துகிற நிறுவனங்களுக்கு நல்லதொரு ஒரு வாய்ப்பாக உருவானது. இது போன்ற நிறுவனங்கள் இதன் மூலம் தங்களுடைய சந்தைப் பங்களிப்பை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்த நிலையில், புத்திசாலித் தனமான முதலீட்டாளரான நீங்கள் செய்ய வேண்டியது என்ன? எந்தெந்தத் துறைகளில் எல்லாம் வேகமாக ஃபார்மலை சேஷன் (கறுப்புப் பொருளா தாரத்தை நசுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கான டெக்னிக்கல் பெயர்) நடக் கிறதோ, அந்தத் துறைகளில் செயல்பட்டு வருகிற நல்ல திறமையான மற்றும் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிற நிறுவனங்களைக் கண்டறிந்து, அதில் முதலீடு செய்ய வேண்டும். இந்த வித கறுப்புப் பொருளாதாரம் நசுக்கப்படுவதால், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் பெர்ஜர் பெயின்ட்ஸ் (திறன் அதிகம் கொண்ட பெயின்ட் உற்பத்தி நிறுவனங்கள்), அஸ்ட்ரல் பாலி (மிக அதிக திறன் கொண்ட சி.பி.வி.சி பைப் உற்பத்தி நிறுவனம்), பிடிலைட் (மிக அதிக திறன் கொண்ட அட்ஹிசிவ் மற்றும் வாட்டர் புரூப்பிங் பொருள்கள் உற்பத்தி நிறுவனம்) மற்றும் டைட்டன் (மிக அதிக திறன் கொண்ட ஜுவல்லரி நிறுவனம்) போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து பலன் பெற்று வருகின்றன.

இந்தியப் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க 3 வழிகள்..!

3. வேகமாக குறைந்துவரும் சீனாவின் உற்பத்தி...

1985 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சியானது தடுத்து நிறுத்த முடியாத ஒன்றாக இருந்து வந்தது. இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுவந்த துறைகளான ஆக்டிவ் பார்மச்சூட்டிக்கல் இன்க்ரிடியன்ட்ஸ் (API), ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ், சிந்தெட்டிக் டெக்ஸ்டைல்ஸ், பல்வேறு வகையான பிளாஸ்ட்டிக்குகள், காலணி கள், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறை களிலும் இந்திய நிறுவனங் களின் வளர்ச்சியை இந்த 30 ஆண்டுகளில் சீனா கபளீகரம் செய்து வந்தது. ஆனால், 2015-ம் ஆண்டுக்கு பின் (என்ன காரணம் என்று முழுமையாக எனக்கும் புரிய வில்லை) ஏனோ சீனாவின் இந்த வேகமான ஓட்டம் தடைபட ஆரம்பித்தது. அது மட்டுமல்ல, ஆண்டுகள் போகப் போக சீனாவின் பொருளாதார மற்றும் அரசி யல் சூழலானது கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைய ஆரம்பித்தது.

இன்றைக்கு நாம் கூர்ந்து நோக்கினால், சீனாவின் சிக்கல்கள் மிகவும் ஆழமான வையாகத் தோன்றுகிறது. முதலாவதாக, வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டதால், எக்கச்சக்கமான அப்பார்ட்மென்டுகள், அலுவலகங்கள் போன்ற வற்றைக் கட்டி எழுப்பி விட்டது. கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படாமல் இருக்கும் இந்த மாதிரியான கட்டடங்கள் பலவும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து அந்த நாட்டில் உள்ள ரியல் எஸ் டேட் டெவலப்பர்களைக் கடுமையான நிதிச் சிக்கலுக்கு ஆளாக்கிவிட்டது. இதனால் தோன்றிய நிதிப் பற்றாக் குறையால் அவர்கள் தற்போது கட்டிக்கொண்டிருக்கும் புதிய கட்டடங்களை அவர்களால் தொடர்ந்து கட்ட முடியவில்லை. அதே சமயம், கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டடங்களை வாங்க முன் வந்துள்ள சீன மக்களில் பலரும் கட்டுமான வேலை நடக்காத காரணத்தால் அவர்கள் வாங்கிய வீடுகளுக்கு கட்ட வேண்டிய மாதத் தவணைத் தொகையை செலுத்த மாட்டோம் என்று கலகம் செய்கின்றனர். இது சீனாவின் சிக்கலுக்கு இரண்டாவது பெரிய காரணமாக இருக்கிறது.

மூன்றாவது காரணம், மேலே சொன்ன இரண்டும் சேர்ந்து உருவாகும் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடனைக் கட்ட மக்கள் கலகம் செய்து ஒன்று கூடி மறுப்பதால், வங்கிகளின் வாராக்கடன் எக்கச்சக்கமாக அதிகரித்தது. வாராக்கடனை சீனாவின் ஜி.டி.பி-யின் 1% என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். இந்தப் புள்ளி விவரத்தில் இருந்தே இந்த நிகழ்வின் வீரியத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

நான்காவதாக, ஜி ஜின்பிங்கின் ஜீரோ கோவிட் பாலிசியின் காரணமாக தொடர்ந்து அறிவிக்கப்படும் லாக்டெளன்கள் வேறு அதிகப்படியான இடை யூறுகளை அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு தன்பங்குக்கு செய்து வருகிறது.

சீனாவின் இந்த இறங்கு முகமானது இந்தியாவில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு செயல்பட்டுவந்த லைட் இண்டஸ்ட்ரீயல் மற்றும் ஸ்பெஷாலிட்டி கெமிக் கல்ஸ் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.

இது போன்ற வாய்ப்பு களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களைத் தேர்ந் தெடுத்து முதலீடு செய் தால், அந்த நிறுவனங்களின் விற்று வரவும் லாபமும் கணிசமாக அதிகரிக்கும்போது அவற்றின் பங்குகளின் விலை உயர்வின் மூலம் கிடைக்கும் லாபமானது நிஃப்டி இண்டெக்ஸில் கிடைக்கும் லாபத்தைவிட அதிகமானதாக இருக்க வாய்ப்பு உண்டு!

குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பல பங்குகள் மார்செல்லஸ் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் இருக்கின்றன. மார்செல்லஸ் நிறுவனத்தின் பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பதினர் இந்தப் பங்கு களில் கணிசமாக முதலீடு செய்திருக்கின்றனர்.