Published:Updated:

நமது பொருளாதார வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் விளையாட்டுப் போட்டிகள்!

விளையாட்டுப் போட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி
விளையாட்டுப் போட்டிகள்

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 13

நமது பொருளாதார வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் விளையாட்டுப் போட்டிகள்!

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 13

Published:Updated:
விளையாட்டுப் போட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி
விளையாட்டுப் போட்டிகள்

பொதுவாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜி.டி.பி வளர்ச்சி போன்ற பொருளாதாரம் சார்ந்த குறியீட்டு அளவீட்டின் மீதே தங்களுடைய மொத்த கவனத்தையும் வைத்திருப்பார்கள். இவற்றுக்கு சமமான மற்றொரு அளவீடும் இருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

விளையாட்டுகளில் (போட்டிகளில் கலந்து கொள்ளுதல்/பயிற்சி பெற்று புரொஃபஷனல் வீரராக இருத்தல் போன்றவை) ஒரு நாட்டின் பங்களிப்பு எப்படி என்பதைக் குறிப்பதுதான் அந்த அளவீடு.

விளையாட்டு என்றவுடனேயே வணிக ரீதியாகப் பரபரப்பான விளையாட்டுகளான கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை மட்டுமே குறிப்பிடுவதாக நினைக்கக் கூடாது. ஓட்டப் பந்தய வீரர்கள், மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற நீண்ட காலம் பயிற்சி எடுக்க வேண்டியதும் அதே சமயம், பெரிய அளவிலான பண ரீதியான உடனடியான பலாபலன்களைத் தராததுமான விளையாட்டுகளையும் நாம் கட்டாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது போன்ற விளையாட்டுகளில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா பெற்ற எழுச்சியே இந்தியாவில் இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சமூக வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது. நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்கள் என்றில்லாமல், கிராமங்களில் இருக்கும் மனிதர்களும் இது போன்ற விளையாட்டுகள் குறித்து தெரிந்துகொண்டு அதில் பங்கேற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

நமது பொருளாதார வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் 
விளையாட்டுப் போட்டிகள்!

நிதானமான அதே சமயம், நிச்சயமான வளர்ச்சி

சமீபத்தில் பர்மிங்ஹாமில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா காட்டிய திறமையானது இது போன்ற கடுமையான பயிற்சிகள் தேவைப்படுகிற விளையாட்டு களில் நம் நாடு கடந்த 20 ஆண்டுகளில் அதிக பங்களிப்பை தந்து முன்னேறி வந்திருப்பதற்கு சாட்சியாக உள்ளது.

1998-ம் ஆண்டில் கிட்டத்தட்ட இந்தப் போட்டியில் 25 பதக்கங்களுக்குக் கீழே பெற்ற இந்தியா, அதன்பின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 60 பதக்கங்கள் என்கிற எண்ணிக்கைக்குக்கீழே போகாமல் இருக்கும் நிலையில் தொடர்ந்து இருந்துவருகிறது.

பர்மிங்ஹாமில் நடந்த போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் போன்ற போட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தால், இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும். இந்தப் போட்டிகள் நீக்கப்பட்ட பின்னாலுமே இந்திய விளையாட்டு வீரர்கள் 61 பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ளனர்.

ஒரு நாடானது விளையாட்டில் பெறும் வெற்றியானது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் ஒன்றாக இருக்கிறது என்கின்றன, பல்வேறு ஆய்வு முடிவுகள். ஒரு நாடு ஒலிம்பிக்கில் பெறுகிற பதக்கங்களின் எண்ணிக்கையானது அந்த நாட்டின் ஜி.டி.பி சார்ந்த வருவாயில் பெற்றிருக்கும் முன்னேற்றத்தை மட்டும் காட்டாமல், பொதுவான மக்கள் நலன் குறியீடுகளான ஹியூமன் டெவலப்மென்ட் இண்டெக்ஸ் (HDI) மற்றும் குவாலிட்டி ஆஃப் லைஃப் (QOL Index) போன்றவற்றில் கண்டிருக்கும் முன்னேற்றத்தைக் காட்டுவதாக இருக்கிறது என்கிறது, யுனிவர்சிட்டி ஆஃப் ஆம்ஸ்டெர்டாம் நடத்திய ஆராய்ச்சி முடிவுகள்.

மனித வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நேரடியான பங்களிப்பை அளிக்கும் வேலைவாய்ப்புகள் போன்றவை இந்தியாவில் சரியான அளவில் இல்லை என்கிற கோபம் நம்மில் பலருக்கும் இருக்கவே செய்கிறது. இந்த நிலையில், விளையாட்டில் நாம் பெற்றிருக்கும் முன்னேற்றம் என்பது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கியமான ஒரு விஷயம் என்று ஒருவர் சொன்னால், அதை நம்மால் சுலபத்தில் ஒப்புக் கொள்ளவே முடியாது. இது நம் மன நிலையில் இருக்கும் சிக்கல்.

இந்தவிதமான சிக்கலில் இருக்கும் நாம், விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி அதிக மாகிக்கொண்டே போகிறது என்று புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் இது குறித்து ஆராய்ந்து பார்த்தால், அதற் கான மூன்று காரணிகள் நமக்குத் தெளிவாகப் புலப் படும். சமூக முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தகவல்களைப் பெறு வதில் மக்கள் பெற்றுள்ள முன்னேற்றம் (ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் போன்றவை வாயிலாக) என்பவையே அந்த மூன்று காரணிகள் ஆகும்.

நமது பொருளாதார வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் 
விளையாட்டுப் போட்டிகள்!
நமது பொருளாதார வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் 
விளையாட்டுப் போட்டிகள்!

மேலே தரப்பட்டுள்ள அட்டவணைகள் இந்தியா கண்ட முன்னேற்றத்தை (சமுதாய முன்னேற்றம்: உணவு, உடல்நலம் மற்றும் கல்வி என்ற அளவீட்டில்) காட்டுவதாக உள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக பெரிய அளவிலான முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளது என்பதையே இந்த அட்ட வணைகள் சொல்கின்றன.

இந்தவித முன்னேற்றமானது உடனடி பலன்கள் எதையும் தராது. இந்த முன்னேற் றங்கள் நடந்து முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரே இதனால் விளையும் பயன்கள் நம் நாட்டுக்குக் கிடைக்கும். இந்த அபரிமிதமான வளர்ச்சியே இந்தியா இன்றைக்கு விளை யாட்டில் காண்கிற வெற்றிக்கு அடித்தளமாக இருக்கிற விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது அந்த நாடு விளையாட்டுப் போட்டிகளில் எந்த அளவுக்கு சிறப்பாக பங்கெடுத்து வெற்றி பெறு கிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள். அதுவும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் ஒரு நாட்டின் பங்கேற்பு மற்றும் வெற்றியானது இதை நேரடியாக பிரதிபலிப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. டார்ட்டமவுத் மற்றும் யுசி பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று, அதிக அளவிலான தனிநபர் சராசரி வருமானம் (per capita) இருக்கும் நாடுகளைச் சார்ந்த வீரர்களே அதிக அளவில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று விருதுகளைப் பெறுகின்றனர் என்று காட்டுகிறது.

இந்த ஆராய்ச்சி முடிவுகளின் அடிப் படையில் சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுக் காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி யானது மிகவும் கணிசமான அளவில் முன்னேறியுள்ளது நமக்குப் புரியும். உள்ளபடி பார்த்தால், இந்தியாவின் தனிநபர் வருமான மானது கடந்த 10 - 20 ஆண்டுகளில் கிட்டத் தட்ட ஆண்டொன்றுக்கு 4% - 5% அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

நம் நாடு கடந்து வந்த பாதையின் அடிப் படையில் பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளே இந்த விஷயத்தில் இந்தியாவின் தலைசிறந்த வளர்ச்சியைக் கொண்ட காலகட்டமாக இருந்துள்ளது. இந்த 20 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் பிறந்துவளர்ந்த குழந்தைகளே இன்றைக்கு உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகளைப் புரிகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

டெக்னாலஜி மற்றும் டிஜிட்டலைசேஷன் என்ற இரண்டால் இந்தியா கண்ட டிஜிட்டல் மாற்றமானது (ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல்) இவ்வளவு பெரிய நாட்டின் பொருளாதாரத்தை (பல பிரிவுகளாக சிதறி இருந்ததை) சுலபமாக ஒருங்கிணைத்து செயல்பட வைத்தது. கடந்த 5 - 6 ஆண்டு காலகட்டத்தில் தொழில்நுட்பத்தை மக்கள் விரும்பி உபயோகிப்பது (technology adaption) மிக வேகமாக நடந்துள்ளது.

நம் நாட்டு மக்கள் இணையத்தை அதிக அளவில் பயன்படுத்தும்போது பொருளாதாரத்தில் இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் இருக்கும் பணரீதியிலான வாய்ப்புகள் எல்லோருக்கும் தெளிவாகத் தெரியவரும். எல்லாத் தரப்பினரும் இதுபோன்ற விவரங்களை (என்னென்ன வகையான விளையாட்டுகள் இருக்கின்றன, என்னென்ன மாதிரியான பயிற்சிகள் தேவை, என்ன மாதிரியான உணவுகள் (nutrition) தேவை போன்றவை) சமமாகப் பெறும் சூழலில் நகரம், கிராமம் என்கிற வித்தியாசம் குறைந்து, நாட்டின் அனைத்து இடங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பது நடக்கும்.

உதாரணமாக, ஃபென்சிங் (fencing) என்கிற விளையாட்டு குறித்து நம் நாட்டில் அதிகம் பேருக்குத் தெரியாது. ஆனால், சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் இந்த விளையாட்டில் பங்கேற்று விளையாடினர். சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்த லான் பெளல்ஸ் (Lawn Bowls) என்ற விளையாட்டிலும் இதே நிலை தான். இந்த விளையாட்டில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை யாராலும் கவனிக் காமல் இருக்க முடியாது.

நமது பொருளாதார வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் 
விளையாட்டுப் போட்டிகள்!

முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

பொருளாதார வளர்ச்சியின் பலனை அளவிடும் சில அடிப் படை விஷயங்களில் இந்தியா சற்று பின்தங்கியுள்ளது என்பதைப் பெருங்குறையாகப் பலரும் கூறிவருகின்றனர். இவற்றில் இந்தியா இன்னும் சிறப்பாகச் செயல்பட வாய்ப் புள்ளது என்றபோதிலும், கடின மான பயிற்சிகள் தேவைப்படுகிற விளையாட்டுகளில் நம் நாட்டு வீரர்கள் பங்கேற்பது அதிகரிப்பு என்கிற அளவீட்டில் இந்தியா உயர்ந்துவருவது எதைக் காட்டு கிறது எனில், பொருளாதார வளர்ச்சியால் ஏற்படும் சமுதாய வளர்ச்சியானது தொடர்ந்து கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது என்பதை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்!