Published:Updated:

ராகுல் டிராவிட் Vs சச்சின்... முதலீட்டில் யார் ஸ்டைல் பெஸ்ட்?

ராகுல் டிராவிட் Vs சச்சின்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் டிராவிட் Vs சச்சின்

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 14

ராகுல் டிராவிட் Vs சச்சின்... முதலீட்டில் யார் ஸ்டைல் பெஸ்ட்?

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 14

Published:Updated:
ராகுல் டிராவிட் Vs சச்சின்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் டிராவிட் Vs சச்சின்

நீங்கள் பெங்களூரில் வசிப்பவராக இருந்தாலோ, பெங்களூர் சென்றிருந்தாலோ விமான நிலையத்துக்கு டாக்ஸியில் செல்வதில் இருக்கும் ஒட்டுமொத்த இடைஞ்சல் களையும் அனுபவித்திருப்பீர்கள். பல முறை விமானம் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கும் நிலையில், அவசர அவசரமாக விமான நிலையத்தை அடைந்து, விமானத்தைப் பிடித்த, ஒரு சில முறை தவற விட்ட அனுபவம் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இருக்கும். என்னால் மறக்க முடியாத பயணம் அவை.

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

இவ்வளவு இடைஞ்சல்கள் இருக்கும் சூழ்நிலையில்கூட பெங்களூரில் இருக்கும் டாக்ஸி டிரைவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். விமான நிலையம் செல்லும் நெடுஞ் சாலையில் எங்காவது தேக்கநிலை தென் பட்டால் உடனடியாகப் பாதையை மாற்றி சின்னச் சின்ன குறுக்கு சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் ஒரு சில கிலோ மீட்டர்களில் ஏர்போர்ட் நெடுஞ்சாலையைப் பிடித்துவிடு வார்கள். எங்கே நுழைந்து எங்கே வெளியேற வேண்டும், அந்தக் குறுக்கு சாலைகள் சந்து களில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.

இப்படி குறுக்குச் சாலை வழியாக மாறி மாறி பயணித்தும்கூட விமான நிலையத்துக்குச் சென்று சேரும் தூரம் என்னவோ குறைவதே யில்லை. ஏனென்றால், மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பதால், பயணிக்க வேண்டிய தூரத்தின் அளவு அதிகரிக்கிறது. இரண்டாவ தாக, சிறிய மற்றும் மிகவும் குறுகிய சாலைகளை மாற்றுப்பாதையாகத் தேர்ந்தெடுப்பதால், மிகவும் மெதுவாகவே அவர்கள் வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதலாகப் பயணிக்க வேண்டிய தூரத்தை வேகமாகக் கடக்க முடிவதில்லை. இது பயண நேரத்தை அதிகரிக்கவே செய்கிறது.

இதைவிட முக்கியமான ஒரு காரணமும் உண்டு. நெடுஞ்சாலையில் டிராஃபிக் ஜாம் ஏற்பட்ட உடனேயே பல டாக்ஸி டிரைவர்கள் மாற்றுப்பாதையில் செல்லத் தொடங்கிவிட, அங்கும் மினி டிராஃபிக் ஜாம் உருவாகி, வேகமான பயணம் என்பது நடக்காமல் போய்விடுகிறது.

ஒரு டிரைவர் டிராஃபிக் ஜாமைப் பார்த்து கலங்காமல், வேகம் முக்கியமில்லை, நிற்பதை விட நகர்தலே முக்கியம் என்ற மனநிலையில் ஆசுவாசமாக டென்ஷன் ஏதும் இன்றி இருக்கிறார். இன்னொரு டாக்ஸி ஓட்டுநரோ, டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்காமல், பயணியை விமான நிலையத்தில் சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கத் தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் எடுக்கிறார் என்ற திருப்தியுடன் செயல்படுகிறார்.

இந்த இருவருமே ‘இயக்கம்’ என்பதை ‘முன்னேற்றம்’ என்று மனதளவில் முடிவுசெய்து ஒப்புக்கொள்கிறார்கள் (movement = progress).

டாக்ஸி பயணத்தில் மட்டுமல்ல, விளையாட்டுப் போட்டிகளிலுமே இதுபோன்ற சூழல்கள் நிலவவே செய்கின்றன. உதாரணமாக, டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச்களில் ஒரு சில விளையாட்டு வீரர்கள் ஹைப்பர் ஆக்டிவ்வாக மைதானத்தில் செயல்படுவார்கள். ராகுல் டிராவிடைப் போன்றவர்கள் நிறுத்தி நிதானமாக விளையாடுவார்கள். ராகுல் டிராவிட் தனது 16 வருட இன்டர்நேஷனல் கிரிக்கெட் கரியரில் சச்சின் டெண்டுல்கரை விட அதிக எண்ணிக்கையிலான ரன்களை அடித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் நிதானமான இந்த பேட்டிங் ஸ்டைலே அவர் சாதாரணமாக பேட்ஸ்மேன்கள் செய்யும் தவறுகள் எதையும் செய்துவிடாமல் அதிக அளவிலான ரன்களை எடுக்க வழிவகை செய்துள்ளது இல்லையா?

நம்முடைய வாழ்வில் இது போன்ற மாயத் தோற்றங்களை முன்னேற்றம் என்று நாம் நம்பிவிடுகிறோம். ஒரு காரியத்தைச் செய்ய முயலும்போது இயங்கும் இயக்கத்தை (அந்த இயக்கமானது நாம் நினைத்த திசையில் நம்மைக் கொண்டு செல்கிறதா என்பது குறித்து சிந்திக்காமல்) நாம் முன்னேற்றம் என்று தவறாக நினைத்துவிடுகிறோம். கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்று வேறு நாம் கூறிக்கொள்கிறோம். நிஜமான முன்னேற்றம் தராத ஓர் இயக்கத்தை கஷ்டப்பட்டு செய்தால் என்ன, சுலபமாகச் செய்தால் என்ன, இரண்டும் ஒன்றுதானே!

ராகுல் டிராவிட் Vs சச்சின்... முதலீட்டில் யார் ஸ்டைல் பெஸ்ட்?

இயக்கம் என்பது எப்போதும் முன்னேற்றம் ஆகாது?

ஒரு முதலீட்டு நிர்வாகியாக நீங்கள் நிர்வகிக்கும் உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. உங்களுடைய ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்கள் கொஞ்சம் அச்சத்துடனேயே இருக்கிறார்கள். ஒரு சிலர் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். உங்கள் முதலீட்டு ஸ்டராட்டஜிகளை மாற்றிமையக்க நினைக்கிறீர் களா என்று கேட்டு அந்தக் கடிதங்கள் உங்களுக்கு வருகின்றன.

இதற்கு உங்களுடைய உடனடியான ரியாக்‌ஷன் எப்படி இருக்கும். உங்கள் டீமை மீட்டிங்குக்கு அழைத்து என்ன செய் கிறீர்கள், ஏன் இப்படி நம் போர்ட்ஃபோலியோ ரிட்டர்ன் மிக மோசமாக இருக்கிறது? இதுதான் உங்கள் அனாலிசிஸின் லட்சணமா? இப்படியே போனால் போனஸ் குறைந்துவிடும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிப்பது ஒரு வகை.

இப்படி எச்சரித்தால் என்னவாகும்? அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிப்பார்கள். முதலீடு செய்யப்பட்டுள்ள ஸ்டாக்குகள் குறித்து அவர்கள் செய்த ஆராய்ச்சிகளை மீண்டும் ஒரு முறை சரிபார்ப்பார்கள். உங்கள் நிறுவனத்தின் முதலீட்டுக் கொள்கைகளுடன் நீங்கள் கேட்ட இந்தக் கேள்விகள் சற்றும் ஒத்துப்போகாது என்பதால், எப்படி உங்கள் டீமை நீங்கள் வழிநடத்துவீர்கள், ஆய்ந்தாய்ந்து செய்யப்பட்ட முதலீடுகளை கையில் வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தவறு இல்லையா? இதன் பின்னால் உங்களுடைய டீமானது எப்போதும் ஒரு மன அழுத்தத்துடன் இருப்பதுபோல் காட்டிக்கொண்டிருக்கும். ஏனென்றால், போர்ட்ஃபோலியோவின் குறைந்த ரிட்டர்னை சரிசெய்ய ஏதோ நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என உங்களை நம்ப வைக்க வேண்டும் இல்லையா? இது போன்ற நடவடிக்கைகளால் யாருக்கு என்ன பலன்?

உங்களுடைய நிறுவனத் துக்கென்று ஃபேவரைட்டாக சில ஸ்டாக்குகள் இருக்கவே செய்யும். அதை நீங்கள் எப்போதும் துரத்தித் துரத்தி வாங்க மாட்டீர்கள். சரியான சமயத்தில் மட்டுமே வாங்கி யிருப்பீர்கள். இருப்பினும் ஒரு சில காலகட்டங்களில் உங்கள் போர்ட்ஃபோலியோ குறைவான வருமானத்தைத் தரவே செய்யும். உங்கள் நிறுவனத்தின் முதலீட்டுக் கொள்கைகள் மிக மிகத் தெளிவானதாகவும், தரமான ஸ்டாக்குகளை மட்டுமே நீங்கள் வாங்குவீர்கள் என்ற போதிலுமே, இது போன்ற தற்காலிக போர்ட்ஃபோலியோ அண்டர் பர்ஃபாமன்ஸ் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இந்தத் தற்காலிக நிலை யானது உங்களை அச்சுறுத்தவே கூடாது. இது போன்ற காலங்களில் நீங்கள் பயந்துபோய் எடுக்கும் நடவடிக்கைகள் முன்னேற்றம் போன்ற மாயத் தோற்றத் தையே உருவாக்குவதில் சென்று முடியும்.

இது போன்ற சூழ்நிலை களில் என்ன செய்ய வேண்டும்? உங்களுடைய முதலீட்டுக் கொள்கைகளை சரிபார்க்க வேண்டும். உங்களுடைய கொள்கை மற்றும் பேவரைட் ஸ்டாக்கு களில் அடிப்படையாக ஏதாவது பெரிய அளவில் மாறியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இவை எல்லாம் சரியாக இருந்தால் பயம் கொள்வதில் அர்த்தமே இல்லை.

ராகுல் டிராவிட் Vs சச்சின்... முதலீட்டில் யார் ஸ்டைல் பெஸ்ட்?

அசையாமல் இருப்பது எப்போது வளர்ச்சியாக மாறும்?

அவ்வப்போது எங்களுடைய அலுவலகத் துக்கு எங்களுடைய வாடிக்கையாளர்களும் எதிர்காலத்தில் வாடிக்கை யாளராக மாறப்போகிற வர்களும் வந்து செல்வார்கள். ஆரம்ப காலத்தில் பெரும் பாலானோர் எங்களுடைய அலுவலகத்தை சுற்றிப் பார்ப்பதிலேயே கவனமாக இருந்தனர். இந்த நிறுவனம் நம்முடைய கடினமான உழைப்பில் உருவான சேமிப்பைக் கொடுத்து நிர்வகிக்கச் சொல்வதற்கு உகந்ததுதானா என்று பார்க்கவே அவர்கள் இதைச் செய்கின்றனர் என்று நாங்கள் நினைத்தோம்.

எங்களுடைய ரிசர்ச் டீம் இருக்கும் இடத்தைத் தாண்டும்போது அங்கே நிலவும் அமைதியைக் கண்டு என்ன இப்படி அமைதியாக இருக்கிறது என்று கேட் பார்கள். ஏனென்றால், எங்களுடைய ரிசர்ச் அலுவலகத்தில் டிவியும் இருக்காது. பங்குகளின் விலை மாற்றத்தைக் காட்டும் கம்ப்யூட்டரும் இருக்காது. அதே போல, புரோக்கரேஜ் நிறுவனத்தில் இருந்து எங்களை அப்டேட் செய்வதற் காக போன்கள் எதுவும் வராது.

எங்களுடைய டீம் உறுப்பினர்கள் அலுவலகத்தில் இருக்கும்போது அமைதியாக அவர்களுடைய டேபிளில் இருந்துகொண்டு படித்துக்கொண்டிருப் பார்கள். இதனாலேயே எங்களுடைய விசிட்டர்களுக்கு எங்கள் அலுவலகம் விநோதமாக அமைதியாக இருப்பதைப்போல் தோன்றியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

டேபிளில் மணிக்கணக்காக அமர்ந்து ஆண்டு அறிக்கைகளைப் படித்து ஆராய்ந்து நோட்ஸ் எடுத்து செயல்படுவதுதான் ரிசர்ச் அனலிஸ்ட்டின் வேலையே. இதையும் தாண்டி புரடக்ட்டிவ்வான விஷயம் எது எனில், அதுவும் படிப்பதுதான். எங்களுடைய அலுவலகத்தில் படிப்பதற்கென்று எக்கச்சக்கமான புத்தகங்கள் இருக்கின்றன. ஸ்போர்ட்ஸ், சைக்காலஜி, வரலாறு போன்ற பிரிவு களில் புத்தகம், பிளாக்குகள், ஆர்ட்டிக்கிள்கள் என ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸைத் தாண்டிய பல விஷயங்களும் எங்களுடைய அலுவலகத்தில் இருக்கிறது. பல்வேறு தரப்பட வாசிப்பே ஒருவரை முதலீட்டுக் கலையில் நமக்கு ஆழமான அறிவைத் தரும்.

முதலீடுகளைச் செய்வதில் முன்னோடியான சார்லி மங்கர் கூறியதை இங்கே நான் நினைவு கூற விரும்புகிறேன். “நாங்கள் முடிவுகளை வெகுவேகமாக எடுத்துவிடுவோம். ஏனென்றால், அதற்கு தேவையான வாசிப்புகள் மற்றும் சிந்தனைகளை நீண்ட நேரம் செலவழித்து நடத்திவிடுவதால்’’ என்று கூறியுள்ளார் அவர்.

ஆனால், பலருக்கும் அமைதியாக அமர்ந்து படித்துக்கொண்டிருப்பது ஓர் இயக்கத்தில் இருக்கும் நிலை என்ற அளவில் பிடிபடுவதேயில்லை. அதை ஓர் இயக்கமற்ற நிலை என்றே நினைக்கின்றனர். உண்மையில் இதுபோன்ற மாயத்தோற்றமுள்ள இயக்கமற்ற நிலையே ஒரு போர்ட்ஃபோலியோவின் ரிட்டர்னை அதிகரிக்க உதவுவதில் பெரியதொரு காரணியாகத் திகழ்கிறது.

எனவே, அடுத்த முறை ஒரு பரபரப்பான நடவடிக்கையை நீங்கள் செய்ய முயலும்போது இது எந்தளவுக்கு நாம் முனைந்துள்ள செயலில் வெற்றி பெற உதவும் என்று சிந்திக்க ஆரம்பியுங்கள். இப்படி சிந்திப்பதன் மூலம் உற்பத்தியைவிட அதனால் கிடைக்கும் பலனின் அளவே சிறந்த அளவீடு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.