Published:Updated:

ஆதார் முதல் ஓ.என்.டி.சி வரை... வளர்ச்சிக்குக் கைகொடுத்த டிஜிட்டல் அஸெட்டுகள்!

டிஜிட்டல் அஸெட்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் அஸெட்டுகள்

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 15

ஆதார் முதல் ஓ.என்.டி.சி வரை... வளர்ச்சிக்குக் கைகொடுத்த டிஜிட்டல் அஸெட்டுகள்!

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 15

Published:Updated:
டிஜிட்டல் அஸெட்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் அஸெட்டுகள்

நம் நாட்டின் பொருளாதாரம் இன்று வேகமான வளர்ச்சியைக் கண்டு வர முக்கியமான காரணம், JAM. அதாவது, Jandhan, Aadhaar, Mobile என்பதன் சுருக்கம்தான் இந்த ஜாம். 2010-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆதார் பதிவுத் திட்டத்தில் இன்று வரை கிட்டத்தட்ட 120 கோடி பேர் ஆதார் பதிவு செய்துள்ளனர். மேலும், இதில் பாதிக்கும் மேற் பட்டோர் ஆதார் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பல விஷயங் களைக் கொண்டிருப்பதன் மூலம் உலகின் மிகப் பெரிய தேசியப் பதிவேட்டுத் திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என நாம் பெருமையுடன் கூற முடியும்.

செளரப் முகர்ஜி, 
நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

கோவிட் 19-ன் பாதிப்பு உலக அளவில் இருந்தபோது, மிகவும் எளிய நடைமுறை மூலம் ஏறக்குறைய ரூ.26 லட்சம் கோடி வரை யிலான தொகையைப் பயனாளிகள் சுலபமாகப் பெற முடிந்ததற்குக் காரணம், ஆதார்தான்.

அரசு தரும் நிவாரணங்கள் அதற்குரிய மக்களைச் சென்று சேர ஆதார் உறுதி செய் கிறது எனில், ஜன்தன் கணக்குகள் மூலம் அந்த நிவாரணம் எளிதில் சென்று சேர உதவி செய் கிறது. முந்தைய காலத்தில் நம் மக்கள் பணத்தை ரொக்கமாகவே வைத்திருக்க விரும்பிய நிலை ஜன்தன் வங்கிக் கணக்குகள் நடைமுறைக்கு வந்தபின் தலைகீழாக மாறி இருக்கிறது. இந்தக் கணக்குகளில் ரூ.150 லட்சம் கோடி மக்கள் பணம் இருப்பில் உள்ளதே இதற்கு சான்று. மேலும், ஜன்தன் திட்டத்தின்கீழ் ஆரம்பிக் கப்பட்ட 44 கோடி வங்கிக் கணக்குகளில் பாதி எண்ணிக்கையின் அளவிலான கணக்குகள் பெண்கள் என்பது முக்கியமான விஷயம்.

ஆதார், ஜன்தன் வங்கிக் கணக்குக்கு அடுத்த படியாக இணைந்தது மொபைல் போன்கள். ஆதார் எண்களையும் வங்கிக் கணக்குகளையும் இணைத்து செயல்படுத்துவதில் மொபைல் போன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. 2016-ம் ஆண்டில் ஜியோ மொபைல் சேவையானது ஆரம்பிக்கப்பட்டபின், மொபைல் போன் களின் உபயோகம் நம் நாட்டில் பெருமளவில் அதிகரித்தது.

ஆதார் முதல் ஓ.என்.டி.சி வரை...
வளர்ச்சிக்குக் கைகொடுத்த டிஜிட்டல் அஸெட்டுகள்!

யு.பி.ஐ (Unified Payment Interpace)

ஜாம் என்னும் நடைமுறை 2020-ல் முழுமையாக நிறைவடைந்த பின், யூனிஃபைட் பேமென்ட் சிஸ்டம் (UPI) என்னும் வங்கிக் கணக்கு உபயோகிப்பாளர்களே பணத்தை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு உடனுக்குடன் அனுப்பும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியானது நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின்கீழ் இயங்கிவருகிறது. பல்வேறு ஆப்கள் பணப் பரிமாற்றத்துக்கென அறிமுகப் படுத்தப்பட்டபோதும் இவை அனைத்தும் யு.பி.ஐ என்ற நடைமுறையே தங்களின் பணப்பரிமாற்ற இயக்கத்துக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளன.

ஏப்ரல் 2022-ல் யு.பி.ஐ-யின் வாயிலாக நடந்த பணப்பரி மாற்றமானது அமெரிக்க டாலர் அளவீட்டில் 1.1 டிரில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது. இது இந்தியாவின் ஜி.டி.பி-யில் ஏறக்குறைய 37% ஆகும். இதன் மூலம் யு.பி.ஐ தொழில் நுட்பமானது உடனுக்குடன் பணம் அனுப்பும் வசதியில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

யு.பி.ஐ To ஓ.என்.டி.சி (Open Network For Digital Commerce)

பணப் பரிவர்த்தனையை உடனுக்குடன் செய்வதற்கான நடைமுறை சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்த உடனேயே பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் அடுத்த முயற்சியாக டிஜிட்டல் மார்க்கெட்டை மேம்படுத் துதலுக்கான முயற்சிகள் அ!ரசாங்கத்தால் எடுக்கப் பட்டு வருகின்றன.

ஓ.என்.டி.சி ஏன் தேவை..?

இன்றைய தினத்தில் இ-காமர்ஸ் என்பது ஒரு சில பெரு நிறுவனங்களின் கட்டுப் பாட்டின்கீழ் இருக்கிறபடி யால், எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடத்தில் எந்த விதத்தில் கொண்டு சேர்ப்பது என்பதை அந்தப் பெரு நிறுவனங்களே முடிவெடுக்கின்றன. இது அதிக அளவிலான வர்த்தகம் செய்யும் பெருநிறுவனங் களுக்கு (பிராண்டுகளைக் கொண்டிருக்கும் நிறுவனங் கள்) சாதகமாக அமைந்து விடுகின்றன. இதனால் சிறிய வர்த்தகர்களால் இது போன்ற பிளாட்பாரம்களில் வெற்றி கரமாக பங்கேற்க முடியாத நிலை நிலவுகிறது.

அது மட்டுமல்லாமல், இன்றைய இ-காமர்ஸ் வர்த் தகத்தில் வாடிக்கையாளர் களுக்கு அளிக்கப்படுவது பல வர்த்தகங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு (bundle – பொருள், பணப் பரிமாற்றம் மற்றும் பொருள்களைக் கொண்டு வந்து தரும் லாஜிஸ் டிக்ஸ் என்பதன் தொகுப்பு) என்பதைப் போன்ற வாய்ப் பாகவே இருக்கிறது. உதாரண மாக, ஒரு புத்தகத்தை வாங்கும்போது அதற்கான பணம் செலுத்துவதில் இருந்து அந்தப் புத்தகம் வாடிக்கை யாளருக்குக் கொண்டு சேர்க்கும் வரையிலான அத்தனை படிநிலைகளில் இருக்கும் பிசினஸ்களும் அமேசானின் கட்டுப்பாட்டி லேயே இருக்கிறது. மேலும், ஒரு சிறு வர்த்தகர் இது போன்ற பெரு நிறுவனங்கள் நடத்துகிற பிளாட்பாரம்களில் சில ஆண்டுகள் வர்த்தகம் செய்துவிட்டு, பின்பு வெளி யேறினால் அதுவரை வாடிக் கையாளர்களிடம் இருந்து கிடைத்த ரேட்டிங்குகள்/ரெவியூகள் அனைத்தையும் இழந்துவிடுவார்.

ஓ.என்.டி.சி என்பது இது போன்ற சவால்களுக்கான தீர்வைத் தருவதாக இருக் கிறது. ஓ.என்.டி.சி பல தளங் களுக்கிடையே ஒருங்கிணைப் புடன் செயல்படும் ஒரு பிளாட்பார்மாக இருக்கும். இதன்கீழ் வாடிக்கையாளர் எந்த இ-காமர்ஸ் தளத்தில் உள்ள விற்பனையாளரிடம் இருந்து பொருளை வாங்க விரும்புகிறார், எந்த பேமென்ட் சிஸ்டம் வழியாக பணம் செலுத்த நினைக்கிறார், எந்த டெலிவரி ஏஜென்ட் வழியாகப் பொருள்களைப் பெற விரும்புகிறார் என்பது போன்ற விஷயங்களைத் தனித்தனியே தீர்மானித்துக் கொள்ள முடியும்.

தற்சமயம் 16 நகரங்களில் சோதனை முயற்சியில் செயல் பட்டுவரும் ஓ.என்.டி.சி-யானது அக்டோபர் 2022 வாக்கில் 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளது.

ஆதார் முதல் ஓ.என்.டி.சி வரை...
வளர்ச்சிக்குக் கைகொடுத்த டிஜிட்டல் அஸெட்டுகள்!

ஓ.என்.டி.சி ஏன் புரட்சிகரமான தொழில்நுட்பம்..?

ஓ.என்.டி.சி தொழில்நுட்ப மானது, இ-காமர்ஸ் உலகில் போட்டியை அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். அதிகரிக் கும் போட்டியானது உற்பத்தியாளர் மத்தியில் திறன் அதிகரிப்புக்கும் (செலவு சுருக்கம் போன்றவற்றால்) வாடிக்கையாளர் மத்தியில் நுகர்வு (விலை குறைவதால்) அதிகரிப்புக்கும் வழிவகை செய்யும்.

ஓ.என்.டி.சி நடைமுறைக்கு வருவதில் இப்படிப் பல அனுகூலங்கள் இருக்கின்றபோதிலும், இவை எல்லாம் சரிவர செயல்பட ஓ.என்.டி.சி-யானது நடை முறைப்படுத்தப்படும்போது கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்களும் கேள்விகளும் இருக்கவே செய்கின்றன.

* ஏற்கெனவே உள்ள பெரும் இ-காமர்ஸ் நிறு வனங்கள், தங்களுடைய வர்த்தகத்தை பாதிக்கக் கூடிய ஒ.என்.டி.சி-யுடன் ஏன் இணைகின்றன?

* ஓ.என்.டி.சி-யானது ஒரு பொருளை வாங்குவதில் இருக்கும் பல்வேறு படிநிலைகளில் செயல்படும் தொழில்கள் அனைத்தையும் தொகுப்பில் இருந்து பிரித்து வாடிக்கையாளருடைய தேர்வுக்கு விடும் போது யார் ஒட்டுமொத்த விஷயத்துக்கும் (பொருள் விற்பதில் தொடங்கி, வாடிக்கையாளரிடம் சென்று சேர்வது வரை) உத்தரவாதத்தை வழங்கும்.

* ஓ.என்.டி.சி தளத்தில் வாங்குபவர், விற்பவர் குறித்த தரவுகளை எந்தளவுக்குப் பாதுகாக்கும்?

இ-காமர்ஸ் வர்த்தகத்தைப் பெருக்கும்...

ஓ.என்.டி.சி-யானது இ-காமர்ஸ் வர்த்தகத்தை அதிகப்படுத்தவே வழிவகை செய்யும். இதில் இணையும் தற்போதைய இ-காமர்ஸ் பெருநிறு வனங்கள் தங்களுடைய தளத்தையும் தாண்டி புதியதொரு வியாபாரத் தளமாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கும் என்பதால், தற்போதைய தளங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். ஓ.என்.டி.சி-யின் மூலம் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங் களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாடிக்கை யாளர்களின் கண்ணில்பட வாய்ப்பு இருப்பதால், அவர்கள் அனைவருக்கும் அதிக அளவில் வியாபாரம் நடக்க வாய்ப்பு உருவாகும்.

இரண்டாவதாக, தொகுப்புச் சேவைகள் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு சேவை வழங்கப்படும்போதும் ஓ.என்.டி.சி அதற்கான தரவுகளை ஒவ்வொரு படிநிலையிலும் பதிந்து வைத்துக்கொள்ளவே செய்யும் (உதாரணமாக, எந்தப்பொருள் அனுப்பப் பட்டது, யார் மூலம் வாடிக்கையாளரை சென்ற டைந்தது என்பது போன்ற டேட்டாக்கள் இருப்ப தால், ஓ.என்.டி.சி-யில் பங்கெடுக்கும் ஒவ்வொரு வர்த்தகரும் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டும்!)

உதாரணமாக, நான் ஒரு காபி கப்பை ஓ.என்.டி.சி மூலம் ஃப்ளிப்கார்ட்டில் வாங்குகிறேன். நான் அமேசானில் தேடி அங்கே இல்லாததால் அதை ஓ.என்.டி.சி-யில் பட்டியலிடப்பட்டுள்ள ‘ஜோ ப்ளாக்ஸ்’ஸில் வாங்குகிறேன். அந்த காபி கப்பை என்னிடம் கொண்டு சேர்க்க ஃப்ளிப் கார்ட்டே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த காபி கப்பை எனக்கு டெலிவரி செய்ய ‘ஓய்’ என்ற நிறுவனத்தை நான் தேர்வு செய்கிறேன். இந்த நிறுவனம் ஃப்ளிப்கார்ட் டெலிவரிக்காக பரிந்துரைக்கும் நிறுவனம் அல்ல. இந்தச் சூழ்நிலையில் இந்த காபி கப்பானது என்னை வந்தடையும்போது உடைந்திருந்தால், அதற்கு அந்த ‘ஒய்’ எனும் லாஜிஸ்டிக் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

ஆதார் முதல் ஓ.என்.டி.சி வரை...
வளர்ச்சிக்குக் கைகொடுத்த டிஜிட்டல் அஸெட்டுகள்!

முதலீட்டாளர்களுக்கு என்ன பயன்?

இரண்டாம் உலகப் போருக்கு 50 ஆண்டுகளுக்குமுன், அமெரிக்கப் பொருளாதார மானது முழுமையாக இணைக் கப்பட்டது. ரயில் பாதைகள், டெலிகிராப், மாடல்-டி போர்டு கார், தார் சாலைகள் என்ற பல விஷயங்களும் அப்போது வரை தனித்தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பொருளா தாரத்தை ஒருங்கிணைந்து செயல்பட வைத்தது.

இதன் காரணமாகவே அமெரிக்க நிறுவனங்கள் அதன்பின் பெரிய அளவில் வளர்ச்சியைச் சந்தித்து, தேசிய அளவிலான விநியோகம் மற்றும் விற்பனை என்பதில் ஈடுபட ஆரம்பித்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த நிறுவனங் களின் வளர்ச்சிக்கான நிதி யானது வேகமாக அதிகரித்து பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கவும் செய்தது.

இன்றைக்கு இந்தியா 1870 - 1940 வரையில் அமெரிக்கா இருந்த நிலையில் (போக்குவரத்து, டெலிபோன், வங்கிகள், வரி விதிப்பு மற்றும் வசூல் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில்) இருப்பதால், திறமையான நிறுவனங்கள் பலவும் பெரிய அளவிலான வெற்றியை எதிர்காலத்தில் அடைவதற்கான வாய்ப்புள்ளது. இதைப் புரிந்துகொண்டுதான் தற்போது முதலீட்டாளர்கள் தங்களுடைய எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டுத் திட்டங்களை தீட்ட வேண்டும்!

(இன்னும் சொல்கிறேன்)